Tamil Madhura சிந்தனை துளிகள் இன்று ஒரு தகவல் -11

இன்று ஒரு தகவல் -11

அது ஓர் அழகிய நகரம். அந்த நகரத்தின்  நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர்  அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான்.

அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் “ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி?”என்று கேட்டான்.

அதற்குக் காவலாளி “ஏன் கேக்குற தம்பி ? இந்த ஊருக்கு குடிவரப் போறியா?” என்று சந்தேகத்துடன் கேட்டார்.

“ஆமாம் பெரியவரே. நான் முன்னாடி இருந்த ஊர் ரொம்ப மோசம். எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வருவாங்க. ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தப்பா பேசிக்கிட்டும் திட்டிக்கிட்டும் , எப்படா அந்த ஊரை விட்டு வருவோம்னு இருந்தது. அதான் கேட்டேன் இந்த ஊர் எப்படி?” என்று கேட்டான்.

அதற்குக் காவலாளி “ஏன் கேக்குற தம்பி ? இந்த ஊருக்கு குடிவரப் போறியா?” என்று சந்தேகத்துடன் கேட்டார்.

“ஆமாம் பெரியவரே. நான் முன்னாடி இருந்த ஊர் ரொம்ப மோசம். எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வருவாங்க. ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தப்பா பேசிக்கிட்டும் திட்டிக்கிட்டும் , எப்படா அந்த ஊரை விட்டு வருவோம்னு இருந்தது. அதான் கேட்டேன் இந்த ஊர் எப்படி?” என்று கேட்டான்.

”நீ வேற தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட ரொம்ப  மோசம். போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்னை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊரு சரிப்படாது தம்பி ” என்று கூறி அந்த வாலிபனை  வெளியே வழியனுப்பி வைத்தார்.
சிறிது நேரம் கழித்து,

அவ்வழியாக  வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியைக் கேட்டான்.

“ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் பண்ணலாம்ன்னு இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி?”
பெரியவர் சிரித்துக்கொண்டே , “ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா ?”என்று கேட்டார்.

“ரெண்டு குழந்தையே இருக்குதுங்க ஐயா” என்றான்.

“அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வர்ற? உங்க ஊர்லயே வியாபாரம் பண்ணலாம்ல? ” என்றார் காவலர்.

“எங்க ஊர் மாதிரி வராதுங்க.. அந்த ஊர் மக்கள் ரொம்பப் பாசக்காரங்க. என் குடும்பம் இப்போ வறுமையில இருக்கு. சம்பாதிக்கத்தான் இந்த ஊருக்கு வந்தேன். நல்லா  சம்பாதிச்சிட்டு மறுபடியும் அங்கேயே போயிடுவேன்” என்று கண் கலங்கியபடியே கூறினான்.

“அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் ரொம்ப நல்லவங்க. தைரியமா நீ வியாபாரம் பண்ணலாம்” என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.

காவலாளியின் அருகில் இருந்த ஒருவர் இந்த இரண்டு சம்பவங்களையும் கவனித்துக்கொண்டிருந்தார்.

உடனே அவரிடம் “முதலில் வந்தவர்கிட்ட இந்த ஊர் பொல்லாததுன்னு சொன்னீங்க, இவர்கிட்ட மட்டும் நல்ல ஊர்ன்னு சொல்லுறீங்களே ஏன்?” என்று சந்தேகத்துடன் கேட்டார்.

அதற்குப் பெரியவர்  “இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம எப்பிடி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

இன்று ஒரு தகவல் -13இன்று ஒரு தகவல் -13

அது ஒரு ஜென் மடாலயம். அங்கிருந்த சீடர் களுக்கு தத்துவ கதை ஒன்றை குரு கூறினார். அந்தக் கதை இதுதான். அவன் ஒரு கல் உடைக்கும் தொழிலாளி. அந்தத் தொழிலில் அவனுக்கு பெரிய வருமானம் ஒன்றும் கிடைக்கவில்லை. அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே

இன்று ஒரு தகவல் -7இன்று ஒரு தகவல் -7

எலுமிச்சை அளவு சாதம்!   ஒரு தேசாந்திரி ஓர் உணவு விடுதிக்குச் சென்றார். சாப்பிட உணவு கொடுக்கும்படி அந்த உணவு விடுதி நடத்தும் பெண்மணியிடம் கேட்டான். அவளோ சாப்பாடெல்லாம் ஆகிவிட்டது ஒன்றும் இல்லை என்றாள். “அம்மா பசி காதை அடைக்கிறது. ஒரு

இன்று ஒரு தகவல் -18இன்று ஒரு தகவல் -18

கிறுக்குசாமி கதை – ஆசை தோசை ஊரில் திருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடினர் கிராமமக்கள். கிறுக்குசாமி தங்கியிருந்த மடத்தில், திருவிழாவிற்காக வந்திருந்த மக்களை மகிழ்விப்பதற்காகவும் நன்னெறிப் படுத்துவதற்காகவும் ஆன்மீகச் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்து கொள்வதற்காக ஒரு  சக்தி உபாசகரும், ஒரு