வணக்கம்.
தோழிகளுக்கு என் மனம் கனிந்த மகளிர் தின வாழ்த்துக்கள்.
சென்ற பதிவுக்கு பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். இனி இன்றைய மகளிர் தின பதிவு. உங்களைக் கவரும் என்று எதிர்பார்க்கிறேன். உங்களது மற்ற கேள்விகள் அனைத்துக்கும் விடை இன்னும் இரண்டு பகுதிகளில் தெரிந்துவிடும்.
[scribd id=301018399 key=key-rZip8I4tBd5kwY7IOWhw mode=scroll]
அன்புடன்,
தமிழ் மதுரா.
காலை அனைவரும் அருகே இருந்த குழந்தைகள் தீம் பார்க்குக்கு சென்று வந்தனர். கைலாஷ் மீனாவையும் கிளம்ப சொன்னதும் ஆச்சிரியமாய் பார்த்தாள். இதுவரை அவளை எங்குமே அழைத்து சென்றதில்லை. ஊருக்கு வந்து இந்த வீட்டில் விட்டதோடு சரி. பக்கத்திலிருக்கும் கோவிலுக்குக் கூட தனித்தனியாகத்தான் சென்று வருவார்கள்.
ரமணன் இவளைக் காண வந்த அன்றுதான் முதன் முதலில் கோவிலில் இருந்து அழைத்து வந்தான். ரமணனுக்கு எப்படி இவள் வீடு தெரியும் என்று யோசித்தவளுக்கு அவனது நண்பன் ஒருவனை இரு வாரங்களுக்கு முன் கோவிலில் சந்தித்தது நினைவுக்கு வந்தது. அவன் மூலம் தகவல் போயிருக்கும். ரமணன் வந்ததும் நல்லதுதான் இனிமேல் அவள் நிலை தெரிந்து விலகிவிடுவானே. இல்லை என்றாலும் கைலாஷ் விலக்கிவிடுவான்.
அன்று இரவு கைலாஷ் நடந்து கொண்ட முறை அவளுக்கு அதிர்ச்சிதான் என்றாலும் அவன் மேல் கோபம் வர மறுக்கிறது. கைலாஷ் அவளைத் திட்டியபோது சொன்ன வார்த்தைகளில் இருந்த கோபம் அன்று அவனிடத்தில் இல்லை. குழந்தையிடமிருந்த பொம்மையை மற்றொரு குழந்தை பிடுங்கினால் “என்னோட பொம்மையை விடு” என்று முன்னிலும் வேகமாய் தன் பொம்மையை அணைத்துப் பாதுகாக்குமே அதே போலத்தான் கைலாஷின் செய்கையும் பட்டது. எங்கே தன்னுடையவளை ரமணன் தட்டிப் பறித்துவிடுவானோ என்ற பதைபதைப்புத்தான் அவனுக்கு. ஆனால் துன்பத்தில் விளைந்த நன்மையாக கைலாஷின் மனதில் சிறிது இடம் கிடைத்தாற்போல் பட்டது. அவர்களுக்குள் இருந்த பெரிய இடைவேளை பாதியாகக் குறைந்தாற்போல அவளுக்குத் தோன்றியது.
நிரஞ்சனாவின் குரல் அவளது யோசனையைத் தடை செய்தது. “மீனா சுடியா போட்டிருக்க.. வெளிய குளிருமே, ஜீன்ஸ் இல்லையா”
“இல்லைக்கா எனக்கு அதெல்லாம் பழக்கமில்லை”
மீனாவிடம் பழைய புடவைகளும், உடுத்தி சற்று பழையதான சுடிதார்களும் மட்டுமே இருந்ததை கவனித்த நிரஞ்சனா கைலாஷை முறைத்தாள்.
“குளிர்காலம் முழுக்க இந்த உடைகளை வச்சுட்டே காலம் தள்ளிட்டிருக்கியா… ஒரு ஸ்வெட்டராவது போட்டுக்கோ”
“எனக்கு குளிரலைக்கா… “ என்று பதிலளித்தாள் மீனா.
கைலாஷை பார்வையால் எரித்தபடி மீனாவுக்கு தனது ஸ்வெட்டரில் ஒன்றைத் தந்தாள்.
“என்னோடது… உனக்கு கொஞ்சம் லூசா இருக்கும். பரவால்ல போட்டுக்கோ”
அவள் பார்க்காத சமயம் மீனாவிடம் கைலாஷ் கேட்டான். “இந்த சுடி நம்ம ஊர் வெயிலுக்கு லாயிக்கு. இங்க ஒத்து வராது. கால்ல குளிர் காற்று பட்டுக் குளிரும். அதனால வழியில் ஏதாவது கடையில் உனக்கு ஜீன்ஸ் வாங்கித் தரேன். சேன்ஜ் பண்ணிக்கோ”
“வேண்டாம் மாமா… உங்களோட பழைய ட்ராக் சூட்டை உள்ள போட்டிருக்கேன். அதுக்கு மேலத்தான் சுடிதார் பான்ட் போடுவேன்”
“என்னோடதா… “ என்று தனது தோள்பட்டை உயரமிருந்த மீனாவைப் பார்த்தான்.
“நீங்க வேண்டாம்னு கீழ போட்டிருந்திங்க. நான் வெட்டி, என் அளவுக்கு மடிச்சுக் கைலயே தச்சுட்டேன்”
“இவ்வளவு நாளா என்னோட டிரஸ்ஸா போட்டிருந்த” பழிதீர்க்கும் பார்வை முற்றிலும் மாறி அந்தக் கண்களில் தெரிந்த காதலில் சொக்கிப் போனாள்.
“மாமா… “ அவன் கைகளை வெட்கத்தோடு விலக்கினாள்.
“ஸாரி மீனம்மா… உனக்கு தண்டனை தர்றதா நினைச்சு ரொம்ப கொடுமை படுத்திட்டேன்ல.. மன்னிச்சுடு. திருமதி கைலாஷ் இன்னைக்கு கண்டிப்பா ஒரு டசன் உடைகளாவது வாங்கிக்கிறிங்க சரியா.. “
பாத்ரூமிலிருந்து கத்தினாள் நிரஞ்சனா. “கைலாஷ் உங்க ரொமான்ஸ் முடிஞ்சதா.. நான் வெளிய வரலாமா…”
வெட்கத்தில் மீனாவுக்கு முகம் சிவக்க, அவசரமாய் அவள் கன்னத்தைக் கிள்ளியவன் குரல் கொடுத்தான்
“ஆ… வரலாம்”
தீம் பார்க்கில் நிரஞ்சனா குழந்தைகளுடன் சேர்ந்து ஆட்டம் போட்டாள். கூடவே மீனாவையும் கைலாஷையும் இணைத்துக் கொண்டாள். முதலில் தயங்கிய மீனா பின்னர் அவளுக்கு சரி சமமாக எல்லாக் கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டாள்.
இரவு வீட்டுக்குத் திரும்பி வந்தார்கள். வந்தவுடன் அவசர அவசரமாய் கேசரி செய்தாள் மீனா. இருவருக்கும் ஒரு சின்ன தட்டில் வைத்துத் தந்தாள்.
“எதுக்கு இப்ப ஸ்வீட்”
“அக்கா இனிப்பான செய்தி சொல்லப் போறாங்கன்னு நினைக்கிறேன். அதுதான்..”
“நிஜம்மாவா நிரஞ்சனா”
வெட்கத்துடன் தலை குனிந்தாள் நிரஞ்சனா. “தீனாவும் நானும் மறுபடியும் சேர்ந்து வாழலாம்னு முடிவு பண்ணிட்டோம். இந்த தடவை அவர் நிஜம்மாவே திருந்திட்டார்ன்னு மனசில் படுது. அவர் லாஸ்ஏஞ்செல்ஸ்ல ப்ராஜெக்ட் பண்ண வந்திருக்கார். அதுதான் நானும்…”
“அட்ரா சக்கை… ரெண்டாவது ஹனிமூனா…”
“கைலாஷ் நீங்கதான் அம்மா அப்பாட்ட பேசி…”
“கண்டிப்பா.. செய்றேன்… இதெல்லாம் நீ சொல்லணுமா”
நல்லவேளை அவளுடன் நடக்கவிருந்த கல்யாணம் தடைபட்டது என்ற நிம்மதி தோன்றியது கைலாஷின் மனதில்.
“அப்பறம்…. இன்னொரு விஷயம். இன்ஸ்பெக்டர் ராஜி உங்ககிட்ட பேசணும்னு மெயில் அனுப்பிருக்காங்க. ரொம்ப அவசரமாம். இன்னைக்கே பேசிடுங்க”
“சரி… இப்ப இந்தியால மணி எட்டு இருக்குமா?”. ராஜியுடன் பேச கைப்பேசியுடன் வெளியே சென்றான்.
“கைலாஷ் பக்கா ஜென்டில்மென் இல்ல… “
“ம்ம்..” ஆமோத்தித்தாள்.
“இந்த மாதிரி அருமையான கணவனை விட்டுட்டு தற்கொலை செய்துக்க கங்காவுக்கு எப்படி மனசு வந்ததோ தெரியல”



bselva80
Sorry mathura ipo than rendu Ud yum padichen,thalaivar vilanatam nadanthuka try panni ipo meena a kitte surrender ayachu super.anthe ramanan pavam nalum kailash Mandaila thatina mathiri manasa puriya vachu punniyam katikitan,nala payan.inthe Ganga voda life la enna secret iruko,athula kailash uku enna apo nu theriyala!meenu en ivalo Adam panni inthe kalyanam pannina?eagerly waiting.