தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 11’

றுநாள் முக்கியமான செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் ரூபி நெட்வொர்க் பற்றிய செய்திகள் வருமாறு பார்த்துக் கொண்டாள் காதம்பரி. தனக்கு திருப்தியாக  அனைத்தும் முடிந்ததில் வம்சி கிருஷ்ணாவுக்கு சந்தோஷம்.

அதை விருந்துடன் கொண்டாடலாம் என்று முடிவு செய்தார்கள்.

“காதம்பரி நம்ம இதை கொண்டாடியே ஆகணும். இன்னைக்கு நைட் டின்னர். சரியா?”

“ஷூர் வம்சி… வீ டிசெர்வ் இட் “

“ஆமாமாம் வம்சியோட ப்ராஜெக்ட்டுக்காக நாங்க ராப்பகலா கஷ்டப்பட்டிருக்கோம். அதனால இன்னைக்கு ஈவ்னிங் இன்டெர்நேஷனல் ரெஸ்டாரன்ட் ஒண்ணுல டேபிள் புக் பண்ணிடுறேன்” என்று இடையிட்ட அமரின் குரலில் எரிச்சலானான் வம்சி. வழக்கமாய் அவன் முகத்தில் உணர்ச்சிகளை அவ்வளவாய் காண்பிப்பதில்லை. ஆனால் இந்த முறை அவனையும் அறியாமல் வெளிப்பட்டுவிட்டது.

“அமர்… நானும் காதம்பரியும் எங்க போறதுன்னு டிஸைட் பண்ணல”

 

வம்சி எரிச்சலடைய, காதம்பரிக்கு அவனது சவால் நினைவுக்கு வந்தது. மனதுக்குள் விசிலடித்தபடி “பரவால்ல அமர் வரட்டும். ரெண்டு பேர் இருக்கும்போது ஒருத்தருக்கு மட்டும் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் தருவது நாகரீகமாகாது ” என்றாள் வம்சியின் குரலிலேயே.

 

‘பாவி பழி வாங்குற சந்தர்ப்பமாடி இது’ என்றபடி அவளை எரிச்சலுடன் பார்த்தான் வம்சி.

 

“சரி வம்சி, உங்களுக்கு ட்ரீட் தர மனசில்லைன்னா நான் கேட்டை வெளிய கூட்டிட்டு போறேன். ஷீ நீட்ஸ் எ ஸ்பெஷல் ட்ரீட்”

“மூணு பேருக்கு டின்னர் புக் பண்ணு அமர்” என்றான் வம்சி காட்டமாக.

“சரி ஈவ்னிங் பார்க்கலாம் கய்ஸ். ஐ நீட் ஸ்லீப் நவ்”

அவள் சென்றதும், “அமர், உனக்கு பெண்கள்ன்னு எழுதினாலே பிடிக்கும்னு கேள்விப்பட்டேன்”

“ஆமாம்… உன்னை மாதிரிதான் நானும்”

“என்னை மாதிரின்னு சொல்லாதே… நீயும் நானும் ஒண்ணா… நான் கல்லூரி மாணவிகளை மாடலிங் வாய்ப்பு வாங்கித் தரதா ஏமாத்தி படுக்கைக்கு அழைக்கிறதில்லை. வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஏமாத்துறதில்லை ”

“இதையெல்லாம் காதம்பரிட்ட சொல்லப் போறியா… நீ ஜென்டில்மென்னு நினைச்சேன். கடைசியில் என்னைப் பத்திப் போட்டுக் கொடுத்துத்தான் கேட்டை நெருங்கனும்னு நினைக்கிறியே… கொஞ்சம் யோசிச்சு பாரு, வம்சி நீ அந்த அளவுக்கா காஞ்சு போயிருக்க”

“இந்த மாதிரி வேற யாராவது என் முன்ன நின்னு பேசிருந்தா அவங்க பல்லு காத்தில் பறந்திருக்கும். என் பலம் புரியாம பேசிட்டு இருக்க”

“இப்பயும் செய்ய வேண்டியதுதானே. உன் பலம் எனக்குப் புரியும், தெரியும். நீ என் மேல கோபப்படு, நாலு பேரு முன்னாடி அடி. இது பெரிய நியூஸ் ஆகணும். அதுதான் எனக்கு வேணும்”

“எனக்கெதுக்குப்பா பொல்லாப்பு. ஏற்கனவே நான் முரடன்னு வெளிய பேரு. இதில் உன்னை அடிச்சா அதைக் காரணம் காட்டி காதம்பரியை நெருங்குவ… இது எனக்குத் தேவையா”

வெற்றிச் சிரிப்பு சிரித்தான் அமர்.

“ஆனால் உனக்கு நன்றி வம்சி. என்னவோ தெரியல உன்னை அவாய்ட் பண்றதுக்காக கேட் என்னை நெருங்குறா… அந்த வகையில் எங்க கல்யாணம் முடிஞ்சவுடன் என் வாழ்க்கையில் விளக்கேத்தி வச்ச தெய்வமா உன்னைக் கொண்டாடுறேன். என் முதல் குழந்தைக்கு வம்சி கிருஷ்ணான்னு பேர் வைக்கிறேன்”

“நன்றி… ஆனால் எனக்கு ஒண்ணு புரியல. பெண்கள் உனக்கு புதிசில்லை ஏன் கேட் மேல இத்தனை அட்டாச்மென்ட்”

“பெண்களில் ரெண்டு வகை ஒண்ணு ஆதாயத்துக்காக நம்மளைத் தேடி வர்றது. அவங்களை யூஸ் பண்ணிக்கலைன்னா தெய்வ குத்தமாயிடும். முடிஞ்ச அளவுக்கு உபயோகிக்கணும். அடுத்த வகை பெண்கள் ராணி மாதிரி. பணம், பதவி, அழகு, திறமை எல்லாம் நிறைஞ்சவங்க. அந்த மாதிரி ஆட்களைப் பார்த்தா காலடியில் சேவகனாய் நம்ம காலம் பூராவும் கழிச்சுடணும். நம்ம லைப் செட்டிலாயிடும். அவங்களை அடைய எந்த விதமான கேமும் ஆடலாம்”

பதில் பேசாமல் அமரை வெறித்தான் வம்சி.

“வம்சி கிருஷ்ணா லேட்டா ட்ரை பண்றியேப்பா… early bird gets the worm.. வர்ட்டா…”

 

மாலை உணவுக்கு புக் செய்த டேபிளுக்கு சென்றான் வம்சி. அங்கே அவனுக்கு முன்னே அமர் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து மனதில் எழுந்த எரிச்சலை அடக்கிக் கொண்டான்.

 

“காதம்பரி வரல” என்று சம்பிரதாயமாய் கேட்டான்.

 

“கேட் இன்னும் வரல. நம்ம ரெண்டு பேரும் வந்துட்டோம். வழக்கமா கேட் ஒரு நிமிஷம் கூட தாமதமா வர மாட்டா. இன்னைக்கு என்னாச்சுன்னு தெரியல” சொல்லிக் கொண்டிருந்த போதே அந்த அறைக்குள் ஒரு தேவதையைப் போல நுழைந்தாள் காதம்பரி.

 

வெள்ளை நிற ப்ளோரல் டிஸைன் செய்த மாக்சி. அதில் வாரிக் கொட்டினாற்போல பல வண்ணப் பூக்கள். எப்பொழுதும் போனிடைலில் அடங்கி இருக்கும் முடியை முன்னுச்சியில் வாரி, கிளிப் ஒன்றைப் போட்டு, மற்றதை  விரித்து விட்டிருந்தாள். அது அலைகடலாய் புரண்டு அழகு சேர்த்தது. இதழ்களுக்கு ரோஜாவையும் செம்பருத்தியையும் குழைத்தார் போன்ற நல்ல அழுத்தமான லிப்ஸ்டிக், கன்னத்தில் ரூஜ், கண்களை சுற்றிலும் வரைந்திருந்த கண்மையால் கண்களில் இரண்டு பெரிய மீன்கள் துள்ளின. மொத்தத்தில் பேரழகுப் பாவையாய் மிளிர்ந்தாள். வம்சியால் அவளை விட்டுக் கண்களை அகற்றவே முடியவில்லை.

 

“கேட் உன் பெயரை இனி ஸ்னோவொயிட்னு மாத்திரலாமா” என்ற அமரின் குரலைக் கேட்டு நினைவுக்கு வந்தான்.

“இந்த ரெஸ்டாரன்ட்ல டின்னர் சூப்பரா இருக்கும்”

“ஸ்டார்ட்டர் என்ன”

“ஸ்பைஸ்டு ஸ்கேலப் வித் காலிப்ளாவர் பியூரி”

 

இதைப் போல அவன் உறைந்து நின்றதே இல்லை. ஒரு தேவதை பறந்து வந்து அமர்ந்ததைப் போல நளினமாக தன்னெதிரே இருக்கும் நாற்காலியில் அமர்ந்து உணவு உண்பவளை விட்டுப் பார்வையை விலக்காமல் என்ன உணவு என்ற ருசி அறியாமலேயே விழுங்கினான்.

அடுத்ததாய் மெயின் கோர்ஸ் என ஸ்லோ கூக்டு லாம்ப் வித் போலேண்டா. கலர் கலரான உணவால் அந்தத் தட்டில் கோலம் வரைந்திருந்தார்கள். ஆனால் தன் முன்னே பரிமாறப்பட்ட உணவை ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை வம்சி. பார்வையால் எதிரில் இருந்தவளை விழுங்கியவனுக்கு உணவின் ருசி அவசியமாய் படவில்லை.

 

ஏதோ அழைப்பில் அவள் பிஸியாக அவள் பின்னால் நின்று அணைப்பதைப் போல ஜாடை காண்பித்த அமரை அடி நொறுக்கிக் கொன்று விடலாம் போலிருந்தது வம்சிக்கு. போன் பேசி முடித்ததும் வம்சியின் பார்வை சென்ற திசையை நோக்கினாள் காதம்பரி. அமர் தன் பின்னே நின்று கொண்டிருப்பதின் விவரம் அறியாமல்

“என்ன அமர்” என்றாள்

 

‘கேட் ஏஞ்சல் மாதிரி இருக்க… “ அமர் வழிந்தான்.

 

“அப்ப கஜோல் மாதிரி இல்லையா.. “ சிணுங்கினாள் கேட்.

 

“கஜோலை விட அழகு” என்றான்.

இந்தக் காதல் நாடகத்தைக் கண்டு வயிற்றில் அமிலம் ஊற்றியது போல எரிந்தது வம்சிக்கு.

பாதி உணவில் தூரத்திலிருந்து யாரோ ஒரு பெண் அமரைப்  பார்த்துக் கையசைக்க அமருக்குத் திகிலடித்தது. இவளெங்கே இங்கே… இருந்தாலும் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“அமர்… யாரோ லேடி உங்களைக் கூப்பிடுறாங்க”

“இல்லையே… வம்சியைக் கூப்பிடுறாங்களா இருக்கும்”

அவளோ விடாமல் பேரரிடம் சீட்டைக் கொடுத்தனுப்பினாள்.

“முக்கியமான ஆள். ஒரு ஹாய் சொல்லிட்டு வரேன் டியர்” என்றபடி அவர்களைப் பார்க்க சென்றான்.

அவன் சற்று தூரம் சென்றதும் அவன் சென்ற திசையைப் பார்த்து  “டியர்” என்று வெறுப்பாக சொன்னான் வம்சி.

வெற்றிப்பெருமிதத்தை காதம்பரியின் முகம் காட்டியது.

“வாயேன் கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாம்”

“நீங்க சரியா சாப்பிடல வம்சி. இனி டெஸர்ட் வேற இருக்கு”

“என்னால சாப்பிட முடியல”

தான் இரண்டு வாய் கூட உண்டிராத உணவுத் தட்டைப் பார்த்தாள் “உணவை வீணாக்கினா உங்களுக்குப் பிடிக்காதே”

“இன்னைக்கு என்னால சாப்பிடவே முடியல… உனக்கும் அப்படி இருந்ததுன்னா நான் ரொம்ப சந்தோஷப் படுவேன்”

“நிஜம்மாவா… “

“நிஜம்தான்”

இருவரும் நிலவொளியில் புல்தரையில் நடக்க ஆரம்பித்தனர். தூரத்தில் யாரோ ஒரு பெண்ணிடம் அமர் வாக்குவாதத்தில் இருப்பதைப் போலத் தோன்றியது. அதனால் அதற்கு எதிர்புறம் திரும்பி இருவரும் நடந்தனர்.

“இன்னைக்கு நிஜம்மாவே ஏஞ்சல் மாதிரி இருக்க காதம்பரி. அந்த அமர் விட்ட ஜொள்ளில் என் டிரஸ் கூட ஈரமாயிருச்சு”

ஆனால் அவன் எதிர்பார்த்ததுக்கு மாறாக காதம்பரியின் முகத்தில் மகிழ்ச்சி.

“என்னமோ எனக்கு இதெல்லாம் வரவே வராதுன்னு யாரோ சொன்னாங்க… அவங்க தோற்க போறாங்க”

“ஸ்டாப் இட் காதம்பரி” பல்லைக் கடித்தவாறு சொன்னான்.

“எதுக்கு ஸ்டாப் பண்ணனும். நீங்கதானே ஆரம்பிச்சு விட்டிங்க”

“அவனைப் பார்த்தாலே பெண்கள் விஷயத்தில் மோசமானவன்னு தெரியலயா. அங்க போயி பேசிட்டு இருக்கானே அந்தப் பெண்ணும் ஒரு மாதிரி பட்டவன்னு உனக்கு புரிய மாட்டிங்குது. அவன் கூட இப்படி நீ பேசுறது நல்லதில்லை”

அமருடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தாள். ‘அப்படியும் இருக்குமோ’

சுதாரித்தாள் “இருக்கட்டுமே நீங்க வச்ச போட்டிக்குத்தானே அவன் கூட பேசுறேன்”

“இருக்கலாம் ஆனால் விளையாட்டு விபரீதமாகும்னு படுது”

“இருக்கட்டுமே…. யாராவது ஒருத்தனை என் பின்னாடி சுத்த வைக்கணும்னு நீங்கதானே போட்டி வச்சிங்க”

“அந்த ஒருத்தன் நானா இருக்கக் கூடாதா….. “

அந்தப் புல்வெளியில் நடந்துக் கொண்டிருந்த காதம்பரி தன் காதில் விழுந்தது உண்மைதானா என்றெண்ணித் திகைத்தாள். ‘கண்டிப்பா உண்மை இல்லை என் காதில் என்னமோ தப்பா விழுந்திருக்கு’ நம்பாமல் அவனை ஏறிட்டாள்.

“அவளது கைகளுடன் தனது கைகளைக் கோர்த்தவன்” அவளது கண்களை ஏறிட்டுப் பார்த்தான்.

“நிஜம்மாத்தான் சொல்றேன். என்னை ஏன் நீ மயக்க ட்ரை பண்ணல. நான் இந்த அமர் அளவுகூட வொர்த் இல்லையா” ஏக்கமாய் கேட்ட விழிகள், அந்தக் குரல் அவள் மனதை என்னவோ செய்தது.

“நீ என்னை மயக்கணும்னு ஆசைப்பட்டுத்தானே அந்த மாதிரி போட்டி வச்சேன். எனக்கே பேக்பையர் ஆச்சே செர்ரி. இப்ப சொல்றேன் நீ சோனா இதை மாதிரி ஏதாவது செஞ்சால்தான் ஆண்கள் திரும்பிப் பார்பாங்க. நீயோ எந்த முயற்சியும்  செய்யாமலேயே நான் உன்கிட்ட மயங்கிட்டேன். தினமும் உன் கூட மீட்டிங் வைக்கனும்னு அவசியமா… ஒரு மெயில் இல்லை வீடியோ கான்பிரன்ஸ் கால் போதாதா…. காலைல வம்படியா என்கூட ப்ரேக்பாஸ்ட் சாப்பிட வச்சு, எல்லா முக்கியமான மீட்டிங்கையும் கான்ஸல் செய்துட்டு பெங்களூர் ப்ளைட் எக்கனாமிக் கிளாசில் உன் கூடவே தொத்திகிட்டு…. பச்…. உன்னை இம்ப்ரெஸ் செய்ய எவ்வளவு ட்ரை பண்றேன் இது கூட புரியாத மக்கா இருக்கியே செர்ரி”

“வம்சி” அவள் குரல் மெதுவாக ஒலித்தது. அவன் மனதில் இருந்த ஏதோ ஒன்றை பட்டென போட்டு உடைத்துவிட்டான். இதனால் வம்சியின் மனம் லேசானது. அந்த பாரம் காதம்பரியின் மனதில் ஏறிவிட்டது.

1 thought on “தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 11’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வேந்தர் மரபு – 54வேந்தர் மரபு – 54

வணக்கம் தோழமைகளே! வேந்தர் மரபு அடுத்த அத்தியாயம் உங்களுக்காக வேந்தர் மரபு – 54 Download WordPress ThemesDownload Best WordPress Themes Free DownloadDownload Premium WordPress Themes FreePremium WordPress Themes Downloadfree online coursedownload karbonn firmwareFree

ராணி மங்கம்மாள் – 25ராணி மங்கம்மாள் – 25

25. பாவமும் பரிகாரங்களும் அன்றொரு நாள் அரண்மனை நந்தவனத்தின் அதிகாலை இருளில் பணிப் பெண்கள் தங்களுக்குள் ஒட்டுப் பேசியதை இன்று வெளிப்படையாகவே தனக்கும் அச்சையாவுக்கும் முன்னால் விஜயரங்கன் பேசக் கண்டாள் ராணி மங்கம்மாள்.   முதலில் பணிப்பெண்கள் மத்தியில் முளைவிட்ட ஓர்

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 12’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 12’

வம்சியின் முகம் மிக அருகில் அவளை நெருங்கியது கண்டு சுதாரித்தாள் காதம்பரி. “விளையாட்டு போதும் வம்சி. இந்த கேமை இத்தோட நிறுத்திக்குவோம். இந்த அமரை சகிக்கவே முடியல. இதில் அவன் வீட்டுக்கு வேற வரணுமாம். நீங்க ஆரம்பிச்ச கேம் விபரீதத்தில் கொண்டு