Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_6’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_6’

அத்தியாயம் – 6

 

ளசரவாக்கத்தின் பிரதான சாலையிலே இருந்த அந்த நான்கு மாடி அலுவலகம் முழுவதும் கிரானைட் கற்களால் பளபளத்தது. அந்தக் கட்டடத்தின் வாயிலில் அமர்ந்திருந்த கண்காணிப்பாளர் தெரிந்தவர்களை மட்டுமே உள்ளே அடி எடுத்து வைக்க விட்டார். அங்கு வருபவர்கள் பெரும்பாலானவர்கள் அவருக்குப் பழக்கமானவர்களே.

நாம் ஆ வென்று அண்ணாந்து பார்க்கும் திரை நட்சத்திரங்களை எல்லாம் அருகில் பார்க்கும் வாய்ப்பு பெற்றவர். ஏனென்றால் அந்தக் கட்டிடத்தில்தான் சத்தமில்லாமல் சில திரைப்பட நிறுவனங்களின் அலுவலகம் உள்ளது.

நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அலுவலகம் என்பதால் அவர்களை சந்திக்க வரும் ஆட்களும் உண்டு. வித்யாசம் என்னவென்றால் சாதாரண ஆஃபீஸ் என்றால் வாய்ப்பு தேடி வருவார்கள். இங்கு முடிவெடுக்கும் ஆட்களே அதிகம் என்பதால் பெரும்புள்ளிகள் பணம் போடும் முதலாளிகளே உள்ளே நுழைய முடியும். அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு செங்கலும் பல திரை ரகசியங்களை உள்ளடக்கியது.

அந்த நிறுவனத்தின் உள்ளே நுழைந்தார் சிவகுரு. உலகம்மையின் கணவர். அவரது குடும்பம் சினிமா தொடர்பு உள்ளது. அவரது தந்தை, தமையன்கள் பண முதலீடு செய்துள்ளனர்.

பெரிய பெரிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் போது அமைதியாக எளிமையாக ஒருவர் அங்கு வருவார்.ஆனால் அவரைப் பார்த்ததும் இயக்குனரில் இருந்து கதாநாயகன் வரை வணக்கம் போட ஆஜராகிவிடுவார். அந்த மாதிரி பகட்டில்லாத பணம் நிறைந்த பரம்பரியம் மிக்க குடும்பம்தான் சிவகுருவினது.

அவர் அந்தக் கட்டிடத்தில் நுழைந்ததற்கான நோக்கமே வேறு. அங்குதான் அதினனின் அலுவலகமும் இருந்தது. சிவகுருவுக்கு அவனிடம் பேச வேண்டியிருந்தது.

தினமும் ஐம்பது திரைப்படங்களாவது டிவி சேனலில் ஒளிபரப்பாகும் இந்தக் காலத்தில் அதினன் எங்காவது உங்கள் கண்ணில் பட்டிருப்பான். அந்த அளவுக்குத் தவிர்க்க முடியாதவன். உங்களுக்கு சந்தேகம் என்றால் சில வீடுகளில் ரகசியமாய் சோதனை செய்யுங்கள்.

கல்லூரி மாணவர்கள் அதினனின் நடை உடை பாவனைகளை பிரதியெடுக்கப் படாத பாடு படுவார்கள். பட ரிலீசின்போது சூடம் காட்டுவது, தோரணம் கட்டுவது, கட்டவுட்டுக்குப் பாலாபிஷேகம் போன்ற நாட்டிற்குத் தேவையான சேவைகளை செய்வார்கள்.

அப்ப பெண்கள்?

நம்ம பொண்ணுங்க தெளிவானவங்க.

டீன் ஏஜ் வயது பெண்களை உடைய அம்மாக்கள் அவர்களது பெண் ‘கோயம்பேடு குருவம்மா, என் வீட்டுப்பக்கம் வாயேன்ம்மா’ என்று திரையில் ஐட்டம் சாங்கில் குத்தாட்டம் போடும் அதினனை வைத்த கண் எடுக்காமல் பார்க்கும்பொழுது பக் பக்கென்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு பார்ப்பார்கள்.

“காலங்காத்தால என்னடி இது கன்றாவி பாட்டு. போயி புக்கை எடுத்துப் படி” என்று டிவியை நிறுத்தி விரட்டியும் விடுவார்கள்.

அதே அம்மாக்கள் கல்யாண வயதில் நிற்கும் மகள் “ ‘மௌன நிலா’ படத்தில் இருக்குற அதினனை மாதிரி மாப்பிள்ளை பாருங்க” என்று பிடிவாதம் பிடிக்கும் போது

“ஏண்டி அதில் நடிச்ச அந்தக் கழிசடையே அந்த மாதிரி ஜெண்டில்மேன் இல்லை. இதில் எங்கிருந்து அந்த மாதிரியே பய்யனைப் பிடிக்கிறது”

“தேடுங்க… எங்கிருந்தாலும் தேடி அந்த மாதிரி ஒரு சாஃப்ட், நைஸ் மாப்பிள்ளையை வலை வீசிப் பிடிங்க. முடியலைன்னா… “

“முடியலைன்னா? நாங்க சொல்ற ஆளைக் கல்யாணம் பண்ணிப்பியா”

“மாட்டேன், ‘மௌன நிலா’ கிடைக்கலைன்னா ‘வந்தாளே ராஜகுமாரி’ படத்தில் வர்ற அதின் கேரக்டர் மாதிரி பாருங்க”

“அது என்னடி படம்?”

“இதுவரை தமிழ் சினிமாவில் எந்த கதாநாயகனும் ட்ரை பண்ணாத பாத்திரமா, வித்யாசமா, ரோட்டில் தார் போடுற வேலை செய்றவனா நடிப்பானே, அந்தப் படம்தான். ரோடு போடுற வேலை நடக்குறதால ட்ராபிக்ல மாட்டிட்ட ஹீரோயின், அதின் சூடு தாங்க காலில் சுத்திருக்குற டயர் செருப்போட நேர்த்தியைப் பார்த்து, அதைப் போட்டுட்டு அவன் நடக்குற ராஜநடையைப் பார்த்து, மயங்கிப் போயி கல்யாணம் பண்ணிக்குவாளே” மகள் சிலாகிக்க

“அப்பறம் சொல்லுறேன் எழுதப் படிக்கத் தெரியலைன்னாலும், செருப்பு தயாரிக்கிற கம்பனி வச்சிருக்குற ஹீரோயின் பாரின் கம்பனி கூட போடுற காண்ட்ராக்டில் இருக்கும் ஓட்டையைக் கண்டுபிடிச்சு மீட்டிங்ல பேப்பரைக் கிழிச்சுப் போடுவானே” என்று மூக்கை உடைப்பார் அம்மா.

“ஆ… அதில்தான் அதின் ஜஸ்டிஃபை பண்ணிருப்பானே, எனக்கு எழுதப் படிக்கத்தான் தெரியாது, ஆனால் இந்தியா மட்டுமில்லாம அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் எல்லா நாட்டிலையும் இவனோட தொழில் திறமையைப் பாத்து ரோடு போடக் கூப்பிட்டதால ஐம்பது மொழிகள் பேசத் தெரியும்னு சொல்வான்மா”

“சரி அதை விடு, அதே படத்தில் ஹெலிகாப்டர்ல தொங்கிட்டே சண்டை போடுறது, ஒரு சீனில் நடுவானத்தில் ரிப்பேர் ஆன பாசஞ்சர் பிளைட்டை பைலட்டை தள்ளிவிட்டுட்டு அவனே சேஃப்பா லாண்ட் பண்றதுன்னு இவன் படத்தில் அடிக்கிற கூத்து கொஞ்சமா நஞ்சமா”

“அம்மா, அக்கா சொல்றது கரெக்ட்டு அதின் படத்தில் லாஜிக் மிஸ் ஆகவே ஆகாது. அதுதான் முன்னாடி ஒரு சீன்ல அவன் ரோடு ரோலர்ல டிரைவர் பக்கத்தில் உக்காந்து போகணும்னா ரோடு ரோலர் பத்தின அறிவெல்லாம் ஒரு மெக்கானிக் ஷாப்ல கத்துக்கிட்டுத்தான் உக்காருவான்.

அதுமாதிரி பிளைட் டிராவல் பண்றதுக்கு முன்னாடி அதைப் பத்தி படிச்சுட்டு ஒட்டுவானா இருக்கும். இதெல்லாம் உங்க 80ஸ் படம் மாதிரி ஒண்ணு ஒண்ணா பத்துப் பக்க வசனம் பேசி விளக்கிட்டு இருப்பானாக்கும். நம்ம ஜெனரேஷன்ல வர்ற ஹிடன் மெசேஜஸ் எல்லாம் அம்மாவுக்குப் புரியாதுக்கா” என்று சப்போர்ட்டுக்கு வரும் டீன் ஏஜ்.

 

“இது அதியோட நிஜ கேரக்டர்மா, அவனுக்குத் தெரியாதது என்ன இருக்கு சொல்லு, ஃபிலிம் இன்ஸ்ட்டிடியூட்ல படிச்சுட்டு வந்திருக்கான். ஆளு ஆறடி உயர அழகன், பிரபுதேவாக்கு ஈக்வலா டான்ஸ் ஆடுறான், எஸ்பிபி சார் கூட சேர்ந்து பத்து பாட்டு பாடிருக்கான். அவரே இவனுக்கு இசையே தொழிலா எடுத்துக்குற அளவுக்கு அறிவு இருக்குனு சொல்லிருக்கார். மும்பைல வளர்ந்திருந்தாலும் தமிழ் பாட்டெல்லாம் எழுதிருக்கான். அந்த அளவுக்கு தமிழில் புலமை. இப்பல்லாம் பாதி படத்தை அவன்தான் டைரெக்ட் பண்றான், கராத்தே சாம்பியன். காமிரா டெக்னிக்ஸ் எல்லாம் அத்துப்படி”

“போதும் அடுக்கிட்டே போகாதே. இப்படி எல்லாத்திலும் ஆர்வக் கோளாறு, அதீத இன்வால்வ்மெண்ட்… அதே மாதிரிதான் காதல் காட்சிகளில் கூட நடிக்கிற நடிகைகள் கிட்டயும்.

அவளைக் கிள்ளிட்டான், இவளைக் கடிச்சுட்டான், அவ கூட குடிச்சுட்டு நடுரோட்டில் மாட்டிக்கிட்டான், காலேஜ் பொண்ணுதான் புது கேர்ள் ஃப்ரெண்ட், அப்பப்பா எத்தனை கிசுகிசு. பல சினிமாப் பத்திரிக்கைகள் இவன் இல்லைன்னா ஊத்தி மூடிருக்கும்.

இது வரைக்கும் ஆறு நடிகைகள் இவன் கல்யாணம் பண்ணிக்குவான்னு நினைச்சேன்னு கண்ணீர் விட்டுப் புலம்பிருக்காங்க. அவன் எவ்வளவு வேணும்னாலும் அறிவோட இருக்கலாம். ஆனால் பெண்கள் விஷயத்தில் கடைஞ்செடுத்த அயோக்கியன். அதுதான் கழுதை வயசாகியும் கல்யாணம் ஆகல”

“அம்மா, அதின் லேடீஸ் விஷயத்தில் அப்படி இப்படின்னு தெரிஞ்சதாலதான் அவனோட கதாபாத்திரம் மாதிரி மாப்பிள்ளை வேணும்னு கேட்டேனே தவிர அவனே வேணும்னு கேக்கல. இல்லைன்னா அவன் வீட்டு முன்னாடி தர்ணா பண்ணிருப்பேன்” என்றாள் மகள்.

“கடவுளே இதுங்க ரெண்டும் ஆம்பளப் புள்ளையா பொறந்திருந்தா அந்த தடியனோட பட ரிலீஸ் போது கட்டவுட்டுக்கு ரெண்டு லிட்டர் பால் செலவோட போயிருக்குமே!” என்று வாய்விட்டே வருத்தப்பட்டார் அந்த அம்மா.

1 thought on “தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_6’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’

அத்தியாயம் – 21   அவர்களை வற்புற்தி அதினனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அவர்கள் வீட்டில் அதினன், மித்து, அவன் பெற்றோர், வெண்ணிலா, குழந்தைகள், பாக்யநாதன், கார்மேகம், பொன்னுமணி அனைவரும் இருந்தும் ஒரு விரும்பத்தகாத அமைதி நிறைந்திருந்தது. பிள்ளைகளுக்கு உணவைத் தந்து

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_4’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_4’

அத்தியாயம் – 4   சில வருடங்களுக்கு முன்னர் வாழ்க்கையின் சூறாவளியால் சின்னாபின்னப்பட்டு திகைத்திருந்தனர் மூவரும். உடல் நிலை சரியில்லாத பெற்றோரை கவனிக்க வேண்டும் என்ற காரணத்தாலேயே உள்ளூரை விட்டு செல்ல விரும்பாததால் சரியான வேலை அமையாத கார்மேகம், பொறுப்பற்ற கணவனால்

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_19’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_19’

அத்தியாயம் – 19 அதினன் வீட்டை சுத்தம் செய்து குடி வந்து ஒரு மாதமாகப் போகிறது. தினமும் காலை எழுந்து குளித்து பத்து மணிக்கு ரெடியாகி விடுவான். அதற்குள் வெண்ணிலாவும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு