Tamil Madhura ராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 2

ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 2

2

வீடு திரும்பி என்ன ஆக வேண்டும், இப்படியே இந்தச் சந்தடியைப் பார்த்துக் கொண்டு நிற்கலாமே என்று தோன்றுகிறது.

சுஜி… கையில் குழந்தையை இடுக்கிக் கொண்டு, பை நிறைய அதற்கு வேண்டிய துணிமணி, பால் பாட்டில், பொம்மை என்று சுமந்து கொண்டு அலுவலகத்துக்குக் கிளம்பும் போது, இவள் முகத்தில் அடிப்பது போல் இருக்கிறது.

“நீ உன் மகனை வளர்த்து ஆளாக்கியிருக்கும் விதம் போதும். என் குழந்தையை நீ குலவ வேண்டாம்…” என்பது போல், இவளை நிராகரித்து விட்டு, எங்கோ இருக்கும் குழந்தைக் காப்பகத்தில் விட்டுவிட்டு அலுவலகம் செல்கிறாள்.

“அபிராமி, உன் பிரார்த்தனை பலிச்சாச்சு. ரிடயராகிப் போனா, வீட்டில பேரனோ பேத்தியோ இருக்கும்…பேச. நீயும்… அந்தக் காலத்தில் சீனியக் கையில புடிச்சிட்டு, சந்து வீட்டில குடித்தனம் பண்ண வந்தது இன்னிக்குப் போல இருக்கு. இருபத்தேழு வருஷம் ஓடிப்போச்சு!” என்று சுந்தரம்மா இவளுக்கு விடைகொடுத்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 5ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 5

காலை பதினோரு மணி நேரம். அந்த ரயில்வே காலனி அமைதியாக இருக்கிறது. பாலாமணி வீட்டு வாசல் மூங்கில் படல் தடுப்பின் கீழே, ஏதோ பூச்செடியைப் பேணிக் கொண்டிருக்கிறாள். அடுத்த படலைக்கப்பால் கூந்தலை ஆற்றிக் கொண்டு ஓர் இளம் இல்லாள் சாவகாசமாகப் பேசிக்

ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 6ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 6

தன் மகன் கடல் தாண்டிப் போகப் போகிறான் என்று அபிராமி யாரிடமும் சொல்லவில்லை. ஒரே வாரத்தில் கைக்குப் பணம் கிடைத்து விடுகிறது. “இது நான் உனக்குக் கடைசியாகக் கடன் வாங்கித் தந்திருக்கிறேன். நீ முன்னுக்கு வரணும்னு நம்பிக்கையோடு தந்திருக்கிறேன்…” “அம்மா…! என்

ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 7ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 7

பிரேம்குமார் அன்று வந்துவிட்டுப் போனதுடன் மறந்துவிடவில்லை. சுஜா இல்லாத இன்னொரு நாள் மாலையில், பேபியைப் பார்த்துவிட்டு, ஒரு பெரிய பொம்மை நாய்க்குட்டியைப் பரிசளித்துவிட்டுப் போகிறான். அக்கம் பக்கத்துக்கு மெல்ல அவலே கிடைத்து விடுகிறது. “அபிராமி அம்மா? சீனிய ஆளயே காணம்?…” “பம்பாய்