Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 14’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 14’

14 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

 

மறுநாள் கால் வர “ஹலோ..”

“குட் மோர்னிங் இன்னும் 2 மினியானும் எந்திரிகலையா?”

“ஹா ஹா ஹா..பெருசு ஆதி எழுப்பறதுகாக வெய்ட்டிங்…எழுப்பிட்டா இன்னொன்ன அது பாத்துக்கும்..”

“சரி..எந்திரிச்சு பிரெஷ் ஆகிட்டு உன் பிரெண்ட்ஸ்கூட போயி சாப்பிடு..”

“என்ன..அப்போ நீ வரலையா? என்ன ஆதி?” என சிணுங்க

“ஆ..அது கொஞ்சம் வேலையா வெளிய வந்துட்டேன்..நான் முடிச்சிட்டு அங்க வரேன்..”

“ஒஹ்ஹ..சரி..” என்றாள்.

பல மணிநேரம் கழித்து மீண்டும் கால் செய்து என்ன செய்கிறாள் ஏது என விசாரிக்க அவள் பதில் கூறிவிட்டு “இங்கேயும் எல்லாரும் பப் போலாம்னு போய்ட்டாங்க..எனக்கு இஷ்டமில்லை…நீ எப்போ ஆதி வருவ? உண்மைய சொல்லு…இந்த டார்ச்சர இங்க இருந்து தொரத்தமுடியாதுனு நீயே இங்கிருந்தும் எங்கேயேவாது சொல்லாம கொள்ளாம போக பிளான் பண்ணிட்டியா?” என சந்தேகிக்க

ஆதி “ஹா ஹா ஹா..உனக்கு எப்படி இப்டி எல்லாம் தோணுதோ தெரில..அன்னைக்கு வேணாம்னு சொன்னபோதே அவ்ளோ யோசிச்சு யோசிச்சு போனேன்.. இப்போ வேணும்னு சொல்லிருக்கேன்..எப்படி விட்டுட்டு போவேன் சொல்லு..”

“ம்ம்…கரெக்ட் தான்..ஆ…இதெல்லாம் தெளிவா தான் சொல்ற..ஆனா ஆளே காணோமே..எப்படியும் ஆபிஸ் ஒர்க் இல்லேனு தெரியும்..வேற எதுன்னாலும் என்னை கூட்டிட்டு போயிருக்கலாம்ல..என் பெர்த்டே வேற..இங்க எனக்கு ரொம்ப கிளோஸ இருக்கறது நீதான்..உன்கூடவாது இருந்திருப்பேன்ல..அதான் கேட்டேன்..” என அவள் உண்மையான ஆதங்கத்துடன் வினவ

“வரேன் மா…சீக்கரம் வந்தடறேன்..”  என நிதானமாக கூறி வைத்தான்..

அடுத்த ஒரு மணி நேரத்தில் கால் செய்து “தியா நான் இன்னும் 30 மினிட்ஸ்ல அங்க இருப்பேன்..”

“வாவ்..சூப்பர்…இன்னைக்கு என்னை எங்க கூட்டிட்டு போற?”

“ம்ம்..சொல்றேன்..பட் டிரஸ் எல்லாம் பேக் பண்ணி ரெடியா இரு..”

“ஆ..”

“எதுவும் பேசாத..சீக்கிரம் ரெடி ஆகு..நான் வந்ததும் கிளம்பணும்..” என போனை வைத்துவிட்டான்..

ரோபோக்கு நட்டு ஏதாவது கலண்ட்ருச்சா? சரி நமக்கு என்ன கிளம்புவோம்..என அவன் தயாராகினாள்.

அவன் வந்ததும் சொன்னது போலவே  இருவரும் கிளம்பினர்..ஆனால் மித்துவின் கேள்விகள் நின்றபாடில்லை..

“எங்க ஆதி போறோம்? ட்ரிப்பா? எங்க? இல்லை யாராவது பாக்க போறோமா? அதுக்கு எதுக்கு டிரஸ்?

அதுவும் இல்லாட்டி ஒருவேளை நீயும் நானும் ஓடிபோகப்போறோமா?”

அவளே தொடர்ந்து “வீட்ல இருந்தாத்தானே ஓடிபோகணும்..இப்போ நம்ம ஆல்ரெடி வெளியூர்ல தானே இருக்கோம்..அவன் திரும்பி ஒரு லுக் விட

அப்போ அதுவும் இல்லாட்டி ‘ஹே ஆதி என்னை உன் வீட்டுக்கே கூட்டிட்டு போக போறியா? ஜாலி ஜாலி..ஆனா உன் வீடு அந்த பக்கம் தானே சொன்ன? இங்கிட்டு எதுக்கு போறோம்? இறுதியாக அவன் அருகில் ரகசியம் போல ‘யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்க போறோமா?’ என அவள் கண்ணடிக்க அவன் இவள் தலையில் ஒரு கொட்டுவைக்க “ஆ…என்ன ஆதி..”

“பின்ன…எப்படி எல்லாம் உன் மைன்ட் போகுது? ஓடிப்போறது, திருட்டுத்தனமா மேரேஜ் பண்றது, இதுல மேரேஜ்கு முன்னாடி உன்னை கூட்டிட்டு போயி என் ரூம்ல தங்க வெச்சுப்பேன்னு..நல்லா இன்னும் நாலு போடணும்..”

 

தியா முகம் சுருங்க தலையை தேய்த்துகொண்டே “பின்ன எவ்ளோ கேட்டாலும் சொல்லமாட்டேங்கிற..எனக்கு தோணுனது எல்லாமே கேட்டு தானே ஆகணும்..”

இரண்டு நிமிடம் அமைதியாக இருந்தவள் அவன் ஏர்போர்ட்டில் வண்டியை நிறுத்தவும் “ஆதி..ஏர்போர்ட்க்கா..என்னை கொண்டுபோயி ஊர்ல விடப்போறியா? இல்லையே உன் லக்கேஜ்ஜூம் இருக்கே..அப்போ 2பேருமே போனா அய்யய்யயோ ஒர்க் இருக்கே..” என அவள் கேட்க பதற

 

ஆதி “ஐயோ தியா எப்படி நீ இப்டி இருக்க? பேசாம உன்னால இருக்கவே முடியாதா?”

 

“ஐயோ ஆதி உன்னால எப்படி இப்டி இருக்க முடியுது? நீ பேசவே மாட்டியா?” என அதே போல இவளும் கேட்க அவன் அவளை முறைக்க

 

“ம்ம்..பாத்தியா..இப்டி தான் எங்களுக்கும் கோபம் வரும்..அது அது அவங்கவங்க நேச்சர்…பதில் சொன்னா நான் ஏன் இவளோ பேசப்போறேன்…” என அவள் சிலுப்பிகொள்ள அவனுக்கு சிரிப்புதான் வந்தது..

 

“ஓகே ஓகே..இங்க பாரு..நாம போர்டிங் முடிஞ்சு உள்ள போயி உக்கார வரைக்கும் அமைதியா இரு..அப்புறம் பதில் சொல்றேன்…” என

அவளும் பயங்கரமாக யோசித்துவிட்டு “சரி இவ்வளோ கெஞ்சி கேக்குற..ஓகே..” என ஸீன் போட்டுவிட்டு சென்றாள்…

சொன்னது போலவே அனைத்தும் முடிந்து உள்ளே சென்று அமரும் வரை சமத்தாக இருந்தவள் அமர்ந்ததும் “ம்ம்…இப்போ சொல்லு ஆதி..”

அவன் புன்னகைக்க இவள் முறைக்க “சரி சரி…நாம இப்போ இந்தியா போறோம்…இங்க ஒர்க் எல்லாம் 2பேருக்குமே பேசிட்டேன்..1 வீக் கழிச்சு தான் வரோம்னு சொல்லிருகேன்..போதுமா?”

“ஐய்….வீட்டுக்கு..ஆ.. ஓகே..” என மௌனமானவள் சிறிது நேரம் அவள் பாட்டுக்கு இருக்க அவளை பார்த்தவன் “ம்ச்ச்…தியா..என்னது?” என கையை தட்டிவிட்டவன் “இப்போ எதுக்கு நகத்தை கடிச்சிட்டே இருக்க”

“அது..யோசிக்கறேன்ல..அதான்..”

“எதைப்பத்தி?”

“நம்ம மேரேஜ் பத்தி.. வீட்ல சொல்றதுக்கு..” என மீண்டும் கை வாயருகே செல்ல அவன் தடுத்தவன் “ஏன் அன்னைக்கு அவளோ சொன்ன..இப்போ என்ன இவளோ டென்ஷன் பயம்…ஒருவேளை ரொம்ப தயக்கமா இருந்தா அப்புறமாகூட பாத்துகலாம்..இப்போ போயி பாத்துட்டு மட்டும் வரலாம்..” என

 

“ச்ச..ச்ச..அதெல்லாம் இல்ல ஆதி..பயம்னு சொல்லமுடியாது..வீட்ல யாரையும் கஷ்டப்படுத்தாம சொல்லணும்..அவங்களும் கோபத்துல எதுவும் சொல்லி ஹர்ட் பண்ணிடகூடாதுனு தான் யோசிக்கறேன்..சில நேரம் ஏதாவது ஒரு ஆதங்கத்துல பேசிட்டா அதான்..ஆதி எனக்கு நீ ஒன் டே டைம் தரியா? நான் தனியா அவங்ககிட்ட பேசிட்டு உன்கிட்ட சொல்லவா..அப்புறம் வந்து நீ பேசுறியா? நீ எதுவும் நினைச்சுக்கலையே..” என அவள் தயங்க

அவளையே பார்த்துகொண்டிருந்தவன் மெல்லிய புன்னகையுடன் அவள் கைகளை இறுக பற்றியவன் “கொஞ்ச நேரம் ரிலாக்ஸ இரு..ம்ம்..” என கைகளை அழுத்தினான்..

அந்த அழுத்தத்தில் அவளின் உணர்ச்சிகளை அவன் புரிந்துகொண்டதை அவள் உணர்ந்தாள்..அதன் பின் எதுவும் போட்டு குழப்பிகொள்ளாமல் அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்..

“ஆதி அடுத்த மேஜிக்கும் நடந்திரிச்சு..” என அவள் சாதாரணமாக சொல்ல

“ம்கூம்…முதல சொல்லு என்னவெல்லாம் யோசிச்ச..எவ்ளோ மேஜிக்ஸ் நடந்திருக்கு?”

“ம்ம்..நிறையா ஆதி..நான் உன் லைப்ல வேணும்னு நீ உன் மனசுல ஒரு ஓரத்துலையாவது நினைக்கறது,

உன் கூட நாள் முழுக்க டைம் ஸ்பென்ட் பண்றது,

உன் தோள்ல சாய்ஞ்சுக்கிறது,

கை பிடிச்சிட்டு நடந்து போகணும்,

என் பெர்த்டேக்கு உன்கிட்ட இருந்து முதல் விஷஸ் வரது,

நம்ம பிரெண்ட்ஸ், பேமிலி எல்லார் முன்னாடியும் உனக்கு பிடிச்ச இடத்துல நம்ம மேரேஜ்,

இப்டி ஒரு மாப்பிளை இல்ல மகன் கிடைக்க அவ்ளோ அதிர்ஷ்டம் பண்ணிருக்கணும்னு  வீட்ல எல்லாரும் சொல்லறது, அது உன்கிட்ட பழகின கொஞ்ச நாள்ல எல்லாருமே சொல்லிடுவாங்க..

அடுத்து நம்ம குழந்தைங்க அப்டியே உன்னை மாதிரி..ஆனா அது என் அளவுக்கு வாலுத்தனம் பண்ணிட்டு பேசிட்டே இருந்தா எப்படி இருக்கும்னு பாக்க ஆசை..சோ அப்டி வளத்தணும்..அப்புறம்..” என அவள் வந்து சேரும் வரை அவளது கனவு ஆசை என அத்தனை கூறியதில் பாதிக்கு மேல் அவை அனைத்தும் ஆதியை சுற்றியே இருந்தது..

 

வீட்டிற்க்கு வந்ததும் இரவாக மித்து “நீ கூட வரியா ஆதி? இல்லை போயிட்டு மோர்னிங் வரியா?” என

“இல்ல கூட வந்தே விட்டுட்டு போறேன்..வா” என அழைத்து சென்றான்..

வீட்டிற்க்கு சென்று கதவை திறந்ததும் மித்துவின் அம்மா, அப்பா, சிந்து(தங்கை), சங்கர்(தம்பி), சிவா, குமார், குணா, மகேஷ், ராஜீவ், மகிளா, பவ்யா என அனைவரும் ஹாப்பி பெர்த்டே மித்து என கத்த அவளுக்கு மேலும் ஆச்சரியமாக இருந்தது..அவளை பேசவே விடாமல் முதலில் கேக் கட் பண்ண சொல்லிவிட்டு சற்று விளையாடிவிட்டு “சரி சொல்லுங்க எல்லாரும் இங்க எப்படி?”

“யாரு சொல்லிருப்பா?”

“ஆதிதி…” என இழுக்க அனைவரும் ஆமாமா உன் ஆதி தான் என அவள் தந்தையை ஓரக்கண்ணில் பார்க்க “டாடி…அது வந்து…” என துவங்கும் முன்

“ம்ம்..என் சின்ன பொண்ணு ஒரு விஷயத்தை சொல்ல இவளோ தயங்குறாளா? மாப்பிள்ளை ஒரே நாள்ல இப்டி மாத்திட்டீங்க?”

“என்ன மாப்பிள்ளையா?”

குணா “ஆமா..ஏன் அப்டியே ஓடிப்போய் திருட்டுதனமா கல்யாணம் பண்ணிரலாம்னு பாத்தியா?” என அவள் ஆதியை பார்க்க

மகி “ஹே மித்து பிராடு..எப்டியோ எல்லாமே செட் ஆகிடுச்சு ஹாப்பி தானே?”

மித்து புன்னகையுடன் மேலும் கீழும் தலையாட்டினாள்..”ஆனா மக்கு இதெல்லாம் எப்படி நடந்தது எனக்கு எல்லாமே சொல்லுங்க” என்றதும்

“நேத்து உன்னை விட்டுட்டு மித்ரன் ரூம்க்கு போனதும் உடனே எனக்கு குமார் எல்லார்கிட்டயும் பேசுனான்..அங்கிளோட நம்பர் வாங்கி அங்கிள் ஆண்ட்டிகிட்டேயும் பேசி மேரேஜ்க்கு ஓகே வாங்கிட்டான்..ப்ராஜெக்ட் இருக்கிறதால பேசிட்டு எப்போ வரேங்கிறத மட்டும் சொல்றேன்னு சொல்லிருந்தான்..”

மித்து மித்ரனை பார்த்தவள் “அப்போ மோர்னிங் வெளி வேலை சொன்னது, இந்த பிளான், ஆபீஸ்ல பேசுறது, டிக்கெட் புக் பண்றதுக்கு தானா?” அவன் ஆமாம் என்பது போல தலையசைக்க “என்கிட்ட ஏன் முன்னாடியே சொல்லல?” என செல்லமாக கோபிக்க

“ஆமா இவளோ ஹாப்பினஸ நீ ஒரே நாள்ல தாங்காம மயங்கி விழுந்திட்டா…கொஞ்சமா சாப்பிட்டாளாவது தூக்கிட்டு வரலாம்..நீ சாப்பிட்றதுக்கு…” என பிரண்ட்ஸ் கிண்டல் செய்ய சிரிப்புடனே மித்ரன் “சும்மா ஒரு சின்ன சர்ப்ரைஸ்..” என

“தேங்ஸ் ஆதி..லவ் யூ சோ மச்..” என அவனின் தோளில் சாய சிந்து, சங்கர் இருவரும் “ச்சச்சச்சச…என்ன மித்துக்கா இது..சின்ன புள்ளைங்கள வெச்சுகிட்டு இப்டி ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க?”

மித்து “யாரு நீ சின்ன பையன்?..அக்கா காலேஜ் பஸ்ட் இயர் வந்துட்டேன்..மினிமம் 2 கேர்ள் பிரெண்ட்ஸ் கூட இல்லாட்டி இந்த உலகம் என்னை பத்தி என்ன நினைக்கும்..இந்த குடும்பத்தோட வளர்ப்ப பத்தி என்ன பேசும்னு சொல்லி முத நாளே டயலாக் பேசிட்டு…” என முடிக்கும்முன் சங்கர் வெங்கடாச்சலத்தை பார்த்துவிட்டு அவர் உற்று கவனிப்பதை பார்த்தவன் “ஐயோ பெரிப்பா நீங்க அக்கா பேச்ச கேக்காதீங்க..அவ கோர்த்துவிட பாக்குரா..”

“டாடி..நோ..இங்க ஊர் சுத்தி பாக்க நிறையா இடம் இருக்கும்…அதனால தான் காலேஜ் கேட்டதும் நான் இங்க ஓகே சொன்னேன்..முக்கியமா இத பெரிப்பாவுக்கு தெரியாம பாத்துக்கணும்..பாசம்னு சொல்லியே மெயின்டெய்ன் பண்ணிருவேன்னு சொன்னான் டாடி…”

சிந்துவும் அவள் பங்கிற்க்கு “ஆமா பெரிப்பா இங்கிருந்து ஸ்டாப்பிங் வரைக்கும் தான் கூட்டிட்டு போவான்..அங்க போயி பஸ் புடிச்சு காலேஜ்கு வந்து சேரு எனக்கு வேலை இருக்குனு சொல்லிடுவான்..உங்ககிட்ட சொன்னா அடிப்பேன்னு மிரட்டுனான் பெரியப்பா..” என

அவர் “டேய் சங்கர்..” என திரும்பும் முன் அவன் இவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்தவன் “என்னை நம்புங்க பெரியப்பா…அப்டி விட்டுட்டு போனது ஒரு நாள் தான்….அதோட ஆள் எல்லாம் இல்லை ஒன்லி சைட் தான்..வேற ஒண்ணுமே இல்ல..நான் அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன்னு உங்களுக்கு தெரியாதா?…” என கண்ணீர் விடாத குறையாக கதற எல்லாரும் சிரித்ததும் “ஹா ஹா ஹா…எந்திரிடா..எந்திரிடா….அவங்களும் உன்னை வம்பிழுக்க தான்டா சொல்ராங்க..என் பையன் உன்னை பத்தி எனக்கு தெரியாதா?” என அவனும் காலரை தூக்கிவிட்டுகொள்ள “ஆனா நீ சொன்ன ஒருவிஷயத்தை கண்டிப்பா நம்பலாம்..நீ அதுகெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட..” என அவரும் வாரிவிட்டு செல்ல இப்போது சிரிப்பது அனைவரின் முறையாயிற்று..

சிறிது பேசிவிட்டு அனைவரும் சென்றுவிட மித்து கனவுகளுடன் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்தாள்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 19’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 19’

19 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   மித்து அழுகையை நிறுத்தவே இல்லை..கலை கவிதா அனைவரும் அழுக மயக்கம் தெளிந்த பப்பு விழித்ததும் மித்துவின் கண்ணீரை கண்டவன் “மிட்டு பாப்பா..” என்றதும் தான் அனைவருக்கும் உயிரே வந்தது.. “டேய் பப்பு,

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 1’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 1’

அன்பு அரவணைப்பு ஏதுமின்றி யாருமற்று தனிமரமாய் வளர்ந்து  தனக்கென்று பாதையை அமைத்து விருட்சமாய் வாழ்வில் தன்னோடு பிறரையும் முன்னேற்ற எண்ணும் நாயகன். தன் வாழ்க்கை பாதைக்கு   தனியாளாய் இருப்பதே சிறந்தது என்ற எண்ணத்தோடு வாழ்பவன். உறவு நட்பு என சுற்றம் சூழ

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 21’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 21’

21 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஒரு முடிவுடன் காத்திருந்த சந்தியா, சிவா வந்ததும் “இங்க பாரு…” சிவா கையமர்த்தி “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு…இவளோ நேரம் நீ பேசுனது எல்லாம் நான் கேட்டிட்டு தான் இருந்தேன்..சோ அதே விஷயத்தை நீ