சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 20’

வேப்பம்பூவின் தேன்துளி – 20

 

காரணங்கள் புரியாமல் அன்னபூரணி சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தாள் என்றால், நீதிவாசன் காரணம் புரிந்தே சஞ்சலத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான்.

 

ஆம்! நீதிவாசன், தீபலட்சுமியின் அமைதியில் ஏதோ பின்விளைவு இருக்கும் என்று மிகச்சரியாக யூகித்திருந்தான்.

 

வழக்கமாக, வர, போக என்றிருக்கும் தங்கை, திருமணம் முடிந்த கையோடு சென்றவள், வீட்டுப்பக்கமோ, கடைப்பக்கமோ எட்டிப் பார்க்கவே இல்லை. மேலும், நீதிவாசன், நாளொன்றிற்கு ஒருமுறையேனும் தங்கையைக் கைப்பேசியில் அழைத்து விடுவான். அப்படி அழைத்திருக்கையில் இதுவரை அவள் ஒருமுறை கூட பெயருக்காகவேணும் அன்னபூரணியின் நலனை விசாரித்திருக்கவில்லை.

 

எல்லாம், எல்லாம் நீதிவாசனின் தலைக்குள் ஓடிக்கொண்டே இருக்க, நிச்சயம் தீபா அன்னபூரணியிடம் மீண்டும் நெருங்க வாய்ப்புகள் அதிகம் என்றும், குறிப்பாக மனைவியைக் குன்றவோ, நோகவோ செய்யும் விதமாகத் தங்கையின் திட்டம் இருக்கும் என்றும் அவன் கணித்தான்.

 

அதுகுறித்து ஒருமுறை அன்னபூரணியிடம் பேச்சுவாக்கில், “நீ தைரியமா இருப்பேன்னு எனக்குத் தெரியும் அன்னம். ஆனா, எல்லா நேரத்திலேயும் அப்படியே இருக்கணும். என்ன பிரச்சனை வந்தாலும் தயங்கி நிக்காம உன் உரிமை புரிஞ்சு நடந்துக்கணும். உன்மேல எனக்கோ, உன் அம்மா, அப்பாவுக்கோ எப்பவும் நம்பிக்கை குறையாது. புரியுதா?” என்று சொல்ல, அதைக் கேட்டவள் ஒன்றும் புரியாமல் விழித்து வைத்தாள்.

 

“அன்னம், என்ன ரியாக்ஷன் இது?” சிரிப்பும், கோபமும் ஒருசேர எழ, முயன்று குரலில் கண்டிப்பைக் கொண்டு வந்திருந்தான்.

 

“நான் தைரியம் தானே?” என்றாள் வீம்பாக.

 

“ஆமா, ஆமா அதான் பார்த்தேனே! துணியை மாத்திக்கோன்னு சொன்னா… கதறிக் கதறி அழுதியே!”

 

அன்றையதினத்தின் நினைவில் முகத்தைச் சுருக்கி, “அந்த நேரத்துல வேற என்ன தோணும்?” என்றாள் அவள் இயலாமையோடு.

 

நீதிவாசனுக்கு அதில் உடன்பாடே இல்லை. “ம்ப்ச்… தெரியாம ஒரு விஷயம் தவறுதலா நடக்கும்போது, உன் தப்பு அதுல எதுவும் இல்லை. அப்போ அன்னைக்கு நீ தைரியமா இருந்து பேசியிருக்க வேண்டாமா?” என்றான் அவன்.

 

நிதர்சனம் தான்! ஆனால், அப்படிப் பேசும் சூழலிலா அவளது குழப்பங்களும், அச்சங்களும் இருந்தது. முகம் வாட, “என்னவோ முடியலை…” என்றாள் வேதனையான குரலில்.

 

நீதிவாசன் அவளது தலையை ஆதரவாக வருடி, “இனி எந்த இக்கட்டான சூழல் வந்தாலும், முடியலைன்னு பின் வாங்காத. தைரியமா இரு. அவ்வளவு தான் சொல்லறேன். வேற எதுவும் இல்லை” என்றான் தீபாவைப் பற்றிய கணிப்பை நேரடியாகச் சொல்ல முடியாமல். ஒருவேளை அவனது கணிப்பு நடக்காமலும் போகலாமே!

 

தலையை உருட்டிக் கொண்டவளின் முகம் யோசனையில் இருக்கிறாள் என்பதைப் பிரதிபலித்தது.

 

அதை கவனித்தவன், “என்ன?” என்று கேட்க, “ஒருவேளை அன்னைக்கு நான் தைரியமா பேசியிருந்தா?” என்றாள் கேள்வியாக. ஒருவேளை அப்படிப் பேசியிருந்தால் தங்கள் திருமணம் நடந்திருக்காதல்லவா! அதை மனதில் வைத்துத் தான் அப்படிக் கேட்டாள்.

 

மனைவியின் மறைகேள்வி விளங்கவும், உதட்டில் சிரிப்பு நிறைய, அவளை தன் கை வளைவில் நிறுத்தி, “நம்ம கல்யாணம் அவசரமா நடக்காம, உன் ரிசல்ட் வந்த பிறகு நிதானமா முறைப்படி நடந்திருக்கும்” என்று கூறிவிட்டு நெற்றியில் இதழ் ஒற்றினான். சிரிப்பு இன்னமும் பெருகியது அவள் கேட்ட விதத்தில்!

 

அதெப்படி? என்று கேட்கத் தோன்றிய போதும், அதற்கு என்ன பதிலைச் சொல்லுவான் என்னும் குறுகுறுப்பு அவளுக்குப் படபடப்பைத் தந்தது.

 

அவளது உள்ளத்துடிப்பும், விரல்களின் நடுக்கமும் அவளது மனப்போக்கைப் புரிய வைக்க, “ஏன் உனக்கு அதுல எதுவும் சந்தேகமா?” என்று கேட்டபடி அணைப்பை மேலும் இறுக்கினான் நீதிவாசன்.

 

ஆம் என்று ஒப்புக்கொண்டாலும், இல்லை என்று மறுத்தாலும் விளைவுகள் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும் என்று புரியாதளவு அவனது மனையாள் இல்லையே! ஆனால், அவள் பதில் கூற மறுத்த போதும் அதே விளைவைத் தான் எதிர்கொள்ள நேரிட்டது! நேரம் விரைவது தெரியாத வண்ணம் அவனோடான கூடல்!

 

அன்றையதினம் நீதிவாசன் மேம்போக்காய் எச்சரிக்கை விடுத்ததை அன்னபூரணி புரிந்து கொண்டாளோ என்னவோ… ஆனால், தீபலட்சுமியின் எண்ணம், திட்டம் எல்லாம் நீதிவாசனின் அச்சப்படியே தான் இருந்தது!

 

அனைத்துமே தனக்கே கிடைக்க வேண்டும். அனைத்து சிறப்பானவைகளையும் தன்னிடமே நிறைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், தன்னிடம் இருக்கும் நல்லதில் திருப்தி அடையாததோடு, மற்றவர்கள் பெற்றிருப்பதைக் கண்டு வயிறெரியவும் செய்வார்கள். அந்த வயிற்றெரிச்சல் அத்தோடு நில்லாமல், மற்றவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருப்பவைகளைத் தடுப்பதிலும் முனைப்பைக் கொடுக்கும்.

 

தீபலட்சுமிக்கு தன் வாழ்க்கைத் துணை… கோபியா, அன்பரசனா என்னும் சந்தேகம் முளைத்த போது, நீண்ட கணக்கிடலுக்குப் பிறகு, அன்பரசனைத் தேர்வு செய்தாள். ஆனால், எதிர்பாராதவிதமாக அவள் கணக்கு பிசகி இருந்தது. அன்பரசனிடம் எதிர்பார்த்த சொத்து சுகம் இல்லை என்பதோடு, கோபி இப்பொழுது வெளிநாட்டு வசதியான வாழ்க்கை, கைக்கொள்ளா சம்பளம் என்று பெருவாழ்வு வாழ்கிறான்.

 

தங்கைகளுக்கே கணக்கு பார்க்காமல் செலவு செய்யும் அளவு உயர்ந்திருக்கிறான் கோபி! அதிலும் சொந்த தங்கைக்கு மட்டுமா? வளர்ப்பு தங்கைக்கும் சேர்த்தே!

 

கோபி அன்னபூரணிக்குக் கணக்கு பார்க்காமல் செய்யும்போதே, ‘அம்மா, அப்பா இல்லாத இவளுக்கெல்லாம் இருக்கும் வாழ்வை பாரேன்!’ என்று புகைந்து வந்தவளுக்கு, அவளை எப்படி தன் அண்ணியாகப் பார்க்க இயலும்?

 

அதிலும், அண்ணன் என்ன ஒன்றும் இல்லாத சாதாரணமானவனா?

 

முன்புபோல ஏகப்பட்ட கடனோடு, தொழிலைத் தக்க வைக்கப் போராடிக் கொண்டிருக்கும் சாதாரணமான ஒருவன் இல்லையே நீதிவாசன்! தொழிலில் தனியாகச் சாதித்துக் காட்டி, கடன்களை எல்லாம் ஓரளவு அடைத்து, ஏறுமுகமாகப் பயணிக்கத் தொடங்கியிருப்பவன் ஆயிற்றே!

 

இத்தனை ஆண்டுகள் அவன் பட்ட கஷ்டம் அப்படி! அதற்குத் தக்க பலனை அனுபவிக்கிறான் என்று நினைக்காமல், இப்பொழுது அவனது வெற்றி மட்டும் வெகுவாக உறுத்தியது தங்கைக்கு! அதிலும் அந்த வெற்றியால் அன்னபூரணிக்கு நோகாமல் பெரும் வசதிவாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று நினைக்க நினைக்க தீபாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது. என்னதான் அண்ணனிடம் ஏதாவது சொல்லி பணம் கறக்கலாம் என்றபோதும், அது என்ன தேறும்? மொத்தமும் பூரணிக்கு தானே! அதை எப்படி இவளால் வேடிக்கை பார்க்க இயலும்?

 

அன்னபூரணியை அங்கிருந்து துரத்தி விட, ஒரு துரும்பேனும் கிடைக்காதா என வெகுவாக ஆராய்ந்தாள். அதன் பயனாய் அவளுக்குச் சாதகமாக ஒரு விஷயமும் கிடைத்திருந்தது. அதில் அவள் அடைந்த உவகைக்கு அளவே இல்லை!

 

பூரணியை அண்ணனிடமிருந்து பிரிக்க, தீபா தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் தான், அன்பரசனுக்கும், அவளுக்கும் சிறிது சிறிதாக வளர்ந்து வந்த மனக்கசப்புகள் எல்லாம் எல்லை கடக்கும் நிலையில் இருந்தது.

 

தன் குடும்ப வாழ்க்கையே இப்பொழுதோ, அப்பொழுதோ என ஊசலாடிக் கொண்டிருப்பதைக் கூட உணராமல், அண்ணனின் குடும்பத்தைச் சிதைப்பதற்குப் பலமாகத் திட்டம் வகுத்து வைத்திருந்தாள்.

 

வழக்கமாக தீபலட்சுமி… தன் புகுந்த வீட்டிலும், அன்பரசனிடமும் காட்டும் அலட்சியம் தற்போதெல்லாம் பல மடங்கு கூடியிருக்க, அதற்குச் சிகரம் வைத்தாற்போல மிகப்பெரிய பாதக செயல் ஒன்றை வீட்டினர் யாரும் அறியாமல் செய்து வைத்திருந்தாள்.

அது அவளுடைய கணவனுக்குத் தெரிய வர, அவளின் செயலில் பொறுமை பறந்த கணவனோ அவளிடம் சண்டையிடத் தொடங்கினான். இவளும் பதிலுக்கு வாக்குவாதம் செய்ய, இருவருக்குள்ளும் சண்டை முற்றியது. தீபா கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.

 

சண்டை என்பதே அன்பரசனுக்குப் பிடிக்காது என்னும்பொழுது, இவள் வீட்டை விட்டு வேறு வெளியேறி… அவனுடைய சினத்தை அதிகமாகச் சீண்டி விட்டிருந்தாள்.

 

கோபமாக நீதிவாசனுக்கு அழைப்பு விடுத்திருந்த அன்பரசன், தங்கள் இருவருக்குள்ளும் சண்டை என்றும்… அதில் அவள் வீட்டை விட்டுப் போய் விட்டாள் என்றும், அவளோடு நிம்மதியற்ற வாழ்வை இனியும் தன்னால் தொடர முடியாது என்றும் இதில் என்னை தவறாக நினைத்துக் கொள்ளாதே என்றும் சொல்லிவிட்டு, எதற்குச் சண்டை வந்தது என்ற மூலகாரணத்தைப் பற்றி எதையும் சொல்லாமல் அழைப்பைத் துண்டித்திருந்தான்.

 

நீதிவாசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அன்பரசனோடு பல காலமாகத் தொழில் முறையில் உறவு கொண்டிருந்தவனுக்கு அவனது பொறுமை நன்கு தெரியுமே! அவனே இந்தளவு பேசுமளவு என்ன பிரச்சனை என்று புரியாமல் குழம்பினான்.

 

ஆனால், பிரச்சனை அவன் நினைப்பது போலச் சாதாரணமானது இல்லையே! தீபா அடி முதல் நுனி வரை பிசகி வைத்திருந்தாளே! பொறுமைக்குப் பேர் போன, அன்பரசனே இப்படிப் பேசுகிறான் என்றால், தீபாவின் அழிச்சாட்டியம் எத்தனை தூரம் சென்றிருக்கும்? ஆனால், ஒரு அண்ணனாக நீதிவாசனுக்குத் தங்கையின் வாழ்க்கை மீது பயம் வந்தது. மற்ற விஷயங்களில் அவனது சிந்தை பயணிக்க மறுத்தது.

 

தங்கை கணவனைப் பிரிந்து வருகிறாள் என்பதே அவனுக்குப் பெரிய இடி என்றால், அப்படி அவள் எடுத்த முடிவினால் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை என்று அவளின் கணவன் சொல்வது… அண்ணனாக அவனுக்கு எப்படி இருக்கும்? சீர்படுத்த முடியாத பிரச்சனையோ என்னும் அச்சம் அவனைப் பெரிதாகத் தாக்கியது.

 

கோபத்தில், ஆத்திரத்தில் விபரீதமாக எதுவும் யோசிக்குமளவு தன் தங்கை கோழை இல்லை என்றபோதும், அவள் மனபாரத்தோடு வீடு வரும்போது அவளுக்கு ஆதரவு தர, அரவணைக்க தான் வீட்டில் இருத்தல் அவசியம் என்று உணர்ந்தவனாய் உடனேயே வீட்டிற்கு கிளம்பி விட்டான்.

 

இந்த அண்ணன், தங்கையின் செய்கைகள், மன குழப்பங்கள், வேதனைகள் என்றிருக்க… அங்கே வீட்டிலோ நேர் எதிர் சூழல். கோபி தன் தங்கையைக் காண வந்திருந்தான். லாவண்யா அவளது நெருங்கிய தோழியின் திருமணத்திற்குச் சென்றிருக்க, வேறு நல்ல நாள் இல்லை என்பதால் தங்கைக்குத் தர வேண்டிய மீதி நகை சீரை இன்றே தந்து விடலாம் என்று கோபி தங்கையைப் பார்க்க வந்திருந்தான்.

 

“அண்ணா வா வா… நல்லா இருக்கியா? என்ன நீ மட்டும் தான் வந்திருக்க?”

 

“நல்லா இருக்கேன் பூரணி. நீ எப்படி இருக்க? உங்க அண்ணி கல்யாணத்துக்குப் போயிருக்கா டா. அம்மா இப்பதான் வந்துட்டு போனாங்களாமே, நாங்க இனி வெளிநாடு போக தேவையான மாசாலா பொடி எல்லாம் தயார் செய்ய நிறைய வேலை இருக்கிறதால என்னை மட்டும் அனுப்பி விட்டாங்க. அடுத்த வாரம் என்னை வழியனுப்ப எப்படியும் நீ வருவியே… அப்ப பார்த்துகிறேன்னு சொன்னாங்க” என்றான் அவன்.

 

“இந்த பெரியம்மா இப்படியே தான்ணா சாக்கு சொல்லும்… நீ என்ன சொல்லாம வந்திருக்க? முன்னமே சொல்லியிருந்தா அவரை வரச் சொல்லியிருப்பேனே ண்ணா” என்றாள் குறையாக.

 

“அதுனால என்ன பூரணி, நீங்க தான் வருவீங்களே! நான் இன்னைக்கு நல்ல நாளுன்னு கிளம்பி வந்துட்டேன். சரி பாரு பாரு அண்ணனே போயி வாங்கி வந்த நகைங்க. உனக்கு பிடிச்சிருக்கா சொல்லு” என்று பத்து சவரன் நகைகளையும் ஆசையாகக் கடை பரப்ப, அது சற்று கூட இருப்பது போலவே தோன்றியது.

 

“வாவ் அண்ணா எல்லாமே சூப்பர். சும்மா அள்ளி விடாதீங்க, நீங்களா போயி வாங்குனீங்க. அண்ணி வந்திருப்பாங்கன்னு எனக்கு தெரியும்” என்றவள், “ஆனா, என்னண்ணா இன்னும் பத்து சவரன் தானே எனக்கு செய்யணும். இது கூட இருக்கும் போலவே” என்று ஆராய்ந்தாள்.

 

“அரை சவரன், முக்கா சவரன் கூட வந்திருக்கும். அதுனால என்ன டா?” என்று கோபி இலகுவாகச் சொல்லிவிட,

 

“பார்த்தா அப்படித் தெரியலையே!” என்றாள் தங்கை. உண்மையும் அதுவே! பதினான்கு சவரனுக்கு மேலான நகைகளைத் தான் கோபி கொண்டு வந்திருந்தான்.

 

“ஆமாம் டா, ஒவ்வொரு நகையிலேயும் நான் சொன்னேன். மொத்தமா சொல்லலையே!” என்று கோபி அசடு வழிய, “போங்கண்ணா இதெல்லாம் போங்காட்டம்” என்று தங்கை அவனோடு வார்த்தையாடிக் கொண்டிருந்தாள்.

 

சரியாக அந்த நேரம் உள்ளே நுழைந்த தீபலட்சுமிக்கு இந்த காட்சி அத்தனை எரிச்சலாக இருந்தது. பரப்பி வைக்கப்பட்ட நகைகள், கணக்கு பார்க்காமல் செய்யும் அண்ணன்… என அங்கிருந்த அழகிய காட்சி அவளுக்கு ஆத்திரத்தை கிளப்பி விட்டது.

 

“அதுதான் அளவுக்கதிகமா தந்திருக்கானே உன் நொண்ணன். திருப்பி தர வேண்டியது தானே! அதை விட்டுட்டு ஆசையா விளையாடி பேசிட்டு இருக்க. மனசுக்குள்ள இன்னும் வேணும் வேணும்ன்னு தோணினாலும், வெளியில பச்சைப் பிள்ளை மாதிரியே நடிக்கிறடி” என்றாள் தீபா வெடுக்கென்று!

 

அவளை இருவருமே அங்கு எதிர்பாராமல் திகைத்தவர்கள், அவள் பேசியதைக் கேட்டு மேலும் திகைத்தார்கள்.

 

நொடியில் மீண்ட கோபி, “ஏய், அறிவிருக்கா உனக்கு? அவ என் தங்கை. அவளுக்கு இது என்ன, இதுக்கும் மேலேயே நான் செய்வேன். அதுல உனக்கென்ன பிரச்சனை?” என்று கத்தினான்.

 

“அண்ணா, மெதுவா பேசுங்க. மாமா தூங்கறாங்க” என்று பூரணி கோபியைத் தான் கட்டுப்படுத்த நினைத்தாள். கூடவே, “வாங்க அண்ணி, அண்ணன் வரலையா?” என்று தீபா பேசியதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வரவேற்பு தந்தாள்.

 

தீபா முகத்தைப் பார்த்தாலே கோபமாக இருக்கிறாள் என்று புரிந்தது. இப்பொழுது போய் அவளோடு பேசி வாக்குவாதத்தை, சண்டையை வளர்க்க பூரணி பிரியப்படவில்லை.

 

ஆனால், தீபா அதற்குத் துணை போக வேண்டுமே! “என்னடி? என்ன அவ்வளவு அக்கறை உனக்கு?” என்றவள் அடுத்து சொன்ன வார்த்தை, பூரணி மீது களங்கத்தை விதைக்கும் விதமாக ஒரு படுமோசமான வார்த்தை!

 

பூரணி வேகமாக, “என்ன பேசறீங்க அண்ணி? நீங்க அவரோட தங்கையா இருந்தாலும், உங்களுக்கு ஒரு எல்லை இருக்கு. என்னை இப்படியெல்லாம் பேசற வேலை வெச்சுக்காதீங்க” என்று ஆத்திரத்தில் கத்தினாள். கண்கள் கலங்கி விட்டது, என்ன வார்த்தை சொல்லித் திட்டுகிறாள் என்ற ஆதங்கத்தில்! கோபியோ கோபத்தில் தீபாவை அடிக்க விரைய, அவனைத் தடுத்தபடி தான் பூரணி இதைச் சொன்னாள்.

 

தீபாவோ ஆத்திரம் துளியும் குறையாமல், “என் அண்ணனைத் திட்டம் போட்டு கல்யாணம் பண்ணின உனக்கென்னடி மரியாதை? உன்னைப் பத்தி எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா? நீ காலேஜ் படிக்கும் போது ஒருத்தன் உன் கையை வெட்டினானே! உனக்கும், அவனுக்கும் ஒன்னும் இல்லாமையா நடுரோட்டுல உன் கையை வெட்டுமளவு வந்திருக்கான்” என்று குதர்க்கமாகப் பேச, தலையைச் சுத்தியது பூரணிக்கு.

 

சம்பத் தன் தோழியிடம் செய்ய வந்த பிரச்சனை! அதை எப்படியோ தெரிந்து வைத்து தன் பக்கம் திருப்பி விடப் பார்க்கிறாளே! என்ன பெண் இவள்? ச்சீ ச்சீ! என்றானது பூரணிக்கு. அதிலும் தவறு ஒரு சதவீதம் கூட தங்கள் பக்கம் இல்லாத போதும்!

 

பூரணி வாயடைத்து நின்றதைப் பயன்படுத்தி, “என்னடி அந்த சம்பத்தை வளைச்சுப் போட முடியலையா? இல்லை அவன் வசதி உனக்குப் போதலையா? எங்க அண்ணன் எத்தனாவது ஆள் உனக்கு?” என்று தீபா கேவலமாகப் பேச, பூரணிக்கு இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் கேட்கவே முடியவில்லை. கோபத்தில், ஆத்திரத்தில் பேசுவதற்கும் ஒரு வரைமுறை வேண்டாமா? நெஞ்சம் விம்மி, கண்ணீர் பெருகியது.

 

சம்பத் குறித்த விஷயங்கள் யாருக்குமே தெரியப்படுத்தவில்லை. கோபி உட்பட! அவனுக்கு அது குறித்து எதுவும் தெரியாத போதும் தங்கை மேல் மலையளவு நம்பிக்கை இருந்தது. ஆகையால் தீபாவைத் தயங்காமல் எதிர்த்துப் பேசினான்.

 

“ச்சீ வாயை மூடு! இன்னும் ஒரு வார்த்தை என் தங்கையைப் பத்தி பேசின அவ்வளவு தான் சொல்லிட்டேன். அவ என்ன உன்னை மாதிரியா? என்னை காதலிக்கிறேன்னு மூணு வருஷம் என்கூட சுத்திட்டு… அதே நேரம் இன்னொருத்தனையும் காதலிச்சு கல்யாணம் செஞ்சிருக்கியே உன்னை விட தரம் கெட்டவ யாருடி இருப்பாங்க. நான் வாயை திறக்கும் வரை தான் ஊருக்குள்ள நீ ஒழுக்கமானவ! நான் பேசினேன்… அப்பறம் உன் மானம், மரியாதை எல்லாம் கிலோ என்ன விலைன்னு கேட்க வேண்டியிருக்கும்” என்று கத்த, இவன் இப்படி வெளிப்படையாகப் பேசுவான் என்று எதிர்பாராமல் தீபலட்சுமி சில நொடிகள் வாயடைத்து நின்றாள்.

 

இதென்ன புதுக்கதை என்று பூரணி அதிர்ந்து நின்றிருந்தாள்.

 

தீபாவோ பிரச்சனை வேறுபுறம் திரும்புவதை உணர்ந்து, “ச்சீ கையாளாகாதவனோட எனக்கென்ன பேச்சு! இதோ இவ, இந்த ஒழுக்கம் கெட்டவ எங்க வீட்டுல இருக்க கூடாது. இவளை கூட்டிட்டு உடனேயே வெளிய போ…” என்று கத்தியவள், “போடி அந்த சம்பத்தை கூட்டிட்டு வந்து, அவனுக்கும் உனக்கும் என்ன உறவுன்னு விளக்காம நீ இந்த வீட்டுக்குள்ள நீ இருக்கக் கூடாது. எப்படியோ என் அண்ணனை மயக்கி கட்டிட்டியே! படுபாவி! வெளிய போ முதல்ல… இனி உன் நடிப்பு இங்க எடுபடாது” எனப் பூரணியை கையை பிடித்து வேகமாக இழுக்க, பூரணி செய்வதறியாது திகைத்தாள்.

தீபாவை எதிர்த்துப் பேச வேண்டும், தடுக்க வேண்டும் என்று தோன்றினாலும் பூரணியால் எதையும் செயல் படுத்த முடியாமல் தடுமாறினாள். தீபா இந்த வீட்டின் பெண் என்று பார்த்தாளா? இல்லை அவள் பேசிய வரைமுறையற்ற பேச்சுகளினால் தோன்றிய வலியின் விளைவாய் எதையும் செயல்பட முடியாமல் தவித்தாளா என்று தெரியவில்லை.

 

“என் தங்கையை விட போறியா, இல்லையா?” என்று கோபி பொறுமை பறந்து கத்திக் கொண்டிருந்தான்.

 

தீபாவோ அவனை இம்மியும் பொருட்படுத்தாது பூரணியை இன்னும் வேகமாக இழுக்க, இதற்கு மேலும் முடியாது என்பது போல அவளை தன் தங்கையிடமிருந்து பிரித்து ஓங்கி அறைந்திருந்தான் கோபி.

 

அனைவரும் ஸ்தம்பித்து நிற்க, தீபா இப்பொழுது ஆத்திரத்தில் கோபியை அடிக்க கையை ஓங்கினாள். அவன் விடுவானா என்ன, மீண்டும் இரண்டு அறை… செவிப்பறை கிழியும் அளவு! தங்கையைக் கீழ்த்தரமாக பேசியதற்காகவா! தங்கை வாழ்வில் களங்கத்தை ஏற்படுத்தக் கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதற்காகவா! தன்னை நம்பவைத்து ஏமாற்றியதற்காகவா! இல்லை எல்லாவற்றிற்கும் சேர்த்தா! என்று அவனே அறியான்.

 

அந்த நேரம் சரியாக நீதிவாசன் உள்ளே நுழைய, இப்பொழுது தீபலட்சுமி நிலைமையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த பார்த்தாள். “அண்ணா, பாருண்ணா இந்த பூரணிக்கு என்னைப் பிடிக்கவே இல்லை. நான் வந்தது பிடிக்காம அவ அண்ணனை விட்டு அடிச்சு விரட்ட பார்க்கிறா?” என்று கதறி அழுதபடி அபாண்டமாகப் பழி சொல்ல,

 

கோபியும், அன்னபூரணியும் இவளது நாடகத்தில் பேச்சற்று போயினர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 21′(final)சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 21′(final)

வேப்பம்பூவின் தேன்துளி – 21   நேரத்திற்கு, சூழலுக்கு தக்கவாறு மாற சிலரால் மட்டுமே முடியும்! தீபலட்சுமி அனைத்தையும் நொடியில் தனக்குச் சாதகமாக மாற்றி அமைத்துக் கொள்ள… சூழலும் வேறு அவளை நல்லவளாகக் காட்டும்படி தானே அமைந்து விட்டது! இதற்கு என்ன விளக்கம்

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 07சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 07

வேப்பம்பூவின் தேன்துளி – 7   ஒருவாரம் சென்னையைச் சுற்றிப்பார்த்த களிப்போடு முத்துச்செல்வம் குடும்பத்தினர் சொந்த ஊருக்குக் கிளம்ப, கோபியும் வருவதாக இணைந்து கொண்டான்.   இவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே ரயிலில் முன்பதிவு செய்திருக்க, இவன் திடீரென்று கிளம்ப முடிவெடுத்ததால், நேற்று

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 05சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 05

வேப்பம்பூவின் தேன்துளி – 5    மரத்தின் கிளைகளை வெட்டி சாய்த்த பின்னும் கிளைகள் துளிர் விடும் தானே! ஆனால், மீண்டும் மீண்டும் துளிரத் தொடங்கும் சமயமெல்லாம் வெட்டிக்கொண்டே இருந்தால்?   அன்னபூரணியும் நீதிவாசனின் நினைவில் சுருங்கி, பிறகு வெகுவாக முயன்று அதை ஒதுக்கி வைத்து கொஞ்சம் புத்துணர்வோடு இருக்கும் சமயம்… அடுத்த பிரச்சனையாக, ‘இது உன் குடும்பம் இல்லையா?’ என்று யாரோ ஒருவர் கேட்டுவிட்டுச் செல்கிறார்.   ECG அறிக்கை ஏற்ற இறக்கங்களுடன் இருக்குமே! அதுபோன்று இவள் இறக்கத்தில் இருந்து மேலெழும் நேரம் மீண்டும் ஒரு மன சறுக்கல்!   அந்த வாசுகி அம்மா, அத்தனை வயதான பெண்மணி. பூரணி மற்ற நால்வருடன் எத்தனை இணக்கம் என்பதைக் கூடவா கவனிக்க மறந்திருப்பார்? இவர்கள் வீட்டுப் பெண் என்பதால் தானே இந்தளவு இணக்கமும், உரிமையும் இருக்கிறது என்பது கூடவா புரியாது! பெரியம்மா, பிள்ளைகளுக்கான உடை வாங்குவதில் தொடங்கி, தேவைகளை கவனித்தது வரை, எதிலும் ஒரு சிறு குறையும் வைக்கவில்லை, வேறுபாடும் காட்டவில்லை! இரு பெண் பிள்ளைகளையும் ஒன்றுபோல தானே பாவித்தார்.   பூரணி பெரியம்மா என்றழைத்தது ஒரு பிழையா? அதற்கு அப்படித்தான் கேட்க வேண்டுமா?   மற்றவர்களை புகழ்ந்து பேசியே தீர வேண்டும் என்று தான் என்ன கட்டாயம்? முகஸ்துதியில் அனைவரும் தலை குப்புற விழுந்து விட மாட்டார்கள்! பலருக்கும் அது எரிச்சலை தான் வாரி வழங்கும் என்று அந்த பெண்மணிக்குப் புரிய வைப்பது தான் யார்?   கோபியைப் புகழ்கிறேன் பேர்வழி என்று, பூரணியின் மனம் நோகப் பேசியதில் அவள் மீண்டும் சோர்ந்து போனாள்.   இதையும் விடவும் அதிக பேச்சுகளைக் கேட்டு வளர்ந்தாள் தான். “எங்கேயாவது ஆசிரமத்திலோ, விடுதியிலோ சேர்த்து விட்டுடுங்க. நீங்களே வளர்த்தணும்ன்னு என்ன? பொம்பளை பிள்ளை வேற…” என்று அவள் காது படவே பேசிப் போனார்கள் தான்! கேட்டுக் கேட்டு பழகிப் போன ஏளனங்களும், இழி சொற்களும் அதிகம் தான்!   அதோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது ஒன்றுமே இல்லை! யாரோ முன்பின் தெரியாத ஒருவர், சற்று அதிகமாகவே மூக்கை நுழைத்துப் பேசி விட்டார். அவ்வளவே தான்! ஆனால், ஏற்கனவே பெரிய சோர்விலிருந்து மீண்டவளுக்கு இது அதிகம் வலித்தது.   ஆனாலும் தன் துயர் தெரிந்தால் தன் குடும்பத்தினரும் வருந்துவார்கள் என்று புரிய, மீண்டும் ‘நான் இயல்பாகத் தான் இருக்கிறேன்’ என்பது போலக் காட்டிக் கொண்டாள்.   ஆனால், அவளது தற்போதைய முயற்சி முழு தோல்வி தான்! அவளை அனைவரும் கண்டு கொண்டனர். இன்னும் சொல்லப் போனால், அவள் அப்படி தனியாக எதுவும் உணர்ந்து விடக் கூடாது என்று நால்வரும் போட்டிப் போட்டுக் கொண்டு அவளிடம் சற்று அதிக அக்கறை காட்டினார்கள்.   உறங்கும்போது ஜோதிமணி மெல்ல இளையவளிடம், “யாரும் பேசறதை பெருசா எடுத்துக்க கூடாது புள்ளை… நானும் உனக்கு அதைச் சொல்லிக் கொடுத்துத் தானே வளர்த்திருக்கேன்” என்று தலையை வருடியபடி கேட்டார்.