தாமரை குளம் – 25

அத்தியாயம் – 25

பேய்க்கு பயந்து நாயும் அடங்கும் நள்ளிரவு. ராஜியின் ரகசிய வீட்டில் உரையாடல் தொடர்ந்தது. 

“இப்படி எல்லாம் தொழில் இருக்கா மேடம்?” ஆச்சிரியத்துடன் கேட்டாள் அல்லி. 

“நேர்வழி ஒண்ணுதான் அல்லி. குறுக்கு வழி எங்க வேணும்னாலும் போட்டுக்கலாம். அதுல ஒண்ணு”

“நம்ம அப்டேட் ஆகுறதுக்குள்ள தினுசு தினுசா பிராடு பண்ண கத்துக்குறாங்க மேடம். இந்தக் களவாணிப் பயலுங்களை கண்டுபிடிக்கிறதே பெரும்பாடா இருக்கு. இவளைப் பாருங்க. அமைதியா இருக்கா உள்ளுக்குள்ள இம்புட்டு பெரிய நெட்வொர்க் கூட பழக்கம்” சோலை அலுத்துக் கொண்டார். 

அந்த வீட்டில் குளிரூட்டப்பட்ட இடத்தில் பெரிய சர்வர் ஒன்று. சரவ்ருக்கு ஏசி என்றால் அவ்வளவு பிராசசிங்க் நடந்து சூடாகும் என்று அர்த்தப்படுத்திக் கொண்டார்கள்.  மானிட்டர்கள், டப்பாக்கள், கால்களைத் தட்டிவிடும் வொயர்கள் குறுக்கும் நெடுக்குமாக, பூட்டி வைக்கப்பட பெட்டியை உடைத்தால் குட்டியாய் டோக்கன் ஜெனரேட்டர்கள், பவர் கட் சமயத்தில் உதவிக்காக ஏகப்பட்ட இன்வெர்ட்டார்கள் மற்றும் ஒரு ஜெனெரட்டர், கூடுதலாக  க்ரீன் மேட் சவுண்ட் ப்ரூஃப் லைட் அரேஞ்ச்மெண்ட்ஸ் போட்ட ஒரு வீடியோ ரூம் வேறு. பார்க்கப் பார்க்கத் தலை சுற்றியது. 

“போஸ் இப்ப நீ சொல்லு. எதுக்கு இந்த மாதிரி பவர்புல் ஹை கான்பிகரேஷன்ல சர்வர், இந்த அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம்”

“மேடம் டார்க் வெப்ல இருக்கவங்க இல்லீகல் வேலைகள் நடக்குற மாதிரி தான் தோணுது”

“வீடியோ எல்லாம் எதுக்கு?”

தென்னாடனை சுட்டிக்காட்டினான் “அந்த சார் சொன்னதை பார்த்தா இவங்க ஏதாவது வீடியோ கிரேயஷன்ல கூட இருந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்”

“என்ன வீடியோ”

“ஒரு பிராண்டை அழிக்கிறது. இதை யூடியூப் இன்ஸ்டாக்ராம்ல செய்யும்போது சுலபமா மக்களை ரீச் பண்ண முடியும்”

“என்ன சொல்ற போஸ்?”

“கிளிக் பண்ணணும்னு நடிகையின் பரிதாப நிலை, முறைகேடான நடத்தையால் எய்ட்ஸ் வந்து பிச்சை எடுக்கிறார் இப்படியெல்லாம் போட்டு கொஞ்சம் பேமஸான நடிகையை தம்ப்நெயிலில் போட்டா மக்கள் ஆர்வமா கிளிக் பண்ணுவாங்க. இது மாதிரி நிறைய பேர் செஞ்சுகிட்டு இருக்காங்க. அதுக்கு அடுத்தபடியா இன்னொரு க்ரூப் ஒருத்தங்களை தாக்கியோ இல்லை வீடியோ போட்டோ டேமேஜ் பண்றது. அதுக்கும் ஆள் இருக்கு”

“வேலை வாய்ப்பு போதுமான பணம் ரெண்டும் இல்லாம மக்கள் இப்ப என்னென்னவெல்லாம் செஞ்சு காசு பாக்குறாங்க பாருங்க”

“முன்னாடி களவாணிப்பய மட்டும்தான் களவாணித்தனம் செஞ்சான். இப்ப குடும்பத்தில் இருக்குறவன் கூட அந்நியன் முகம் காட்டினா என்ன செய்றது?”

“இந்த வீடியோ ரூம் அது மாதிரி விடியோக்கள் ஜெனெரேட் பண்றதுக்காக இருக்குமோ?”

“அப்படித்தான் தோணுது. ஒருத்தர் மட்டுமில்ல பல பேர் இது மாதிரி இன்வால்வ் ஆயிருப்பாங்க. இந்த மாதிரி வீட்டை கட்டி மேய்க்க இந்த வீடியோ வருமானம் மட்டும் பத்தாதுன்னு தோணுது. இதைவிட கொஞ்சம் அதிகமா யோசிங்க” என்றார் விஜயா.

சைபர் க்ரைம் உதவியால் எதிக்கல் ஹேக்கர் ஒருவரை அதற்குள் பிடித்திருந்தனர். அவரிடம் தகவல் சொல்ல, அவர் யோசனைப்படி சில நிமிடங்கள் அங்கிருந்த சர்வரில் நுழைந்து போல்டெர்களை கிளிக் பண்ணிய தென்னாடனின் முகம் பளிச்சிட்டது. 

“மேடம் இங்க பாருங்க. ஏகப்பட்ட போல்டெர்ஸ்”

எத்திக்கல் ஹேக்கர் சொன்னார் “நீங்க நினைச்சது மாதிரி இந்தம்மா வீடியோ மட்டும் போடுறவாங்க கிடையாது. ஒரு ஏஜெண்ட். யாரை டார்கெட் பண்ணணும்னு பிக்ஸ் பண்ணிட்டு இவங்களுக்கு பணமும் கண்டெண்ட்டும் சொல்லிட்டா போதும். அவங்களை பிரிச்சு மேஞ்சுரும். ஒரு வகைல சொல்லப்போனால் ஆன்லைன் கொலைகாரங்க. இவங்களால் பல பேர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்காங்க. ஏன் தற்கொலை கூட பண்ணிருக்காங்க. ஆனால் இவங்களுக்கு ஒரு தண்டனையும் கிடைக்காது. அடுத்த டார்கெட் தேடி ஓடிருவாங்க”

அதிர்ந்து போனார் விஜயா. உலகம் எங்கே போய்கிட்டு இருக்கு. 

“தென்னாடன் இவளால பாதிக்கப்பட்டவன் யாரோதான் இவளை முடிச்சிருக்கான். ஃபோல்டர் ஏதாவது ரெகவர் பண்ண முடியுமான்னு நீங்க அவர் கூட சேர்ந்து பாக்குறிங்களா?”

“நூத்துக்கணக்கில் இருக்குமே மேடம்”

“மோஸ்ட்லி விவரங்கள் அழிக்கப்பட்டிருக்கும். இவங்க தடயமே வச்சிருக்க மாட்டாங்க. ஏதாவது ஒண்ணு ரெண்டு கிடைச்சால் நல்லாருக்கும்”

இனி போஸ் இங்கு தேவையில்லை என்று நினைத்தார்கள். 

“போஸ் இப்போதைக்கு நீ எதையும் பாக்கல இங்க நடந்தது எதுவும் தெரியாது. ராத்திரி ஏதோ கனவு கண்டிருக்கன்னு நினைச்சு மறந்துரு. அப்படியே விட்டுருவோம். அந்த அப்டியே விட்டுடுறதுக்கு என்ன விலைன்னா…”

“நான் சாதாரண மிடில் கிளாஸ் மேடம். வேலை கிடைக்காம இங்க மாட்டிக்கிட்டேன். கைல ஒத்தப்பைசா  இல்லை. பேங்க் கடனும் வாடகை வீடும்தான் இருக்கு. ஏதாவது வேலைக்கு போனா போதும்னு நினைச்சு இங்க மாட்டிக்கிட்டேன்”

“நேர்மையானவங்களுக்கு அதுதான் கிடைக்கும். ஆனா நீ ஒரு இல்லீகல் கும்பலில் மாட்டிருக்க… கொஞ்ச நாள் போச்சுன்னா புலிவால் பிடிச்ச கதையாயிரும். இவளைப் பாத்தேல்ல, ஊருக்கே வதந்தி பரப்பி உலை வச்சவ, தற்கொலை பண்ணிக்கிட்டான்னு கேசை முடிச்சுட்டாங்க. யாரு கொலை பண்ணான்னு கூடத் தெரியல”

“புரிஞ்சுது மேடம்… சீக்கிரம் வேற வேலை தேடிக்கிறேன்”

கிளம்பத் தயாரானவன் ஒரு வினாடி நின்றான் “போன மாசம் நான் இங்க பொருட்களை டெலிவர் பண்ண வந்தப்ப ஒரு ஆளைப் பாத்தேன். அந்த ஆள் கூட செத்துட்டாதா சமீபத்தில் செய்தி போட்டாங்க”

திடுக்கிட்டு போனார்கள் அனைவரும். “நாங்க காட்டுற படத்தில் இருக்குற ஆளான்னு பாரு” 

சோலைமலை தன்னிடமிருந்த சமீபத்தில் இறந்த ரவுடி லிஸ்ட் படங்களைக் காட்டினார். 

தென்னாடனிடம் கண்ணைக் காட்டினார். அவனும் சில படங்களைக் காட்டினான். அதில் ஒரு படத்தைப் பார்த்ததும் 

“இந்த ஆள் மாதிரிதான் மேடம் இருந்தான்”

தென்னாடன் படத்தைத் திருப்பி விஜயாவிடம் காண்பித்தான்.  

படத்தைப் பார்த்து அதிர்ந்தார் விஜயா. ஆனால் தென்னாடன் காட்டிய படத்தில் முறைத்துக் கொண்டு நின்றவன் புளிக்கரை மோகன்.  

அடுத்து சில கேள்விகளைக் கேட்டு அது அவன் தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டார். 

என்னடா நடக்குது? புளிக்கரை மோகனும் மும்பையில் டானாக கோலோச்சி பாம்புக்கடி விபத்தால் தாமரை குளத்தில் காரில் இறந்த லாலுக்கும் நட்பு. அதே தாமரைக் குளத்தில் தூக்கு போட்டு தொங்கி இறந்த ராஜியும்  மோகனும் முன்பே அறிமுகமானவர்களா? அப்ப எல்லாரும் ஒரே கேங்கா?

இதுக்கு மேல் என்ன நடந்தது? அவர்கள் இருவரையும் இதுவரை தனித்தனியாகத்தான் நினைத்திருந்தார். ஒரே ஆள்தான் போட்டுத்தள்ளியதா?

சோலை எழுந்தார். “சரி போஸ் இந்த விஷயத்தை வெளியே சொன்ன உன் உயிருக்குத்தான் ஆபத்து. இப்ப வா உன்னை டிராப் பண்ணிடுறேன்” என்று கிளம்பினார். 

கிளம்பும்போது “மேடம் பெரிய இடம் சம்பந்தப்பட்ட விஷயம். அந்த பார்ட்டிதான் போட்டுத் தள்ளிருக்கணும். நம்ம இதை விட்டு விலகி இருந்தா நல்லது. இவனை விட்டுட்டு வந்துடுறேன். நம்மளும் இந்த வீட்டை காலி பண்ணிட்டு கிளம்பிரலாம்” 

“சார் நாங்களும் இங்க இருக்குற முக்கியமான ஹார்ட் டிஸ்க் டோக்கன் எல்லாம் எடுத்துக்குறோம். இந்த தடயங்க எல்லாம் அவங்க கைல சிக்குறதுக்குள்ள முடிஞ்ச அளவு எடுக்கலாம்னு பாக்குறேன் ”

விஜயாவிடம் தணிவான  குரலில் “மேடம் பாத்து. உங்க கூட இருக்குறது இளம் பசங்க, பயம் தெரியாது.புளிக்கரை லாலோட கையாள்.  லால் பெரிய ஆள். நம்ம இன்வால்வ் ஆனோம்னு தெரிஞ்சா போட்டுத் தள்ளிருவான். இந்த போஸை கூட வேற வேலை பாத்துட்டு ஓடிப் போயிற சொல்லப் போறேன்”

“நாங்களும் கொஞ்ச பொருட்களும் எடுத்துட்டு கிளம்பிடுறோம். நீங்க போஸை விட்டுட்டு வாங்க”

“இல்லை நான் இவனை விட்டுட்டு அப்படியே ஸ்டேஷனுக்கு கிளம்புறேன் மேடம்… காலைல பத்து மணிக்கு கோர்ட்டுக்கு போகுற வேலை இருக்கு” என்று சொல்லிவிட்டு சோலை கிளம்பினார். 

இவர்களுக்கும் குழுவாய் சில நேரம் தேவைப்பட்டது. 

கேஸ் சிலிண்டர் வெடிச்சு செத்த புளிக்கரை மோகனும் , மும்பை லாலும் பிரெண்ட்ஸ். லாலும் ராஜியும் எதோ தொழில் முறை தொடர்பு. ஆக மூணு பேரும்  சேர்ந்து எதோ குற்றச் செயலில் இறங்கி இருக்காங்க. யோசித்துக் கொண்டே இருந்தார் விஜயா. 

“என்ன தென்னாடன். ஏதாவது க்ளூ கிடைச்சதா?”

“நூத்துக்கணக்கா போல்டர்ஸ் இருக்கு. அதில் சில ஹிட்டன் பைல்ஸ், என்க்ரிப்ட்ட். நம்ம தோழர்கள் துணையோடு திறந்தாச்சு. அதில் கம்ப்ளீடட் ப்ராஜெக்ட்ஸ்னு சில இருக்கு ”

தொடர்ந்தான் “ஒவ்வொரு போல்டெர்லயும் நிறைய கன்டென்ட்ஸ் இருக்கு பாருங்களேன் நபர்களை பற்றிய குறிப்பும், சில விடியோஸ் இருக்கு. இதை பேசா வச்சுத்தான் புரளியை கிளப்பி இருக்கா”

“லால் இங்க வந்திருந்தான்னா ஏதாவது முக்கியமான டார்கெட்டாத்தான் இருக்கணும். இவ  பெரிய புள்ளிகளை டார்கெட் பண்றவ. அவன் போட்டுத் தள்ளுறவன். லால் இங்க வந்த நேரத்தில் என்னென்ன போல்டேர்ஸ் இருக்கு. அந்த சமயத்தில் நம்ம ஸ்டேட் அல்லது சென்னையில் நடந்த முக்கியமான சம்பவம் என்னென்ன? இது ரெண்டையும் கனெக்ட் பண்ற மாதிரி ஏதாவது இருக்கான்னு தேடணும்”

மூவரும் ஒரே சமயத்தில் பிரித்துக் கொண்டு தேட ஆரம்பித்தனர். ஒரு மணி நேரத் தேடலுக்குப் பின்னர் ஒரு போல்டெர் மின்னியது 

Project – Sh

You cannot copy content of this page