Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_25’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_25’

அத்தியாயம் – 25

 

அடுத்த சில மாதங்கள். அவர்களின் வாழ்க்கை வேகமாக ஓடியது. வெண்ணிலாவின் மதுரை வீடு மீட்டெடுக்கப் பட்டது. பாபு செய்த குற்றங்களுக்கான தண்டனையும் பெற்றுத் தரப்பட்டது. நீதி வேகமாக செயல் படவேண்டுமானால் அதிகாரம் என்ற உந்துசக்தி அல்லவா தேவையாக இருக்கிறது.

மதுரை வீட்டை செப்பனிட்டு மீண்டும் குடியேறியபொழுது பாக்யநாதன் அழுதேவிட்டார்.

வீட்டில் அதினன் வீட்டினர் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்தார். விருந்து வெண்மணி கேட்டரிங் சர்வீசில் இருந்து தயார் செய்து அனுப்பி இருந்தனர். வெண்மணியின் பங்குதாரர் யாரென்று தெரிகிறதா வெண்ணிலாவும் பொன்னுமணியும்தான். அதினனிடமிருந்து வாங்கிய பணத்துடன் கூடக் கொஞ்சம் முதல் போட்டு ஆரம்பித்திருந்தனர். நன்றாகவே பிஸினஸ் சென்றது.

கார்மேகத்தை அம்போ என்று விட்டுவிடவில்லை. அதோ பொன்னுமணியின் மகன் ரங்குவைக் கொஞ்சிக் கொண்டிருந்தான் “டேய் அப்பா சொன்னா கேட்டுக்கணும். சிலேட்டு குச்சியைத் தின்னா வயத்துல பல்ப்பம் மரமா முளைக்கும்”

“சரிப்பா இனி திங்கல” என்றான்.

“ஏண்டி சின்னதுலேருந்து ரெண்டு பேரும் நாயும் பேயுமா அடிச்சுப்பிங்க. எப்படிடி குடும்பம் நடத்துறீங்க” பொன்னுமணியிடம் வியந்தாள் வெண்ணிலா.

“நடத்தாமலா வயத்தில் ஒண்ணு இருக்கு. அடிச்சுக்குறது தனி, இது தனி. அது சரி நாயும் பேயுமா அடிச்சுக்கிட்ட நாங்க கூட ஒண்ணா சேர்ந்துட்டோம். நீ ஹீரோ சாரை இன்னமும் காக்க வைக்காதே”

இதேதான் அனைவரும் சொல்கின்றனர். உலகம்மை அக்கா தனிப்பட்ட முறையில் கூப்பிட்டே சொல்லிவிட்டார். “அதின் கண்ணில் தெரியும் அன்பு பொய் இல்லை. வேற ஏதாவது உனக்கு உறுத்தலா இருக்கா வெண்ணிலா”

“உறுத்தல் எல்லாம் இல்லக்கா. உடம்பு நம்மை இந்த உலகத்தில் உயிர் வாழ வைக்கும் ஒரு கருவின்னு ஒரு எண்ணத்துக்கு வந்ததும்தான் எனக்கு நேர்ந்த கொடுமை எல்லாம் மறக்க முடிஞ்சது. எனக்கு ஒரு விபத்து நடந்தது. அதில் இருந்து நான் வெளிய வந்துட்டேன். அதே மாதிரிதான் அதினுக்கும்.

என்னோட பொருளாதாரத்தையும் நான் பலப்படுத்திக்கணும் இல்லையா அக்கா. வாழ்க்கை பயணம் ஆரம்பிக்கும்போது ஒரு கை கொடுக்குற நிலமைலயும் இன்னொரு கை வாங்கிக்கிற நிலமைலயும் இருந்தால் எனக்குப் பெருமையா சொல்லுங்க.

ரெண்டு கையும் கோர்த்துக்கிட்டு இணைஞ்சு நடக்கணும். அப்பத்தானே வாழ்க்கை ருசிக்கும்”

“இவ்வளவு தெளிவா பேசுற நீ எப்படி அவ்வளவு பெரிய அடி வாங்கின?”

“அந்த அடி தான் இவ்வளவு தெளிவைத் தந்திருக்கு அக்கா. அனுபவமே மிகச் சிறந்த ஆசான்”

அவளது கதைகள் அதினனின் நிறுவனத்தின் மூலம் வெப் சீரீசாக வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. தயாரிப்பிற்கு ஒரு அவார்ட் கூடக் கிடைத்தது. அதன்பின் அவனது நிறுவனத்திற்கு மேலும் இரண்டு கதைகள் எழுதிக் கொடுத்துவிட்டாள். இப்பொழுதெல்லாம் நிறுவனத்திற்கு வந்த புதிய கதைகளை அவளிடம் நேரடியாக மெயிலில் அனுப்பித் தேர்ந்தெடுக்கச் சொல்கிறான்.

அதினன் அவள் வீட்டுக்கு வருவது புதிதல்ல. அதுவும் மித்து அவளுடனேயே தங்கி ரதி வெற்றியுடன் பள்ளிக்குச் சென்று வருவதால் நினைத்த போதெல்லாம் மதுரைக்கு வந்துவிடுவான்.

கத்தாழை முள் என்று அனைவரும் தள்ளி வைத்தவனின் மனதை கொத்தோடு கிள்ளி எடுத்து அது முள் இல்லை மல்லிகை என்று தனது நலனை வேண்டுபவர்களுக்கு உணர்த்திய திருப்தி வெண்ணிலாவுக்கு.

உணவு உண்டதும் அரிட்டாப்பட்டி கோவிலுக்கு செல்லலாமா என்று வெண்ணிலா கேட்டதும் சரியென்று சொல்லிவிட்டான்.

“உங்க பேர் இங்க எழுதிருக்கு பாருங்க”

“இந்தத் தமிழ் வேற மாதிரி இருக்கு எனக்கு படிக்க முடியல. படிச்சு சொல்லேன்”

“நெல்வேலியைச் சேர்ந்த சிழிவன் அதினன் வெளியன் என்பவன் இக்குகைத்தளத்தை அமைத்துக் கொடுத்தான்

அப்படின்னு எழுதிருக்கு”

“எனக்கு ஒரு ராஜாவோட பேரைத்தான் வச்சிருக்காங்க”

இருட்ட ஆரம்பித்த வேளை பால் நிலா பகல் போல ஒளி வீசியது.

‘மிங்கிலாகும் சிங்கிள்’ என்ற தலைப்பில் ‘அதினனின் புதிய தோழி ஒரு எழுத்தாளர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன. அதுவும் அந்த எழுத்தாளர் மூன்று குழந்தைகளின் தாயாம். அதுதான் காலக் கொடுமை’

என்று புதிய கிசுகிசு வந்திருந்ததை படித்து சிரித்தார்கள்.

“இது உண்மையா பொய்யான்னு எனக்கே தெரியாதுடா…. அதுக்குள்ள அதுக்கு கை கால் மூக்கு வச்சு படமே வரஞ்சுட்டீங்களேடா… “ என்று கத்தினான் அதினன்.

புன்னகைத்த நிலா “அந்தக் கல்வெட்டைப் பாருங்க… நிலாவோட ஒளி கல்வெட்டில் அதினனின் பெயர் மேல பட்டு வைரம் மாதிரி ஜொலிக்குது”

“அதே மாதிரி இந்த அதினனின் மேலும் வெண்ணிலாவோட ஒளி படுமா?”

“வசனம் போதும். நேரமாச்சு வாங்க கிளம்பலாம்”

தனது கரங்களை அவளை நோக்கி நீட்டினான். “மை ஸ்வீட் மீனுக்குட்டி நம்ம ரெண்டு பேரும் கை கோர்த்தபடி ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா பயணத்தைத் தொடங்கலாமா?”

நாணத்தோடு தனது கைகளை அவனது கைகளுடன் கோர்த்துக் கொண்டாள் வெண்ணிலா.

அவர்களின் இந்த அன்புப் பயணம் என்றும் தொடரும்.

 

சுபம்

2 thoughts on “தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_25’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’

அத்தியாயம் – 21   அவர்களை வற்புற்தி அதினனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அவர்கள் வீட்டில் அதினன், மித்து, அவன் பெற்றோர், வெண்ணிலா, குழந்தைகள், பாக்யநாதன், கார்மேகம், பொன்னுமணி அனைவரும் இருந்தும் ஒரு விரும்பத்தகாத அமைதி நிறைந்திருந்தது. பிள்ளைகளுக்கு உணவைத் தந்து

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_3’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_3’

அத்தியாயம் – 3 டீ குடித்து முடித்த கையோடு “கார்மேகம் பத்து நிமிசத்தில் ஒரு குளியல் போட்டுட்டு வந்துடுறேன். டூரிஸ்ட் எல்லாம் கோவிலுக்கு போறவங்கல்ல, நாமளும் அதுக்குத் தக்கன குளிச்சுட்டு சுத்த பத்தமா சமைக்கலாம். நீ குளிச்சுட்டியா?” “நீ இப்படி சொல்லுவேன்னு

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’

அத்தியாயம் – 24   இது நிஜமா? ஒரு தாயால் இந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்ள முடியுமா? பெற்ற குழந்தையே கொல்லத் துணியுமா மனம்? பெறாத பிள்ளைகளுக்கு  அன்னையாக வாழ்பவளின் மனதிற்கு  லஸ்யாவின் விஷகுணம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத