Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 26’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 26’

26 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

 

“அன்னைக்கு ராத்திரியே…உன்னை விட்டுட்டு கொஞ்ச தூரம் நடந்து போனான்..கொஞ்ச நேரம் யோசிச்சேன்..நேரா சிவா வீட்டுக்கு போனேன்..”

“அந்த நேரத்துலையா? அதுவும் சிவா பாக்க?” என ஆச்சரியமாக கேட்க

“ம்ம்..அப்போவே தான் போனேன்…நான் இதுவரைக்கும் என்னோட விஷயத்தை மத்தவங்ககிட்ட சொல்லி ஒப்பீனியன் கேட்டதில்லை..செய்யப்போறன்னு சொன்னதுமில்ல..ஆனா இது நீயும் சம்மந்தப்பட்டது..அதோட நம்ம மத்த பிரண்ட்ஸ் எல்லாரும் எமோஷனல திங்க் பண்ணுவாங்க..நான் தப்புனு சொல்லல…ஆனா எல்லா நேரத்துலையும் எமோஷனலாவே முடிவு பண்ணா அது ஒத்துவராதே…எனக்கு ப்ராக்டிகலா யோசிக்கிறவங்க .. அதே சமயம் உன் மேல அக்கறையா இருக்றவங்களாவும் ஒரு ஆள் வேணும்னு தோணுச்சு..அதுக்கு சரியான ஆள் சிவா தான்..அதான் அவன்கிட்ட போயி பேசுனேன்..அவனும் புரிஞ்சுக்கிட்டான்…உன்னை இங்க எல்லாருமே பக்கத்துல இருந்து பாத்துக்கறேன்னு சொன்னான்..ரொம்ப எக்ஸ்ட்ரீம்ல ப்ரோப்லேம் ஆச்சுன்னா மட்டும் என்னை காண்டாக்ட் பண்ண சொல்லிருந்தேன்..அதுவும் மெயில்ல..நடுவுல ஒருதடவ மட்டும் பேசணும்னு சொல்லிருந்தான்..நானும் ஓகேனு சொல்லிருந்தேன்..ஆனா அப்புறம் அவன் என்கிட்ட பேசல..அப்போதான் உனக்கு மேரேஜ் முடிவு பண்ணிருக்கறதா என்னோட இன்னொரு பிரண்ட் ராஜேஷ் சொன்னான்..சோ அதைப்பத்தி தான் சிவா பேசவந்திருப்பான்னு நினச்சு நானு அப்டியே விட்டுட்டேன்..”

 

“ஆ..ராஜேஷ் அண்ணா?..அவங்க..”

“ம்ம்…குணாவோட பிரண்ட்..ஒருவகைல ரிலேடிவ்ம் கூட.. எனக்கும் அவன் பிரண்ட் ..சின்னவயசுல ஊர்ல இருந்த ஆசிரமத்துக்கு பக்கத்துல தான் அவங்க வீடு..சோ அப்போ இருந்தே தெரியும்..அவங்க இங்க வந்து செட்டில் ஆகிட்டாங்க…இங்கே காலேஜ் முடிச்சு ஒரு தடவ ஜாப்க்கு ட்ரை பண்ணும்போது அவனை பாத்தேன்..என்னை பத்தி யாருகிட்டேயும் சொல்லவேண்டாம்னு அவன்கிட்ட சொல்லிட்டேன்..அவன்கிட்ட இருந்து தான் அப்போப்போ உங்க எல்லாரையும் பத்தி விசாரிச்சுப்பேன்..ஆசிரமத்துக்கு வேணும்கிறத கூட அவன்மூலமா தான் செஞ்சேன்..”

 

தியா யோசனையில் இருக்க ஆதி “என்ன யோசிக்கற?”

“அது வேற..சரி அப்டினா எப்போதான் நீ லவ் பண்ண?”

மித்ரன் புன்னகையுடன் “சரியா சொல்ல தெரில தியா..கனடா போயும் நான் அப்டியே தான் இருந்தேன்..

யாராவது மொத்தமாக கேங்கா உக்காந்து பேசுறாங்க, சண்டை போடுறது, கிரௌண்ட் இதெல்லாம் பாக்கும்போது இங்க இருந்தது, உங்க எல்லார் ஞாபகமும் வரும்..அவ்ளோதான்…

பார்க்ல வாக்கிங் போக ஒரு அங்கிள் ரெகுலரா வருவாரு..அவர் நல்லா பழகுவாரு ..போலீஸ்ல இருந்தவர்..ஆனா அவளோ ஜாலி டைப்..ஒருதடவ அவரோட மனைவி இறந்துட்டாங்கனு அவர் பார்க்கு ரொம்ப நாள் கழிச்சு வந்து தனியா உக்காந்திருந்தாரு..அவர்கிட்ட நான் போயி விசாரிச்சேன்..ஆறுதல் சொன்னேன்..அவரும் கொஞ்சம் பேசுனாரு..

 

[அவர் சொன்னது “நான் ஒர்க் பண்ணும் போது, ட்ரைனிங்ல, ஏன் கொஞ்ச வருஷம் முன்னாடி கூட வேலை விஷயம், பிரண்ட்ஸ் மீட் பண்ணனும் எல்லாம் தனியா போயிருக்கேன்..தனியாவே பல மாசம் இருந்திருக்கேன்..அப்போவும் என் மனைவிகிட்ட பேசிட்டே எல்லாம் இருந்ததில்லை..அதனால எனக்கு தனியா இருக்கிறது புதுசில்லை..

ஆனா அப்போ எல்லாம் இல்லாத ஒரு தனிமை இப்போ எனக்கு தோணுது..அப்போதான் புரிஞ்சது என்னதான் நான் ரொம்ப ஸ்ட்ரோங் மேன், என்னவேணாலும் என்னால செய்ய முடியும்னு சொல்றது எல்லாம் நம்மகிட்ட இருக்கிற நம்பிக்கைனால மட்டுமில்ல..நமக்காக ஒருத்தர் இருக்காங்க..அவங்க மனசுல நமக்கு எப்போவுமே ஒரு இடம் இருக்கும்கிற ஒரு எண்ணம்..அதுதான், அந்த அன்பு தான் நம்ம பலம், தைரியம் எல்லாமே..

நேத்து என்கிட்ட எவ்ளோ சொத்து, பணம், அந்தஸ்து, பாத்த மனுசங்க, பழகுனவங்க எல்லாம் இருந்ததோ அது எல்லாமே என்கிட்ட இப்போவும் இருக்கு..என் மனைவி மட்டும் தான் போய்ட்டா..என்னதான் நான் சம்பாரிச்சிருந்தாலும் அதெல்லாம் என்னை இப்போ சந்தோஷப்படுத்தல..

எல்லாரும் வந்து என்கிட்ட பேசலாம்..ஒரு 5 10 நிமிஷம் ஆறுதல் சொல்லலாம்..என்னை ஹாப்பியா பீல் பண்ண வெக்கலாம்..அப்புறம் அவங்க போய்டுவாங்க.. என்கிட்ட இருக்கிற பணத்தை வெச்சு நான் எனக்கு பிடிச்ச மாதிரி வெளியூர் போகலாம், படம், விளையாட்டு என்ன வேணாலும் பாக்க போகலாம்..என்னை ஏன்னு கேட்கக்கூட இப்போ ஆள் இல்லை..ஆனா அதுதான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு..

ஏன்னா மத்த விஷயத்துல இருந்து கிடைக்கிற சந்தோசம் எல்லாம் நிரந்தரம் இல்லை..கொஞ்ச நாள் தான்..நம்ம மனசை நாம எவ்ளோ தான் ஏமாத்தமுடியும்னு நினைக்கிற?

நமக்கு என்ன தேவைனு நம்ம மனசுக்கு நல்லாவே தெரியும்..எங்க அந்த கேள்விய அதுகிட்ட நாம கேட்டு அது ஆமா சொல்லி நாம அதை பண்ணமுடியாம போய்டுவோமோனு ஒரு ஈகோ….

என் மனைவி உயிரோட இருக்கும்போது அவ கேட்டபோது, நான் அவகூட டைம் ஸ்பென்ட் பண்ணிருந்தா இப்போ எனக்கு அந்த நினைவுகளாவது மிஞ்சிருக்கும்..

அவள நான் சந்தோசமாதான் பாத்துக்கிட்டேன்னு எனக்கும் ஒரு நிம்மதி கிடைச்சிருக்கும்..

ஆனா இப்போ தோணுது..அவ கேட்டபோது கூட இருந்திருக்கலாமோனு ஒரு ஏக்கம், அவ கேட்ட சின்ன விஷயங்களை கூட நிறைவேத்தாம கஷ்டப்படுத்திட்டோமோன்னு ஒரு குற்றவுணர்ச்சி..இது என் உயிர் இருக்கிறவரைக்கும் மாறாத ஒரு தண்டனை தான்…இங்க சுத்தி எல்லாரும் இருக்காங்க..ஆனா நமக்கே நமக்காகனு யாராவது ஒருத்தர் இருக்காங்களானு கேட்டா இங்க பல பேருக்கு தெளிவான பதில் இருக்காது..ஆனா அது தான் நிஜம்..அப்டி ஒருத்தர் அது ரிலேட்டிவ், பேமிலி, பிரெண்ட்ஸ், லவர்னு யாரவேணாலும் இருக்கலாம்..நம்ம மேல அன்ப செலுத்த அப்டி ஒருத்தர் இல்லாம வாழ்க்கைல ஒருத்தன் எவ்ளோ அச்சீவ் பண்ணாலும் அவனுக்கு அது முழு நிறைவை தராது… ஆனா இதை நான் இப்போ யோசிச்சு பிரயோஜனம் இலேல..?” என கேட்டபடி அவர் சென்றுவிட்டார்..]

 

எனக்கு அவரு சொன்னதே தான் மைண்ட்ல ஓடிட்டு இருந்தது. ஏன்னு தெரில…அந்த 2நாள் உன்னை பத்தின நியாபகம் அதிகமா வந்திட்டே இருந்தது..ரொம்ப டிஷ்டர்ப்டா இருந்தேன்..அடுத்த நாள் உன்னை நேர்ல பாத்த போது தான் என் மனசு அமைதியாச்சு…ரிலாக்ஸ பீல் பண்ணேன்..அப்புறம் உன்கூட அன்னைக்கு வெளில சுத்தினது கடைசியா கல்யாணம் பண்ணிக்க கேட்டது எல்லாமே.. அதுக்கப்புறம் எனக்கு நியாபகமா இருந்த விஷயங்களை நிஜ வாழ்க்கைல அனுபவிக்க ஆரம்பிச்சிட்டேன்..

அவள் புரியாமல் விழிக்க மித்ரன் அவள் தலையில் முட்டி “உன் பேச்சு, சிரிப்பு, கோபம் முக்கியமா நீ பண்ற இம்சை எல்லாமே…தினமும் கவனிப்பேன் சில நேரம் என்னையே மறந்து ரசிச்சேன்.. மேபீ அப்போ கொஞ்ச கொஞ்ச லவ் வந்திருக்கலாம்..

ஓப்பனா சொல்றேன்..உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்னு தேடி தெரிஞ்சுக்கவெல்லாம் எப்போவுமே தோணல..

ஆனா நான் உன்னை கவனிச்சதுல வெச்சு நீ கோபப்படற விஷயத்த சில நேரம் வேணும்னே செஞ்சு உன்னை கத்தவெப்பேன்..நான் மறந்திட்டேன்னு சொன்னதும் நீ முகத்த சுருக்கி பாத்திட்டு திட்டுவேல…அவ்ளோ கியூட்டா இருக்கும்.. சிரிப்பா வரும்…அவள் இப்போதும் அதே போல முகம் சுருக்கி முறைக்க அவன் இப்போது வெளிப்படையாகவே சிரித்துவிட்டான்.

அதேமாதிரி நீ எதெல்லாம் ஆசப்படுவியோ, ரசிப்பியோ அதெல்லாம் உனக்கே தெரியாம செஞ்சு நீ சந்தோஷப்படறத பாத்து நான் ரசிப்பேன்..

இது எதுவுமே என் கேரக்டர் இல்லேன்னு நான் நினச்சது… பட் எனக்குள்ளேயும் சாதாரணமா எல்லாருக்கும் இருக்குற மாதிரி பீலிங்ஸ் இருக்கும்னு புரிஞ்சதே அப்போதான்..உன்னாலதான்..

ஆனா என்னதான் உன் சந்தோசத்தை நான் தினமும் பாத்தாலும் உனக்கு வேணும்கிற எல்லாமே செஞ்சாலும் எனக்கு ஏனோ அது முழுமையடையாதமாதிரி ஒரு பீல்.. அதான் என்னால முழுசா அந்த லவ்வை புரிஞ்சிக்கமுடில.. கடைசியா எனக்கு அவார்ட் கிடைக்கப்போகுதுன்னு உன்கிட்ட சொல்லும்போது உன் கண்ணுல அப்டி ஒரு சந்தோஷம்.. என் நெத்தில முத்தம் குடுத்திட்டு ‘ஐ எம் வெரி ஹாப்பி பார் யூ ஆதி..எத்தனை பேர் மனசுல, அவங்க வாழ்க்கைல நீ மறக்கமுடியாத இடத்துல இருக்கேனு தெரியுமா? நீ இன்னும் நிறையா நல்லவிஷயங்கள் பண்ணுவ..எனக்கு நம்பிக்கை இருக்கு..இரு எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வரேன்னு’ வயிற்றில் கை வைத்து காட்டி “உன் நிலைமையும் மறந்து, சந்தோஷத்தில பெருமையா எல்லார்கிட்டேயும் சொல்லப்போன…அந்த நிமிஷம் என் அம்மா தான் எனக்கு தெரிஞ்சாங்க..

சின்ன வயசுல நான் எதுலையாவது ஜெயிச்சிட்டு வந்தாலோ இல்ல ஏதாவது நல்ல விஷயம் பண்ணாளோ என் அம்மா கண்ணுல தெரிஞ்ச சந்தோஷம் பெருமை அத உன்கிட்ட பாத்தேன்.. அம்மாவும் உன்னமாதிரி தான் நெத்தில முத்தம் கொடுத்து ரொம்ப சந்தோஷமா இருக்கு பப்பு..நீ இன்னும் நிறையா சாதிக்கணும்… எல்லாருக்கும் எல்லா நல்லதும் பண்ணணும்னு சொல்லுவாங்க… அன்னைக்கு நீ சொன்னமாதிரியே…அந்த நிமிஷம் என்னோட சந்தோஷத்துக்கு அளவேயில்ல…

அப்போவே உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணனும்னு நினச்சேன்..பட் நீ கேட்டது அப்போ ஞாபகம் வந்தது..அந்த ஸ்பெஷல் மொமெண்ட்..சோ இன்னும் இது எப்படிடா ஸ்பெஷல் ஆகும்னு யோசிச்சிட்டே வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..அது இன்னைக்கு அமைஞ்சிடுச்சு…இன்னைக்கு சொல்லணும்னு நான் பிளான் பண்ணல..நான் வந்ததும் நீ என்னை பாத்தது..மத்தவங்க சொன்ன பாராட்டு, வாழ்த்து, அவங்க கேட்ட கேள்வி எல்லாத்தையும் தாண்டி நீ தெரிஞ்ச…அந்த நிமிஷம் உன் கண்ணுல தெரிஞ்ச அந்த எதிர்பார்ப்பு, என்னால அதுக்கு மேல எதுவுமே யோசிக்கமுடில..உன்கிட்ட முதல சொல்லணும்னு தான் நான் டிவில கூட லவ்வ சொல்லுவேன்னு சொல்லல..அவ என்கிட்ட இத்தனை வருஷம் கேட்டதை சொல்லிருப்பேனு சொன்னேன்..ஆனா அப்போவும் ஒரு டவுட் அதை கேட்டிருந்தா நீ நான் எத சொல்லுவேன்னு கண்டுபுடிச்சிடுவியோனு..நீ எதிர்பார்க்காத ஒரு சமயத்துல நீ ரொம்ப எதிர்பார்த்த அந்த விஷயத்தை சொல்லும்போது உன் ரியாக்ஷன நேர்ல பக்கத்துல இருந்து பாக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்..எங்க அது மிஸ் ஆகிடிச்சோனு ஒரு சின்ன குறை இருந்தது..

ஆனா கரண்ட் போயி கடைசியா சொன்னதை மட்டும் கேட்கலேனு சொன்னபோது..ரியலி கடவுள் கிரேட் தான்னு தோணுச்சு…நீ சொல்ற மேஜிக் மாதிரி தான் இதுவும் எனக்கு இருந்தது…” என்று அவன் சிலாகிக்க அவளும் அவள் கன்னத்தை வருடி “யூ சோ ஸ்வீட் ஆதி..” என்று கட்டிக்கொண்டாள்..

“ஆனா ஒரு டவுட்” என மீண்டும் நிமிர “இன்னுமா? உனக்கு தூக்கம் வரலையா? நீ ஒழுங்காவே ரெஸ்ட் எடுக்கறதில்லை..வா முதல..”

அவள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு “தூக்கம் வரல ஆதி..கொஞ்ச நேரம் இருக்கலாமே ப்ளீஸ்..” என அதற்கு மேல் அவனால் எப்படி மறுக்க முடியும்..அவளை தன் தோளிலே சாய்த்துக்கொண்டு தலையை வருடிய படியே கேட்டான்..

மித்து “லவ் நீ ரியலைஸ் பண்ணதே நம்ம மேரேஜ் அப்புறம் தான்..அப்றம் எப்படி அன்னைக்கு கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்ட? அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு..?”

மித்ரன் புன்னகையுடன் “ஒவ்வொரு தடவையும் நான் உனக்கு வேண்டாம்னு நான் தான் சொல்லிருக்கேன்..நீ இல்லை…என் விருப்பத்துக்காக வேண்டாம்னு நான் முடிவு பண்ணி தனியா வந்தும் எனக்கு பெருசா எந்த ஹப்பினஸ்ம் கிடைக்கல..லைப் அது பாட்டுக்கு போச்சு அவ்ளோதான்..

அத்தனை வருஷம் கடந்து வந்தும் நீ மாறாம அப்டியே தான் இருந்த.. சரி இனி உன் ஆசைக்காக யோசிக்கலாம்னு தோணுச்சு..உன் நல்லதுக்காக அவ்ளோ நாள் யோசிச்சத விட்டுட்டு உனக்கு பிடிச்சதை உன் சந்தோசத்தை வெச்சு அன்னைக்கு யோசிச்சேன்..

அதோட எல்லா நேரத்துலையும் உன் லைப்க்கு நான் வேணுமானு யோசிச்சு பதில் சொன்னனே தவிர  என் லைப்க்கு நீ வேணுமான்னு யோசிச்சதேயில்லை..அன்னைக்கு அந்த நிமிஷம் தான் அந்த கேள்விய கேட்டேன்..யோசிக்காம பதில் வேணும்னு மனசு சொல்லுச்சு..ஏன்? அது எப்படினு கேள்வி கேட்க தோணல..உன்கிட்ட பண்ண ப்ரோமிஸ் ‘எப்போ தோணுனாலும் உடனே சொல்லணும்னு சொல்லிருந்த’..சோ உடனே கேட்டுட்டேன்..

ஆனா நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க தான் கேட்டேன்..லவ் ப்ரோபோசல் இல்ல..அந்த வேறுபாடு உனக்கு புரியுமோ? இல்லை எல்லாமே ஒன்னு தான்னு சொல்லிடுவியோன்னு அப்புறமா யோசிச்சிட்டே இருப்ப..ஆனா நான் நினைச்சதை விடவே உனக்கு அது நல்லா புரிஞ்சிடிச்சுனு உன் கூட வாழும்போது புரிஞ்சது…ஏன்னா மத்த விஷயத்துல நீயும் நானும் எப்டியோ? வெறும் கல்யாணம் பண்ணதுக்காக மட்டும் கடமைக்குனேனு வாழ இரண்டுபேருமே தயாரா இல்லை..அந்த புரிதல், காதல் இருந்து நம்ம மனசார ஒன்னு சேந்தா தான் அது நிறைவா இருக்கும்னு நினச்சேன்..” என அவன் புன்னைகைக்க மித்துவும் புன்னகைத்தாள்..

“சரி, உனக்கு முடிவு பண்ண கல்யாணம் நின்னுபோச்சுனு தெரியும்..பட் அது எப்படி? எதனால நின்னுச்சு?”

“அதுதுது…என இழுத்தவள் அப்போ ஒரு சின்ன ஆக்சிடென்ட் ஆச்சு..அதனால நின்றிச்சு..” என்றதும்

மித்ரன் ஓரக்கண்ணில் முறைத்தபடி “எப்போவுமே ஒண்ணுமே இல்லாததுக்கே ஒரு பக்கத்துக்கு பேசுவ..எவ்ளோ முக்கியமான விஷயம் கேட்டுட்டு இருக்கேன்.இது என்ன ஒரு வரில பதில்? ஒழுங்கா நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சதுல இருந்து நின்ன வரைக்கும் நடந்த எல்லாமே சொல்லற..”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 5’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 5’

5 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் அவள் ஒரு நொடி இவளை மேலிருந்து கீழ் வரை யாரென பார்க்க “ஹாய் நான் மித்ரா..நீங்க பேசுனது எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன்..உங்களுக்கு பதில் தானே வேணும்…எதனால விட்டு பிரியறதுக்கு சான்ஸ் இருக்குனு

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 35’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 35’

35 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   அவளை பின்னால் இருந்து அணைத்தபடி அவள் தோளில் முகம் வைத்தபடி “எனக்கு மத்த பொண்ணுங்க பத்தி எல்லாம் தெரியாது..ஆனா என் தியாவ பத்தி நல்லா தெரியும்..நீ அப்டித்தான்..அவள் திரும்பி முறைக்க அவன்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 32’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 32’

32 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் மித்ராவிடம் கேட்க எப்போதும் போல எனக்கு எந்த பிரச்னையும் இல்ல..உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே நாம போலாம் ஆதி..என முடிவை அவனிடமே விட்டுவிட முதலில் தயங்கினாலும் இறுதியாக மித்ரன் செல்ல ஒப்புக்கொண்டான்.. அங்கே