Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 9’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 9’

அத்தியாயம் – 9

காதல் கீதம்

 

அந்த வாரம் முழுவதும் பேருந்தில் தொடர்ந்தது ஸாம் – கவின்யாவின் காதல் மௌனகீதம். காலையும் மாலையும் ஸாம் குழுவினரின் பாதுகாப்போடு பல்கலைக்கழகம் சென்று வந்தாள். அஞ்சலி சுகவீனம் காரணமாக அந்த வாரம் முழுக்க வருகை தராததினால் இவர்கள் பாதுகாப்பே பெரு நிம்மதியாக சென்று வந்தாள் கவி.

 

 

அவள் பர்ஸ்ஸில் இருக்கும் பணத்தை எடுத்தல், சில கெட்ட வார்த்தைகளை சொல்லி திரும்ப ஒப்பிக்க சொல்லுதல், தங்கள் பாடங்களை கொடுத்து பிரதி பண்ணி வரச் சொல்லுதல் என்று சில இலகுவான பகிடி வதைகளே வழங்கப்பட ஸாமின் உதவியின்றியே கவின்யா அனைத்தையும் சமாளித்துக் கொண்டாள்.

 

 

இரண்டாம் வருட மருத்துவ பீடத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் வைத்தியசாலைக்கும் செல்ல வேண்டும் என்பதால் குறைந்த அளவு ராக்கிங்கே மருத்துவ பீட மாணவர்களுக்கு எப்போதும். அத்தோடு அவர்கள் எப்போதும் படிப்பே கதி என்று இருப்பதால் ஒரு சில மாணவர்களே ராக்கிங்கில் ஆர்வம் காட்டுவது. 

 

 

ஒரு மாதம் முடிவடைந்து புதுமுக மாணவர்களை வரவேற்கும் முகமாக இரண்டாம் வருட மாணவர்களால் வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. முதலாம், இரண்டாம் வருட மாணவர்களின் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்க கவியின் குரல் வளம் அறிந்து பாடலுக்காக அவள் பெயரும் கொடுக்கப் பட்டிருந்தது. 

 

 

மெல்லிய மேக வண்ணத்தில் கருநீல கரை போட்ட பருத்தி புடவை அணிந்து கழுத்திலே சிறிய முத்து மாலை, காதுகளில் முத்துத் தோடுகளும், இடக்கையில் வெள்ளைப் பட்டி போட்ட கைக் கடிகாரமும், தளரப் பின்னிய ஒற்றை ஜடையில் வலப்பக்க காதோரமாக ஒரு வெள்ளை ரோஜாவுமாக கவின்யா மேடை ஏறிய போது கொள்ளை போனது ஸாமின் உள்ளம் மட்டும் அல்ல. அங்கிருந்த எத்தனையோ பெண்களின் இதயங்கள் கூட ‘என்ன ஒரு அழகு’ என்று வியந்தன. 

 

 

ஸிம்பிள் அன்ட் ஸ்வீட் என்றால் இது தான்டா மச்சான். யாருக்கு குடுத்து வைச்சிருக்கோ?” பின்னாலிருந்து கேட்ட ஒரு ஏக்கக் குரல். நிரோஜனும் ஸாமும் ஒருவரை ஒருவர் பார்த்து நகைத்துக் கொண்டனர். சுதன் பின்னால் திரும்பி அந்த நாலாம் வருட கலைப்பீட மாணவனைப் பார்த்து,

 

 

அண்ணா… அந்த குடுத்து வைத்த மகாராசன் இவர் தான்” என்று ஸாமைத் தொட்டுக் காட்டினான்.

 

 

அந்த மாணவனும் அசடு வழிந்தவாறே,

 

 

சொறி தம்பி… எனக்குத் தெரியாது. குறை நினைக்காதிங்கோ…” என்று ஸாமைப் பார்த்து மன்னிப்பு கேட்டான்.

 

 

சும்மா இருங்கோ அண்ணா… இதுக்கெல்லாம் சொறி சொல்லுவாங்களா? கம்பஸ் லைப்ல இதெல்லாம் சகஜம் தானே” என்று மென்மையாக பதில் கொடுத்தான் ஸாம். 

 

 

அதேநேரம் ஸாம் இருக்கும் இடத்தை கண்களால் தேடி அவனிடம் சிறிய தலையசைப்பை அவனுக்கு மட்டும் புரியுமாறு வழங்கி விட்டு, தனது இனிய குரலிலே ஒரு கணம் கண்களை மூடித் திறந்து தன்னை சமனப் படுத்திக் கொண்டு பாட ஆரம்பித்தாள் அந்த வல்வெட்டி மண்ணின் சின்னக்குயில் சித்ரா.

 

 

தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் – திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் – தகு திகு
தனதனதோம் தனதோம்

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா

தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் – திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் – தகு திகு
தனதனதோம் தனதோம்

தனதோம்தோம் ததீம்தீம் ததோம்தோம் ததீம் என
விழிகளில் நடனமிட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்
மனதைத் தழுவும் ஒரு அம்பானாய்
பருவம் கொத்திவிட்டு பறவை ஆனாய்
ஜணுததீம் ஜணுததீம் ஜணுததீம்
சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ…


சூரியன் வந்து வாவெனும்போது
என்ன செய்யும் பனியின் துளி
கோடி கையில் என்னைக் கொள்ளையிடு தோடி கையில் என்னை அள்ளியெடு
அன்பு நாதனே அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்
என் காற்றில் சுவாசமில்லை
அது கிடக்கட்டும் விடு உனக்கென்ன ஆச்சு?

 

 

கவின்யா பாடலின் உள் அர்த்தத்தை புரிந்து தன் மன்னவனை நினைந்து உருகி பாடப் பாட ஸாமின் மனதையோ எதுவோ பிசைந்தெடுத்தது. அவளை தான் காக்க வைத்து வருத்துவதை உணர்ந்து இலேசாக கண்கள் கலங்கினான் அந்த நல்லவன். 

 

 

இனியும் அவளை வெய்ட் பண்ண வைக்காமல் லவ்வ சொல்லுடா. பாவம்டா… அவள் இன்னும் எவ்வளவு நாள் தான் நீ திருவாய் மலர்ந்தருளுவாய் என்று காத்திருக்கிறதாம்?”

 

 

சற்றே கடுமையான குரலில் நிரோஜன் உரைக்க,

 

 

எனக்கு மட்டும் சொல்ல ஆசை இல்லையா மச்சான்? சாதி, மதம் எல்லாம் குறுக்க நிக்குதே. அப்பாதான் படிச்சு முடியிற வரை அவளைக் குழப்ப வேணாம் என்றுறார். கம்பஸ் முடிய அவள்ட வீட்டில கதைப்பம் என்று சொன்னாருடா. அதுதான் பேசாமல் இருக்கிறன். இப்ப லவ்வ சொன்னால் அடிக்கடி சந்திக்க ஆசை வரும். யாராவது எங்களை ஜோடியாக கண்டு அதை அவள் வீட்டில் சொல்லிட்டால் அப்புறம் அவளுக்கு வீட்டில நிம்மதி இருக்காது. பிறகெப்பிடிடா அவள் நல்லா படிக்கேலும்? அதுதான்டா இப்ப சொல்லப் பயமாக் கிடக்கு.”

 

 

தனது உள்ளக்கிடக்கையை உயிர் நண்பனிடம் எடுத்துரைத்தான் அந்த தந்தை சொல் தட்டா தனயன்.

 

 

நீ சொல்லுறதும் சரிதான் மச்சான்… ஆனால் நீ சொல்லுவாய் சொல்லுவாய் என்று காத்துக் காத்தே அவள் அப்செற் ஆகப் போறாளே. ஏதோ நீதான் யோசிச்சு நடடா… அவளும் பாவம்… எனக்கு என்ன சொல்லுற என்றே தெரியேல்ல ஸாம்…” 

நிரோஜனும் யோசனையாகவே பதிலுறுத்தான்.

 

 

அதே நேரம் கவி பாடலை முடித்திருக்க அவ்வளவு நேரமும் அமைதியாய் மகுடி இசைக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல் இருந்த அரங்கம் சுயநிலைக்கு வந்து கைகளை தட்டி ஆர்ப்பரித்து அவளை வாழ்த்தியது. 

 

 

மலர்ந்த முகத்துடன் நன்றி சொல்லி மேடையை விட்டு இறங்கினாள் கவி. அவள் மனமோ ஸாம் தான் காத்திருப்பதை உணர்ந்திருப்பான், வெகு விரைவில் ஐ லவ் யூ சொல்வான். தாங்கள் காதல் சிட்டுக்களாக பறக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்ற கனவில் மிதந்தது. 

 

 

நிகழ்வுகள் நிறைவடைந்ததும் கவியைச் சுற்றிக் கொண்ட நிரோஜனும் நண்பர்களும் அவளைப் பாராட்டு மழையில் நனைத்தனர். ஸாமோ விழிகளாலேயே அவளை விழுங்கியபடி இன்னும் நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டுமே என்ற ஏக்கத்தோடும் சோக வண்ணம் முகத்திலே பூசி நின்றான். 

 

 

தன்னை ஆசையாகப் பார்த்தாலும் அவன் வதனம் வாசித்த சோக கீதம் கண்டு கவி ஏதும் புரியாமல் குழம்பினாள். எல்லோருக்கும் முன்னால் இந்த பாடல் பாடியது பிடிக்கவில்லை போல் என்று தானாகவே ஒரு காரணம் கற்பித்து தன்னையும் வருத்திக் கொண்டது அந்த பேதைப் பெண் உள்ளம்.

 

 

கவி… ராக்கிங் முடிஞ்சதுக்கும் நல்லா பாடினதுக்கும் எங்களுக்கு பார்ட்டி வைக்கணும் சரியா?”

சுதர்சன் சொல்லவும்,

 

 

எப்பிடித் தான் ஒவ்வொரு கிழமையும் எங்களை ஒட்டாண்டி ஆக்கிறதுக்கு காரணம் கண்டு பிடிப்பியளோ தெரியாது….”

வெளிப்படையாக அஞ்சலி சலித்து கொள்ள,

 

 

என்ன அஞ்சு… வாய் நீளுது. ராக்கிங் முடிஞ்சிட்டு என்ட துணிவோ? நாங்கள் எப்பவும் சீனியர் தான். விளங்குதோ?”

 

 

சும்மா… போங்கோண்ணா… ஏற்கனவே மனுஷர் எப்ப இந்த சாறிய கழட்டி எறிவம் என்று இருக்க நீங்கள் வேற பார்ட்டி அது இதென்று கடுப்பாக்கிறீங்க… எப்படா வீட்ட போய் நிம்மதியா ஒரு நித்திரை கொள்ளுவன் எண்டிருக்கு. ராக்கிங் முடியும் வரை அந்த நோட்ஸ் எழுதித் தா… இந்த அசைன்மென்ட் செய்து தா… என்று மனுசரை நிம்மதியா ஒரு நாள் தூங்க விட்டிருப்பாங்களா..?”

 

 

அப்ப கடைசி வருஷம் முழுக்க ஹொஸ்பிடலுக்கு சாறி கட்டாமல் என்ன செய்யப் போறீர்? இன்னும் எவ்வளவு படிக்க இருக்கு… அப்ப நித்திரை கொள்ள என்ன செய்யப் போறீர்…?”

வலு அக்கறையாக சுதர்சன் கேட்கவும் அஞ்சலி மேலும் கடுப்பானாள்.

 

 

அதை அந்த நேரம் பார்ப்பம் அண்ணா… இப்ப எந்த ஐஸ்கிரீம் பார்லர் போற என்று சொல்லுங்கோ… எனக்குப் பசிக்குது.”

 

 

றியோக்குப் போவம்…” சுதர்சனதும் சுதனதும் ஒரே குரலில் வந்த பதிலுக்கு மீதி நால்வரும் சிரித்துக்கொண்டே நல்லூர் கந்தன் ஆலய பின் புறத்தில் அமைந்திருக்கும் யாழ் நகரின் பிரசித்திபெற்ற ரியோ ஐஸ்கிரீம் பார்லரை அடைந்தனர். 

 

 

ஆளுக்கு இவ்விரெண்டு ரோல்ஸ்ஸும் ஒத்த மனதாய் அறுவரும் ஸன்டே ஸ்பெஷலும் ஓர்டர் பண்ணி விட்டு வெளியே குளத்தங்கரை காற்றுப் பட போட்டிருந்த மேசைகளில் ஒன்றினைச் சுற்றி அமர்ந்து கொண்டார்கள். 

 

 

கவி… ப்ளீஸ் கண்ணாளனே.. ஒருக்கால் பாடுமன். கேட்டு நிறைய நாளாகிட்டு…”

 

 

நிரோஜன் ஆசையாக விண்ணப்பிக்கவும் தான் விழாவில் பாடிய பாடல் ஸாமிற்கு பிடிக்கவில்லை போல என்ற குழப்பத்தில் இருந்தவள் ஸாமை நிமிர்ந்து பார்த்தாள். அவன் விழிகளிலும் அதே ஆவல் தெரிய பாட ஆரம்பித்தாள் கவி. 

 

 

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ”

 

அருகே இருந்த மேசைகளில் இருந்தவர்களும் இவள் பாடுவதை தங்கள் சளசள பேச்சை நிறுத்தி ரசிக்க ஆரம்பித்தனர். இடையிடையே ஸாமை நோக்கித் தன் பார்வையை திருப்பியவள் அவன் விழிகளாலேயே தன்னை விழுங்குவதை உணர்ந்து சிறு மென்னகையுடன் தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

 

ஐயா படிச்சு முடியிற மட்டும் பார்வையாலேயே குடும்பம் நடத்தப் போறார் போல கிடக்கு. எனக்கென்று வந்து வாச்சிருக்கே. ஓவர் நல்ல பிள்ளைக்கு ஸீன் போட்டபடி… கடவுளே இந்த அமுசடக்கனோட எப்பிடித்தான் குடும்பம் நடத்தப் போறனோ…?’

 

 

மனதிலோடிய பல எண்ணங்கள் சலிப்பையும் தன் இணையோடு சேர்த்து தன்னை எண்ணிக் கொண்டதில் வெட்கமும் குமிழ் விட பாடலை இனிதே பாடி முடித்தாள் கவி.

 

 

நண்பர்களதும் சுற்றி இருந்தவர்களதும் கைதட்டலை “நன்றி” என்று சிறு தலையசைப்போடு ஏற்றுக் கொண்டவள் பார்வை அவளை விழிகளால் சுவைத்துக் கொண்டிருந்தவன் பார்வையில் கலந்தது. 

 

 

அவர்கள் ஓர்டர் செய்திருந்த ஸன்டே ஸ்பெஷலும் வந்துவிட கலகலத்து ஆளையாள் காலை வாரி கேலியும் சிரிப்புமாக அந்த மாலைப் பொழுது இனிதே கடந்தது. 

 

 

பாவம்… அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.. இந்த சந்தோஷம் நிலையானதில்லை என்று.

 

 

ஸாம் கவியிடம் காதலைச் சொல்வானா? மாட்டானா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 32′(நிறைவுப் பகுதி)யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 32′(நிறைவுப் பகுதி)

அத்தியாயம் – 32 என்ன அதிர்ச்சி?   எல்லோரும் விமான நிலையத்தை அடைந்து பிரிவுத் துயரோடு நின்றிருந்தார்கள். அருண்யா ஸாமின் கைப்பிடி விடவில்லை. அவனும் அவளை அணைத்தவாறே மற்றவர்களோடு பேசிக் கொண்டிருந்தான்.      இவர்கள் பேச்சுக்கு காது கொடுத்தவளாக நள்ளிரவிலும்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 8’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 8’

அத்தியாயம் – 08 ராக்கிங்கில் இருந்து தப்புவாளா கவி?     காலை ஆறு மணி. வழக்கம்போல அடித்த அலாரத்தை நிறுத்தி விட்டு திரும்பவும் போர்வையால் இழுத்து மூடிக்கொண்டு தன்னவளோடு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கம் அருகே இருந்த பெரிய மரத்தை

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 28’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 28’

அத்தியாயம் – 28 என்ன முடிவெடுக்கப் போகிறாள் அருண்யா?   சமையல் முடித்ததும் தோட்டத்தில் நின்றவர்களை சாப்பிட அழைத்தாள் கவின்யா. அவர்களும் கைகால் முகம் கழுவிக் கொண்டு வர, அதற்கிடையே சாப்பாட்டு மேசையில் உணவுப் பதார்த்தங்களை எடுத்து வைத்தாள்.