Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 18’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 18’

18 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

சந்தியா “நம்ம ஊர்ல பழைய வீட்ல இருந்தோம்லப்பா..பாலகிருஷ்ணன் அங்கிள் கூட அங்க தானே முதல ஆசிரமம் ஆரம்பிச்சிருந்தாரு..நீங்க நம்ம மித்து குட்டியோட பஸ்ட் பெர்த்டே சமயம் பாம்பேல வேலை விஷயமா ஒரு ட்ரெயினிங்னு போய்ட்டீங்களே ஞாபகம் இருக்கா?”

“ஆமா.. ஒரு ஒன் வீக் போயிருந்தேன்..அங்க போயிட்டு வந்துதானே ப்ரோமோஷன், ஆபிஸ்ல வீடு அலோகேட் பண்ணிருக்காங்கனு இங்க வந்தோம்..”

“கரெக்ட்..அந்த ஒன் வீக் நான், அம்மா, மித்து 3 பேரும் ரெகுலரா ஆசிரமம் போயிடுவோம்..அங்க போயி தான் அம்மாவும் கலை ஆன்டியும் திக் பிரெண்ட்ஸ் ஆனாங்க..”

 

[அன்று

கவிதா “ஹே ஹே பாத்து பா..”

ஓடிவந்து ஒரு சிறுவன் சட்டென கவனித்து விட்டு நிற்க

“சாரிங்க நான் நீங்க வந்ததை கவனிக்கல..”

கவிதா அவன் தலையை தடவிகொடுத்து “பரவால்லைப்பா..பாத்து விளையாடுங்க..”

“ம்ம்..”

“ஆ..இங்க பாலகிருஷ்ணன் சார் ரூம் எங்க இருக்குனு உனக்கு தெரியுமா?”

“வாங்க நானே உங்களை மாமா ரூம்க்கு கூட்டிட்டு போறேன்..” என அழைத்து செல்ல கவிதாவும், சந்தியாவும் அவனை பின் தொடர்ந்தனர்.

சந்தியா “உங்க பேர் என்ன சார்?”

“என்னை இங்க எல்லாரும் பப்புனு கூப்பிடுவாங்க..நீங்களும் அப்டியே கூப்பிடுங்க..” என பேசிகொண்டே பாலாவின் அறைக்கு வர

“அடடே…வாம்மா கவிதா..எப்படி இருக்க..சந்தியா குட்டி அப்போ பாத்ததை விட வளந்துட்டாளே..இப்போ எந்த ஸ்டாண்டர்ட்?”

“6த் அங்கிள்..”

“குட் குட் …கவிதாவிடம் குழந்தை பிறந்ததுமே பாக்க வரலாம்னு இருந்தேன்..வேலை முடிலமா..இங்க வந்ததும் பாக்கலாம்னு பாத்தா டொனேஷன் விஷயமா ஒரே அலைச்சல்..அதான்மா வரமுடில..தப்பா எடுத்துக்காத..”

“அய்யயோ..பரவால்லை அண்ணா..நீங்க பிஸினு தான் உங்க மருமகளை காட்ட நானே இங்க எடுத்துட்டு வந்துட்டேன்..இன்னும் நாலு நாள்ல இவளுக்கு முத வருஷ பொறந்தநாளே வரப்போகுது..”

“இப்போ அப்போன்னு பாக்கவே ஒரு வருஷம் ஆகிடுச்சா…” என எழுந்து வந்து குழந்தையை வாங்கியவர் “குட்டி மா, இங்க பாருங்க.. என்ன பேரு மா வெச்சிருக்கிருங்க?”

“மித்ராந்தியா அங்கிள்…மித்துனு கூப்படறோம்” பேர் எப்படி இருக்கு?

“ஹா ஹா ஹா..சந்தியா மித்திராந்தியாவா உன் வேலையா? ரொம்ப நல்லா இருக்கு.. டேய் பப்பு இங்க பாத்தியா குட்டி பாப்பா..” என

முதன் முதலாக அச்சின்னஞ்சிறு குழந்தையை பார்த்தவன் “நான் பாப்பாவை தொட்டு பாக்கவா?”

“ம்ம்..பாரு”

மெதுவாக அவளுக்கு வலிக்காவண்ணம் தன் குட்டி விரலால் அவளின் மென்மையான கன்னங்களை வருட அப்போதுதான் தூக்கம் கலைந்த குட்டி மித்து பப்புவை பார்க்க அவன் விளையாட்டு காட்டவும் குழந்தை சிரிக்க மகிழ்ச்சியில் “மாமா, மிட்டு பாப்பா என்னை பாத்து சிரிக்கிறா..” என பப்பு ஆர்பரித்தான்..

“ஓகே பப்பு..உனக்கு இங்க போர் அடிக்காதா? ஸ்கூல்க்கு போறியா?”

“இல்லக்கா நான் இன்னும் சின்ன பையன் தானே..ஸ்கூல் போகல..ஆனா இங்க போர் அடிக்காது..இங்க அம்மா, பாலா மாமா, கண்ணம்மா பாட்டி, அப்புறம் சின்னு, மணி, லட்ச்சு இன்னும் கொஞ்சம் பிரெண்ட்ஸ் எல்லாம் இருக்காங்க..அவங்க எல்லாரையும் நான் தான் பாத்துப்பேன்..”

“ஹா ஹா ஹா..ஆமாடா பெரியமனுசா..நீதான் பாத்துக்கற..அம்மா எங்க இருக்காங்க? கூட்டிட்டு வரியா?”

“அம்மா சமையல் பண்ணிட்டு இருக்காங்க..நான் போயி கூட்டிட்டு வரேன்..” என சிட்டாய் பறந்தான்..

கலை “கூப்பிட்டீங்களா அண்ணா?”

“ஆ..வாம்மா கலை..இவங்க கவிதா என் நண்பர் வெங்கடாசலத்தோட மனைவி..இவங்க அவங்களோட பொண்ணுங்க..” என பரஸ்பர அறிமுகம் பேச்சுவார்த்தை முடிய சிறிது பேசிவிட்டு அவர்கள் கிளம்ப தயாராக பப்பு தான் மித்துவையே பார்த்திருந்தபடி “நீங்க எல்லாரும் கண்டிப்பா போகணுமா?”

கலை “ஆமா அவங்க வீட்டுக்கு போகணும்ல…”

அவன் பாவமாக அனைவரையும் பார்த்துவிட்டு “உடனே போகணுமா? கொஞ்ச நேரம் இருந்திட்டு போலாமே..” என கவிதாவிடம் கேட்க அவர்களுக்கும் இவனிடம் மறுக்க தோணவில்லை.. மித்துவையும் மற்ற குழந்தைகளுக்கு நடுவே அமர வைத்துவிட அவளும் தவழ எதையாவது பிடித்து நடக்க என விளையாடினாள்… சந்தியா இவர்களுடன் இருக்க பப்புவும் அங்கேயே சுற்றினான்.. மாலை ஆனதும் அவர்கள் கிளம்பும் போதும் மீண்டும் பப்பு மித்துவை பார்த்தபடியே “நீங்க இனி அடுத்து எப்போ வருவீங்க?”

கலை “இதென்ன பப்பு நீ இப்டி வம்புபண்ற..அவங்களுக்கு முடியும் போது தானே வரமுடியும்..”

சந்தியா “உனக்கு பாப்பா பாக்கணுமா?”

அவனும் மேலும் கீழும் தலையசைத்து “ப்ளீஸ் நாளைக்கும் வரிங்களா?” கவிதா பாவமாக பார்க்க கலை பப்பு அவங்கள கிளம்பவிடு என மிரட்டவும் அவனும் தலை கவிழ்ந்தபடி இருக்க கவிதா செல்ல எத்தனிக்க மித்து அழத்துவங்கினாள்…

பப்பு வேகமாக உள்ளே ஓடிச்சென்று இவ்வளவு நேரம் மித்து வைத்து விளையாடிய தன் மரபொம்மையை கொண்டுவந்து அவளிடம் நீட்டவும் அவளின் அழுகை மறைய சிரித்ததை கண்டதும் பப்பு “இத இனிமேல் பாப்பாவே வெச்சுகிட்டும்..” என்றுவிட்டு ஓரமாக சென்று படியில் அமர்ந்துகொண்டான்..

சந்தியா “அம்மா, பப்பு எவ்ளோ பாசமா இருக்கான்ல மா…உள்ளையுமே நான் மித்துவை பாத்துகல..அவன் தான் பாத்துகிட்டான்..பாவம்மா..கிளம்புறோம்னதும் ரொம்ப பீல் பண்றான்..”

பாலாவுக்குமே “ஆமா மா, எப்போவுமே சொன்னதும் கேட்டுப்பான்..அவன் இப்டி எல்லாம் யாருகிட்டேயும் இருக்க சொல்லி கேட்டு, பீல் பண்றது எல்லாம் இருக்கவே இருக்காது.. குட்டி குழந்தைய பாத்ததும் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருச்சு போல.. ஏன் மா கவிதா, வெங்கடாச்சலமும் வெளியூர் போயிருக்கிறதா சொன்ன? நம்ம சந்தியாவுக்கும் ஸ்கூல் லீவு..உனக்கும் வீட்ல தனியா இருக்கிற மாதிரி தானே இருக்கும்..நீயும் குழந்தைங்களோட இங்க வந்திட்டு சாயந்தரம்  போலாம்ல..” என கேட்டதும்

கவிதாவிற்கும் மறுக்க தோன்றவில்லை..சரி என்றாள்..

பப்புவிடம் “மிஸ்டர் பெரிய மனுஷா, நாளைக்கு காலைல வரோம் என்றதும் அவனும் குஷியாகினான்..

தினமும் அவர்கள் காலையில் வந்துவிட சந்தியா மட்டும் பிராக்டீஸ் இருப்பதால் 3 மணி நேரம் சென்றுவிட்டு வருவாள்..மற்ற நேரங்களில் மற்ற குழந்தைகளோட மித்துவும் வைத்து கலை, கவிதா அனைவரும் வேலை பார்த்துகொண்டே கவனித்து கொண்டனர். முக்கியமாக பப்பு தான் மித்துவுடனே திரிந்தான். அவள் சிறிது கலங்கினாலும் அவளை சிரிக்க வைக்க அத்தனையும் செய்தான்..

பாலகிருஷ்ணன் டொனேஷன் விஷயமாக வெளியே தான் அதிகம் வேலை இருந்தது..

கலை “அக்கா நான் போயி காய்கறியெல்லாம் வாங்கிட்டு வந்துடறேன்…”

“நீ மட்டும் எங்க கலை போற? நானும் வரேன் இரு”

“ஐயோ வேண்டாம் கா..பாப்பா வேற இருக்காளே..அவளை பாத்துக்கணும்ல?”

கவிதா “ம்ம்..இப்போ மட்டும் நானா அவளை பாத்துக்கறேன்..அதான் உன் மகன் பப்பு இருக்கானே..இப்போவே சாப்பாடு குடுக்க மட்டும் தான் அவகிட்ட போறேன்..அதையும் அவன் செஞ்சு பழகிட்டா என்னையும் பக்கதுலையே விடமாட்டான்..”

கண்ணம்மா பாட்டி “குழந்தைகளுக்கு குழந்தைங்க சீக்கிரம் ஒட்டிக்குங்க மா..கவிதா சொல்றது தான் சரி..கலை நிறையா சாமான் வாங்கணும்..கவிதா நீயும் சேந்தே போய்ட்டு வாங்க..இங்க இருக்கிற வேலைய நான் பாத்துக்கறேன்..புள்ளைய பப்பு பையன் பாத்துப்பான்…மத்த பசங்க எல்லாரும் கொஞ்சம் வளந்திடுச்சுல..அதுங்களா விளையாடிட்டு இருக்குங்க..நீங்க போய்ட்டு வாங்க..” என அனுப்பி வைத்தார்.

அவர்கள் திரும்பி வரும் போது சந்தியா வெளியே அமர்ந்திருக்க “என்ன டி வெளியே இருக்க, மித்துவ பாக்கலையா?”

“ம்க்கும்..நான் வரும்போது தான் பப்பு அவளுக்கு பால் குடுத்தான்..இப்போ அவனே தூங்க வெக்கிறேன்னு படுக்க வெச்சிட்டு பக்கத்துலையே உக்காந்திருக்கான்..”

அவர்களும் எட்டிப்பார்த்துவிட்டு சிரிப்புடன் “எப்டியோ உனக்கு வேலை மிச்சம்..”

சந்தியா “அது ஓகே…ஆனா மா பப்பு ரொம்ப கொடுமை பண்றான்.. யூரின் போனா கீழ பாய் இருந்தாலும் அந்த இடத்துல உக்கார வெக்க மாட்டானாம்..கேட்டா சளி புடிச்சிடுமாம்…அவ பொம்மையை தூக்கி வீசும்போதெல்லாம் கழுவிட்டு தொடச்சிட்டு தான் குடுக்கணுமாம்…அவ வாய்ல வெப்பா..மண்ணெல்லாம் இருக்கும்லனு சொல்றான்…அதுக்கு பொம்மையை கொஞ்ச நேரம் குடுக்காம விடுடானு சொன்னா ‘பாவம் கா பாப்பா அழுவுவா..அவளுக்கு அப்டி விளையாட தானே பிடிக்கும்..பரவால்லை நான் எடுத்து குடுக்கறேன்னு சொல்றான்..ஷ்ஷ்ப்பா…ரொம்ப தாங்குறான்..முடில..” என

கவிதா சிரிப்புடன் “இப்போ தெரியுதா? நீ என்னை இப்டி பாத்துகோ, அப்டி பாத்துகோனு சொல்லி இம்சை பண்ணும் போது எங்களுக்கும் இப்டி தான் இருக்கும்..”

“ஆனாலும் இவன் என்னை விட இம்சை மா..”

அன்று மதியம் அனைவரும் உண்டு விட்டு பேசிகொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து மித்துவை பார்க்க வந்தவள் மீண்டும் ஓடிச்சென்று “மா, மித்துகுட்டியும் பப்புவையும் காணோம்..”

“என்ன டி குழந்தைங்க எல்லாரையும் விட்ட ரூம்ல தானே விளையாடிட்டு இருந்தாங்க..வெளில வராண்டால இருக்க போறாங்க.. உன் தங்கச்சி பொம்மையை தூக்கி போட்டிருப்பானு அவன் முன்னாடி ஏதாவது எடுக்க போயிருப்பான்.. நல்லா பாரு..”

அவள் மீண்டும் சென்று பார்த்துவிட்டு “அம்மா, பொம்மை அங்கேயே தான் இருக்கு..இவங்களை காணோம்..” என்றதும், கவிதா, கலை, சந்தியா அனைவரும் பதட்டத்துடன் தேட சென்றனர்..

“காம்பௌண்ட் வேற இல்லாததால எங்கேயாவது போய்ட்டாங்களானு தெரில..யாராவது குழந்தைகள எடுத்து போயிருப்பாங்களோ?”

“சுத்தி வீடுங்க இருக்கற இடம்..யாரு வரப்போறாங்க..நாம இங்கேயே சுத்தி தேடிபாப்போம்..” என கலை, கவிதா பேசிகொண்டே தேட, அருகில் விசாரிக்க

சந்தியா “மா, பாப்பா இங்க இருக்கா..” என்றதும் அங்கே அனைவரும் விரைந்தனர்.

“இங்க எப்படி வந்தா..முழுக்க மரம் புதரா இருக்கு..”

“இதுல என்ன மா டவுட்..அதான் நீளமா ஒரே கோட்டுல இருக்கு..வராண்டாலையே வந்திருப்பா..முள்ளு ஏதாவது குத்திருக்கும் அதான் அழுத்திட்டே உக்காந்திருப்பா”

“ஆமாமா இவளோ தூரம் இருந்ததால குழந்தை அழுததும் நமக்கு கேட்டிருக்காது…அவளை அங்கிட்டு தூக்கிட்டு வா..”

“இந்த பப்பு பையன் எங்க போனான்..விட்டுட்டு போகமாட்டானே..”

“ஏதாவது பசங்களோட அந்த பக்கம் விளையாட போயிருப்பான்..”

“ஐயோ..மா..இவ ரொம்ப துள்ளுற..”

“கீழ போட்றாத டி..வேணா நாம இங்கேயே நின்னுக்கலாம்..அவளை வராண்டால இறக்கி விடு..”

இறங்கியதும் மீண்டும் மித்து அதே பள்ளம், புதர் இருக்கும் பகுதியை நோக்கி தவழ்ந்து போக மாற்றி மாற்றி தூங்கினாலும் யாருக்கும் அடங்காமல் அவள் கத்த அழுக அவள் பொம்மையை கையில் குடுத்ததும் அதை தூக்கி வீசினாள்..

கவிதா “என்னாச்சு இவளுக்கு..ஏன் இப்டி அழுகுறா..அடங்கமாட்டேங்கிறா..சந்தியா அந்த பொம்மையை எடுத்துட்டு வா.. பாத்து போ டி..”

சந்தியா பொம்மையை எடுக்க சென்றவள் “அம்மா, இங்க பப்பு உள்ள இருக்கான்..” என அவள் கத்த  மயக்க நிலையில் பள்ளத்தில் இருந்த பப்புவை கண்ட அனைவருக்கும் தூக்கிவாரி போட்டது.. அடுத்த சில நிமிடங்களில் ஆளுங்களை அழைத்து வெளியே எடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 11’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 11’

11 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   மித்ரன் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அவரை காண வந்தவர் “ஹலோ மிஸ்டர் மித்ரன்..ஹொவ் ஆர் யூ.?” “ஹலோ ராம் சார்..யா பைன்..பாக்கணும்னு சொன்னிங்க..” “எஸ் மேன்..ஒரு பெரிய ப்ரொஜெக்ட் வந்திருக்கு..உன்னோட கான்ஸ்டருக்ஷன்ஸ்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 21’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 21’

21 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஒரு முடிவுடன் காத்திருந்த சந்தியா, சிவா வந்ததும் “இங்க பாரு…” சிவா கையமர்த்தி “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு…இவளோ நேரம் நீ பேசுனது எல்லாம் நான் கேட்டிட்டு தான் இருந்தேன்..சோ அதே விஷயத்தை நீ

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 27’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 27’

27 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   “ஓகே ஓகே சொல்றேன்..சிவா, நம்ம பிரண்ட்ஸ், அம்மா அப்பா எல்லாரும் மேரேஜ்க்கு சொல்லிட்டே இருந்தாங்க..நானும் மேரேஜ் ஓகே சொன்னேன்..அன்னைக்கு ராத்திரி நான் மாடில தனியா நின்னுட்டு இருந்தேன்..அம்மா வந்து என்கிட்ட பேசுனாங்க..”