Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_7’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_7’

அத்தியாயம் – 7

 

சிவகுரு மற்ற கம்பனிகளில் சில வேலைகளை முடித்துவிட்டு அதினனின் அலுவலகத்திற்குள் நுழைந்தார்.

அங்கு வேலை செய்யும் ஒருவன் “சார் மீட்டிங்க்ல இருக்கார். நீங்க வந்த தகவலை சொல்றேன். உக்காருங்க சார். கூல் டிரிங்க்ஸ் கொண்டு வரட்டுமா?”

“வேண்டாம்பா குடிக்கத் தண்ணி மட்டும் கொண்டு வா”

அவன் வரும் வரை நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்ட அறையை சுற்றி கண்களை ஓட்டினார். அதினனின் அறைக் கதவைத் திறந்த போது அவ்விடத்தில் நடந்த சூடான வாக்குவாதங்கள் அவரது காதில் விழுந்தது. அதினன் கத்திக் கொண்டிருந்தான்

“இதெல்லாம் என்னய்யா? கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாம இருக்கு. இப்படி ஓவர் பில்ட் அப் கொடுத்தே ஒரு மனுஷனை கேலிக் கூத்தாக்காதிங்கய்யா… “

ஓவர் பில்ட் அப், லாஜிக் இரண்டையும் இவன் பேசுவது முரண் என்றால் ஷோ கேசில் அடுக்கப்பட்டு இருக்கும் வெளிநாட்டு மது வகைகள் நிறைந்த ஷெல்ஃப் நடுவில் இருந்த சிறிய டிவியில் புரட்சித் தலைவரின் திரைப்படம் ஓடியது.

அதில் மக்கள் திலகம் ‘உழைச்சுக் களைச்சு வரும் உடலுக்குத் தேவை ஓய்வு, மது இல்லை’, என்பதெல்லாம் நகை முரண்… நம் குடிமக்கள் டாஸ்மாக்கில் அமர்ந்து இதையெல்லாம் ரசித்துக் கொண்டே பருகிக் கொண்டிருக்கிறார்கள்.

அதுதானே… அவருடன் சேர்த்து அவரது அறிவுரைகளையும் மெரினாவில் புதைத்துவிட்டோமே.

அறையில் இருந்தவர்களை மறுநாள் சந்திக்கும்படி சொல்லிவிட்டு இரண்டொரு நிமிடங்களில் “வாங்க சிவகுரு, எப்படி இருக்கிங்க” என்றபடி வரவேற்பு அறைக்கே வந்து வரவேற்றான் அதினன்.

“நல்லாருக்கேன் அதின். நீ என்ன இப்படி ஆயிட்ட” என்று திகைத்துப் போய் கேட்டார்.

வழக்கமாக உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாய் உடலைப் பராமரிப்பவன், சற்று ஊதிப் போய், டை அடிக்காத முடியில் ஆங்காங்கே வெள்ளி முடியுடன் நிறைய பெப்பர் லைட் சால்ட் தெளித்த தோற்றத்தில் இருந்தான்.

“சாக்லேட் பாய் எங்க போனான் அதின்?”

“அங்கிள் ஆகி எக்கச்சக்க நாளாச்சு, இவங்க இன்னமும் பாயாவே காமிச்சு ஊரை  ஏமாத்திட்டு இருக்காங்க சிவகுரு”

ஒரு வருடமாக அதினன் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை, கேமிரா முன் நிற்கவில்லை. போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டான் என்றும், ரகசியமாய் சிகிச்சை எடுத்துக் கொள்கிறான் என்றும் கிசுகிசு வந்தது.

அவனது நூறாவது காதல் படுதோல்வி அடைந்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று மனோத்தத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொள்கிறான், டெல்லியில் இருக்கும் பிரபல சைக்கியாட்ரிஸ்ட் சிகிச்சை அளிப்பதாக நம்பிக்கையான தகவல்கள் தெரிவிப்பதாக கிண்ணிக் கோழியார் பத்திரிக்கையில் தனது பக்கத்தில் பூடகமாக செய்தி சொல்லியிருந்தார்.

இதுக்கெல்லாம் அதினனிடமிருந்து வழக்கம்போல நோ ரெஸ்பான்ஸ்.

“யார் கூட பேசிட்டு இருந்த அதின்?”

“டைரெக்ட்டர்ஸ்… புது ப்ராஜெக்ட் கதை டிஸ்கஷன் ஓடிட்டு இருக்கு”

“கேட்டேன், கேட்டேன்… அனல் ஏசியைத் தாண்டி வெளிய அடிச்சுதே”

“பில்ட் அப் தரேன்னு இவங்க ஓவரா போயிட்டு இருக்காங்க. சயின்ஸ் பிக்ஷன் படம், ஸ்ரீஹரிக்கோட்டால இருக்குற ராக்கெட் ரிப்பேர் ஆயிடுதாம். அதை நான் ரிப்பேர் செஞ்சதோட நானே ஒட்டிட்டுப் போறேனாம்”

“கொஞ்சம் மிகையான கற்பனைதான்”

“அட படத்தில் என் கேரக்டர் என்ன தெரியுமா? மோட்டார் ரிப்பேர் செய்றவனாம், அப்படியே பண்ணையார் பொண்ணு கூடக் காதல். கிராமத்துக் காதல் கதை, அதில் எங்க ராக்கெட் ரிப்பேர் வருது?

கதைப்படி நானோ கிராமத்துக்காரன், ராக்கெட் எப்படி ஓட்டுறேன்னு கேட்டா, திரைக்கதைல ஜாயின் பண்ணிடுறேன் சார். கிராமத்து கான்செப்ட் பி, சி செண்டர்ஸக் கவர் பண்ண, ராக்கெட் யங் ஜெனெரஷனைக் கவர் பண்ணன்னு சொல்றான். மண்டை காஞ்சு போகுது” வாய்விட்டே தனது ஆதங்கத்தை சொல்லிவிட்டான்

“மறுபடியும் நடிக்கிறதா இருந்தா நீ உடம்பைக் குறைக்கணும் அதின்”

“குறைச்சுடுறேன் சிவகுரு. டிரிங்க்ஸ் நிறுத்திட்டேன். மறுபடியும் வொர்க் அவுட் ஆரம்பிக்கணும். சென்னைல இருந்தால் டிஸ்டர்பன்ஸ் அதனால வேற இடத்துக்குப் போகலாம்னு நினைக்கிறேன்”

“புதுசா ஒரு டெலிவிஷன் கம்பனி ஆரம்பிக்கப் போற போலிருக்கு… “

“ஆமாம், எத்தனை நாள் டூயட் பாடிட்டே இருக்கிறது? கொஞ்சம் கொஞ்சமா ப்ரொடக்ஷன்ல இறங்கிடலாம்னு ஒரு ஐடியா”

“அதுதான் அப்புச்சிகிட்ட பணம் கேட்டிருந்த போலிருக்கு”

“ஆமாம், கொஞ்சம் பெரிய அளவில் பண்ணலாம்னு பாக்குறேன். பத்து வெப்ஸீரீஸ் தமிழ், தெலுகு, ஹிந்தி மூணு மொழிலையும்”

“கதை தேடிட்டு இருந்தியாம்”

“ஆமா, சில ஸ்டோரீஸ் செலெக்ட் பண்ணி டைரெக்டர்ஸ்கிட்ட தந்திருக்கேன். இந்த வாரம் டிஸ்கஸ் பண்ணனும்”

“நான் லேட்டு போலிருக்கு”

“பெட்டர் லேட் தான் நெவர். ஏன் உங்களுக்குத் தெரிஞ்சவர் யாராவது இருக்காங்களா?”

“ஆமாம் அதுக்கு முன்னாடி நீ தேர்ந்தெடுத்தக் கதைகளைப் பத்தி சொல்லு. முழு திருப்தியா இருக்கா”

“பரவால்ல, எல்லாம் கமெர்சியலா இருக்கு, கொஞ்சம் மாற்றம் இருந்தால் நல்லாருக்கும்னு என் மனசு சொல்லுது. ஆனால் அந்த மாற்றம் என்னன்னுதான் தெரியல”

தனது பைலில் இருந்து சில காகிதங்களை அவனிடம் தந்தார். “இதை படிச்சுப் பாரேன். உனக்குப் பிடிச்சிருந்தா சொல்லு”

“இப்பயே சொல்லிடுறேன்… “ என்றபடி காகிதங்களை வாங்கியவன் தனது கண்ணாடியை அணிந்து கொண்டு ஆழ்ந்து படித்தான்.

“இண்டரெஸ்ட்டிங் சிவா… ஸ்டோரிலைன் நல்லாருக்கு. இதை டெவலப் பண்ணி எழுதித் தர சொல்றீங்களா?”

“எல்லாம் ரெடியா இருக்கு. உலகம்மையை அனுப்ப சொல்றேன்”

“ஓ அவங்க புக் பப்ளிஷர்ல, இது பப்ளிஷ் பண்ணதா?”

“ஆமாம்.. உனக்கு பப்ளிஷ் பண்ண கதைகள் வேண்டாமா?”

அவன் இந்த நிமிடம் வரை புத்தகங்களில் இருக்கும் கதையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நினைக்கக் கூட இல்லை. ஆனால் இப்போது என்ன செய்வது? சிவகுரு நீண்ட நாட்கள் பழக்கம். அவருக்கு என்ன பதில் சொல்வது?

2 thoughts on “தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_7’”

  1. Nice flow. அதின் சொல்வது எல்லாமே கசப்பான உண்மைகள் தான். எபிசோட் ஆரம்பித்த உடனே முடிஞ்சிட்ட ஃபீல். கிடைக்கற நேரத்தை பயன்படுத்தி எழுதறீங்கன்னு புரியுது. Waiting for the next episode 🤩

    1. Thank you KPN. ஆமாம் பா கிடைக்கும் நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமா அப்டேட் போட்டுட்டு இருக்கேன். சிறிய நாவல்தான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_11’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_11’

அத்தியாயம் – 11   “அறிவிருக்கா உனக்கு? அவனே ஊர்சுத்தி, பொம்பளைப் பிள்ளைங்களை மயக்கிப்புடுவான்னு சொல்றது சரியாத்தான் இருக்கு… “ கார்மேகம் வெண்ணிலா அதினனிடம் ஒப்புக்கொண்ட செய்தி அறிந்து கத்திக் கொண்டிருந்தான். பொன்னு தலையிட்டு கார்மேகத்தைக் கண்டித்தாள் “இதா பாரு, வெண்ணிலா

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_18’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_18’

வீட்டில் எப்போதும் டின்னில் போட்டு வைத்திருக்கும் பிஸ்கட்டுகளை அனைவருக்கும் உண்ண வைத்தாள் வெண்ணிலா. குழந்தைகள் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்க, மித்துவுக்கு வீட்டில் இருக்கும் ஆடு மரம் செடி கொடிகளைக் காண்பித்துக் கொண்டிருந்தனர் ரதியும், வெற்றியும். சிறிது நேரத்தில் அனைவரும் நெருங்கிவிட்டிருக்க, வெளியே

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_20’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_20’

அத்தியாயம் – 20   “என்னடி ஓடுகாலி, அடிக்கடி வெளியூருக்குப் போயிட்டு வர்றியாம், விதவிதமா புடவை கட்டிக்கிறியாம். எவனேவனோ வீட்டுக்கு வேற வரானாம்? ஊருக்கு வெளிய வீட்டை வச்சுக்கிட்டு பிராத்தல் பண்ணிட்டு இருக்கியா?” சட்டை பட்டன் பிய்ந்து சட்டை கழண்டிருப்பது கூடத்