Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 24

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 24

 

அன்று

சென்னை

ஜெயசுதாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்து அவர் நலம் என்ற வார்த்தை பானுபாஸ்கரனின் வாயிலிருந்து வரும் வரை பச்சைத் தண்ணீர் கூடப் பல்லில் படாமல் காத்திருந்தான் ஜிஷ்ணு. ஜமுனா காபி டீ ஜூஸ் என்று மணிக்கொருதரம் சலிக்காமல் அவனுக்குக் கொண்டு வருவாள்.

முதலில் “நாக்கொத்து” என்று வாய் திறந்து சொன்னான். அதன் பின் தலையசைப்பாயிற்று. அதற்குப் பின் அதுவும் மறைந்து ஒரு வெற்றுப் பார்வை. எடுத்துக் கொண்டு போய் விடுவாள்.

அம்மாவை ரூமிற்கு அழைத்து வந்து, அவர் திரவ உணவு உட்கொள்ள ஆரம்பித்ததும் தான் வீட்டுக்குச் சென்றான். அதுவரை யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

ஜெயசுதாவை மருத்தவமனையின் சாதாரண அறைக்கு மாற்றி சில நாட்கள் ஆகியிருந்தது. காலையில் குளித்துவிட்டு மருத்துவமனைக்கு செல்லும் ஜிஷ்ணு நள்ளிரவுதான் திரும்பி வருவான். ஜெயசுதா உறங்கும் நேரங்களில் தன்னுடைய தொழிலைக் கவனிப்பான். தாத்தாவின் ஊறுகாய் தொழிலுக்குப் பக்கபலமாய் இருந்த ஆட்களை ஒவ்வொருவராய் தேடிக் கண்டுபிடித்துத் தன்னை சந்திக்க அழைத்து வருமாறு சொல்லியிருந்தான். அவர்களிடம் பேசித் தங்களது தொழில் சரிவுக்குக் காரணம் தேடி அலைந்துக் கொண்டிருந்தான். சிரத்தை இல்லாததுதான் நஷ்டத்துக்குக் காரணம் என்று தெரிந்துக் கொண்டான். யாருக்குமே அந்தத் தொழிலை கவனிக்கும் அக்கறையில்லை. ஏதோ பெயரளவில் கம்பனி நடந்துக் கொண்டிருந்தது. அதனைத் தூக்கி நிறுத்துவதே தனது முதல் வேலை என்று எண்ணிக் கொண்டான்.

“பாபு அன்னைக்கு நீங்க புது பிராண்ட்ல நம்ம ஊறுகாயை அறிமுகப்படுத்தணும்னு சொன்னிங்களே அதுக்கான வேலையெல்லாம் சூட்டோட சூடா செய்து முடிச்சுட்டேன். ஜெஎஸ் பிராண்ட் ஊறுகாய் லோகோல இருந்து, புது வகை பாட்டில் வரை எல்லாமே ரெடி” ஆர்வமாய் சொன்னார் ராஜுகோகுலம். மிளகாய் நகரமான குண்டூர்வாசி. அவரைத்தான் அவனது புது பேக்டரிக்கு பொறுப்பாய் போட்டிருந்தான். அவரும் ஆர்வமாய் வேலை செய்தார்.

“பாபுக்கு அம்மான்னா அந்த இஷ்டம்… அவங்க பேரைக் கம்பெனிக்கு வைக்குற அளவுக்கு” யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்.

‘ஜெஎஸ்ன்னா ஜெயசுதா இல்ல ஜிஷ்ணு-சரயு’ என்று சொல்ல வந்தவன் வாயை மூடிக் கொண்டான். ‘இந்த முரட்டு முட்டாளுங்க அப்பறம் நீயெப்படி அந்தப் பெயரை வைக்கலாம், ஜிஷ்ணு-ஜமுனான்னு வர்ற மாதிரி ஜெ-ஜென்னு மாத்துன்னு டார்ச்சர் பண்ணித் தொலைவானுங்க’

ல்லுடுகாருக்கு கல்யாணப் பரிசா ஆரஞ் சிட்டில, எங்க வீட்டுக்குப் பக்கத்திலயே ஒரு பை பெட்ரூம் வீடு வாங்கிருக்கேன்…” ஜமுனாவின் அப்பா சொன்னார். சலபதியும் சிரித்தவாறே கேட்டிருந்தார்.

“மாவையா, பெவெர்லி ஹில்ஸ் அப்படின்னு சொல்லிகிறாங்களே அங்க ஒரு வீடு வாங்கித் தந்திருங்க” என்று சொல்லிய தமையனை முறைத்தவாறே பதில் சொன்னான் ஜிஷ்ணு.

“எதுவும் வேண்டாம்”

“என்ன சொல்லுறிங்க அல்லுடு… ஜமுனா வாடகை வீட்ல வாழ நான் அனுமதிக்க மாட்டேன்”

“பெல்லிக்குச் சாவு மேளம்” முணுமுணுத்தபடியே மாடிக்கு சென்றான்.

ஜமுனாவின் அப்பா அவன் வேகமாய் பேசியது என்னவென்று புரியாமல் பார்க்க, சலபதி காதை மூடிக்கொள்ள, ‘என்னமா நா கூசாம பேசுறான்… தேவைப்பட்டா இவன் நம்மை விட லோ கிளாசா இறங்கிடுவான் போலிருக்கே’ என்ற பயத்துடன், தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி உடன்பிறப்புக்கள் அந்த இடத்தைக் காலி செய்தனர்.

ன்னுடைய அறைக்குள் நுழைந்த ஜிஷ்ணுவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. வெள்ளை படுக்கை விரிப்பில் சிவப்பு ரோஜாவால் நிரப்பப்பட்ட இதயம், கட்டிலை சுற்றிலும் தொங்கிய மல்லிகை சரங்கள், மேஜையில் அடுக்கப் பட்டிருந்த இனிப்பு வகைகள், உணர்ச்சியைத் தூண்டும் ரூம் ஸ்ப்ரே என அறையே உருமாறியிருந்தது…

சர்ஜரி முடிஞ்சு அம்மா வீட்டுக்கு வரக்கூட இல்லை… அதுக்குள்ளே முதலிரவு ஏற்பாடு பண்ணிருக்காங்களே இவனுங்க என்ன மனுஷங்களா இல்லை மிருகமா… கோவத்துடன் பூக்களைப் பிய்த்து எறிந்தவன்,

“அரைமணி நேரத்துல என் ரூம் பழையபடி ஆகணும்… இது என் வீடு, என் இஷ்டப்படிதான் இருக்கும்னு யாராவது வாதாடுனா நான் ஹோட்டல்ல தங்கிக்கிறேன்” வெளியே நின்றிருந்தவர்களைக் கடித்துக் குதறினான்.

முப்பது நிமிடங்கள் கழித்து மறுபடியும் அவன் நுழைந்தபோது பெர்பியூம் வாசத்தின் மிச்சத்தைத் தவிர அறையில் வேறெதுவுமில்லை. அழுத்தமான நடையுடன் செல்ப்பிலிருந்து ஷீவாஸ் ரீகலை எடுத்தான். கதவைத் திறந்த சத்தம் கேட்டுப் பின்னால் திரும்பாமல் வலது கையை தோளுக்கு மேல் உயர்த்தி சொடக்குப் போட்டான் “ஐஸ்கியூப்ஸ் தீசுக்குரா”

ஒரு நிமிடத்தில் ஐஸ்கியூப்ஸ் வந்தது. இரண்டு துண்டங்களை க்ளாசில் போட்டவன் ஒரே கல்பில் அதைப் பருகினான். அடுத்த க்ளாசை நிரப்பிக் கொண்டு நிதானமாய்த் திரும்பினான். ஜமுனாதான் ஐசை எடுத்து வந்திருந்தாள். இதை ஜிஷ்ணு எதிர்பார்க்கவில்லை.

பளீர் வண்ணத்தில் டிசைனர் சேலை அணிந்து, பெரிய பொட்டு, நெற்றி வகிட்டில் குங்குமம், வெளியே தொங்கிய தாலி, கைகளில் ஒரு டசன் வளையல்கள் என்று முற்றிலும் புதிய தோற்றத்துடன் மருத்துவமனையில் தன் முன் வந்து நின்ற பெண் ஜமுனாதான் என ஜிஷ்ணு அடையாளம் கண்டு கொள்ளவே ஒரு நாள் தேவைப்பட்டது. ஏதோ சினிமாவில் நடிக்க வேஷம் போட்டதைப் போல அவனுக்குத் தோன்றினாள். அவள் கழுத்தில் தொங்கிய தாலியை வெறித்தான். அதில் குங்குமப் பொட்டு வைத்திருந்தாள்.

‘ஐடி கார்ட் மாதிரி கழுத்துல போட்டுட்டு இருக்காளே… இதுக்குக் குடுக்குற மரியாதையை இதைக் கட்டினவன் மனசுக்குக் குடுக்க யாருக்கும் விருப்பமில்லையே. அன்னைக்கு இவங்க வீட்டுக்குப் போனப்ப கூட உன்னை எனக்குப் பிடிச்சிருக்குன்னு சொன்னாளே தவிர என்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதமான்னு ஒரு வார்த்தை கேட்டாளா? திமிர் புடுச்சவ…’

“நீ எப்படி இந்த அவசரக் கல்யாணத்துக்கு சம்மதிச்ச?” ஒரு கிளாசில் இருந்ததை ஒரு மிடறு விழுங்கியபடி கேட்டான். கேட்டபோது அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து க்ளாசில் மிதக்கும் ஐசையே உற்று நோக்கினான்.

“மறுக்க ஒரு காரணமும் இல்லையே… உங்களை எனக்குப் பிடிச்சிருந்தது”

“புதுசா மரியாதையெல்லாம் தர ட்ரை பண்ணாதே… வழக்கம்போலவே பேசு… பிடிச்சிருக்குன்னா… பார்த்தவுடனே காதல் அப்படியா… நீ அந்த மாதிரி டைப்பில்லையே…”

“முதல்ல இந்தியன் பசங்கன்னா ஒரு கட்டுப்பெட்டிங்க, பொண்ணுங்களை அடக்கி ஆளணும்னு எதிர்பார்ப்பாங்க, சுதந்திரம் தர மாட்டாங்கன்னு என் மனசில ஒரு எண்ணம். பட் உன் கூட பேசினதும் கொஞ்சம் வித்யாசமான ஆட்களும் இருக்காங்கன்னு தெரிஞ்சது. என் லைப் ஸ்டைலுக்கு நீ சூட் ஆவேன்னு தோணுச்சு. கல்யாண வாழ்க்கை ஒரு குழப்பமும் இல்லாம இருக்கும்னு நெனச்சேன். சோ ஒத்துகிட்டேன். நிஜம்மா சொன்னா என் கல்யாணம் நல்லா கிராண்டா நடக்கணும்னுதான் நெனச்சேன். யாருக்காவது ஹாஸ்பிட்டல்ல கல்யாணம் நடக்கணும்னு ஆசையிருக்குமா?”

‘என் கல்யாணம்… ஆமாம் உன் கல்யாணம்தான்… உனக்குத்தான் கல்யாணம் நடந்திருக்கு எனக்கில்ல’ குதர்க்கமாக யோசித்தான்.

“ஒரு தடவை பொதுவா பேசினதுலேயே என்னைப் பத்தி எல்லாமும் தெரிஞ்சுடுச்சா உனக்கு…” குத்தலாய் கேட்டான்.

“நீ கெட்டவனில்லைன்னு தெரிஞ்சுக்க ஒரு தடவை போதுமே. அதுக்கு முன்னாடியே டாட் ரொம்ப நாளா உன்னை கவனிச்சுட்டு இருந்தார். ஆரோக்கியமானவன், அழகானவன்னு பார்த்தவுடனேயே தெரியுது. உன்னப்பத்தி நானும் என்னைப்பத்தி நீயும் தெரிஞ்சுக்கத்தான் இனிமே நம்ம லைப் முழுசும் இருக்கே” பதிலடி கொடுத்தாள்.

‘அப்ப அமெரிக்காவுக்கு என்னைப் படிக்க அனுப்பலையா… சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பிருக்காங்க… விலை குறைஞ்சுடக் கூடாதுன்னுதான் பாலும் பாதாமும் ஊட்டி வளத்தாங்களா ‘ மனம் வெதும்பி அமர்ந்துவிட்டான்.

முனா, ஜிஷ்ணுவின் அறையைவிட்டு வெளியே போகும் எண்ணமில்லாததைப் போல அங்கேயே தூங்கினாள். கடுப்பாய் சோபாவில் அமர்ந்து டிவி சேனலை மாற்றி மாற்றி ரிமோட்டை உடைத்தான் ஜிஷ்ணு. பின்னர் சோபாவிலேயே படுத்துத் தூங்கிவிட்டான்.

காலை சலபதியிடம், “ஜமுனாவுக்கு வேற ரூம் தந்துருங்க” என்றான் சுவரைப் பார்த்தபடி.

“பொண்டாட்டிக்குத் தனி ரூம் தர வழக்கம் இந்த வீட்டுல இல்ல. அவ புருஷன் ரூமிலதான் தங்கணும்” என்றார் எதிர் சுவரைப் பார்த்தபடி.

கொஞ்சம் கொஞ்சமாய் ஜிஷ்ணுவின் அறையில் ஜமுனாவின் பொருட்கள் இடம் பிடிக்க ஆரம்பித்தது கண்டு தடுக்க வழியின்றிக் கையைப் பிசைந்தான்.

‘நாணா அம்மாவை விரும்பித்தானே கல்யாணம் பண்ணிகிட்டார். என்னோட காதலை மட்டும் மறுக்கக் காரணம்…’ சுய அலசலில் இறங்கினான்.

‘அவர் அம்மாவைக் கல்யாணம் செய்துகிட்டப்ப சுயகால்ல நின்னார். நான் சம்பாதிக்கல… நானோ அம்மா அப்பா பாத்துக்குவாங்கன்னு பொறுப்பில்லாம இருந்துட்டேன். நாணாவ நம்பி இருக்குறதாலதான இவர் சொல்லுறதை எல்லாம் கேக்குற நிலைமை. அம்மா உடம்பு வேற அதுக்கு துணை செய்யுற மாதிரி மோசமாயிடுச்சு. நான் மட்டும் சொந்தக் கால்ல நின்னுருந்தா படிக்க வச்சதையும், சாப்பாடு போட்டதையும் காரணமாக் காட்டி மனசை விலை பேசிருப்பாங்களா…’ என்னன்னவோ நினைத்து மனதினுள் வருந்தினான். சம்பாத்தியத்தில் இவர்கள் அனைவரையும் மிஞ்ச வேண்டும் என்ற வைராக்கியம் அவனுள் பதிந்தது.

“கோவிலுக்கு போகலாமா…?” ஜிஷ்ணுவின் யோசனையைக் கலைத்தாள் ஜமுனா.

“இதோ பாரு… எனக்கு இந்த சாமி பூதம் இது மேலயெல்லாம் நம்பிக்கையே இல்லை… நிஜம்மா சாமியே கிடையாது… அதனால இனிமே சாமி, பூஜை அப்படின்னு என்கிட்டே வந்து நிக்காத” எரிந்து விழுந்தான்.

‘சாமியாம் சாமி… நான் அன்னைக்கு கோவிலுக்குப் போனப்ப சரயுவைக் கண்ணுல காட்டினதும் இதே சாமிதானே. ரெண்டு மனசை இணைகிறதும் அப்பறம் கலைச்சுப் போட்டு விளையாடுறதும் எப்படி சாமியா இருக்க முடியும். சாத்தானாத்தான் இருக்கும்… இனிமே நான் பெருமாளைக் கும்பிடவே மாட்டேன்… நான் கேக்காததை வலுக்கட்டாயமா தர்றதும் கேக்குறதை அழ அழப் பிடுங்குறதும்தான் சாமின்னா அந்த சாமியே எனக்குத் தேவையில்லை’ அவனது திட்டும் நபர்கள் லிஸ்டில் இப்போது சந்தானகோபால சுவாமி சேர்ந்துக் கொண்டார்.

“அப்ப நான் போயிட்டு வரலாமா?”

“அது உன்னிஷ்டம்… என்கிட்டே ஒண்ணொன்னுத்துக்கும் பெர்மிஷன் கேக்காதே… எனக்கு அது பிடிக்கவே பிடிக்காது” சொன்ன ஜிஷ்ணுவை ஒரு சின்னக் குழந்தையைப் பார்ப்பதைப் போலப் பார்த்தாள் ஜமுனா.

‘ஜிஷ்ணு… நேத்து பின்னால திரும்பாம சொடக்குப் போட்டு ஐஸ்கியூப்ஸ் எடுத்துட்டு வர சொல்லும்போது என்ன ஒரு ஸ்டைல். இப்ப பிடிக்கவே பிடிக்காதுன்னு சொல்லுறப்ப ஒரு குழந்தைத்தனம்… ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நிறம் காட்டி என்னை மயக்குறடா… தொங்கா, உன்னை பயங்கரமா ரசிக்க ஆரம்பிச்சுட்டேன்டா…’ மயக்கத்தோடு பார்த்தவளை இன்னும் எதுக்கு நிக்குற என்பது போல முறைத்தான்.

“சரி இனிமே கேக்கல… நான் கோவிலுக்குப் போறேன்” என்று சொல்லி நகராமல் அவனைக் கண்களால் பருகியபடி அதே இடத்தில் நின்றாள்.

பதில் பேசாமல் அவள் கழுத்தில் தொங்கிய தாலியை அலட்சியமாய் பார்த்தான். தாலி என்ன ‘ஓவர்ரைட் கமாண்டா’… இதைக் கட்டினதால என் மனசோட, என் உயிரோட கலந்த சரயுவை அழிச்சுட்டு இவளை என் மனசுல பதிய வச்சுக்கணுமா? என்ன ஒரு முட்டாள்த்தனமான எண்ணம். எங்க வீட்டுலதான் எல்லாரும் பட்டிக்காட்டு முட்டாள். தாரணிக்கோட்டை, தாலி செண்டிமெண்ட் இதையெல்லாம் தாண்டி வெளியே வரவே இல்லை. இவ பெரிய ஹை பையாச்சே… ஏன் என்கிட்டே தாலியை வாங்கிகிட்டா? தாலியெல்லாம் அடிமைச் சின்னம்… முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே…

அவனுக்கு மின்னலாக ஒரு யோசனை வெட்டியது. ‘பேசாம சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரி காலில் விழுந்தா என்ன? ஜமுனாகிட்டேயே பேசிப்பாக்கலாம்… பொதுவா பொண்ணுங்களுக்கு மனசுல ஒருத்தியை வச்சுகிட்டு வேறோருத்தியக் கல்யாணம் செய்துகிட்டா பிடிக்காதுன்னு சினிமால , கதைலெல்லாம் சொல்லுறாங்களே. சரயுவைப் பத்தி இவகிட்ட சொல்லிப் பாப்போம். ஜமுனா கௌரவம் பாக்குற டைப்… வேறொருத்தியை நினைச்சுட்டு இருக்குற உன்கூட குடும்பம் நடத்த மாட்டேன்னு போய்டுவா…’ அப்பாடா என்ற திருப்தியுடன்,

“ஜமுனா உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே” என்று முதன்முறையாக அவளை அன்பொழுக அழைத்தான்.

சோபாவில் அமர்ந்தவளிடம் பேசுவதற்குத் தயாராகத் தொண்டையை செருமிக் கொண்டான்.

“ஜமுனா உன்னை என்னால மனைவியா ஏத்துக்க முடியாது… ஏன்னா என் மனசு பூரா ஒருத்தி இருக்கா, என்னோட உயிரோட கலந்திருக்கா…”.

“தெரியுமே அந்த அரவ்வாடுதானே… இதெல்லாம் வயசுல வரது சகஜம்… வேலையில்லாம வேற இருந்தேல்ல, அதுனால கனவு காண நிறைய நேரமிருந்தது. இப்ப ஊருக்குப் போனதும் பிசியாயிடுவ அப்பறம் அவள மறந்துடுவ…” என அதிர்ச்சியளித்தாள்.

முன்னாடியே இவளுக்குத் தெரியுமா? சுளீரென கோவம் வந்தது ஜிஷ்ணுவுக்கு.

“முதல்ல அவள அரவ்வாடுன்னு சொன்னா… பல்லக் கழட்டிக் கைல தந்துடுவேன்… அப்பறம் அவளை மறக்க சொன்னா கொலையே பண்ணிடுவேன்”

‘பல்லைத்தட்டிக் கைல தந்துடுவியா?’ ஜமுனாவும் காண்டானாள். “இப்ப உனக்கு என்ன வேணும் ஜிஷ்ணு?”

“இந்தக் கல்யாணத்திலேருந்து விடுதலை வேணும். இதுல துளி கூட எனக்கு சம்மதமில்லை” பரிதாபமாகக் கேட்டான்.

“அதை என் கழுத்துல தாலி கட்டுறதுக்கு முன்ன சொல்லிருக்கணும். உங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு தாலி கட்டுவ, அப்பறம் கல்யாணம் வேண்டாம்னு சொல்லுவ… நானென்ன உங்க வீட்டு விளையாட்டு பொம்மையா?”

பொறுமை பொறுமை என்று தனக்குள் கூறிக் கொண்ட ஜிஷ்ணு ஒரு சிரிப்பை வலுக்கட்டாயமாய் முகத்தில் பூசிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“ஜமுனா நம்ம கோவத்தை விட்டுடுவோம்… இது சண்டை போடுற சமயமில்லை… மூணு பேரோட வாழ்க்கைப் பிரச்சனை… நான் நடந்துகிட்ட முறைகளை வச்சு ஒண்ணு உனக்குத் தெளிவாப் புரிஞ்சிருக்கும்… எனக்கு இந்தக் கல்யாணத்துல கொஞ்சம் கூட இஷ்டமில்லை.

அதுக்காக உன்னைப் பிடிக்கலைன்னு சொல்ல வரல… நீ ரொம்ப நல்ல பொண்ணு… எவ்வளவு அல்ட்ரா மாடர்ன் பொண்ணு நீ, மஞ்சள் கயிறுக்கு மரியாதை கொடுத்து, என்னை மாதிரி ஒரு குடிகாரனுக்கு சரக்கடிக்க ஐஸ்கியூப்ஸ்செல்லாம் எடுத்துட்டு வர…

நீ ஒரு நல்ல மனைவியா இருப்ப… அதுல சந்தேகமே இல்ல. ஆனா என்னால உனக்கொரு நல்ல கணவனா இருக்க முடியாது. என் மனசில ஏற்கனவே ஒருத்தி இருக்கா… என் மூச்சோட மூச்சா உயிரோட உயிரா கலந்திருக்கா… வலுகட்டாயமா ஏற்படுத்தப்பட்ட நம்ம பந்தத்தினால அதை மாத்த முடியாது… நீ என் மனசில வரவும் முடியாது… அதனால நான் என் வழியைப் பார்த்துட்டுப் போறேன். நீ நல்லவனாப் பாத்துக் கல்யாணம் பண்ணிக்கோ”

ஜமுனா அதிர்ந்து போய்விட்டாள். ஏற்கனவே பானுபாஸ்கரனுடன் கல்யாணம் நின்று போனது மட்டுமின்றி, ஜமுனா சிறு வயதிலிருந்து போட்டியாகப் பார்த்த அவளது சித்தப்பா மகள் ஸ்ரீவள்ளியை பானு மணந்துக் கொண்டான். அது அவளுக்கு உறவு வட்டத்திலும், நண்பர்களிடமும் ஒரு பெரிய ப்ரெஸ்டீஜ் பிரச்சனையை உருவாக்கி விட்டது. பானுவை விட நல்ல பையன் வேண்டும் என்று வலைவீசித்தான் அவளது அப்பா ஜிஷ்ணுவை வளைத்துப் போட்டிருந்தார். இப்போது திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மணமுறிவு என்றால் சொசைட்டியில் அவர்களது பேர் என்னவாகும்? மரியாதை என்னவாகும்? எல்லாவற்றிற்கும் மேலாக பானுவை மணந்துக் கொண்டதாக வெற்றிப் பெருமிதத்தில் சிரிக்கும் ஸ்ரீவள்ளி வேற கேவலமா சிரிப்பாளே…

எரிச்சலுடன் மறுமொழியளித்தாள்.

“நானும் அதைப் பத்திக் கேள்விபட்டேன்… எதோ மயக்கத்துல சுத்துனேன்னு எனக்கும் தகவல் வந்துச்சு… கற்பனைலயே மிதக்காத ஜிஷ்ணு… நிஜத்துக்கு வா… நம்மளோட கடந்த காலத்தைப் பத்தி மறந்துடலாம்… புத்தம் புதுசா ஒரு வாழ்க்கை தொடங்கலாம். நம்ம சேர்ந்து வாழ ஆரம்பிச்ச ஒரே மாசத்துல நீ இப்ப பேசினது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு உனக்கே புரியும்.

 எங்க வீட்டுக்கு வந்திருந்தப்ப எடுத்த போட்டோவைப் பார்த்துட்டு என் பிரெண்ட்ஸ் எல்லாம் காஞ்சு போய்ட்டாளுங்க தெரியுமா… பானுவைக் கூட ஸ்மார்ட்டுன்னு யாரும் சொன்னதில்லை. ஜிஷ்ணுவுக்கு ஏன் செகண்ட் ப்ரிபரன்ஸ் தந்திங்கன்னு அப்பாகிட்ட சண்டை போட்டேன். நம்ம ரெண்டு பேருக்கும் ஜோடிப் பொருத்தம் எவ்வளவு பிரமாதம் தெரியுமா?”

தொடர்ந்த அவளது பேச்சை கவனிக்க முடியாமல் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான் ஜிஷ்ணு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 8’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 8’

அத்தியாயம் – 8 ரஞ்சனின் தோழன் அபிராம்  வெளிநாட்டில் வேலை செய்கிறானாம். நந்தனாவைப் பார்க்கும் ஆவலில் வந்திருந்தான். வழக்கமாய் கல்லூரிக்கு அணிந்து வரும் மஞ்சள் வண்ண சுடியில் பதட்டமாக ரஞ்சனுக்காக அவன் வருவதாக சொன்ன இடத்தில் காத்திருந்தாள். ரஞ்சனைக் கண்டதும் நந்தனாவின்

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 10’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 10’

அத்தியாயம் – 10 “அம்மா நீங்க செஞ்சது நல்லாயிருக்கா? நந்தனாவைக் கல்யாணத்துக்குப் பேசிட்டு வாங்கன்னு சொன்னா அவ அக்காவைப் பேசிட்டு வந்து நிக்கிறிங்க” “நான் சொலுறதைக் கேளு. அந்த நந்தனா நமக்கு சரிவரமாட்டா. அவ அழகுதான் ஒத்துக்கிறேன். ஆனா அழகு, மனைவிக்கு

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 25என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 25

அத்தியாயம் – 25   விவேகானந்தனின் வரவு எதிர்பாராததாக  இருந்தாலும் அவரை நினைத்து ஆச்சிரியமாக இருந்தது அரவிந்திற்கு. அவர் கொடுத்திருந்த ஈமெயில் விலாசத்துக்கு தனது திருமண விவரம் பற்றி சம்பிரதாயமாக எழுதி இருந்தான். அதனைப் படித்து விட்டு இரண்டு வரி வாழ்த்து