Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 15’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 15’

15 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

 

காலையிலேயே அனைவரும் எழுந்து வேலை செய்ய எங்கேயோ கிளம்ப சிந்து, சங்கர், கவிதா அனைவரும் வந்து எழுப்பியும்  “கடைக்கு நீங்களே போயிட்டு வாங்க மா..எனக்கு சொகமா தூக்கம் வருது..நான் இப்டியே இருக்கேன்..” என அவர்கள் கூற வருவதையும் கவனிக்காமல் இழுத்து போர்த்திகொண்டு மித்து மீண்டும் தூங்கினாள்..

“இது சரி வராது…” என்ற கவிதா “சிந்து மித்ரனுக்கு கால் பண்ணு..”

“ம்ம்..பண்ணுங்க..பண்ணுங்க..என் ஆதி எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவான்..” என போர்வைக்குள் இருந்து வாய்ஸ் வர கவிதா அவனிடம் பேசிவிட்டு “இந்தாடி போன்ல பேசு” என்றதும்

“ஹலோ ஆதி..எனக்கு டயர்ட்டா இருக்கு..நீயே சொல்லு..என்னை துங்கவிடமாட்டேங்கிறாங்க…” என புகார் சொல்ல

“சரி ஒன்னும் பிரச்னை இல்லை..அப்போ வெட்டிங் பார்ச்சஸ் எல்லாம் நாங்க எல்லாருமே முடிச்சிட்டு வந்துடறோம்..நீ தூங்கு” என்றதும் விருட்டென்று எழுந்தவள் “என்ன வெட்டிங் பார்ச்சஸ்..?”

“ஆமா..நம்ம மேரேஜ்க்கு தான்…அண்ட் அவங்க எல்லாரும் நேரா ஷாப் வந்துடுவாங்க..நானும் நீயும் கோவிலுக்கு போயிட்டு கடைக்கு வரசொன்னாங்க..நீ ஆசைபடுவியேனு தான் நம்ம 2 பேரும் பைக்ல பிளான் ஓகே சொன்னேன்..பரவால்ல..உனக்கு தூக்கம் வருதில்ல..தூங்கு..” என போன் வைக்க போக

“ஆதி..இல்லைஇல்ல…நானும் வரேன்..”

“பட் தியா நான் இன்னும் 20 மினிட்ஸ்ல அங்க வந்துடுவேன்..நீ எந்திரிச்சுகிளம்பி டைம் ஆகுமே..”

“நான் 15 மினிட்ஸ்ல ரெடி ஆகிடறேன் ஆதி..” என மொபைல்லை அவள் அம்மாவிடம் தந்துவிட்டு ஓடி சென்று பாத்ரூமில் புகுந்துகொண்டாள்..

கவிதா சிரிப்புடன் “சரிப்பா…நீ பொறுமையா வா..இங்கேயே வந்து சாப்பிட்டுக்கலாம்..” என

“ஆ..இல்லமா..மோர்னிங் பாலா மாமா இங்க சாப்பிட்டு போக சொல்லி கேட்டாங்க..நான் மதியம் நைட் அங்க சாப்பிட்டுகிறேன்..நீங்க எதுவும் நினச்சுகலேல..”

“ச்ச..ச்ச..இதுல என்னப்பா இருக்கு..நீ இவ்ளோ பார்மலா எல்லாம் யோசிச்சு யோசிச்சு பேசாத..உனக்கு என்ன தோணுதோ சொல்லு..உன் இஷ்டப்படி இரு..” என்றதும்

“ம்ம்..ஓகே மா..” என போன் வைத்தான்.

 

சொன்னது போலவே அவள் தயாராகி இருக்க மித்ரன் வந்ததும் கிளம்பலாமா? என்றவளை கண்டு அனைவருக்கும் சிரிப்பு தான் வந்தது.. அவனும் புன்னகையுடன் “கிளம்பலாம் வந்து முதல சாப்பிடு வா..”

“டைம் ஆகும்னு விட்டுட்டு போகமாட்டேல ..”

“அதெல்லாம் இல்லை..வா…எப்போவும் போல கொஞ்சம் பொறுமையாவே சாப்பிடு..நான் வெயிட் பண்றேன்..” என அமர

சங்கர் “ஆமா மாமா..நீங்க வேற இப்டி விட்டிங்கன்னா அவ உக்காந்த இடத்தை விட்டு எந்திரிக்கவே மாட்டா தின்னுகிட்டே இருப்பா..” என கிண்டல் செய்ய

மித்து “டேய் போடா…எப்போவுமே சாப்பிடும் போது அதை ரசிச்சு நல்லா மென்னு தான்டா சாப்பிடணும்..அப்போதான் எந்த ப்ரோப்லேமும் உடம்புல வராது..இப்போ இருக்கற காலத்துல நமக்கு சாப்பிடறதே ஒரு வேலை மாதிரி எல்லாரும் வேக வேகமா செஞ்சிட்டு சாப்பிட்டு போறாங்க..சாப்பாடே கிடைக்காத போது தான் அதோட அருமை தெரியும்..நமக்கு அது கிடைக்கும் போது அதை மதிக்கணும்டா..ஏனோ தானோனு குறை சொல்லிட்டே இல்லை வேஸ்ட் பண்ணிட்டு அவசரமா என்ன சாப்புடுறோம்னு கூட தெரியாம உன்னை மாதிரி மொபைல் பாத்துட்டு சாப்புட்றது எல்லாம் எனக்கு இஷ்டமில்ல….ரசிச்சு சாப்பிட்டு பாரு அதுல இருக்கற சொகமே தனி..” என அவள் கூறுவதை கவனித்தவனுக்கு ‘நமக்கு கிடைக்கிற சாப்பாட்டை நாம எப்போவுமே மதிக்கணும்னு’ சொன்ன தன் அம்மாவின் நினைவு வர அப்டியே உட்கார்ந்திருந்தவனை வெங்கடாச்சலத்தின் அழைப்பு திசை திருப்பியது..”என்னாச்சு மாப்பிளை?”

“தியா சொன்னதை கேட்டேன்.. அம்மா ஞாபகம் வந்திடுச்சு” என்றான்.. அவருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை..

சிறிது நேரத்தில் அனைவரும் கிளம்பினர்.. மித்ரன் அனைத்து இடங்களுக்கும் உடன் வந்தானே தவிர எதையும் அவன் எடுக்கவில்லை..”எனக்கு இதெல்லாம் சூஸ் பண்ண தெரியாது தியா..உனக்கு என்ன பிடிச்சிருக்கோ நீ எடுத்துக்கோ…” என்றான்..

அவளும் சரியென்றுவிட்டாள்..அதன் பின் யாரும் அவனை தொந்தரவு செய்யவில்லை..

வீட்டிற்க்கு திரும்பி வந்ததும் யார் யாருக்கு எந்தெந்த டிரஸ் என காட்டினாள்..”இது சந்தியா அக்காவுக்கு” என கூறியவளின் கண்களில் நீர் துளிர்க்க அனைவரும் ‘மித்து நீ பீல் பண்ணாத டா..என கூறவும் “இல்லை..ஒன்னுமில்ல..சாரி..” என எழுந்து மாடிக்கு சென்றவளை கண்டு அனைவருமே கலங்கினர்..

மித்ரன் மேலே சென்றவன் வெளியே வெறித்துகொண்டிருந்தவளை பார்த்தவன் “தியா”

“ம்ம்…ஆதி..” என திரும்ப அவன் இவளின் கண்களை பார்த்தவன் இறுக்கமாக மடக்கிய கைகளை விடுவித்தவன் தன் கைக்குள் அதை வைத்துகொண்டு “எல்லாமே அக்காகிட்ட சொல்லி ஷேர் பண்ணுவியே..இப்போ மட்டும் என்ன? புது டிரஸ் அதுவும் மேரேஜ்க்கு…இத அக்காகிட்ட சொல்லாம இருக்கலாமா? ம்ம்?”

“ஆதி” என அவனை கட்டிக்கொண்டு அழுதாள்..

“என்னை பாத்து பாத்து வளத்தின அக்கா என்னோட ஒவ்வொரு விஷயத்துலையும் அவ பங்கு இருக்கணும்னு நினச்சேன்..ஒரு ஒரு தடவையும் அவ இன்னைக்கு சரி ஆகிடுவா நாளைக்கு சரி ஆகிடுவானு ரொம்ப எதிர்பார்ப்பேன்..அப்போ எல்லாம் அவ எனக்கு திருப்பி ரியாக்ட் பண்ணமுடிலேங்கிறது எனக்கு ஒரு விஷயமாவே தெரியாது ஆதி..ஆனா இப்போ என் வாழ்க்கைல எவ்ளோ முக்கியமான விஷயம் நடக்க போகுது..அதை அவ பாக்கணும் கலந்துக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு..அதை விட அவ நல்லா இருந்திருந்தா இந்நேரம் அவளுக்கும் கல்யாணம் ஆகி அவ குழந்தைய நான் வளத்திருப்பேன்ல..அதெல்லாம் எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு…அம்மா அப்பா அவங்களுக்கும் இதே ஏக்கம் இருக்கும்ல…ஆனா..” என அவள் மீண்டும் அழ

அவளது முதுகை வருடிகொடுத்தவன் “தியா..இங்க பாரு..இவளோ யோசிக்கற நீ இப்போவும் நீ பீல் பண்ணா அவங்களும் அதை விட பீல் பண்ணுவாங்கங்கிறத மறந்துட்டியா? முக்கியமா உன் அக்கா..அவங்களால திருப்பி உனக்கு ரியாக்ட் தான் பண்ணமுடிலையே தவிர எல்லாமே அவங்களுக்குள்ள போயிட்டேதான் இருக்கும்..உன் சந்தோசம் வருத்தம் எல்லாமே தான்..இவளோ காலம் நம்பிக்கையோட இருந்த நீ இப்போ மட்டும் ஏன் தயங்குற? நீதானே சொன்ன மத்தவங்களுக்கு பிரச்னை இல்லாத எந்த விஷயத்தையும் முழு மனசோட ஆசைப்பட்டா அது நடக்கும்னு..கொஞ்சம் கூட பின்வாங்காத சந்தேகம் இல்லாத என்ன ஒரு நம்பிக்கை ..தைரியம்…உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே அதுதான் தியா…நீ எப்போவுமே அப்டித்தான் இருக்கணும்..உன் அக்காவும் அதேதானே ஆசைப்படுவாங்க..அவளது வடிந்த கண்ணீரை துடைத்துவிட்டவன் போயி அக்காவ பாத்துட்டு வா..எப்போவும் போல..” என அவளும் புன்னகையுடன் நம்பிக்கையுடன் “ம்ம்” என மீண்டும் கீழே வந்து அக்கா பாக்க போலாம் என்றாள்..

இரண்டரை வருடம் முன்பு தான் மலைப்பிரதேசம் போன்ற இடங்களில் இருக்கும் போது அவர்கள் புத்துணர்வு பெற வாய்ப்புள்ளது என கூறியதால் அங்கேயே வைத்து சித்தா முறையில் சிகிச்சை அளித்தனர். அவ்வப்போது சென்று பார்த்துவிட்டு வருவர். இப்போதும் செல்ல முடிவெடுத்தனர்..மித்ரன் இங்கே மற்ற வேலைகளை பார்த்துகொள்வதாக கூறிவிட சிவா, மித்ரா, கவிதா, வெங்கடாச்சலம் மட்டும் கொல்லிமலை சென்றனர்.

அடுத்த நாள் திரும்பி வந்தவள் நேரே ஆதியிடம் வந்து கட்டிகொண்டு “ஆதி நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்.. மோர்னிங் வந்ததும் அப்டியே உன்கிட்ட தான் சொல்லணும்னு வந்துட்டேன்.. அக்காவுக்கு முன்ன இருந்ததைவிட இம்ப்ரூவ்மென்ட் இருக்குன்னு சொல்லிருக்காங்க..சோ வீட்லயே வெச்சு பாத்துக்கலாம்…அவங்களுக்கு சீக்கிரமாவே முழுசா குணமாகிடுவாங்கனு சொல்லிருக்காங்க…சோ இப்போ அக்கா வீட்ல..தேங்க் யூ சோ மச்…” என

அவனும் புன்னகையுடன் “எனக்கு எதுக்கு தேங்க்ஸ்…எல்லாமே உன் நம்பிக்கை தான்..ஹாப்பியா இரு…”

“பாலா அங்கிள் இருந்தா இதை அவர்கிட்ட முதல சொல்லணும்..”

“வா..” என அழைத்துச்சென்று அவரும் அனைத்தும் கேட்டு விட்டு மகிழ்வுடன் ஆசிர்வதித்து அனுப்பிவைத்தார்..

 

“தியா நம்ம மேரேஜ் எங்க? எப்போ?னு உன்னை தவிர எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கு..நீ என்கிட்ட கேக்கவேயில்லை…?” என

அவள் புன்னகையுடன் “சோ வாட் ஆதி…என் ஆசைப்படி நமக்கு கல்யாணம்..எங்க எப்போங்கிறது உன் விருப்பம்னு அப்போவே சொன்னேனே..அப்புறம் ஏன் அதுல குழப்பிக்கபோறேன்…இப்போவும் சொல்றேன்..உனக்கு எது ஓகேனு தோணுதோ நீ அதை பண்ணு..எப்படியும் உனக்கு ட்ரீம்ஸ் வராது..அதை உனக்கும் சேத்தி நான் பாத்துக்கறேன்…” என கூறிவிட்டு அவளும் சென்றுவிட புன்னகையுடன் இவனும் அடுத்து செய்யவேண்டிய வேலைகளை தொடர்ந்தான்..

அடுத்த இரண்டு நாளில் கல்யாணம் என இருந்தது..முந்திய நாள் இரவு எப்போதும் போல “தியா நாளைக்கு கொஞ்சம் சீக்கரம் எந்திரிச்சு ரெடியாகிடு..”

“ஏன் ஆதி ஊருக்கு போறோமா?”

“ம்ம்..கல்யாணம் பண்ணிக்க போறோம்..”

“வாவ்..நாளைக்கு தானா..ஒருவழியா மனசு வந்து சொல்லிட்டியா? எனிவே வாழ்த்துகள் மிஸ்டர்.மித்ராதித்தன்… சரி பேச்சுலர் பார்ட்டி தர மாட்டியா?”

“அடிப்பாவி..பசங்க கூட என்கிட்ட கேட்கல…உன்னை..”

“நான் என்ன பண்ணுவேன்..அவனுகளுக்கு பொறுப்பில்லை..”

“ம்ம்..ஒரு வாரத்துல மேரேஜ்னு எல்லாரும் டென்ஷனா வேலைல சுத்திட்டு இருக்காங்க..உனக்கு கொஞ்சமாவது ஏதாவது தோணுதா?”

“எனக்கு எதுக்கு டென்ஷன்..அதான் நீ இருக்கியே ஆதி…நான் உன்னை அவ்ளோ நம்புறேன்…அவ்ளோ லவ் பண்றேன்…உனக்கு தான் என் மேல பாசம் கம்மியா இருக்கு..இல்லாட்டி நான் கேட்டதும் எனக்கு பார்ட்டி குடுத்திருப்பேல்ல..யூ நோ சம்திங்..கல்யாணத்துக்கு முன்னாடி வருங்கால மனைவியோட பார்ட்டி செலிப்ரேட் பண்றதும் இப்டி பிரீயா விடுற மனைவி உனக்கு எங்க கிடைப்பா..அதெல்லாம் ஒரு வரம்..உனக்கெங்க புரியப்போகுது..” என பெருமைபேச

“ம்ம்..எல்லாம் என் நேரம்..அதுக்கு மேடம் என்ன எதிர்பார்க்கிறிங்க? ட்ரிங்ஸா..அடிபிச்சிடுவேன்..” என்றான் ஆதி..

தியா கீழே குனிந்தபடி “இவன் இவளோ நல்லவனா இருந்தது இப்போ பிரச்னையா இருக்கே..ச்ச… சரி சரி அட்லிஸ்ட் ஐஸ் கிரீமாவது வாங்கி தா..” என பெருந்தன்மையுடன் வாங்கிகொண்டாள்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 10’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 10’

10 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   அடுத்து வந்த காலங்களில் எப்போதும் போல படிப்பு காலேஜ் அவ்வப்போது சில பேச்சுகள் பிரச்சனைகள் என சாதாரணமாக சென்றுகொண்டிருக்க அடுத்த ஒரு வருடம் கண்ணிமைப்பதற்குள் ஓடிவிட இறுதி செம் வந்தது. ஆனால்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 25’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 25’

25 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் மகேஷ், “ஆமாமா மித்து அங்கிருந்திருந்தா என்ன சொல்லிருப்ப?” “சொல்லுங்க சொல்லுங்க மாமா..லாஸ்ட்ல கரென்ட் போயிடிச்சு..” “என்ன பதில் சொன்னிங்க?” என ஆளாளுக்கு சுற்றி நின்று ஆர்ப்பரிக்க மித்ரன் புன்னகையுடன் தியாவின் நெற்றியில் முத்தமிட்டு

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 12’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 12’

12 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   சாப்பிடும் இடத்தில் ஒரு குழந்தை ஐஸ் கிரீம் கேட்டு அடம்செய்ய அவர்கள் காய்ச்சல் வரும் என தர மறுத்தனர்…இதேபோல மித்துவுடன் இருக்கும் போது நடந்து நிகழ்வு அழையா விருந்தாளியாக அவனுள் வந்தது.