Advertisements
Skip to content

Category: ஏங்கிய நாட்கள் நூறடி தோழி

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 25

நல்லபடியாக பத்திரப்பதிவு முடித்து, கையோடு அருகினில் இருந்த ஆலயம் சென்று வழிபட்டுவிட்டு அனைவருக்கும் உணவகத்தில் உணவு வாங்கி தந்து என நேரம் வேகமாக கரைய, அனைத்தையும் முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தனர் சந்திரனும், ரோகிணியும். வேலைகள் அதன்பாட்டிற்கு நடந்தாலும், செய்ய […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 24

பெற்றவர்களை மறந்து சந்திரன் உறங்கியிருக்க, ஈஸ்வரன் பட்ட கஷ்டங்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராய்தான் போயிருந்தது. ஈஸ்வரன் சந்திரனை அனுப்பி வைத்ததும் தனது அக்காவையும், மாமாவையும் தான் பார்க்க சென்றார். வாழ்க்கையில் கட்டுப்பாடு விதித்து வாழ வேண்டும் தான். அதற்காக வாழ்க்கை […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 23

ரோகிணி சந்திரனது பார்வையை புறக்கணித்தாலும், உணராமல் இருக்க முடியாதல்லவா? அவளை பின்தொடரும் அவனது விழிகள், அவளை இயல்பாகவே இருக்க விடவில்லை. ஆனாலும் ஆயிரம் கட்டுப்பாடுகளை விதித்து, சாதித்துக் கொண்டிருந்தாள். எப்படி விலகி இருந்த பொழுதும், அவன் இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் இருந்த […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 22

ரோகிணி தவிப்பும், கலக்கமுமாய் கேள்வி கேட்க, சந்திரனுக்கு அவளைப் பார்க்கவே பாவமாய் இருந்தது. தன்னை அடித்து, சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் அளவு முன்னேறிய பொழுதும் அழுகையை விடமாட்டேன் என்கிறாளே என்று அவளுக்காக தவித்தான். அவள் கோபம் சிறிது கலவரப்படுத்திய பொழுதும், […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 21

மாணிக்கவேலும், சுசீலாவும் சந்திரன் கூறியது போல கோபமாகத்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். மகனிடம் இப்படி எல்லாம் பெற்றவர்கள் பேசுவார்கள் என்பதே ரோகிணிக்கு மிகமிக புதிது. அவள் இதுபோன்ற பெற்றவர்களை பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை. கணவனிடம் சண்டை போட இன்னுமொரு காரணம் கிடைக்கப் போகிறது […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 20

சிறிது நேரம் என்ன செய்வது என புரியாது சந்திரன் அமர்ந்திருக்க, இது அவ்வளவு எளிதினில் தீரும் பிரச்சனை இல்லை என்பது புரிய சோர்ந்து போனான். லுனா விஷயத்தில் கோபம் இருக்கும், மத்தபடி கருத்தடை மாத்திரை விவகாரம் எல்லாம் புரிதல் சரியாக இல்லாததால் […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 19

உறக்கம் கலைந்து எழுந்த ரோகிணி சந்திரனின் முகத்தையே பார்த்திருந்தாள். அவளை தவிக்க செய்த அவனது முக இறுக்கமும், சோர்வும் தளர்ந்து நிர்மலமாய் இருந்தது அவனது முகம். அவனின் முகத்தில் அமைதியை காணவும், அவளின் மனமும் நிம்மதி அடைவதை அவளால் தெளிவாக உணர […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 18

தன் கணவன் தன்னைத்தேடி வந்து இருக்கிறான் என்னும் அதிர்ச்சியைக் காட்டிலும், அங்கே அமர்ந்திருப்பவன் தன் கணவன் தான் என்னும் அதிர்விலிருந்து மீண்டு, அதனை நம்பவே ரோகிணிக்கு சிறிது நேரம் எடுத்துக் கொண்டது. அவர்கள் வீட்டின் முன்புறம் திண்ணை, அதனை தாண்டி பெரியதாய் […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 17

இத்தனை தினங்களும் தொடர்ந்து வந்து கொண்டிருந்த கைப்பேசி அழைப்பு திடீரென நிற்கும் என்று ரோகிணி நினைத்ததே இல்லை. அவனோடு வார்த்தையாடிய மறுநாள், வழக்கம்போல அவன் அழைப்பான் என்றுதான் நினைத்தாள். நினைப்பு என்பதை விடவும் ஒரு வகையான காத்திருப்பு, எதிர்பார்ப்பு என்று சொல்லலாம். […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 16

செய்கையை அர்ஜுன் சற்றும் எதிர்பார்க்காததால், க்ஷணத்தில் எதுவுமே புரியவில்லை. அவன் குரலில் இருந்த கலக்கமும், இதயத்தில் இருந்த படபடப்பும் அவனது அச்சத்தையும், தவிப்பையும் தெளிவாக உணர்த்த, நண்பனின் இந்த பரிமாணத்தில் அவன் செய்த பிழைகள் எல்லாம் அர்ஜுனுக்கு மறந்து, அவன்மீது பரிதாபம் […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 15

உறங்குவதென்பது மிகப்பெரிய வரம். சந்திரனும் தன் மனைவியின் இனிய நினைவுகளில் கண் அயர்ந்திருந்தான். மாலை வரை எந்த தொந்தரவுமின்றி தொடர்ந்த அவனது உறக்கத்தை, கைப்பேசியின் சிணுங்கல் கலைத்தது. அர்ஜுன் தான் அழைத்திருந்தான். இருவருக்குள்ளும் மிக ஆழமான நட்பு இல்லையென்றாலும், நல்ல நண்பர்கள் […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 14

ரோகிணி இல்லாமல் சந்திரனுக்கு உலகமே இயங்கவில்லை என்று கூறலாம். அவள் இல்லாமல் அவனால் இருக்கவே முடியவில்லை. வாழ்வே வெறுப்பாக இருந்தது. அவளிடம் தினமும் பேசிவிட்டு தான் நாளினை தொடங்க முடிந்தது. அவள் எப்பொழுது வருவாள் என மனம் ஏங்க, இன்று அவளிடம் […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 13

நடப்பதை எதையும் ரோகிணியால் நம்பவே இயலவில்லை. ‘இது சோதனை காலம்’ என்று புரிந்திருந்தது. அதற்காக இப்படியா? ஒன்றிலிருந்து மீளும் முன்பு அடுத்த சோதனை என அணிவகுத்து நிற்கிறது. அவளால் எதையுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், அவளுக்கு வேறு வழியில்லையே! நீ ஏற்றுக்கொள்வாயோ, […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12

சந்திரன் பேசப் பேச, அதன் அர்த்தத்தை உள்வாங்கிய ரோகிணியது இதயம் சிறுசிறு துகள்களாய் சிதைந்ததைப் போன்று உணர்ந்தாள். ஏற்கனவே மூன்று நாட்கள் சரியாக உண்ணாதது, அழுதழுது சோர்ந்திருந்தது, தற்பொழுது கணவன் கூறிய செய்தியினால் அடைந்த அதிர்ச்சி என அவளை மொத்தமாக வலுவிழக்க […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 11

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 11   சந்திரனுக்கு ரோகிணி பேசியது எதுவும் புரியவில்லை. ‘நான் என்ன கேக்கறேன். இவ என்ன பதில் சொல்லறா? சாப்பிட்ட மாதிரியும் தெரியலை, இப்படி பேசாம படுத்துட்டா’ என குழம்பியவன், “ரோ, சாப்பிடாம தூங்கற?” […]

யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 10

இவ்வளவு கனமான சூழலை யாரும் எதிர்பார்க்கவில்லை. அங்கிருந்தவர்களுக்கு சந்திரன் தான் ரோகிணியின் கணவன் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதிலும், அவள் பாவனையைப் பார்த்தால், இன்று தான் கணவனைப் பற்றி தெரிந்து கொள்கிறாள் என்பது திண்ணம். அவளின் நிலையை எண்ணி அனைவரும் வருந்தினார்கள். […]