Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 24’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 24’

24 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

தொகுப்பாளர் : சூப்பர் சார்..அவங்க முழு பேர்?

“மித்ராந்தியா”

“இரண்டுபேரோட பேருமே இப்டி சிங்க் ஆகுதே..நைஸ் சார்..அவங்களை பத்தி சொல்லுங்க…”

 

தியாவ பத்தி சொல்லனும்னா “ரொம்ப நல்ல பொண்ணு..ரொம்ப பாசமானவ..எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுவா..எல்லாத்தையும் விட ரொம்ப அதிகம் பேசுவா..சரியான வாயாடி..வாலு..” என கூறும்போது அவனே புன்னகைக்க

 

“நீங்க அவ்ளோவா பேசவே மாட்டீங்கனு கேள்விப்பட்டோம்..அவங்க அவ்ளோ பேசுவாங்கன்னா எப்படி சார் செட் ஆச்சு?  லவ் மேரேஜா?”

“ம்ம்..லவ் தான்..”

“செம சார்..யாரு முதல ப்ரோபோஸ் பண்ணது?..வெயிட் வெயிட் நாங்களே கெஸ் பண்றோம்..அவங்க ப்ரொபோஸ் பண்ணிருப்பாங்க..உங்களுக்கும் ஐடியா இருந்ததால உடனே அக்ஸப்ட் பண்ணிருப்பீங்க கரெக்ட்டா?”

 

மித்ரன் புன்னகையுடன் “பாதி சரி, பாதி தப்பு…ப்ரோபோஸ் பண்ணது அவதான்..ஆனா நான் உடனே ஓகே சொல்லல..”

“ஏன் சார், அவங்கள அப்போ பிடிக்காதா?”

“அப்போவும் ரொம்ப பிடிக்கும்…அதனால தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்…”

“புரியல சார்..”

“லவ் பண்ற பொண்ணு அந்த பையன்கூட பேசணும், வெளில போகணும் இந்த மாதிரி நினைக்கிறது எல்லாம் சாதாரணம் தான்..ஆனா அது எதுவுமே எனக்கு ஒத்துவராது.. என்னை பொறுத்தவரைக்கும் ஒன்னுமிலேனு நினைக்கிற விஷயங்கள் கூட தியாவ ரொம்ப சந்தோசப்படுத்தும்..அவ்ளோ எதிர்பார்ப்பா..பாக்குற எல்லா விஷயத்தையும், பிடிச்சவங்ககிட்ட இருக்கற எல்லாத்தையும் ரசிப்பா..அப்டி பாத்தா நான் அவளுக்கு கண்டிப்பா செட் ஆகமாட்டேன்..என்கூட இருந்தா அவளுக்கு பல ஏமாற்றங்கள் தான் மிஞ்சும்னு தோணுச்சு..”

 

“என்ன சார் அவங்களை பிடிக்கும்னு சொல்றிங்க..அவங்களுக்காக இவளோ யோசிச்சவர் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு யோசிச்சிருக்கலாமே..”

“என்னோட இயல்பே அப்டித்தான்…எனக்கு மத்தவங்களோட ரொம்ப கிளோஸ பழக வராது..அன்பா இருக்கறத வெளிப்படுத்த தெரியாது..’உன்கூடவே இருப்பேன்…உனக்காக என்னவேணாலும் செய்றேன்னு எல்லாம் சொல்ல தோணாது’..முக்கியமா லவ் பண்ண வராது..யாருக்காகவும் என் இயல்பை என்னால மாத்திக்க முடியாதுனு தெளிவா தெரிஞ்ச பிறகு எதுக்கு ஹோப் கொடுக்கணும்னு நினச்சேன்..சோ வேண்டாம்னு இங்கிருந்து போய்ட்டேன்..”

 

“என்ன சார் சொல்றிங்க? ஊரைவிட்டு போய்ட்டீங்களா? அப்போ எப்படி திரும்ப மீட் பண்ணீங்க?”

“கனடால.. நாலு வருஷம் கழிச்சு ப்ராஜெக்ட் விஷயமா மீட் பண்ணேன்..”

“ஏன் விட்டுட்டு போனீங்கன்னு நல்லா சண்டை போட்டுஇருப்பாங்களே? அப்போவாது பாத்ததும் லவ் சொன்னிங்களா?”

மித்ரன் புன்னகையுடன் “இப்போவரைக்குமே ஏன் அப்டி சொல்லாம போனேனு ஒரு வார்த்தை கேட்டதில்லை..இப்போவரைக்கும் நான் லவ் சொன்னதில்லை…”

தொகுப்பாளர்கள் தங்களுக்குள் பார்த்துகொள்ள மித்ரன் தொடர்ந்து “கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டேன்..ஓகேனு சொன்னா.. சோ கல்யாணம் பண்ணிட்டோம்..”

“உடனே அவங்களும் ஓகே சொல்லிட்டாங்களா? என்ன இவளோ சிம்பிள முடிஞ்சிடுச்சு? கல்யாணத்துக்கு அப்புறமாவது உங்ககிட்ட எனி சேன்ஜஸ்?”

மித்ரன் இல்லை என்பது போல தலையசைக்க

 

“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க சார்..ரொம்ப அநியாயம் பண்ணிருக்கீங்க..எப்படி தான் அவங்க  இதுக்கெல்லாம் பொறுமையா  இருக்காங்களோ? சண்டையே போடமாட்டாங்களா?”

“நீங்க வேற..செமையா திட்டுவா..பட் சண்டை போடமாட்ட..எங்காவது போகணும், ஏதாவது வாங்கணும், ஸ்பெஷல் டேஸ்னு நிறையா சொல்லுவா…மோஸ்டலி வேலை பிஸில மறந்துடுவேன். செய்யமாட்டேன்..

திட்டுவா..கடைசியா ‘சரியான ரோபோ..போடானு சொல்லிட்டு போய்டுவா’..

 

ஆனா கோவிச்சுக்கிட்டாலோ இப்போ நான் என்ன பண்ணனும்னு யோசிக்கறதுக்குள்ள சாதாரணமா வந்து அடுத்த விஷயத்தை பத்தி பேசிடுவா..

சிம்பிள சொன்னா அவ போடுற சண்டை எனக்கு பிரச்சனைய புரியவெச்சதே தவிர என் மனசை கஷ்டப்படுத்தாத அளவுக்கு தான் எப்போவுமே இருக்கும்..”

“ஷி ஸ் சோ ஸ்வீட் சார்..”

“ம்ம்..அதுனாலையே அடுத்த தடவ சரியா பண்ணனும்னு தோணிட்டே இருக்கும்..”

 

“ஒர்கிங்ல எப்படி? பீகாஸ் வீட்லயும் அவங்க எப்படினு நீங்க பாத்திருப்பிங்கள?அங்கேயும் வம்பிழுக்கிறது, பேசிட்டே இருக்கிறது?”

“ஒர்கிங்ல எப்போவுமே ஷி ஸ் வெரி கிளியர் அண்ட் பெர்பெக்ட்.. ஜாலியா வேலை செஞ்சாலும் கரெக்டா இருப்பா..அடுத்தவங்க இடத்துல இருந்து அவங்க பிரச்சனையா  பத்தி நிறையா யோசிப்பா..பல விஷயங்கள் நானே அவளை பாத்து அட்மைர் ஆகிருக்கேன்..”

 

“நைஸ்..அப்போ அவங்க தான் நீங்க ஆசிரமத்துக்கு என்ன பண்ணலாம், எப்படி பண்ணலாம்னு ஐடியா குடுத்தாங்களா?”

“தியாகிட்ட இருந்து எப்போவுமே பதில் எதிர்பார்க்க முடியாது..ஒன்னு நிறைய யோசிச்சு குழப்பிவிடுவா..இல்ல கேள்வியா கேட்பா..”  என்றதும் அங்கே இருந்தவர்கள் சிரிக்க

[வீட்டிலும் நிகழ்ச்சியை பார்த்துகொண்டிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர்.]

மித்ரனும் சிரிப்புடன் “ஆனா அவளோட கேள்விகளுக்கு பதில் கண்டுபுடிச்சா பல நல்ல விஷயங்கள் பண்ணலாம்..இதெல்லாம் நாம ஏன் இவளோ நாள் யோசிக்கலேன்னு சிந்திக்க வைக்கும்…நீங்க கேட்டிங்களே நான் ஆசிரமத்துல பண்ண மாற்றங்கள், அடுத்த பண்ணக்கூடிய திட்டங்கள் இதுயெல்லாமே அவளோட கேள்விகளால தான்..

 

தியாவ நான் என் வாழ்க்கைல சந்திக்காம இருந்திருந்தாலும் ஆசிரமத்துக்கு நல்லது செய்யணும்னு நினைச்சிருப்பேன்.அது ஒருவேளை நான் அங்கேயே வளந்ததால கூட இருக்கலாம்…மத்தவங்க மாதிரி பணமாவோ இல்ல யாராவது ஒரு சிலரோட படிப்புக்கோ இப்டி தான் ஹெல்ப் பண்ணிருந்திருப்பேன்…

ஆனா தியா என்கிட்ட கேட்ட கேள்விகள் “ஆசிரமத்துல இருக்கிற குழந்தைங்களுக்கும் சாதிக்கணும்னு கனவு இருக்கும்ல? அவங்களுக்கும் நிறையா த்ரெட்டண்ட்ஸ் இருக்கும்ல.. இந்த மாதிரி எல்லாம்  பிரச்சனை வந்தா யாரு அவங்களுக்காக முன்னாடி வருவாங்க..எங்கெங்க எந்தெந்த மூலைல எவ்ளோ திறமையானவங்க எல்லாம் இருப்பாங்க? அவங்க எல்லாம் வெளிலையே வரமுடியாதானு? கேட்டா”

அந்த கேள்விகள் தான் எனக்கு அதை பத்தி அதிகம் யோசிக்க வெச்சது? அதுக்கான பதில் தான் இப்போ நான் சொன்னது, பண்றது எல்லாமே…அதெல்லாம் நான் பண்ணனும்னா பணம் எப்படியும் நிறையா வேணும்..சோ கொஞ்ச காலம் வேலை பாத்தேன்..சம்பாரிச்சதை கம்பெனி, அடுத்த பிஸ்னஸ்னு இன்வெஸ்ட் பண்ணேன்..அதோட எப்படி எல்லாத்தையும் நடத்தணும்னு யோசிச்சேன். இப்போ அல்மோஸ்ட் டன்..

செய்யணும்னு ஆசைப்படுறத, யோசிக்கறத எல்லாருமே பண்ணுவோம்..ஆனா முழு முயற்சியோட அதை செஞ்சு முடிக்கறது சிலர் தான் பண்றாங்க..நீங்க நினைச்சதை செஞ்சு காட்டிருக்கிங்க..கிரேட் சார்…கடைசியா உங்க மனைவியை பத்தி இரண்டு வரில சொல்லணும்னு நீங்க என்ன சொல்லுவீங்க?

 

“எனக்கு சந்தோசத்தை மட்டுமே காட்ட , என் அம்மா இல்லாத குறையே எனக்கு தெரியாத அளவுக்கு என்னை அக்கறையா பாத்துக்க எனக்காக கடவுள் அனுப்பிச்ச தேவதை… என் வாழ்க்கையை அழகாக்க வந்த ஏஞ்சல் என் தியா தான்..”

[சுற்றி அனைவரும் மித்துவை பார்க்க அவள் அசைவின்றி டிவியையே பார்த்தபடி இருந்தாள்..]

 

லாஸ்ட் ஒரு கொஸ்டின் சார்..நீங்க இவளோ விரும்பிற உங்க மனைவி இப்போ இந்த நிமிஷம் உங்க முன்னாடி இருந்திருந்தா நீங்க என்ன சொல்லிருப்பிங்க?

 

மித்ரன் சில வினாடிகள் மௌனமாக இருக்க புன்னகையுடன் “இவளோ..”

சட்டென கரெண்ட் போக டிவி ஆப் ஆக என்ன சொல்லுவான் என எதிர்பார்ப்போடு காத்திருந்த அனைவர்க்கும் அட்ச்சோ என்றானது…10 நிமிடங்கள் கழித்து கரண்ட் வர ப்ரோக்ராம் முடிந்துவிட்டது…மித்துவிடம் “உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?’ ‘இங்க பாருடி…’ ‘அக்கா மாமா என்ன சொல்லிருப்பாரு…'” என ஆளாளுக்கு கேள்வி கேட்க எதுவுமே அவளுக்கு ஏறவில்லை…ஆதி இத்தனை நேரம் பேசியது மட்டுமே அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது…

 

அதிர்ச்சியா மகிழ்ச்சியா என்ன சொல்லமுடியா வண்ணம் அசையாமல் அமர்ந்திருந்தாள் மித்து..அடுத்த ஒரு மணி நேரத்தில் மித்ரன் வீட்டிற்கு வந்ததும் அனைவரும் அவனுக்கு வாழ்த்து கூற வரவேற்க என அவ்விடமே ஆரவாரமாக இருக்க அனைத்தையும் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டவன் மித்துவை நோக்கி செல்ல நிறைமாத கர்ப்பிணியான மித்து மெதுவாக எழுந்து அவனிடம் வந்தவள் அவனையே பார்க்க என்னவென்று கண்களாலையே கேட்டவனிடம் மித்து “என்ன ஆதி சொல்லிருப்ப?” என்றாள்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 11’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 11’

11 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   மித்ரன் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அவரை காண வந்தவர் “ஹலோ மிஸ்டர் மித்ரன்..ஹொவ் ஆர் யூ.?” “ஹலோ ராம் சார்..யா பைன்..பாக்கணும்னு சொன்னிங்க..” “எஸ் மேன்..ஒரு பெரிய ப்ரொஜெக்ட் வந்திருக்கு..உன்னோட கான்ஸ்டருக்ஷன்ஸ்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 20’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 20’

20 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் காலையில் எழுந்தவன் சிவா சந்தியாவை காதலிக்கறேன் என கூறியதை தியாவிடம் கூற அவள் ஷாக் ஆக “என்ன ஆதி சொல்ற? இதெல்லாம் நடக்கற காரியமா? போச்சு, அப்பா, அக்கா இரண்டுபேருமே ருத்ரதாண்டவம் ஆடப்போறாங்க…உன்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 3’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 3’

3 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் சிவா “எது எதுல விளையாட்றதுன்னு இல்லை? அதுவும் காலேஜ்ல வந்து அர்ரெஸ்ட் ம்ம்? ரொம்ப மோசமானவனா இருந்து இதுக்காகவே உன்கிட்ட பிரச்சனை பண்ணிருந்தா என்ன பண்ணுவ? நாங்க ஏதோ நல்ல பசங்கள இருக்கறதால