Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 13’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 13’

அத்தியாயம் – 13

யாதவ் காதல் நிறைவேறுமா?

 

யாதவ்மித்ரனின் வார்டை அடைந்த அனுஷியா

டேய் அண்ணா…! சுகமாகி வீட்டுக்கு போனதும் ரெண்டு வீட்டை எனக்கு எழுதி வைக்கிற வேலையைப் பார். சரியா?”

உண்மையாவா சொல்லுறாய் அனு…? என்ர வயித்தில பாலை வார்த்தாய்… இப்ப தான் ஒழுங்காக மூச்சே வருது.”

சரி… சரி… ஓவரா ஸீன் போடாதை. கவிக்கு வாற மாசம் பைனல் எக்ஸ்ஸாம். ஒரு மாதத்துக்கு நடக்கும். வைவா அதுக்கு பிறகு… அதால அவளுக்கு எக்ஸாம்ஸ் முடியிற வரைக்கும் அவளைக் குழப்பாமல் இருடா…”

ஐயோ…! ரெண்டு மாசம் வெய்ட் பண்ணணுமா? நம்மால முடியாதுப்பா.”

டேய் மித்து…! இது உனக்கே கொஞ்சம் ஓவர்…. அவனவன் லவ்வுக்காக வருஷக் கணக்கா காத்திருக்கிறான். இண்டைக்கு வந்த லவ்வுக்கு உன்னால ஒரு ரெண்டு மாசம் காத்திருக்க முடியாதா…?”

ஓகே… ஓகே… ரெண்டு மாசத்துக்குப் பிறகு வாற ஒரு முகூர்த்த நாளை அப்பாட்ட சொல்லி பிக்ஸ் பண்ண சொல்லிடுறன். அப்ப கவிக்கு எக்ஸ்ஸாம் முடிஞ்ச உடன கல்யாணத்தை வைச்சிடலாம்… வெடிங் ஹோல் எங்கடயே இருக்குத்தானே. டிரெஸ் அம்மாவை அப்பாவோட இந்தியாக்கு போய் எடுத்திட்டு வரச் சொல்லிடலாம்…”

திருமணத்திற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டு போனவனை வியப்புடன் பார்த்தாள் அனு.

என்னடா இது இவ்வளவு ஸ்பீடா இருக்கிறாய்… எல்லாத்துக்கும் முதல் கவிட சம்மதம் முக்கியம்டா…”

அதெல்லாம் அவ சம்மதிப்பா… நான் இண்டைக்கே அம்மா, அப்பாவை கவி வீட்டில போய்க் கதைக்க சொல்லுறன்”

என்னத்தயடா மகனே போய் கதைக்கிற? யாரோட போய்க் கதைக்கிற?” 

கேட்டுக் கொண்டே வந்தனர் யாதவ்மித்ரனின் பெற்றோர் சுந்தரலிங்கமும் வசந்தாவும்.

உங்கட மகன் தனக்கு பொம்பிளை பார்த்திட்டான் சித்தப்பா… போய்க் கல்யாணம் பேசட்டாம்.”

உண்மையாவா மித்து… யார் என்று சொல்லு… இண்டைக்கே போய் பேசி முடிக்கிறம்…”

நல்ல குடும்பம்டா இது…. என்ன சித்தி இது… அவனைத் திட்டாமல் நீங்களே இப்பிடி சொல்லுறியள்?”

இல்ல அனு… இவ்வளவு காலமும் கல்யாணம் வேண்டாம் என்றவன் இப்ப கல்யாணம் பேச சொல்லுறான் என்றால் அந்த பிள்ளை ஒரு மகாலக்ஷ்மியாக தான் இருக்கணும்…”

அம்மா என்றால் அம்மா தான்…”

நாளைக்கு வெள்ளிக் கிழமை. வளர்பிறை வேற… நாளைக்கு பின்னேரம் போய் கதைக்கிறம்… நீ பிள்ளைட விலாசத்தை சொல்லுடா…”

அட்ரஸ் சொல்லுடி அனு… அதுக்கு இன்னொரு வீடு கேட்டிடாதை… நம்மால முடியாதுடா சாமி…”

வீட்டுக்கதை புரியாமல் விழித்த பெற்றோருக்கு கவிக்கு லவ் இருக்கா என்று அறிந்து சொல்வதற்காக ரெண்டு வீடு தருவதாக பேரம் பேசியதைக் கூறி விட்டு பதிலுக்காய் அனுவின் முகத்தை ஏறிட்டான்.

வல்வெட்டித்துறை பிள்ளை… அப்பா வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர்… தங்கச்சி ஒன்று கொழும்பு யுனிவர்சிட்டில மனேஜ்மன்ற் படிக்குது. எனக்கு இவ்வளவு தான் தெரியும்…”

வல்வெட்டித்துறை என்றால் எங்கட ஆக்களில்லையோ தெரியேல்ல.” பெண்களுக்கே உரிய குணத்தில் சாதி பற்றிய கவலையை வெளியிட்டார் வசந்தா.

எந்த சாதி மதம் என்றாலும் எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. நான் கல்யாணம் என்று பண்ணிக் கொண்டால் அது கவியை மட்டும் தான்…” உறுதியாக கூறி விட்டு அயர்வாய் கட்டிலில் சாய்ந்து கொண்டான் யாதவ். 

நான் இப்பவே விசாரிக்கிறன். அதுக்குள்ள அம்மாவும் பிள்ளையும் தேவையில்லாமல் சண்டை பிடிக்க வேணாம்….”

நான் சும்மா சொன்னனப்பா… அவன் எந்த கழுதையைக் கட்டினாலும் எனக்கு ஓகே.. அவனுக்கு பிடிச்சிருந்தால் எனக்கும் பிடிக்கும்” 

சுந்தரலிங்கம் வீட்டுக்கு சென்றதும் முதல் வேலையாக பருத்தித்துறையை சேர்ந்த தனது வர்த்தக தொடர்புள்ள நண்பர்கள் சிலரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்திரஹாசன் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டார். 

சாதி, சமயத்திலோ,  செல்வந்த நிலைமையிலோ இரு குடும்பங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று அறிந்து வசந்தா நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.  

அடுத்த நாள் மாலையே நல்ல நேரம் பார்த்து சுந்தரலிங்கம் தம்பதி சந்திரஹாசன் வீட்டை அடைந்தனர். 

வீட்டு வாயிலுக்கு வெளியே கார்ச் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தார் தெய்வநாயகி.  ஆம். கவியின் கெட்ட நேரமோ, யாதவ்வின் நல்ல நேரமோ கவிக்கு பரீட்சை நேரம் தன் கையால் சமைத்து கொடுக்க என்று இன்று காலையில் தான் தெய்வநாயகி கொழும்பில் இருந்து வந்திருந்தார். அருண்யா தான் தனியாக சமாளித்து கொள்வேன் என்று கூறி தாயை ஊருக்கு அனுப்பி இருந்தாள். 

காரிலிருந்து இறங்கியவர்கள், “இது சந்திரஹாசன் ஸேர் வீடு தானே…?”

சந்தேகமாக கேட்டார்கள். 

யாராக இருக்கும்? இவரை எங்கேயோ பார்த்த ஞாபகமா கிடக்கே’

மனதிற்குள் யோசனை ஓடினாலும், முகத்தில் முறுவலோடு,

உள்ள வாங்கோ… இந்த வீடு தான்… அவர் உள்ள தான் இருக்கிறார்…” கூறியபடி அவர்களை உள்ளே அழைத்து சென்றார். 

அந்த பெரிய நாற்சார் வீட்டினுள்ளே சென்று வரவேற்பறையில் அமர்ந்தவர்கள் ஒரு நிமிடம் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்க தெய்வநாயகியே ஆரம்பித்தார்.

உங்கட தானே ராசி சில்க்ஸ்… கடையில உங்களைக் கண்டிருக்கிறன்… எங்கேயோ பார்த்த முகமா இருக்கே என்று யோசிச்சன்… இப்பதான் நினைப்பு வந்திச்சு… நாங்கள் என்ன விசேஷம் என்றாலும் உங்கட கடையிலதானே உடுப்பெடுக்கிற…”

ரொம்ப சந்தோசம்.. நானே யோசிட்டிருந்தன்… எப்பிடி ஆரம்பிக்கிற என்று…”

முதல்ல நான் சாப்பிட குடிக்க ஏதாவது எடுத்திட்டு வாறன். அதுக்கு பிறகு எல்லாம் கதைக்கலாம் அண்ணே…”

சமையலறைக்கு சென்று பருத்தித்துறை வடை உறைப்புக்கும் சொக்லேட் ஃபப் பிஸ்கட் கொஞ்சம் இனிப்புக்கும் ஒரு தட்டில் எடுத்து வைத்தவர் தேநீரும் போட்டு எடுத்து கொண்டு போய் வந்தவர்களை உபசரித்தார். அதுவரை சந்திரஹாசனோடு நாட்டு நடப்புகள் பற்றி பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர் யாதவ்வின் பெற்றோர்.

தேநீரை இரு சொட்டு அருந்தி விட்டு தொண்டையை லேசாக செருமி தன்னை அமைதிப் படுத்திக் கொண்டு வந்த விடயத்தை ஆரம்பித்தார். 

எனக்கு ராசி, நல்லி என்று ரெண்டு கடை யாழ்ப்பாணத்திலயும் கொழும்பில ராசி என்ற பெயரிலேயே ஒரு கடையும் இருக்கு. நல்லூர்க் கந்தனுக்கு பக்கத்தில இருக்கிற அபிராமி கல்யாணமண்டபமும் எங்கட தான். பிஸ்னஸ் எல்லாம் லாபமாகவே நடக்குது. கடன் கிடன் எதுவும் இல்லை.

எங்கள் ரெண்டு பேருக்கும் நல்லூர் தான். உங்கட சாதி தான். ரெண்டு வீடு, காணி, தோட்டம் தாராளமாக இருக்கு. ஒரேயொரு மகன். வயது முப்பது. மொரட்டுவ எஞ்சினியரிங் முடிச்சிட்டு இப்ப கொழும்பில சொந்தமாக ராசி கோட் என்று கன்ட்ரக்ஸன் கம்பெனி வைச்சு நல்லா நடத்திறான். 

ரெண்டு நாளைக்கு முதல் ஆனைப்பந்தில ஒரு அக்ஸிடன்ற்ல அடிபட்டு  பெரியாஸ்பத்திரில அட்மிட் பண்ணிருக்கிறம்…”

அதுவரைக்கும் அவர் சொல்வதை ஏன் இதையெல்லாம் எங்களிடம் சொல்கிறார் என்ற குழப்பத்துடன் குறுக்கிடாமல் கேட்டிருந்தவர்கள் விபத்து என்றதும் பதறி விட்டார்கள்.  

இப்ப தம்பிக்கு சுகமே? பெரிய காயம் ஒண்டுமில்லை தானே…?”

கையில காலில பிஒபி போட்டிருக்கு. மற்றபடி சின்ன சின்ன உரஞ்சல் காயங்கள் தான்…”

சந்நிதி கந்தன் காப்பாத்திட்டாயப்பா”

தெய்வநாயகி வாய் விட்டே நன்றி பகர்ந்தார். 

ஆனால் அக்ஸிடன்ற் ஆகினதும் நல்லதுக்கு தான்…”

மகனுக்கு விபத்து நடந்ததை நல்லதற்கு என்று சொல்கிறார்களே இவர்களுக்கு மூளை குழம்பி விட்டதோ என்ற ஐயத்துடன் தெய்வநாயகியும் சந்திரஹாசனும் சுந்தரலிங்கம் வசந்தாவை ஏறிட, சுந்தரலிங்கமும் சிரித்து கொண்டே தொடர்ந்தார்.

ஏன் அப்பிடி சொல்லுறன் என்றால் அக்ஸிடன்ற் நடந்த படியால தானே நேற்று யாதவ் உங்கட மகள் கவின்யாவை ஆஸ்பத்திரியில கண்டிருக்கிறான்…”

அவர்கள் வந்த விடயம் புரியவும் தெய்வநாயகி மகிழ்ச்சியுடன் கணவர் முகத்தை ஏறிட்டார். ஆனால் சந்திரஹாசனோ முகத்தில் எந்த விதமான உணர்ச்சிகளையும் காட்டாமல் அவர்கள் சொல்வதையே கேட்டபடி அமர்ந்திருந்தார். 

இவ்வளவு காலமும் வேலை வேலை என்று கல்யாணமே வேணாம் என்று இருந்தவன் நேற்று கவின்யாவைக் கண்டதிலிருந்து  கவி கவி என்றே சொல்லிட்டு இருக்கான். 

உங்களிட்ட உடனடியாக கதைச்சு உங்க விருப்பத்தை கேட்க சொல்லி எங்களை ஒரே ஆக்கினை. உங்கட குடும்பம் பற்றி விசாரிச்சம்… சாதி, சமயம், வசதி, அந்தஸ்து எல்லாம் பொருத்தமா வேற இருக்கு… நீங்கள் தான் இனி உங்கட விருப்பத்தை சொல்ல வேணும்…”

சுந்தரலிங்கம் நீளமாக பேசி முடிக்க 

தெய்வநாயகி வாயெல்லாம் பல்லானார். சந்திர ஹாசன் சிறிது சிந்தனை வயப்பட்டவர் பின் அமைதியாக சொன்னார். 

நீங்கள் வீடு தேடி வந்ததில் ரொம்ப சந்தோசம் அண்ணை. ஆனால் எங்களுக்கு எங்கட பிள்ளைட விருப்பம் தான் முக்கியம்… கவிக்கு இப்ப கடைசி சோதினை வேற நடக்குது. 

இப்ப அவட்ட கல்யாணம் பற்றி கதைக்க முடியாது… அதனால சோதினை முடிய நான் கவிய கேட்டு சொல்லி அனுப்பிறன். அது வரைக்கும் உங்கட மகன் கவிட மனசை குழப்பாமல் பாத்து கொள்ளுங்கோ  அண்ணை…”

அதுக்கென்ன ஸேர்… கவிட சோதினை முடிய மகனையும் கூட்டிக் கொண்டு வாறம். நல்ல விதமா பேசி முடிப்பம். இது என்ர விஸிட்டிங் கார்ட்…. பின்னால வீட்டு நம்பர் எழுதி இருக்கிறன். ஏதும் விசயம் என்றால் சொல்லுங்கோ. வேற என்ன… நாங்க போய்ட்டு பிறகு ஆறுதலா வாறம்.”

ரொம்ப சந்தோசம் அண்ணே… எல்லாம் சந்நிதி கந்தன் நல்ல படியா முடிச்சு தருவான். யோசிக்காமல் போய்ட்டு வாங்கோ…”

தெய்வநாயகி மலர்வாக பதிலலளித்து அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு யோசனையாக அமர்ந்திருந்த கணவனிடம் பாய்ந்தார். 

உங்களுக்கு என்ன விசரேப்பா… எவ்வளவு பெரிய இடத்தில இருந்து வீடு தேடிக் கேட்டு வந்த சம்பந்தம் உடன ஓம் என்று வளைச்சுப் போடாமல் பிள்ளையைக் கேட்கணும் நொள்ளையைக் கேட்கணும் என்று கொண்டு… அவள் சின்னப் பிள்ளை… அவளுக்கு என்ன தெரியும் என்று அவளைக் கேட்க போறியள்? இது மாப்பிள்ளை இத்தினையாம் திகதி கல்யாணம் என்று சொல்லுறதை விட்டிட்டு… அவளுகளுக்கு நீங்கள் ஓவரா செல்லம் குடுக்கிறியள்… சொல்லிப் போட்டேன்…”

நீர் தான் விசர் கதை கதைக்கிறீர் தெய்வம்…சும்மா சும்மா எல்லாத்துக்கும் கத்தாதையும்.. அவள் சின்னப் பிள்ளை என்றால் பிறகேன் கல்யாணம் பண்ணிக் குடுப்பான்? நீரோ அவளோ வாழப் போறது…? வாழப் போற அவளுக்கு பிடிச்சு அவள் தான் யாரைக் கல்யாணம் பண்ணுற என்று முடிவெடுக்க வேணும்…

டொக்டராகி எத்தினையோ பேரிட உயிர காப்பாத்தப் போற அவளுக்கு தெரியாதே தன்னோட வாழப் போறவன் எப்பிடி இருக்கணும் என்று… நீர் கவிட சொந்த விசயத்தில தலையிடக் கூடாது… சொல்லிப் போட்டன்…”

இந்த மனுசனுக்கு நல்லா விசர் முத்தித்தான் போச்சு… பெத்த மகளிட கலியாண விசயத்தில தலையிட எனக்கு உரிமையில்லையா என்ன…?”

ஓம்… இல்லைத் தான்… வாழப் போறது அவள்… அப்ப அவள் தான் முடிவெடுக்க வேணும்… அவள் ஸாமை விரும்பிற உமக்கு தெரியாதே”

என்ர முருகையா… இது என்ன நல்ல கதையாக் கிடக்கு… ஆரவன் ஸாம்…? அப்பனும் பிள்ளையளுமா எவ்வளவு நாளா இதை என்னட்ட மறைச்சனியள்…? அந்த அருணி சனியனும் என்னட்ட மூச்சு விடேல்ல..”

கொஞ்சம் ஊரைக் கூட்டாமல் அமைதியாக நான் சொல்லுறதைக் கேட்கிறீரோ…?”

என்ன அமைதியாக கேட்கிறதோ…? அப்பிடிப்பட்ட கதையைத் தானே சொல்லுறியள்… தலையில இடியை இறக்கிட்டு அமைதியாக கதைக்கிறதோ…? இந்த வீட்டில எல்லாரும் என்னை பற்றி என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறியள்…? பெத்த தாய்க்கு ஒரு சதத்துக்கும் மதிப்பில்லை இங்க…”

இங்க பாரும்… கவியொண்டும் காதலிக்கிறன் என்று ஊரைச் சுத்தவும் இல்லை… என்னட்ட சொல்லவும் இல்லை… உமக்கு ஞாபகம் இருக்கோ? நாலஞ்சு வருஷத்துக்கு முதல் கவிக்கு கடிதம் ஒரு பொடியன் குடுத்து விட்டு நீர் அதைக் கிழிச்சு எறிஞ்சனீர்…”

ஓமப்பா… அவங்க தானே அந்த பள்ளிக்கூட பிரச்சினை நேரம் பிள்ளையளை வீட்ட கொண்டு வந்து விட்டிட்டு கவிட போட்டோவைக் களவெடுத்துக் கொண்டு ஓடினாக்கள்”

ஓமோம்… உமக்கு நல்லா ஞாபகம் இருக்கு. நீர் கிழிச்சுப் போட்ட கடிதத்தை ஒட்டி கவி இன்னும் பத்திரமா வைச்சிருக்கிறாள். அண்டைக்கு அவளிட மேசை தூசி தட்டி அடுக்கேக்க கண்ணில பட்டிச்சு…அதால முடிவா சொல்லுறன் அவளிட்ட கேட்காமல் ஒரு வார்த்தை நீர் அவளிட கலியாணம் பற்றி கதைக்க கூடாது…”

ஐயோ… என்ர சந்நிதி கந்தா… நீதான் இந்த குடும்பத்தைக் காப்பாத்தோணும்… அந்த பொடியன் வேற சாதி… கிறிஸ்டியன் வேற… அதைப் போய்க் கட்டிக் குடுக்கப் போறியளே…? உங்கட பெட்டைக்கு இப்ப என்ன குறையென்று அவனுக்கு தாரை வார்க்க நிக்கிறியள்…? கவிக்கு அடுத்தது இன்னொரு பொம்பிளைப் பிள்ளை இருக்கிற நினைப்பில்லையே… மூத்தவளை வேற சாதி சமயத்தில கட்டிக் குடுத்தால் இளையவளை எவன் கட்டுவான்…? இளையவளை அப்ப என்ன சிங்களவனுக்கு கட்டிக் குடுக்கப் போறியளோ…? நீங்கள் செய்தாலும் செய்வியள்… ஊரில புடிச்ச  பெரிய மனுஷன் என்ற பேர் மட்டும் தான்… வேத்து சாதில கட்டிட்டு நாளைக்கு கவி ஒரு சபை சந்திக்குப் போய் நிக்கேலுமோ…? அவள்ட பிள்ளை தேவாரம் படிக்குமோ…? ஜெபம் சொல்லுமோ…? உங்களுக்கு மூளை குழம்பிப் போச்சு… வேற ஒண்டுமில்லை….”

கொஞ்சம் பொரிஞ்சு கொட்டுறதை நிப்பாட்டுமப்பா… நான் முன்னால தானே இருக்கிறன்… பிறகேன் எட்டு வீட்டுக்கு கேட்க கத்துறீர்…? தேவாரம் படிக்கிறதோ… ஜெபம் பண்ணுறதோ அதை கவி முடிவு செய்யட்டும்… அவளுக்கு நல்லது கெட்டது தெரியும்… அருணிக்கும் ஆரைப் பிடிக்குதோ அவனைத் தான் கட்டி வைப்பன்….”

வீடு தேடி இவ்வளவு நல்ல சம்பந்தம் விரும்பிக் கேட்டு வந்திருக்கு… அப்பனும் பிள்ளையளும் புத்தி கெட்டு நிக்குதுகள்…”

திரும்ப தொடங்காதையும் தெய்வம்… நானும் திரும்ப சொல்லுறன்… என்ர பிள்ளையளின்ட கலியாணம் அதுகள் விருப்பப் படிதான் நடக்கும்… இன்னொரு விசயம் சொல்லுறன்… கவனமா கேளும்… கவிட சோதினை முடிய முதல் எந்த கலியாண கதையும் இந்த வீட்டில யாரும் கதைக்க கூடாது… சொல்லிப்போட்டன்…”

இறுதியும் உறுதியுமாக கூறிவிட்டு சந்திரஹாசன் எழுந்து வெளியே சென்று விட்டார். தெய்வநாயகியோ உலைக்களமாய் கொதித்த மனதோடு செய்யும் வகையறியாது அயர்வாய் அமர்ந்தார். அவர் மனம் முழுவதும் ஒரே சிந்தனையாய் சுந்தரலிங்கம் குடும்பத்தை எவ்வாறு சம்பந்தி ஆக்குவது என்பதிலேயே குறியாய் நின்றது.

மகள்களின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சந்திரஹாசன் வெற்றி பெறுவாரா? அல்லது வறட்டுக் கௌரவத்திற்காக பிள்ளைகளின் ஆசைகளை மதிக்காத தெய்வநாயகி வெற்றி பெறுவாரா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 19’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 19’

அத்தியாயம் – 19 யாதவ்வின் காதல் ஈடேறுமா?     கவின்யாவின் அறையில் உடை மாற்றி அங்கிருந்த ஒற்றை ஸோபாவில் அமர்ந்திருந்தான் யாதவ். கவியோ அணிந்திருந்த நகைகளைக் கழற்றி அந்த ஒப்பனையைக் கலைப்பதில் ஈடுபட்டிருந்தாள். நெற்றிச்சுட்டியை எடுத்து விட்டு அவள் நீண்ட

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 21’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 21’

அத்தியாயம் – 21 நடந்தது என்ன?   பத்து வருடங்கள் உருண்டோடியிருந்தது. மந்திகையில் அமைந்திருக்கும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வெளியே தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்து யாருக்கோ காத்துக் கொண்டிருந்தான் அவன். சிறிது நேரம் முதல் தான் வெளிதேசத்திலிருந்து வீடு திரும்பி

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 20’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 20’

அத்தியாயம் – 20 அருண்யா எங்கே…? காலையில் எழுந்ததுமே தந்தையிடம் இரவு ஸாம் அழுததைப் பற்றிக் கூறித் தான் சென்று பார்த்து வருவதாக ஸாம் வீட்டிற்கு சென்று விட்டாள் அருண்யா. ஸாமின் மனநிலையை புரிந்து கொண்டவர் மகளைத் தடுக்கவில்லை.  அந்த நல்ல