Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 17’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 17’

17 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

 

சந்தியாவும் அழுகையுடன் அவள் முதுகை வருடி கொடுத்தபடி “டேய் மித்து….இங்க பாரு…அழக்கூடாது..நான் உன்னை வம்பிழுக்க தான் டா கேட்டேன்..சரி என்ன பாரு..” என அவளை வலுக்கட்டாயமாக நிமிர்த்தியவள்

“என் மித்து குட்டி எப்போவுமே சிரிச்சிட்டே இருப்பா..நீ என்ன வந்ததுல இருந்து அழுத்திட்டே இருக்க? எனக்கு பிடிக்கல” என சீண்ட

மித்து “ம்ம்..எனக்கு கூட தான் நீ இத்தனை வருஷம் பேசாம உடம்பு சரில்லேன்னு ஓரமா போயி படுத்துகிட்டது பிடிக்கல..நான் அட்ஜஸ்ட் பண்ணிகல..நீயும் பண்ணிக்கோ..” என பழைய மித்து வெளியே வர

சந்தியா “அடிப்பாவி.. நான் என்ன போர் அடிக்குதுன்னாடி அப்டி இருந்தேன்?”

“யாருக்கு தெரியும்…ஆனா நீ ஜாலியா தானே இருந்த? இதோ இவங்க எல்லாரையும் வெச்சுகிட்டு நான் தானே கஷ்டப்பட்டேன்…” என

அனைவரும் இவளை அடிக்க வர ஓடிவந்து ஆதியின் பின்னே ஒளிந்துகொண்டவள் “ஏய் என்னடா புருஷன் நீ..பொண்டாட்டிய ஒரு ஊரே சேர்ந்து அடிக்க வருது..காப்பாத்தாம கல்லு மாதிரி நிக்கிற?”

“ஆமால..சாரி டா தியா மறந்துட்டேன்..கண்டிப்பா மத்தவங்களை உன்கிட்ட இருந்து காப்பாத்திடுறேன்..” என அவளை கிண்டல் செய்ய அனைவரும் சிரித்ததும் “உன்னை..”

சந்தியா “அடடா..வம்பிழுத்தது போதும் மித்து…மத்தவங்களையும் கொஞ்சம் பேசவிடு..” என

மித்ரனும் புன்னகையுடன் சந்தியாவிடம் நலம் விசாரிக்க அவளும் பேசிவிட்டு “உங்களை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே..” என

மித்ரன் “எனக்கும் சரியா ஞாபகம் இல்லை அண்ணி..ஆனா ஏதோ ஏற்கனவே பரிச்சயம் ஆனமாதிரி தான் தோணுது..”

கவிதா “சந்திமா உனக்கும் அப்படித்தானே தோணுது..எனக்கும் தான்..சொன்னா இதோ இந்த வாலு தான் கிண்டல் பண்ணும்..” என

மித்து “இதென்ன வம்ப்பா இருக்கு..தோணுனா கண்டுபுடிக்கணும்..இல்லை பதில் கிடைக்கறவரைக்கும் வெயிட் பண்ணனும்..”

கவிதா “உனக்கு தோணும் போது எப்படி கண்டுபுடிக்கிறேன்னு பாக்குறேன்..”

“ஹா ஹா ஹா..அதுக்கு தானே வேதாளம் மாதிரி தொத்தி இம்சை பண்ணி கல்யாணம் பண்ணியிருக்கேன்..”

சிவா “இம்சை பண்ணி கல்யாணம் பண்னேனு கரெக்டா சொன்ன மித்து..அதுதான் நிஜம்..” என எல்லாரும் சிரிக்க

“சிவா..நீ இன்னும் வளரவேயில்லை..எதையுமே லிட்டரால மீனிங் எடுக்ககூடாது..நான் அந்த அளவுக்கு ஆதிய லவ் பண்ணேன்னு சொல்றேன்..”

“ஓஹ்…” என அனைவரும் கத்த ஆதி மெல்லிய புன்னகையுடன் அமர்ந்தான்..

மகி “அவ்ளோ லவ்வோ?? எவ்ளோ பிடிக்கும்?”

“எவ்ளோன்னு சொல்ல தெரில..ஆனா ரொம்ப பிடிக்கும்…ரொம்ம்ம்ம்ம்ப்ப லவ்..” என அவள் சொல்வதை கேட்ட சந்தியா ஆதிக்கு எதிரே அமர்ந்தவள் “ஏன் மித்து மா..அப்டின்னா உனக்கு அக்கா ரொம்ப பிடிக்குமா? ஆதி ரொம்ப பிடிக்குமா?” என வினவ நடுவே அமர்ந்திருந்த மித்து திருதிருவென விழிக்க ஆதியை பார்க்க “ம்ம்..பதில் சொல்லு..” என

மித்து “இரண்டுபேருமே..”

“யாரு பஸ்ட்டு..அத சொல்லு என சங்கர், சிந்து, மகி, சிவா” அனைவரும் சொல்ல ஏதோ சண்டைக்கு கேட்பவர்கள் போல சந்தியா, ஆதி இருவரும் எதிரெதிரே அமர்ந்துகொண்டு சீரியஸக வினவ அவளுக்கு பதில் சொல்லமுடியாமல் இருவரையுமே பாவமாக பார்த்தவள் “எனக்கு அப்டி பிரிச்சு பாக்க எல்லாம் தெரியாது..ஆனா இரண்டு பேரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும்..” என அவள் கைகளை இறுக்கிகொள்ள வாய் பிதுங்க அழபோகிறாள் என அறிந்த இருவரும் எழுந்து வர “மித்து குட்டி”, “தியா மா” என அழைப்பில் நிமிர்ந்தவள் “சும்மா தான் உன்கிட்ட கேட்டோம்..எனக்கு என் தங்கச்சி பத்தி தெரியாதா?” என நெற்றியில் முத்தமிட “அப்போ ஆதி?” என

“அவரும் தான்..” என

ஆதியும் “என் தியாவா இது..சட்டு சட்டுனு அழுகுறது, பேசாம அமைதியா இருக்கறது..” என கீழே குனிந்து முகம் பார்த்து கிண்டல் செய்ய “உன்னை..போ ஆதி..” என அடித்துவிட்டு அவன் மார்பிலே சாய்ந்துகொள்ள

“போ னு சொல்லிட்டு யாராவது இப்டி இறுக்கி பிடிச்சுப்பாங்களா?”

நிமிர்ந்து பார்த்தவள் “ம்ம்..நான் பண்ணுவேன்..” என மீண்டும் சாய்ந்துகொள்ள

அவனும் புன்னகையுடனே “பைத்தியம் தான் நீ” என அணைத்துகொண்டான்.. அனைவரும் சாப்பிட போகலாம் என நகர இறுதியாக மித்ரன், மித்ரா இருவரும் சென்றனர்..

“தியா, இதுக்கு எல்லாம் ஏன் டா அழுகுற?”

“அது..யாராவது ஒருத்தர் சொல்லு சொல்லுன்னு சொல்ராங்க..சொல்லி கோவிச்சுப்பீங்களோனு பயமா இருந்தது..ஆனா எனக்கு 2 பேருமே தான் இம்பார்ட்டண்ட்..அதான்..” என அவள் திணற

“இங்க பாரு….அது எங்களுக்கும் தெரியும்..ஒருவேளை அப்டியே நீ அவங்களையோ வேற யாரையுமே கூட என்னைவிட பிடிக்கும்னு சொன்னாலும் நான் உன்கிட்ட கோவிச்சுக்க எல்லாம் மாட்டேன்..என் தியாவ பத்தி எனக்கு நல்லா தெரியும்..நீ ரொம்ப போட்டு கொழப்பிகிட்டு ஸ்ட்ரைன் பண்ணிக்காம இரு..” ஓகேவா என அவளும் மகிழ்வுடன் தலையசைத்தாள்..

 

மறுநாள் சத்தம் கேட்டு எழுந்த மித்ரன் “ஹே தியா..”

“ஐய்..ஆதி எந்திரிச்சிட்டியா?”

“எந்திரிக்கல..நீ எழுப்பி விட்டுடனு சொல்லு..”

அவள் இடுப்பில் கைவைத்து ஓரக்கண்ணில் முறைக்க

“எல்லாரையும் பாத்த குஷில என்ன காலையிலேயே உருட்டிட்டு இருக்க..தூங்கலையா?”

“ம்ம்…என்னை கிண்டல் பண்றத விட்டுட்டு சீக்கிரம் குளிச்சுட்டு ரெடி ஆகு..சாமி கும்மிடனும்..”

“என்ன விசேஷம்..திடிர்னு?”

“வருஷாவருஷம் நம்ம குடும்பத்துல இறந்தவங்க எல்லாருக்காகவும் சேத்தி படையல் வெச்சு சாமி கும்பிடுவோம்…சோ கேள்வியா கேக்காம குயிக்கா வா…”

அவனும் புன்னகையுடன் தயாராகி வந்தான்…மித்ரனின் அம்மா படமும் அங்கே இருக்க “தியா, இது எப்படி?”

கண்சிமிட்டி “ஊர்ல இருந்து சுட்டுட்டு வந்துட்டேன்..மகன் தான் பொறுப்பே இல்லாம இவளோ நாள் இதெல்லாம் செய்யல..மருமகளும் செய்யாம இருந்தா நல்லா இருக்குமா? அதான் அத்தைக்கும் படையல் வெக்க நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்.. ” என

புன்னகையுடன் அதை ஏற்றுகொண்ட ஆதி சாமி கும்பிட்டு வெளியே வந்ததும் அவளிடம் “ஆனா தியா எனக்கு இதெல்லாம் தெரியாது..அதான் செய்யல..செய்யகூடாதுனு இல்லடா..” என கூற தியாவிற்கு தான் என்னவோ போல் ஆகிவிட்டது.

“ஆதி..நான் அப்டி மீன் பண்ணல..அது..சாரி ஆதி..” என அவள் தயங்க

“ஹே, தியா இங்க பாரு..நீ சொன்னதை நானும் தப்புனு சொல்லல..நீ எப்படி சொல்லிருப்பேனு எனக்கு தெரியும்..”

தலை கவிழ்ந்து அவள் மௌனமாக இருக்க

அருகே வந்தவன் அவளை நிமிர்த்தி “என்ன இருந்தாலும் அம்மாக்கு மருமக தான் ரொம்ப இஷ்டம் போல..நீ வந்துதான் எல்லாமே பண்ணனும்னு இருக்கு..ம்ம்..” என கிண்டல் செய்ய அவளும் சிரிப்புடன் “பொறாமை படாத செல்லம்” என கன்னம் தட்டிவிட்டு ஓடிவிட்டாள்..

 

சந்தியா அப்போது தான் கலைவாணியின் படத்தை பார்த்தவள் “மித்து இவங்க?”

“அவங்க தான் ஆதியோட அம்மா…” என

சந்தியா ஆச்சரியமாக பார்த்து விட்டு “மா..மா…கலை ஆன்ட்டி மா”

அவரும் ஆச்சரியமாக என்ன டி சொல்ற?

“மா..மித்ரனோட அம்மா போட்டோ பாருங்க..நம்ம கலை ஆன்ட்டி தானே மா?”

அவரும் “அட ஆமா டி..நானும் அப்போ அவசரத்துல சரியா கவனிக்காம விட்டுட்டேன்..அதனால தான் மித்ரனை எங்கேயோ பாத்த மாதிரி இருந்திருக்கு..” என

மித்து, மித்ரன், சிவா, வெங்கடாச்சலம் அனைவரும் புரியாமல் என்னவென்று விசாரிக்க கவிதா “தங்கமான மனுஷி..அவளோ சீக்கிரம் போயி சேந்துட்டாளேன்னு நினைக்கும் போது தான் வருத்தமா இருக்கு..”

“மித்ரன் அப்போ அந்த பப்பு?”

“ம்ம்..ஆமா அத்தை நான்தான்..அம்மா இருந்தவரைக்கும் அப்டித்தான் எல்லாரும் கூப்பிடுவாங்க..” என்றான் மித்ரன்.

சந்தியா “சொன்னமாதிரியே நீயே மித்துவை கல்யாணம் பண்ணிட்ட பாத்தியா?” என கிண்டல் செய்ய

மித்ரன் குழப்பமும் ஆச்சரியமுமாக “அண்ணி, அத்தை நீங்க எல்லாரும் என்ன சொல்றிங்க..நான் எப்போ?”

“ம்ம்..நாலு வயசுல..மிட்டுபாப்புவை பத்திரமா பாத்துகோங்க..பெரியவனாகி வந்து நானே அவளை கூட்டிட்டு போயி சூப்பரா பாத்துகறேன்னு சொன்ன..” என்று அதே இமிடேட் பண்ணி சொல்ல அனைவரும் இதெல்லாம் எப்போ எப்படி நடந்தது?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 23’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 23’

22 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   “எக்ஸாம் ரிசல்ட்க்கு வெயிட் பண்ணுற மாதிரி ஏன் இவளோ டென்ஷன இருக்க…ஜஸ்ட் பீ ரிலாக்ஸ்…” “கிண்டல் பண்ணாத ஆதி….அக்கா ஓகே சொல்லிடுவாள்ல? சிவா எதுவும் கோபப்பட்டு வரமாட்டான்ல?” வெளியே வந்த சிவா

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 1’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 1’

அன்பு அரவணைப்பு ஏதுமின்றி யாருமற்று தனிமரமாய் வளர்ந்து  தனக்கென்று பாதையை அமைத்து விருட்சமாய் வாழ்வில் தன்னோடு பிறரையும் முன்னேற்ற எண்ணும் நாயகன். தன் வாழ்க்கை பாதைக்கு   தனியாளாய் இருப்பதே சிறந்தது என்ற எண்ணத்தோடு வாழ்பவன். உறவு நட்பு என சுற்றம் சூழ

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 26’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 26’

26 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   “அன்னைக்கு ராத்திரியே…உன்னை விட்டுட்டு கொஞ்ச தூரம் நடந்து போனான்..கொஞ்ச நேரம் யோசிச்சேன்..நேரா சிவா வீட்டுக்கு போனேன்..” “அந்த நேரத்துலையா? அதுவும் சிவா பாக்க?” என ஆச்சரியமாக கேட்க “ம்ம்..அப்போவே தான் போனேன்…நான்