ஹலோ பிரெண்ட்ஸ்,
எப்படி இருக்கிங்க. போன பகுதிக்கு ஏறக்குறைய எல்லாருமே வரவேற்பளித்திருந்திங்க நன்றி நன்றி நன்றி.
‘பானுப்ரியா கணவனின் துரோகத்தை தாங்கிக் கொண்டு அவனுடன் வாழ்வதாக முடித்திருந்தீர்களே. ஷாலி என் இப்படி’ என்று ஒரு தோழி என்னிடம் கேட்டார். பானுப்ரியா 🙂 இவள் இன்னமும் உங்கள் மனதில் இருப்பது மகிழ்ச்சி. பத்து வருடம் கணவனுடன் சந்தோஷமாக வாழ்ந்து இரண்டு பிள்ளைகளுடன் நிறைவாக வாழ்க்கை வாழ்ந்தவள் .பூர்வஜாவைக் கணவனுடன் பார்ப்பதற்கு முன்னர் வரை பிரகாஷின் துரோகம் அவளுக்குத் தெரியாது. அன்புக்கு ஒன்று ஆசைக்கு ஒன்று என்று இருப்பது பிரகாஷுக்கு முடியலாம். நம் பானுவின் குணத்துக்கு பிரகாஷை விட்டு வேறு ஆணை அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
வைஷாலி இன்னமும் வாழ்வே ஆரம்பிக்கவில்லை. சிவாவுக்கு ஆரம்பத்திலேயே வாழ்க்கை கருகிவிட்டது. இந்தக் கதைப்படி இருவரும் திருமணம் செய்துக் கொள்வதில் தவறில்லை என்பது என் எண்ணம். காயமுற்ற இருமனங்களும் இனியாவது தங்களுக்கான வாழ்க்கையை வாழட்டுமே.
இந்தக் கதையின் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை என்னுடன் பயணித்து, எனக்கு கமெண்ட்ஸ் மூலமும் மெயில் வழியாகவும், முகநூலிலும், தொலைப்பேசியிலும் ஆதரவு தந்த ரசிகர்களுக்கு என் நன்றிகள். நன்றி டியர்ஸ். Thanks for your support.
இறுதிப் பகுதியைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அடுத்த கதையில் மீண்டும் சந்திப்போம். அதுவரை உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்கிறேன்.
அன்புடன்,
தமிழ் மதுரா

anuja12397
Tamil
Climax superb… Naan ethirpaarththa mudivu… Week end so apparamaa varaen….