Tag: சிறுகதை

ரெ. கார்த்திகேசுவின் ‘ஒரு சுமாரான கணவன்’ரெ. கார்த்திகேசுவின் ‘ஒரு சுமாரான கணவன்’

“அதோ தெரியிது பாத்தியா, அதுதான் எங்க பினாங்கு!” என்றான் தியாகு. அன்னம்மாள் விழித்து விழித்துப் பார்த்தாள். அந்த அதிகாலை நேரத்தில் தூரத்தில் அக்கரையில் இருந்து பார்க்கும் போது அது ஒரு மாய லோகமாகத் தெரிந்தது. தலை நிலத்தோடு தொப்புள் கொடியாக இருந்த

இனி எல்லாம் சுகமே – Audioஇனி எல்லாம் சுகமே – Audio

வணக்கம் தோழமைகளே, ‘இனி எல்லாம் சுகமே’ என்ற அழகான கதையின் மூலம் நம் தளத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் எழுத்தாளர் சூர்யா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்தக் கதை அனைவருக்குமானது அல்ல என்று முன்னரே எழுத்தாளர்  குறிப்பிட்டுவிட்டார். இருந்தாலும் கதையின் ஒவ்வொரு வார்த்தையும்

பெண் உரிமை- கி.வா. ஜகன்னாதன்பெண் உரிமை- கி.வா. ஜகன்னாதன்

1   “கல்யாணி, உனக்கு இன்னும் பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகவில்லையா? எவ்வளவு நாழிகை அப்படியே உட்கார்ந்திருப்பாய்? எப்போது குளிக்கிறது, எப்போது சாப்பிடுகிறது?”   “இன்றைக்குத்தான் பள்ளிக்கூடம் இல்லையென்று சொன்னேனே, அம்மா. எங்கள் பழைய தலைமை ஆசிரியர் இறந்து போனார். அதற்காக விடுமுறை.”

அமரர் கல்கியின் ‘மாஸ்டர் மெதுவடை’அமரர் கல்கியின் ‘மாஸ்டர் மெதுவடை’

1        அவருடைய உண்மைப் பெயர் அப்பாஸாமி என்பது அநேகம் பேருக்குத் தெரியாது. டிராமா நோட்டிஸுகளிலெல்லாம்,      “மாஸ்டர் மெதுவடை தோன்றுகிறார், உலகமெங்கும் புகழ்பெற்ற தென்னிந்திய ஹாஸ்ய நடிகர் ஜீரணமணி…” என்றுதான் வெளியிட்டு வந்தார்கள். இப்போது ஷுட் செய்யப்பட்டு வந்த தமிழ் டாக்கியின்

ஜடை பில்லை – கி.வா. ஜகன்னாதன்ஜடை பில்லை – கி.வா. ஜகன்னாதன்

1   பொழுது போகவில்லை யென்று என் பெட்டியை ஒழித்துக்கொண்டிருந்தேன். அந்தப் பெட்டியில் ஒடிந்த நகைகளும் தங்கக் காசுகளும் கிடந்தன. அப்போதுதான் அந்த ஜடைபில்லையைக் கண்டேன். அதை எங்கே வைத்திருந்தேனோ என்று யோசித்துக்கொண்டிருந்தாலும், இந்தப் பெட்டியை மேலே இருந்து இறக்கிப் பார்க்கச்

உள்ளத்தில் முள்- கி.வா. ஜகன்னாதன்உள்ளத்தில் முள்- கி.வா. ஜகன்னாதன்

1   நவராத்திரி அணுகிக்கொண்டிருந்தது. அவரவர்கள் வீட்டில் புதிய புதிய பொம்மைகளை வாங்கி வாங்கிச் சேர்த்தார்கள் பெண்மணிகள். குழந்தைகளுக்குத்தான் எத்தனை குதூகலம்! நாளுக்கு ஒரு கோலம் புனைந்துகொண்டு வீடு வீடாகப் புகுந்து அழைத்து வருவதற்கு அவர்கள் தயாரானார்கள்.   இந்த ஆண்டு

கீரைத் தண்டு – கி.வா. ஜகன்னாதன்கீரைத் தண்டு – கி.வா. ஜகன்னாதன்

புதிய வீட்டில் சுற்றிலும் செடி கொடிகளைப் போட வேண்டும் என்பது விசாகநாதனின் ஆசை. கண்ட கண்ட செடிகளைப் போட்டால் யாருக்கு என்ன லாபம்? கறி வேப்பிலை மரம் அவசியம் இருக்க வேண்டும். பசலைக் கொடியும் அவசியந்தான்; எப்போதும் கொத்தமல்லி கிடைக்கும்படி இரண்டு

கொள்ளையோ கொள்ளை – கி.வா. ஜகன்னாதன்கொள்ளையோ கொள்ளை – கி.வா. ஜகன்னாதன்

காட்டுக்கோட்டை ராஜாங்கம் சின்னதானாலும் கெடுபிடிக்குக் குறைவு இல்லை. ராஜா, மந்திரி, சேனாபதி சட்டசபை எல்லாம் வக்கணையாகவே இருந்தன. சேனாபதி போலீஸ்காரர்களுக்குத் தலைவர்; சட்டசபை என்பது நகர சபையைப் போலிருக்கும். ஆனாலும் அதற்குச் சட்டசபை என்று பெயர். அதில் காட்டுக்கோட்டை ராஜ்யத்துக்குரிய சட்டங்களை

அவள் குறை – கி.வா. ஜகன்னாதன்அவள் குறை – கி.வா. ஜகன்னாதன்

1   ‘உங்கள் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணினால்கூட இவ்வளவு சிரத்தை இருக்காது போல் இருக்கிறது. விழுந்து விழுந்து செய்கிறீர்களே!’ என்று வேடிக்கையாகப் பேசினாள் ராஜாராமின் மனைவி.   ‘ஆமாம். பாவம்! நல்ல பிள்ளை. நம்மை வந்து அண்டினான். குடியும் குடித்தனமுமாக இருப்பதைப்

உள்ளும் புறமும் – கி.வா. ஜகன்னாதன்உள்ளும் புறமும் – கி.வா. ஜகன்னாதன்

கடவுள் மறுப்புக் கட்சிக்கு ஆட்கள் சேர்ந்து கொண்டே இருந்தார்கள். மார்கழிமாதப் பஜனைக்கு எவ்வளவு பேர் கூடவார்களோ அந்தக் கணக்குக்கு மேல் ஜனங்கள் இந்த கூட்டத்தில் கூடினார்கள்; அதில் வேடிக்கை என்னவென்றால், மார்கழி பஜனையில் சேர்ந்து கொண்டு தாளம் போட்டவர்களே இந்தக் கூட்டத்திலும்

குழலின் குரல் – கி.வா. ஜகன்னாதன்குழலின் குரல் – கி.வா. ஜகன்னாதன்

மலையைச் சார்ந்த சிறிய ஊர் அது. அங்கே இயற்கைத் தேவி தன் முழு எழிலோடு வீற்றிருந்தாள். மலையினின்றும் வீழும் அருவி எப்போதும் சலசல வென்று ஒலித் துக்கொண்டே இருக்கும். மலர், காய், கனி ஆகியவற்றுக்குத் குறைவே இல்லை. தினை, சாமை, வரகு

தாயும் கன்றும் – கி.வா. ஜகன்னாதன்தாயும் கன்றும் – கி.வா. ஜகன்னாதன்

கன்றுக்குட்டிவர வர நோஞ்சலாகிக்கொண்டு வந்தது. ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு நடப்பதற்குள் அதைப் பத்துதடவை உந்தித் தள்ளவேண்டியிருந்தது. பால்காரப் பாலகிருஷ்ணன் அருமையாக வளர்த்த மாட்டின் கன்று அது. அவன் அருமையாக வளர்த்தது மாட்டைத்தான்; அதன் கன்றை அல்ல. கன்று மாடு சுரப்பு