Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 35’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 35’

35 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

 

அவளை பின்னால் இருந்து அணைத்தபடி அவள் தோளில் முகம் வைத்தபடி “எனக்கு மத்த பொண்ணுங்க பத்தி எல்லாம் தெரியாது..ஆனா என் தியாவ பத்தி நல்லா தெரியும்..நீ அப்டித்தான்..அவள் திரும்பி முறைக்க அவன் புன்னகையுடன் மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு “முறைக்காத செல்லம்..அதுதான் உண்மை..எனக்கு தெரியும்..நீ அதைப்பத்தி தான் கேட்கவந்த..கண்டுபுடிச்சிட்டானேன்னு இவளோ சீன் போடுற..இல்லேனு ப்ரோமிஸ் பண்ணி சொல்லு பாக்கலாம்..அவள் திருதிருவென விழிக்க அவனே தொடர்ந்து ‘எப்படி இந்த விஷயமும் எல்லா பொண்ணுங்களுமே அப்படித்தானா?”

“எது?”

“நீங்க மனசுல நினைக்கிறத சரியா சொன்னாலும் அப்டி இல்லாதமாதிரி ஸீன் போடுறது?” என

அவள் முகம் சுருக்கியபடி “இப்போ இந்த டாபிக் விட்டுட்டு நீ அதை சொல்லபோறியா இல்லையா ஆதி?”

“ஒருவழியா மேடமே கேட்டுட்டாங்கபா..வந்து உட்காரு..சொல்லு உனக்கு என்ன தெரியணும்?”

“இல்லை நீ உங்க அப்பா மேல கொஞ்சம் கோபம் வருத்தம், முக்கியமா அவர் உன்னை ரொம்ப வெறுக்கிறாரு அதனால தான் அவர்கிட்ட பேசவே மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தியே..அப்புறம் எப்படி இவளோ சீக்கிரம்னு தான் டவுட் வந்திடுச்சு..” என அவள் உண்மையாகவே புரியாமல் கேட்க

 

“ஏன் உனக்கு தெரியாதா? நீ என்ன தான் உன் இஷ்டம் உன் இஷ்டம்னு என்கிட்ட சொன்னாலும் பின்னாடி என்னென்ன வேலை பாத்த? இங்க வந்து அப்போப்போ தங்குறதுக்கு ஏற்பாடு பண்ணது? அவங்களை என்கிட்டேயே கேட்க வெச்சது? அப்பாகிட்ட நான் பேசுற மாதிரி நிறைய சூழ்நிலைகளை நாங்க மட்டும் தனியா இருக்கிற மாதிரி மாத்திவிடுறது, முக்கியமா அன்னைக்கு நானும் நீயும் பேசும்போது கூட நீ அவர் இடத்துல இருந்து பேசி புரியவெக்க ட்ரை பண்ணது, இங்க வந்தும் சந்தியா அண்ணி கேள்வி கேட்டபோது நான் பாக்குறேனு தெரிஞ்சு தானே நீ அவரை அவ்ளோ திட்டி எனக்கு சப்போர்ட் பண்ண? எனக்கு தெரியும் பிராடு..” என அவள் திருதிருவென விழிக்க

மித்ரன் “ஆனா நான் போய்ட்டேனு நினச்சு நீ அப்பாகிட்ட ஹிண்ட் குடுத்திட்டு வந்த பாரு அதையும் நான் பாத்தேன்..”

மித்து “ஆ..அது..என்னை எண்ண பண்ண சொல்ற ஆதி..நீ அவருக்கு தான் உன்னை பிடிக்கல வெறுக்கிறாருனு ஒளறிட்டு இருக்க? மாமாவும் அதேமாதிரி என் பையன் தான் என்னை வெறுத்திட்டான் அந்த அளவுக்கு நான் அவனை காயப்படுத்திட்டேன்னு சொல்லிட்டு சுத்துறாரு..இரண்டுபேரும் ஏதோ இன்னொருதற்காக விட்டுகுடுக்கிறமாதிரியே தப்பு தப்பா புரிஞ்சுவெச்சிருக்கீங்க..அதனால தான் கொஞ்சம் அப்டி இப்படி நான் வேலை பண்ண வேண்டியதா இருந்தது..” என தன்னிலை விளக்கத்தை திணறியபடி கூற

 

அவனும் சிரிப்புடன் “ம்ம்..ம்ம்..புரியுது புரியுது..அவர் உன்கிட்ட பேசுனதையும் கேட்டேன்..நீ முன்னாடி சொன்னதையும் யோசிச்சேன்..விபரம் தெரியாத வயசுல யாரும் இல்லாத போதே அவ்ளோ ரிஜெக்ஷன, ஒதுக்கத்தை, தனிமையை ஏத்துக்கிட்டேன்..இப்போ என்ன அதே விலகல் வெறுப்பு திரும்ப கிடைச்சாலும் பரவால்ல.. இருக்கிறவரைக்கும் எல்லார்கூடவும் ஓரளவுக்காவது அன்பா இருந்திட்டு போலாமேன்னு தோணிடிச்சு..சோ பேசிட்டேன்..”

 

மித்ரா ஆச்சர்யமாக அவன் என்னவென்று விலக “இல்ல நீ இவ்ளோ சீக்கிரம் இவளோ மாறுவ, எல்லாத்தையும் ஏத்துக்குவேன்னு நினைக்கல ஆதி…என்ன இருந்தாலும் அவங்க பண்ண தப்பை நியாயப்படுத்த நான் விரும்பல..இன்னைக்கு அக்கா என்கிட்ட கேட்டபோது கூட நான் உண்மையா தான் உனக்கு சப்போர்ட் பண்ணேன்..உனக்கு தோணுச்சோ இல்லையோ உன்னை பத்தி நினைக்கும் போது எல்லாம் எனக்கு தோணின கேள்விகள் அது எல்லாம்.. அதான் யோசிக்காம கேட்டுட்டேன் அதோட எப்போவுமே இதுல உன் விரும்பம் தாங்கிறதுலையும் தெளிவா இருந்தேன்..ஆனா மாமா இவளோ பெரிய மனுஷன் எவ்ளோ விஷயம் பாத்து பிரச்னைல இருந்து வெளில வந்திருப்பாரு, இருந்தும் உன் விஷயத்துல அவரு தயக்கத்துல ஒதுங்கியே இருக்கிறத என்ன பண்றதுனு தெரில..அதான் அவர்கிட்ட பேசுனேன்..”

 

மித்ரன் புன்னகையுடன் “சரி விடு..என்ன பண்றது..எல்லாரும் என் அளவுக்கு லக்கியா இருப்பாங்களா.. தேவைப்படுற நேரத்துக்கு கரெக்டா கைடு பண்றதுக்கோ அட்லீஸ்ட் உன் இஷ்டப்படி பண்ணு எதுன்னாலும் உன் கூட நான் இருக்கேன்னு  சொல்றதுக்கு கூட அவருக்கு ஒரு துணை இல்லையே..எனக்கு நீ இருந்தமாதிரி..

அவளுக்கு புன்னகை மலர்ந்தது..”நான் அப்டி என்ன ஆதி பண்ணேன்..நீ என்கிட்ட இவளோ பாசமா இருக்கிறதுக்கு, எல்லாத்துக்கும் நான் காரணம்னு சொல்ற அளவுக்கு நான் உனக்கு ஒண்ணுமே பண்ணலையே ஆதி..”

 

மித்ரன் அவளின் தோளில் கை போட்டபடி “ம்ம்..உனக்கு தெரில தியா..ஆனா நிறையா இருக்கு..எனக்கு அப்போப்போ தோணும்..எனக்காவது நீ இவளோ அன்பை காட்டி என்னை எனக்கு மேல நீ நம்பினதை நினச்சுகூட நான் உனக்கு திரும்பி அதே அன்பை கொடுத்திருக்கலாம்..ஆனா நீ எந்த தைரியத்துல நம்பிக்கைல எனக்காக வெயிட் பண்ண? எப்படி என் மேல இவ்ளோ காதல்னு யோசிச்சா எனக்கு பதிலே இல்லை..எப்படி நீ என்னை அவ்ளோ நம்புன? அதுவும் எல்லா நேரத்துலையும்..எனக்கு யாருகிட்டேயும் பாசமா இருக்க வராது..பேமிலி செட் ஆகாது..எனக்கு பீலிங்ஸே இலேன்னு நினைச்சத மாத்தி இப்போ எல்லாமே எனக்கு காட்டிட்ட..அந்த லைஃப் எப்படி இருக்கும்னு என்னை நீ பாக்க வெச்சுட்ட தியா..அதுவும் நான் எதிர்பார்க்காத இவளோ சந்தோசத்தை…அதுதான் எனக்கு இன்னும் ஆச்சரியமா இருக்கு..”

 

புன்னகைத்தபடியே “எல்லாருக்கும் எல்லா உணர்ச்சிகளும் இருக்கு ஆதி..எதை அவங்க அதிகமா வெளிப்படுத்திறாங்க, அவங்களுக்கு எது அதிகமா கிடைக்கிதுங்கறத பொறுத்துதான் அவங்களோட வெளிப்பாடு இருக்கும்..அதை வெச்சு தான் எல்லாரும் நான் ரொம்ப ஜாலி டைப், நான் ரொம்ப கோபப்படுவேன், நான் யாருகிட்டேயும் அட்டாச் ஆகமாட்டேனு தன்னை பத்தி சொல்லிட்டு சுத்துறாங்க..உண்மை நமக்கே புரியறதில்லை….

என்ன ஒரு குறிப்பிட்ட பக்குவம் வந்த பிறகு அவங்களோட இந்த மாதிரி எண்ணத்தை மாத்திறது தான் கஷ்டம்..அவங்களோட இத்தனை வருஷ எண்ணத்தை டிஸ்டர்ப் பண்ணாம அவங்களுக்குள்ள இருக்கிற மத்த உணர்ச்சிகளை வெளில கொண்டுவந்திட்டா போதும்..எல்லாமே நார்மலாகிடும்..சிம்பிள்..”

 

“அப்போ நானும், எனக்கே சொல்லி சொல்லி தான் அப்டி இருந்தேன்னு சொல்றியா?”

 

“ம்ம்..கண்டிப்பா ஆதி..யோசிச்சு பாரு..ஒரு காலம் வரைக்கும் உனக்கு அன்ப செலுத்த, எப்போவுமே உனக்கு சப்போர்டிவ்வா இருப்பாங்கன்னு யாருமே நீ பாக்கல..சோ நமக்கு யாரும் இல்ல, யாரும் வேண்டாம்னு நீ எதிர்பார்ப்பே இல்லாம வளர ஆரம்பிச்சிட்ட..தனிமைல நீ எப்படி இருப்பியா அதுதான் சரினு முடிவு பண்ணி வெச்சுட்ட..ஒரு கட்டத்துக்கு மேல நான் உன் வாழ்க்கைல வந்தாலும் உன்னால அதை மாத்திக்க முடிலேல..அப்படியும் போகமுடியாம இப்படியும் போகமுடியாம எவ்ளோ யோசிச்சிருப்ப..

அந்த நேரத்துல நான் என்ன வேணும், என்ன எதிர்பார்க்கிறேன்னு உனக்கு காட்டுனனே தவிர அத அப்போவே செய்யணும்னு சண்டைபோடல..அப்போப்போ ஏன், எப்படி அப்டி இருந்தனு கேப்பீங்களே இதுதான் காரணம்..ஒருவேளை அப்டி சண்டைபோட்டிருந்தா உனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்காம போயிருக்கும்..கோபம், தெரியாம சூஸ் பண்ணிடோமோங்கிற தயக்கம்..வெறுப்பு தான் வந்திருக்கும்..

அதேசமயம் உனக்கு எப்படி என்ன மாதிரி எதிர்பார்ப்பு இருக்கினு காட்டாமலே இருந்திருந்தா உனக்கு குடும்பத்துல இருக்கிற சாதாரணமான பல விஷயங்கள் தெரிஞ்சிருக்கவே இருக்காது…அதனால தான் சொல்லிட்டு விட்ருவேன்..அதுல உனக்கு எது செய்யணும்னு தோணுதோ முடியும்போது செய்வ..முடியாத போது நான் கேட்டு அது பெருசு பண்ணாம விட்டதால நீ உன் வேலைல உனக்கு பிடிச்சதுல 100% கான்சண்ட்ரட் பண்ண..ரிலாக்ஸ ஹாப்பியா பீல் பண்ண..அப்போ உன் மனசுக்கு பிடிச்ச எல்லாமே உனக்கு தானா தெரியாரம்பிச்சது..உன்கூட இருந்த உன்னை முழுசா நம்பின என்னை நீ கவனிக்க ஆரம்பிச்ச..எனக்கு எது எல்லாம் பிடிக்கும் கேப்பேனு பாத்து நீயாவே ஒரு கட்டத்துல அதை எனக்கு குடுக்க ஆரம்பிச்சிட்ட..நானும் ஹாப்பி..நம்ம ஆசைப்பட்ட பொருளை அடையும்போது வர சந்தோசத்தை விட நம்ம மனசுக்கு பிடிச்சவங்களுக்கு ஏதாவது செஞ்சு அவங்களோட சந்தோசத்தை பாக்கும்போது அப்டி இருக்கும்…ஒரு நிறைவான சந்தோசம் கிடைக்கும்…” என கண் சிமிட்ட

 

அவனும் அதை ஒப்புக்கொண்டான்..”ஒருவேளை இருந்திருக்கலாம்..அதனால தான் மாமா என்னை பத்தி குறை சொல்லும்போது கூட நீ அங்க சண்டை போட்டியா..அதோட இந்தியா வரோம்னு சொல்லும்போது என்னை விட அதிகமா நீ யோசிச்சதுக்கான காரணம் எங்க என்னை மாமா டைரக்ட்டா திட்டிடுவாரோ, சங்கடப்படுத்திடுவாரோன்னு நினைச்சிட்டியா?”

 

அவளும் மௌனமாக மேலும் கீழும் தலையசைத்தாள்..”அவரோட எதிர்பார்ப்பை நான் தப்புனு சொல்லல..ஆனா கல்யாணம் ஆனதால உடனே அடுத்து தினம் அவங்ககூட பேசணும், வாரம் ஒருதடவை வெளில கூட்டிட்டு போகணும், அடுத்த 1 ஓர் 2 இயர்ஸ்ல குழந்தை, அப்புறம் அதை வளக்கணும்னு ரூல்ஸ் போட்ட மாதிரி எல்லாருமே வாழ முடியாது ஆதி..கல்யாணம் பண்ணா கனவுகளை அழிச்சுக்கணும்னு யாரும் சொல்லல..அது பெண்களுக்கு ஆண்களுக்குனு இல்லை..எல்லாருக்குமே பொது தான்..பெண்ணுரிமைய பத்தி எவ்ளோ பேர் பேசுறோம் ஆம்பளைங்க மட்டும் எல்லாருமே பிடிச்ச வேலைக்கா போய்ட்டிருக்காங்க, அவங்க கனவை எல்லாமே நிஜமாக்க முடியுதா என்ன? கனவு நனவாகுறது சாதிக்கிறது எல்லாம் சாதாரண விஷயம் இல்ல ஆதி..அதே மாதிரி அது ரொம்ப கொடுமையான கஷ்டமான விஷயமும் இல்ல..எல்லாரும் மனசை ரிலாக்ஸ வெச்சா போதும்..பிடிச்ச விஷயங்களை தேடி தானாவே போவாங்க..முயற்சியாவது எடுப்பாங்க..அதுக்கு முக்கியமா தேவைப்படுறது நம்மள புரிஞ்சுகிற, ஆதரவு குடுக்கிற குடும்பமும், நண்பர்கள் தான்..எல்லாருமே இல்லேன்னாலும் கூட அட்லீஸ்ட் நாம முழுசா நம்புற ஒருத்தர் நம்பள நம்புறாங்கனு தெரிஞ்சாலே போதும் அவங்க சப்போர்ட் வெச்சே எல்லாருமே முன்னாடி வருவாங்க..அப்டி ஒருத்தர எல்லாரும் கண்டுபுடிக்கரத்து தான் கஷ்டம்..அது சரியா இருந்தா யாரு வேணாலும் என்ன வேணாலும் சந்தோசமா அச்சிவ் பண்ணலாம்..அது இல்லாதவங்களும் அச்சீவ் பண்ணுவாங்க..என்ன அவங்களுக்குள்ள ஒரு வலி எப்போவுமே இருந்திட்டே இருக்கும்..வலியோட ஒரு சாதனை பண்ணதுக்கப்புறம் அடுத்து உறவுகளை ஏத்துக்ககூட அவளோ சாதாரணமா மனசு வராது..அது ஒரு குறை தானே..அந்த மாதிரி ஒரு கஷ்டத்தை நான் உனக்கு குடுக்கக்கூடாதுனு நினச்சேன்..அவ்ளோதான்..”

 

அதை ஏற்றுக்கொண்டவன் புன்னகையுடன் அவளை அணைத்தபடி “தேங்க்ஸ் டா செல்லம்..நீ எனக்காக எவ்ளோ விஷயம் யோசிச்சிருக்க..உண்மையாவே நான் ரொம்ப லக்கி..”

“சரி நான் ஒரு விஷயம் கேப்பேன்..உண்மையா நடந்ததை ஒன்னு கூட விடாம சொல்லணும்..ப்ரோமிஸ் பண்ணு..என்மேல..?” என்று அவன் பீடிகையுடன் நிறுத்த

அவள் யோசித்தபடியே “என்ன விஷயம் ஆதி..” என புரியாமல் தயங்க

மித்ரன் “சே எஸ் அண்ட் ப்ரோமிஸ் ஆன் மீ..”

“அது..என்னனு..”

“என்மேல ப்ரோமிஸ் நீ சொல்லுவ அவ்ளோதான்..” என அவனே கூறிவிட்டு

“உனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆனபிறகு நடந்த ஆக்சிடென்ட் அதுல எனக்கு ஏதோ டவுட்டாவே இருக்கு..உண்மைய சொல்லு..அன்னைக்கு என்ன நடந்தது?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 34’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 34’

34 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   இவை அனைத்தையும் கவனித்த மித்ரன் அவர் வருந்துவதையும் எண்ணி கவலைகொண்டான்..முன்னொரு நாள் தியாவிடம் பேசியது நினைவுக்கு வந்தது..”அப்போவும் அவரு அம்மாவுக்காக தானே பாக்க வந்தாரு..என்னை அப்டி ஒரு வார்த்தை சொல்லிட்டு போனாரு..எப்படி

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 27’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 27’

27 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   “ஓகே ஓகே சொல்றேன்..சிவா, நம்ம பிரண்ட்ஸ், அம்மா அப்பா எல்லாரும் மேரேஜ்க்கு சொல்லிட்டே இருந்தாங்க..நானும் மேரேஜ் ஓகே சொன்னேன்..அன்னைக்கு ராத்திரி நான் மாடில தனியா நின்னுட்டு இருந்தேன்..அம்மா வந்து என்கிட்ட பேசுனாங்க..”

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 13’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 13’

13 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   அதன் பின் நடந்தவை,  கனடா வந்தது வரை அனைத்தையும் அசைபோட்டவன் அப்டியே உறங்கியும் விட்டான். ஏனோ மனம் அலைபாய்ந்துகொண்டே இருந்தது..எதிலும் ஆர்வமும் இன்றி பிடிப்பும் இன்றி அவன் தனது அன்றாட பணிகளை