Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Advertisements
Skip to content

Tag: அண்ணா

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 21

“நீ இலட்சியவாதி என்பதை நான் அறிவேன்… ஆனால், இவ்வளவு தைரியம் உனக்கு ஏற்படும், இவ்வளவு விரைவிலே என்று நான் எண்ணினதில்லை. ராதாவை நீ மணம் செய்து கொள்வதானால் ஏற்படக்கூடிய இன்னல், இழிசொல் ஆகியவைகள் சாமான்யமாக இரா! சமூகமே உன்னைப் பகிஷ்கரிக்கக்கூடும்; தீர […]

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 20

“நண்பா! கொடுமைக்கு ஆளான என் தாயாரின் சோகம் நிரம்பிய கதையை அவர்கள் கூறி முடித்த பிறகு என் கண்களிலே கொப்புளித்த நீரைத் துடைத்துக் கொண்டேன் – என் தாயாரை நோக்கி, ‘அம்மா! பிரேத பரிசோதனை செய்து பயனில்லை. இனி நடக்க வேண்டியதைக் […]

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 19

மகனே! விபரீதமான சம்பவமாகத்தான் தோன்றும் உனக்கும் சரி, எனக்கும் சரி. கட்டுக்கதைகளிலும் இப்படி இராதே என்றே கூறுவர். ஆனால், எனக்கு ஏற்பட்ட மனமுறிவு என்னை எந்த விபரீதத்துக்கும் தயாராக்கிவிட்டது. ராதா சொல்வாள், பூனைகூடப் புலியாக மாறும் என்று. நம்மைக் கண்டதும் ஓடும் […]

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 18

கொஞ்ச நேரம் நாங்கள் இருவரும் என்ன செய்வது, என்ன பேசுவது என்றே புரியாமல், திகைப்பூண்டு இருந்தோம். உன் அப்பாவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வெளி வந்தது. நான் அழவில்லை. அதற்கும் கொஞ்சம் சக்தி வேண்டும். அந்தச் சக்தியற்றவளாகிவிட்டேன், அந்த நேரம். […]

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 17

“சிந்தாமணி, பெண்ணல்லடி” என்று கிழவி சொன்னதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. “என்ன! என்ன?” என்று கேட்டேன் திகைப்புண்டு. கிழவி சிரித்துக் கொண்டே, என்னை அருகே அழைத்து தழுவிக் கொண்டு, “பயப்படாதே! எனக்குப் புதுச் சக்களத்தியாகச் சிந்தாமணி வருகிறாள் என்று பீதி அடைந்தாயே, […]

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 15

சாதாரணமாக, ஆடவர்கள், கலியாணமாவதற்கு முன்பு கெட்டு அலைவதுண்டு; பருவச்சேஷ்டை காரணமாக ஏதோ விதங்களிலே உடலையும் மனதையும் பாழாக்கிக் கொள்வதுண்டு; பித்தளையைப் பொன்னென்றும், காடியைக் கனிரசமென்றும் கொள்வதுண்டு. அப்படிப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டோ , கேட்டோ , வீட்டிலே பெரியவர்கள், சரிசரி, பையனுக்கு வயதாகிவிட்டது, […]

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 14

மகனே! என் கஷ்டங்களை விவரமாகக் கூறிக் கொண்டே இருக்கக் காலம் போதாது. ஆனால், என்றைக்கேனும் ஓர் நாள் யாரிடமேனும் முழுக்கதையையும் கூறாவிட்டால், மனதிலுள்ள பாரம் தொலையாது. ஆகவேதான், நான் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிடம் இவ்வளவு விவரமாகக் கூறி வருகிறேன். மற்றத் […]

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 13

 கதவைத் தாளிடாமல் படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை; அவரும் உள்ளே வரவில்லை; கூடத்திலே படுத்துக் கொண்டார். குறட்டை விடும் சத்தம் கேட்டது. எனக்குப் பிரமாதமான கோபம்; என்ன செய்வது; உன் அப்பா என்ன காரணத்தாலோ, ஒரு வார்த்தை பேசவில்லை. வம்புக்குத் தயாராக […]

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 12

உயிருக்கு ஆபத்து வரும் என்று எவனோ ஒரு சோதிடன் சொன்னதைக் கேட்டு, மருண்டு போனதாகவும், அந்த மருட்சியின் காரணமாகவே, என் கணவரைத் தன் புருஷராக்கிக் கொள்ளத் துணிந்ததாகவும், என் தங்கை என்னிடம் சொன்னது கேட்டு, நான் சிரித்தேன். சிரித்தேனே தவிர கொஞ்சம் […]

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 11

தங்கம், தனக்குச் சில மாதங்களில் மரணம் சம்பவிக்கும் என்று சோதிடன் எவனோ கூறினது கேட்டு, என்னிடம் கூறிக் கோவென அழத்தொடங்கியதும், அதுவரை மற்போருக்காக ஒருவர் வலிவை, மற்றவர் அறியும் பொருட்டு எதிர் எதிர் நின்று உற்று நோக்கியபடி இருப்பது போல் இருந்து […]

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 10

லேடி டாக்டர் லாசரஸ் எனக்கு அடிக்கடி வைத்தியம் பார்ப்பவர். பேய் பிடித்துக்கொண்டது என்று சொன்னபோது கோபித்துக் கொண்டு, வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்ட லாசரஸ், பிறகு பலதடவை கூப்பிட்டு அனுப்பியும் வருவதில்லை. “ஓ! முதலியார் வீட்டு அம்மாவுக்கா! டாக்டர் எதுக்கு? மந்திரக்காரனை […]

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 9

மகனே! தங்கத்தை அவர் கலியாணம் செய்து கொள்ளக் கூடாது, அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று முயன்றேன். அதன் பயன், பேய் பிடித்தவள் என்று ஊராரே கூறும்படியானதுதான். சரி! இனித் தடுத்துப் பயனில்லை. ஆண்களின் மனம் வானம் போன்றதுதான். அதிலே பல […]

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 8

மனிதர்களிலே பலவகை இருப்பது போலவே பேய்களிலும் உண்டு என்றும், எந்தெந்தச் சுபாவமுள்ள பேய் பிடித்துக் கொள்கிறதோ, அதற்குத் தக்கபடி பேய்ப் பிடித்துக் கொண்டவர்கள் நடந்து கொள்வார்களென்றும், பூஜாரி சொன்னதுடன், நான் வாதாடவும், காரணம் கேட்கவும் தொடங்கியது கண்டு, என்னை ஒரு வக்கீல் […]

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 7

பேயைக் கண்டவர்கள் கிடையாது. ஆனால் அதன் குணங்களைத் தெரிந்து கொண்டவர்களைப்போல ஜனங்கள் பேசிக் கொள்கிறார்கள். பேயின் உருவம் தெரியாது என்றும், அது மனிதர்களைப் பிடித்துக் கொண்டால், அவர்கள் செய்யும் சேஷ்டைகளின் மூலம், பேயின் போக்குத் தெரிந்து கொள்ள முடியுமென்றும் பேசுகிறார்கள். இந்தப் […]

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 6

ஓர் இரவு இன்பமாக இருந்தேன். மறுதினம் காலை முழுவதும் என் வாழ்வு மறுபடியும் மலர்கிறது என்று எண்ணி மகிழ்ந்தேன். மாலையிலே மறுபடியும் என்னைப் பேய் பிடித்துக் கொண்டது என்று சொன்னேனல்லவா? நடந்தது என்ன தெரியுமா மகனே? என் வாழ்வை நாசமாக்கவே எனக்குத் […]