Category: தமிழமுது

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 10சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 10

குறள் எண் : 414 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. விளக்கம்: நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 9சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 9

குறள் எண் : 928 களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். விளக்கம்: கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 9சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 9

குறள் எண் : 928 களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். விளக்கம்: கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 8சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 8

குறள் எண் :1155 ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு. விளக்கம்: காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 7சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 7

குறள் எண் : 595 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. விளக்கம்: நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 6சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 6

குறள் எண் : 380 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். விளக்கம்: ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 5சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 5

குறள் எண் : 32 அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. விளக்கம்: ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 4சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 4

குறள் எண் : 921 உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார். விளக்கம்: கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 3சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 3

குறள் எண் : 396 தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. விளக்கம்: மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 2சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 2

குறள் எண்: 723 பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர்.  விளக்கம்: பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் -1சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் -1

குறள் எண் : 1122 உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. விளக்கம்: இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.