வணக்கம் பிரெண்ட்ஸ்,
சென்ற பகுதிக்கு பின்னூட்டம் இட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இனி இன்றைய பதிவு
[scribd id=300284710 key=key-62EfPJ6aQzyfBUVEKhWD mode=scroll]
அன்புடன்,
தமிழ் மதுரா
அத்தியாயம் – 8
அலுவலகத்தில் வேலையில் மூழ்கியிருந்தான் கைலாஷ். கைபேசி மணி கிணுகிணுத்தது. நிரஞ்சனா அழைத்திருந்தாள். அவள் முன்நின்று மீனாட்சியைத் தன் தலையில் கட்டியதுடன், விசா எடுப்பதிலிருந்து அனைத்து வேலைகளையும் முன்நின்று செய்தாள். அந்த வெறுப்பில் அவளுடன் பேசுவதே இல்லை.
‘உன் அலுவலகம் அருகில்தான் இருக்கிறேன். இப்போது கைப்பேசியை எடுக்கவில்லை என்றால் நேரில் வந்து நிற்பேன்’ என்று குறுஞ்செய்தி அனுப்பினாள். பின்னர் மறுபடியும் அழைத்தாள். கைலாஷ் இந்த முறை வேறு வழியின்றி எடுத்தான்.
“என்ன கைலாஷ் இன்னமும் கோபம் குறையலையா”
“பச்.. நீ எங்க இங்க?”
“ஆன்சைட் ப்ராஜெக்ட்காக ஒரு மாசம் வந்திருக்கேன்”
“குழந்தை”
“அம்மா அப்பா பாத்துப்பாங்க”
“வர்றதை முன்னாடியே சொல்லிருக்கலாமே. நான் ஏர்போர்ட் வந்திருப்பேனே”
“போன வாரம்தான் இந்த வாய்ப்பு வந்தது. ஏற்கனவே விசா எல்லாம் இருந்தது. சட்டுன்னு கிளம்பிட்டேன்”
“எங்க தங்கிருக்க”
“இந்த வாரம்தான் இங்க மத்தபடி மில்பிடாஸ் ஆபிஸ்லதான் மெயினா வேலை. பக்கத்திலேயே வீடு ஏற்பாடு பண்ணிருக்காங்க”
“அப்பறம்”
“அப்பறம் உங்க வீட்டுக்கு வர்ற சனிக்கிழமை வரலாம்னு ப்ளான். குட்டீசை பார்க்கணும். வரலாமா?”
“தாராளமா வா”
“மீனாட்சி போன் நம்பர் தாங்க.ஒரு ஹலோ சொல்லுறேன்”
“அவளுக்கு போன் கிடையாது. இந்த நம்பரில் சாயந்தரம் ஒன்பது மணிக்கு மேல பேசு. தரேன்”
சில வினாடிகள் மௌனம் எதிர்முனையில் “நிரஞ்சனா… லைன்ல இருக்கியா”
“ஏன் ராத்திரி ஒன்பது மணிக்கு மேல கூப்பிடனும். அதுதான் வீட்டுக்கு போற நேரமா… ஒரு போன் கூட மீனாவுக்கு வாங்கித் தரலையா. நீங்க கல்யாணம் முடிஞ்சு வந்து நாலு மாசமாகப் போகுது. இன்னமுமா ரெண்டு பேருக்கும் போராட்டம் தொடருது. ”
“அதெல்லாம் இல்லையே. அவதான் குழந்தைகளை பார்த்துக்குறா, சமைக்கிறா. சாயந்தரம் நான் வீட்டுக்குப் போனதும் நான் பார்த்துக்குவேன். அவ கோவிலுக்கு போயிட்டு வருவா”
“பொய் சொல்றது தப்பு. அதுவும் என்னை மாதிரி தோழிகிட்ட சொல்லாதிங்க. குழந்தைகளை விட்டுட்டு ஏன் தனியா போயிட்டு வரணும். நீங்க குடும்பத்தோட போயிட்டு வர மாட்டிங்களா”
“எல்லாத்திலும் குற்றம் கண்டுபிடிக்காதே….. உன் விஷயத்தை சொல்லு.. நீ சனிக்கிழமை எத்தனை மணிக்கு வர்ற…”
“காலைல டிபன் அங்கதான். உங்க கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு. அப்படியே எங்கயாவது ஊர் சுத்திட்டு வரலாம்… குடும்பத்தோட… “
‘குடும்பத்தோட’ என்று அழுத்தி சொன்னாள்.
வர்ற சனிக்கிழமை என்றால் நாளாநாளைக்கு. வீட்டில் மளிகை சாமான்கள், காய்கறிகள் வாங்க வேண்டும். நாளை வரை தள்ளிப் போட முடியாது. நிரஞ்சனா மனதில் சந்தேகம் எழுந்துவிட்டது. திடீரென நாளைக்கே உன்னுடன் வருகிறேன் என்று சொன்னாலும் சொல்லுவாள்.
கைலாஷிடம் நிரஞ்சனாவை மணக்கக் கேட்ட பிறகு. இருவரும் கலந்து பேசினார்கள். கலகலப்பான பெண் மீனாட்சியைப் போலவே. அதனால்தான் அவளுடன் சேர்ந்து வாழ முடியும் என்று மனதில் பட்டது. திருமணத்துக்கும் சம்மதித்தான். நடந்ததை அசை போட்டபடி வாட்டர் கூலரில் தண்ணீர் பிடித்தவன் அதிர்ந்து நின்றான்.
கலகலப்பான பெண் மீனாட்சியைப் போலவே என்றால் எப்போது மீனாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கினான். மீனாவை தன் மனைவியாக ஏற்கத் தொடங்கிவிட்டானா? இவ்வளவு பெரிய பாதகத்தை அவள் செய்தும் அவளை அழைத்து வந்து இன்றளவும் பார்த்துக் கொண்டிருப்பது அவள் மேல் உள்ளூர இருக்கும் அன்பினாலா? என்று இந்த அன்பு தோன்றியது? நான் கங்காவுக்கு நல்ல கணவனா இல்லையா? கேள்விகள் போட்டி போட்டனா
“கைலாஷ் ஆர் யூ ஆல்ரைட்?” என்று உடன் பணிபுரிபவன் சொன்னதும்தான் தண்ணீர் குவளையிலிருந்து நிரம்பி கீழே கொட்டிக் கொண்டிருப்பதை உணர்ந்தான்.
“தலைவலி… அதுதான்” என்று பதிலுரைத்தவன் தன் மனதின் கேள்விகளை சந்திக்கத் திராணியின்றி வீட்டுக்குக் கிளம்பினான்.
வெளியே வந்தால் நிரஞ்சனா தயங்கியபடி நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் இவனுக்கு ஆச்சிரியம். அவளுக்கோ இவனைக் கண்டு அதிர்ச்சி.
“என்ன நிரஞ்சனா… ஏதாவது முக்கியமான விஷயமா..”
“நம்ம ரெண்டு பேருக்கும் பேசுறதுக்கு எவ்வளவோ முக்கியமான விஷயங்கள் இருக்கும்னு படுது. கல்யாணம் கூட நான் அவசரப் பட்டுட்டேனோ ஒரு குழப்பம். இந்த ட்ரிப் அதைப் பத்தின பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துடும்னு நம்புறேன். வந்து… வந்து… “
“என்ன விஷயம் நிரஞ்சனா… தயங்காம சொல்லு”
“எதை முதலில் சொல்லன்னு தெரியல. ஏன்னா எனக்கும் நிறைய விளக்கங்கள் வேண்டி இருக்கு. நம்ம சப்இன்ஸ்பெக்டர் ராஜிக்கும் எனக்கும் உங்க விஷயத்தில் ஏதோ மறைஞ்சிருக்குறதா பட்டது. அதனால ராஜி அவங்க சொந்த முயற்சில மீனாவைப் பற்றித் துப்புத் துலக்க ஆரம்பிச்சாங்க. அதில் ஒரு முக்கியமான தகவல் உங்ககிட்ட உடனடியா சொல்ல வேண்டி இருந்ததால்தான் கிளம்பி வந்தேன்”
“பொறுமையை சோதிக்காம என்னன்னு சொல்றியா”
“மீனாவை ரமணான்னு ஒருத்தன் விரும்பினான்”
“தெரியும். ஆனால் அவதான் மறுத்துட்டா. அன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் தனியா பேசினப்ப. அவனோடக் கல்யாணம் செய்து வைக்கவான்னு கூடக் கேட்டேன். பாவி கடைசீல என் மேல பழி போட்டுட்டா”
“அவன் கனடாவில்தான் இருக்கான். சமீபத்தில் அவளோட கல்யாணத்தைப் பத்திக் கேள்விப்பட்டு அவளைக் கையோட கூட்டிட்டு போக கனடாவிலிருந்து இங்க வந்திருக்கானாம்”
“அவனுக்கு என் அட்ரெஸ் எப்படித் தெரியும்”
“அவன் பிரெண்ட் இங்க இருக்கானாம். மீனாவை பார்த்திருப்பான் போலிருக்கு”
“ராஜிக்கு இந்த விவரம் எப்படி தெரியும்”
“மீனா சம்பந்தப்பட்ட விசாரணைக்காக அவளை விரும்பின ரமணன் வீட்டுக்கு போனாங்க போலிருக்கு. அப்ப அவர் அப்பா சொல்லி வருத்தப்பட்டாராம்”



பொன்
Private nnu solluthu …Tamil.
Please check it Tamil.