Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_10’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_10’

அத்தியாயம் – 10

கண்களை மூடியபடி அவனது பாடலை நேரலையில் ரசித்துக் கொண்டிருக்கும் மாது, அவளது இமைகள் மெதுவாக உயர்ந்து கண்கள் குவளைப் பூக்களைப் போன்று விரிந்தது. அவளது கண்கள் அப்படியே உயர்ந்து அவனது கண்களை சந்தித்தது.

“யாரும்மா நீ ஏஞ்சல்?” என்று அவன் கேட்ட கேள்வியில் ஒரு விகல்பமும் இல்லை. மாறாக ஒரு ரசிகத்தன்மையை மட்டுமே உணர்ந்தாள்

“இவங்கதான் நான் சொன்ன வெண்ணிலா, அந்த நாவலை எழுதினவர்” சிவகுரு அறிமுகப்படுத்தினார்.

“ஓ, மீனுக்குட்டி, வாங்க வாங்க” என்றான் தனது கோல்கேட் புன்சிரிப்புடன்.

“மீனுக்குட்டி என்னோட நாவல் பெயர். நான் வெண்ணிலா” என்றாள் அழுத்தமாக.

உடனே திருத்திக்கொண்டான்.

“வணக்கம் வெண்ணிலா, நான் அதினன், வாங்க அண்ணி” என்று முறை வைத்து உலகம்மையை அழைத்து அவரை முதல் வார்த்தையிலேயே கவிழ்த்துவிட்டான்.

கிரீம் நிறத்தில் கேசுவல் காட்டன் சட்டையும், பழுப்பு நிறத்தில் பேட்டர்ன் கால்சராயும் அணிந்து தோற்றத்தில் கம்பீரம் காட்டியவன்.

“என்ன சாப்பிடுறீங்க, காபி, டீ, கூல் டிரிங்க்ஸ், மில்க் ஷேக் இங்க நல்லாருக்கும் கொண்டு வர சொல்லட்டுமா?” என்று உபசரிக்கவும் மறக்கவில்லை.

சம்பிரதாயமான விசாரிப்புகள் தொடர்ந்தன.

“வெண்ணிலா உங்க ஊர் மதுரை இல்லையா”

“ஆமாம் சார்”

“ரொம்ப தூரம் பயணம் செய்து வந்திருக்கிங்க. நன்றி”

“டிரைன்ல வந்ததால தூரம் சிரமமா இல்லை”

“எத்தனை நாள் சென்னைல இருப்பிங்க”

“இன்னைக்கு ராத்திரியே கிளம்புறேன்”

“அப்படியா, வெரி ஷார்ட் ட்ரிப். உங்களோட கதைகளைப் படிச்சேன். மிக அருமை. ஒரு ஆகர்ஷன சக்தி அதில் இருக்குன்றது உண்மை. ஆனால் அதை அப்படியே கதையா எடுக்க முடியாதுன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்”

“ஆமாம், கொஞ்சம் திரைக்கதைக்காக மாற்ற வேண்டி இருக்கும்னு சிவகுரு அண்ணா சொன்னார்”

“நிஜம்தான். உங்களோட எல்லா கதைகளையும் என் நிறுவனத்தின் வெப் சீரிஸ்க்காக வாங்க விரும்புறேன்”

பேச்சே வரவில்லை வெண்ணிலாவுக்கு “எல்லா கதையுமா? நானே அஞ்சாறு கதைதான் எழுதிருக்கேன்”

“அந்த அஞ்சாறு கதைகளும் எனக்கு வேணும்”

வெண்ணிலாவும் உலகம்மையும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள

“முதலில் மீனுக்குட்டி கதை மட்டும் வாங்கலாம்னு நினைச்சேன். அதுக்கப்பறம் மற்ற கதைகளும் கொஞ்சம் மாற்றங்களோட உபயோகப் படுத்திக்கலாம்னு எங்க டீம் சொன்னதால இந்த முடிவுக்கு வந்தோம்”

“வந்து… “

“உங்க புக் ரைட்ஸ் வேண்டாம். டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும்தாங்க. ஆன்லைனில் போஸ்ட் பண்ணலையே”

“இல்ல… “ வெண்ணிலாவுக்கு இந்த வேகம் புதிது.

“உங்களுக்கு சம்மதம்னா டோக்கன் அட்வான்சா இன்னைக்கே ஐம்பதாயிரம் ட்ரான்ஸ்பர் பண்ணிடுறேன். மத்த டேர்ம்ஸ் எல்லாம் முடிவு காண்ட்ராக்ட் சைன் பண்ணதும் மிச்ச காசு ஐந்தரை லட்சத்தை டிரான்ஸ்பர் பண்ணிடுறேன்”

வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தாள் வெண்ணிலா. இந்தத் தொகை அவளைப் பொறுத்தவரை மிகப் பெரியது. கதை எழுத இவ்வளவு பணம் தருவாங்களா?

“வந்து… இந்த நாவலுக்கு மட்டும் இவ்வளவு தொகையா நம்ப முடியலையே”

“தேர் யூ ஆர்… நாவல் எனக்குப் பிடிச்சிருக்கு. இதில் சில இடங்களில் மாற்றம் செய்ய வேண்டி இருக்கு. அது படைத்தவரோட கையாலையே செஞ்சால்தான் உயிர்ப்பு குறையாம இருக்கும்னு நினைக்கிறேன்.

அதுமட்டுமில்லாம திரைக்கதையா உருமாறும்போதும் கூட அந்த ஜீவனை அப்படியே கேப்சர் பண்ணணும்னு நினைக்கிறேன். அதுக்கும் நீங்க எங்களோட பணி புரிய வேண்டி இருக்கும்”

“வந்து… அதெல்லாம் எனக்கு ஒத்து வராது சார். கதையை வேணும்னா எடுத்துக்கோங்க ஸ்டோரி டிஸ்கஷனுக்கெல்லாம் நான் வரமாட்டேன்”

“எங்க டீம் எல்லாம் நல்லா படிச்சவங்கம்மா… டீசெண்ட்டான நல்ல பசங்க… சரி வேண்டாம்னா சொல்லுங்க நம்ம ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணலாம்”

“அய்யோ, உங்க கூடயா வேண்டவே வேண்டாம்” அவளது மிரண்ட பார்வையையும், பயத்தையும் பார்த்தவன்

“தாங்க்ஸ் ட்டு த நெகட்டிவிட்டி” என்றான் சற்று உரத்த குரலில் எரிச்சலுடன்.

“சாரி” என்று முணுமுணுத்தாள் வெண்ணிலா.

அங்கே அமைதியாக இருந்தது சிவகுரு தலையிட்டார் “அதின் அவங்க கிராமத்தை சேர்ந்தவங்க. வெளிய படிக்க அனுப்புறதே அதிகம். இங்க வந்து தங்கி ராப்பகலா ஸ்டோரி டிஸ்கஷன் செய்றது இதெல்லாம் அவங்களுக்கு ஒத்து வராது.

வேணும்னா ஒண்ணு செய்யலாம். இப்போதைக்கு கதையை வாங்கிக்கோ. திரைக்கதை மாற்றங்களை அவங்களுக்குத் தெரிவி, நேரம் கிடைக்கும்போது எங்க வீட்டில் சந்திச்சு நம்ம கலந்து பேசலாம். ஃபைனல் ஸ்கிரிப்ட் டிஸ்கஸ் பண்ணும்போது எல்லாரும் மீட் பண்ணலாம். ஓகேயா”

இந்தக் கதை ஏற்றுக் கொள்ளப்பட்டால் ஒவ்வொரு படியிலும் நாங்கள் இருப்போம் என்று அதினனுக்கு சிவகுரு சொன்னது வெண்ணிலாவுக்கும் தனித் தெம்பைத் தந்தது.

“எனக்கு ஓகே. என்னைப் பொறுத்தவரை கதைக்கு மாற்றங்கள் தேவைப்படுது. அதை அவங்களே செஞ்சுத் தந்தாதான் நல்லாருக்கும்”

மனதினுள் அந்த ஆறு லட்சம் கையில் கிடைத்தால் என்னென்ன செய்யலாம் என்ற பட்டியல் ஓட, தயக்கத்துடன் சம்மதித்தாள் வெண்ணிலா.

2 thoughts on “தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_10’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_14’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_14’

அத்தியாயம் – 14   மாலை புதிதாக வாங்கிய மாம்பழ நிற காட்டன் சேலையை மடிப்பு கலையாமல் நேர்த்தியாகக் கட்டிக் கொண்டு, குழந்தைகளுக்கு நல்ல ஆடைகளை அணிவித்தாள். உலகம்மை வீட்டிற்கு சென்றபோதே அவருக்கென வாங்கி வந்திருந்த பரிசுகளைத் தந்திருந்தாள். அவளது அன்பளிப்பான

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_1’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_1’

அத்தியாயம் – 1   சிட்டுக்குருவிகள் கதிரவன் வரும் வேளையை உணர்ந்து முத்தம் கொடுத்து தங்களது இணைகளையும் குஞ்சுகளையும் எழுப்பி விட்டன. “கீச் கீச்” என்று அந்த ஆலமரமெங்கும் குருவிகளின் நலவிசாரிப்புக் குரல்கள்தான். அவையே அலாரம் போல செயல்பட்டு ஆடு மாடுகள்

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_18’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_18’

வீட்டில் எப்போதும் டின்னில் போட்டு வைத்திருக்கும் பிஸ்கட்டுகளை அனைவருக்கும் உண்ண வைத்தாள் வெண்ணிலா. குழந்தைகள் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்க, மித்துவுக்கு வீட்டில் இருக்கும் ஆடு மரம் செடி கொடிகளைக் காண்பித்துக் கொண்டிருந்தனர் ரதியும், வெற்றியும். சிறிது நேரத்தில் அனைவரும் நெருங்கிவிட்டிருக்க, வெளியே