Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 13’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 13’

13 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

 

அதன் பின் நடந்தவை,  கனடா வந்தது வரை அனைத்தையும் அசைபோட்டவன் அப்டியே உறங்கியும் விட்டான். ஏனோ மனம் அலைபாய்ந்துகொண்டே இருந்தது..எதிலும் ஆர்வமும் இன்றி பிடிப்பும் இன்றி அவன் தனது அன்றாட பணிகளை செய்தபடி வெளியே கிளம்பினான். ராம் அழைப்பு விடுக்கவே அவன் அங்கே சென்றான்.

ராம் மற்றும் கிளைண்ட்ஸ் பேசிகொண்டிருந்தபடியே “நம்ம டீம்ல இந்த ப்ரொஜெக்ட்ல ஆர்கிடெக்சர்ஸ், இண்டெரியர் டிசைன்ர்ஸ் எல்லாரும் வருவாங்கனு சொன்னேன்ல..அவங்கள உனக்கு இன்னைக்கு இன்ட்ரோ குடுத்திடறோம்” என அவர்கள் காட்டிய திசையில் ஆதி கண்டது சாட்சாத் மித்துவே தான்.

 

மித்து இன்னும் சிலருடன் பேசியபடியே இவர்களை நோக்கி வந்தாள். அப்போதுதான் மித்ரனை பார்த்தவள் உண்மையான மகிழ்ச்சி ஆச்சரியத்துடன் கண்கள் விரிவதும் “ஆதி..” என அவள் வாய் முணுமுணுப்பதும் அவனுக்கு தெளிவாகவே தெரிந்தது. அருகில் வந்ததும் ராம் அனைவரையும் அறிமுகப்படுத்திவிட்டு சரி வாங்க எல்லாரும் சாப்படலாம் என செல்ல அவர்கள் நகர்ந்ததும்

மித்து குதூகலத்துடன் “ஆதி எப்படி இருக்க, இங்க என்ன பண்ற? நான் நினைக்கவேயில்லை..செம சர்ப்ரைஸ்..” என அவள் பேசிக்கொண்டிருக்க இத்துனை நேரம் இருந்த அனைத்து தயக்கங்களும் மன குமுறலும் அந்த நொடியே காணாமல் போவதை உணர்ந்தவன் அலைமோதிய மனது இப்போது மகிழ்ச்சியில் ஆர்பரிப்பதை உள்வாங்கிக்கொள்ள அவனுக்கு பேசவேதோணவில்லை…

மித்து கைஅசைத்து “என்னாச்சு..நான் கேட்டுட்டே இருக்கேன்..நீ எதுமே சொல்லமாட்டேங்கிற…ஒருவேளை இம்சை இங்கேயும் வந்திடிச்சினு நினச்சு உள்ள உதறதோ?” என ஓரக்கண்ணில் பார்த்து கேட்க

மித்ரன் மெல்லிய புன்னகையுடன் “சொல்லு..எப்படி இருக்க? எப்போ வந்த? இங்க எப்படி?”

 

“ம்ம்..நான் நல்லா இருக்கேன்..நேத்து தான் வந்தோம்..காலேஜ் முடிச்சிட்டு அப்டியே கோர்ஸ் பண்ணேன்.. தென் சென்னைல ஒரு 3 மந்த்ஸ் ஒர்க் அப்புறம் பெங்களூர் போய்ட்டேன்.. அங்க ஒரு ஒன்றரை வருஷம் ஒர்க் பண்ணேன்..அங்கிருந்து தான் இங்க எங்க டீம் அனுப்பிச்சிருக்காங்க…”

 

“குட்..சரி வா சாப்படலாம்..” என அழைத்துவந்தவன் அனைவரும் உங்க இரண்டுபேருக்கும் முன்னாடியே பழக்கம் இருக்கா என

மித்ரா ஓரக்கண்ணில் மித்ரனை பார்த்துவிட்டு “ஆமா..அது..” என தொடங்கும்முன் மித்ரன் வேகமாக “நாங்க ஒரே காலேஜ் என் ஜூனியர் அதான் தெரியும்..” என “மற்றவர்களும் தட்ஸ் கிரேட் அப்டினா ஒர்க் கோஆர்டினேஷன் ப்ரோப்லேம் வராது..” என அவர்கள் சாதாரணமாக சொல்லிவிட்டு நகர மித்து சிரிப்பை அடக்கிக்கொண்டு மித்ரன் காதில் “இன்னும் நீ இந்த விஷயத்துல மாறவேயில்லையா ஆதி..நான் பதில் சொல்றதுன்னா எங்கிருந்து தான் உனக்கு இப்டி பதறுமோ?”

மித்ரன் அவளை பார்த்துவிட்டு “ஆமா நீ எடக்கு முடக்கா ஏதாவது சொல்லிவெப்ப..இது தேவையா?” என அவளும் சிரிப்புடன் சாப்பிட சென்றாள்..

 

பேசிக்கொண்டே ஏனோ தானோவென அவள் கொறிக்க தூரத்தில் இருந்து அவ்வப்போது பார்த்தாலும் அதை புரிந்துகொண்டவன் சில நிமிடங்களில் அவளிடம் வந்தவன் “உனக்கு இந்த ஃப்புட் புடிக்கலையா?”

அவளும் பாவமாக அவன் முகம் பார்க்க அவன் புன்னகையுடன் “நாம இந்தியன் ஃப்புட் ரெஸ்டாரெண்ட்க்கு போலாமா?”

 

அவள் மேலும் கீழும் வேகமாக தலையசைக்க அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.. எப்போதும் போல அவள் ரசித்து ருசித்து அங்கே நிம்மதியாக சாப்பிட “ஏன் ஆதி, உனக்கு இங்க சாப்பாடு எல்லாம் செட் ஆகிடுச்சா? எனக்கு இங்க ரொம்ப கஷ்டம் போல..டெய்லியும் என்னை இங்கேயே கூட்டிட்டு வந்திடு..”

“முதல கொஞ்சம் ஸ்ட்ரகுள் ஆச்சு..அப்புறம் செட் ஆகிடுச்சு… அதோட இது டிஸ்டன்ஸ் ஜாஸ்தி.. டெய்லியும் எல்லாம் வரமுடியாது..சோ இன்னைக்கு நல்லா சாப்பிட்டுக்கோ..ஒர்க் ஸ்டார்ட் பண்ண ஒன் வீக் சொன்னாங்க..அதுவரைக்கும் கூட ஓகே..அதுக்கப்புறம் நோ வே..”

 

“என்ன ஆதி..” என அவள் இழுத்துக்கொண்டே அவள் முகம் சுருங்க

“நீ தான் இந்த ஃப்புட் சாப்பிட்டு பழகிக்கணும்..” என அவன் சாதாரணமாக கூறிவிட்டு எழுந்து வாஷ் பண்ண செல்ல இவள் வெளியே வந்து கார் ஏறும் வரை முனகிக்கொண்டே இருந்தாள்.. அவன் ஐஸ் கிரீம் நீட்டவும் இதை  விடுத்து அவனிடம் பழைய மாதிரி பேசவும் குதூகலமாகவும் ஆரம்பித்துவிட்டாள்..அந்த குழந்தைதனம் சில விஷயங்களில் இன்னும் மாறவேயில்லை என நினைவுகூர்ந்தான்.

எங்கேயாவது வெளில போகலாம் என அவர்கள் அன்று செல்ல “உனக்கு கல்யாணம்னு சொன்னாங்களே…” என கேட்க

 

மித்து ஐஸ் உடன் சண்டையிட்டு கொண்டே “ம்ம்..பிக்ஸ் பண்ணாங்க..பட் அப்போவே நின்றுச்சு..அப்புறம் தான் கோர்ஸ் ஜாப் எல்லாம்…” என

அவனுக்கு என்ன மாதிரி உணர்வு என்றே சொல்லத்தெரியவில்லை..ஆனால் ஒருவித நிம்மதி மனதில் பரவியதை உணர்ந்தான்….”ஏன் எதனால நின்னுச்சு…?”

“அது..” என அவள் ஏதோ சொல்ல வரும் போது அவளுக்கு கால் வர அவள் ஒரு நிமிஷம் என போன் பேச போனவள் பேசி வைத்ததும் “என்ன பேசிட்டு இருந்தோம்..ஆ..மேரேஜ்..அது..என்றவள் ஒரு நொடி நிறுத்தி உனக்கு எப்படி தெரிஞ்சது.. நீ தான் யார்கிட்டேயுமே பேசலையே..” என

 

அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் வண்டியை நிறுத்தியவன் “இறங்க வேண்டிய இடம் வந்திடுச்சு…வா..மீதி அப்புறம் பேசிக்கலாம்..” என அவளும் சரியென உடன் சென்றாள்..

 

அன்று முழுவதும் வெளியே சுற்றிக்கொண்டு பல விஷயம் நண்பர்கள் பற்றி பேசிக்கொண்டு இரவானதே அவர்களுக்கு தெரியவில்லை..இறுதியாக Vancouver சென்றனர்..இங்க ஒரு ஒரு வருசமும் Vancouver Celebration of Light னு fireworks competition வெப்பாங்க…ரொம்ப நல்லா இருக்கும்..நாம இன்னைக்கு போலாமா என கேட்டு அங்கே அழைத்துச்சென்றான்..

 

அவள் கண்களை பறிக்கும் அந்த ஒளி, பட்டாசுகள் என ரசித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்க அவளையே பார்த்துக்கொண்டிருந்த மித்ரன் “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?”

மித்து சட்டென திரும்பி அவனை பார்த்து தன் காதுகளில் விழுந்தது என்ன என ஒரு நிமிடம் யோசித்துவிட்டு “ஆதி என்ன கேட்ட?” என

 

“இப்போவும் உனக்கு ஓகேன்னா நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?னு கேட்டேன்..” என அவன் நிறுத்தி நிதானமாக சொல்ல

அவளுக்கு ஒரு சில நிமிடங்கள் என்ன சொல்வதென்றே தெரியவில்லை..”இதை நான் எதிர்பார்க்கவேயில்லை..ஆதி..” என சிறிது திணற அவனோ புன்னகையுடன் “தோணுனதும் உன்கிட்ட சொல்லிடனும்.. கேட்கணும்னு சொன்ன..கேட்டுட்டேன்.. முடிவு உன்னோடது தான்… இப்போ சொல்லு கல்யாணம் பண்ணிக்கலாமா?” என

மித்து அதிர்ச்சியில் இருந்து வெளி வராமல் ஆனாலும் மேலும் கீழுமாக தலையசைக்க ஆதி புன்னகையுடன் “ஒன்னும் அவசரம் இல்லை..நீ யோசிச்சு சொல்லு..” என முடிக்கும் முன்

“இல்லை இல்ல…யோசிக்க எதுவுமில்லை..எனக்கு ஓகே எனக்கு டபுள் ஓகே..” என வேகமாக சொல்ல அவன் சிரித்துவிட மித்து உதட்டை கடிக்க அவன் “அதை ஏன் கஷ்டப்படுத்துற..” என விடுவித்தவன்

 

மித்து மகிழ்ச்சி, வெக்கம், தயக்கம் என அனைத்தும் கலந்த உணர்வில் “ஆதி..நான் ஒன்னு கேக்கவா..”

“ம்ம்..”

“என்னை நீ என்னனு கூப்புடுவ? என்ன நிக் நேம் வெப்ப?.”

“அது எதுக்கு..அப்டி எல்லாம் ஏதும் வெக்கலையே..” என

“என்ன ஆதி..எப்போ இருந்து கேக்குறேன்..இப்போவாது யோசிச்சு சொல்லேன்…”

“அட உண்மையா தான்.. எனக்கு அது எல்லாம் தோணல..” என்றான் அவன் உண்மையாக

அவள் முகம் சுருங்க “இப்போவரைக்கும் நீ என்னை மத்தவங்க கூப்புட்ற மாதிரி கூட கூப்பிட்டதில்லை..மொட்டை மொட்டையா கூப்பிட்ற..பேசுற…எப்போதான் உனக்கு தோணுமோ போ..” என எழுந்து சென்று மேலே வேடிக்கை பார்க்க

அவள் தன்னிடம் இவளோ நாள் எங்க இருந்த? ஏன் சொல்லாம வந்த? எப்போ ஞாபகம் வந்தது? லவ்? இப்டி ஏதாவது கேப்பானு நினைத்தவனுக்கு அவள் பெயர் பற்றி கேட்டதும் அவளை அழைப்பதே இன்னும் தனக்கு வரவில்லை என்பதை எண்ணி சிரிப்பு தான் வந்தது. உண்மைதான்.. அவள் காலேஜ் படிக்கும் போது கேட்டதும் தன் மனதில் தோன்றிய பெயர் அதைத்தவிர அவனுக்கு அவளை வேறு பெயர் சொல்லி அழைக்க ஏனோ வரவில்லை..அப்டி அழைத்தால் அவள் இன்னும் அதிகமாக யோசிக்க தொடங்கிவிடுவாள் என்றெண்ணியவன் அவளை எப்டியும் அழைத்ததேயில்லை.. இன்று அவள் மீண்டும் கேட்டுவிட செல்ல புன்னகையுடன் எழுந்து அவளிடம் சென்றவன்

 

“தியா..” என்றதும் அவள் மெதுவாக திரும்பி அவனையே ஆச்சரியமாக பார்க்க சில்லென்ற காற்று வீச வான வேடிக்கையின் மத்தியில் ஒளிமயமான வண்ண பூக்கள் வானில் வந்துவந்து செல்ல கண்ணிமைக்காமல் தன்னை பார்த்தவளின் விழி நோக்கி சொன்னான்… “ஹாப்பி பெர்த்டே தியா…”

 

தனக்கு இந்த ரோபோ செல்ல பெயர் வைத்ததே நம்பமுடியாமல் இருந்தவளுக்கு தன் பிறந்தநாளும் அவன் ஞாபகம் வைத்துள்ளான் என்பது அவளுக்கு இன்னும் ஆச்சரியமே..அவள் தன் மனதில் தோன்றியதை கேட்டும்விட்டாள்..

ஆனால் அவனோ எப்போதும் போல சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு “போலாமா” என அழைத்து சென்றான்..

 

“என்ன ஆதி இன்னைக்கு இவ்ளோ சர்ப்ரைஸ்..எப்போ நேம் யோசிச்ச? என் பெர்த்டே விஷ் , நீதான் பஸ்ட் விஷ்.. அதுவும் அப்டி ஒரு சூப்பரான பிளேஸ்ல..எப்போ தோணுச்சு..இல்ல எல்லாமே சாதாரணமா நடந்ததா? அது எப்படி நடக்கும்? ஐயோ..ஆதி சீக்கிரம் சொல்லு சொல்லு சொல்லு..” என ஆர்பரிக்க,

அவன் புன்னகையுடன் “உன் ரூம் வந்திடுச்சு போ போயி நல்லா ரெஸ்ட் எடு..” என்றதும்

முகம் தொங்கிவிட “அதுக்குள்ளவா? என்ன ஆதி கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமா?”

“நோ வே..ஆல்ரெடி ரொம்ப லேட்டாகிடிச்சு..நீயும் நேத்து ட்ராவல், இன்னைக்கும் வெளில சுத்திட்டு இருந்ததுல ரெஸ்ட்லெஸ்ஸா இருப்ப..போய் நல்லா தூங்குற..நாளைக்கு எதுன்னாலும் பேசிக்கலாம்..” என அவன் கூற

வாய் பிதுக்கி “பெரிய ஸ்ட்ரிக்ட் ஆபிசர்னு நினைப்பு..ரோபோ, ரூல்ஸ் புக் போ.. நான் என் குட்டி மினியான் கூடவே தூங்குறேன்..”

ஆதி ஆச்சரியமாக “ஹே அதை இங்க வரைக்கும் கொண்டு வந்திருக்கியா? இன்னும் அதை…”

“அதை எப்படி நான் விட்டுட்டு வருவேன்..நீ எனக்கு பஸ்டா வாங்கித்தந்தது..தினமும் ராத்திரி அதுகிட்ட பேசிட்டு தான் தூங்குவேன்..காலைல அதுக்கு குட் மோர்னிங் சொல்லிட்டு தான் அடுத்து எந்த வேலையுமே…ஓகே டாடா குட் நைட்..” என அவள் செல்ல சில நொடிகள் கழித்து என்ன நினைத்தானோ இறங்கி சென்றான்.

“ஆ…தியா…”

திரும்பியவள் மகிழ்ச்சியில் “ஈஈஈஈஈஈ…ஆதி..என்னை போகசொல்லிட்டு பின்னாடியே வந்திட்டியா? வா வா உள்ள போலாம்..”

“ஹே இரு..இரு…பாத்து பத்திரமா இருந்துகோ..எதுன்னாலும் எனக்கு கூப்பிடுனு சொல்லத்தான் வந்தேன்..வேற எதுவும் இல்லை.”

“ஆதி இது நீதானா? இவ்ளோ பாசமா..” என

“புது இடம்ல..சோ சரியா தூங்க வருமோ என்னவோ..எப்போவும் போல வெளில வேடிக்க பாக்குறேனு இருட்டுல ஏதாவது பாத்து பயந்துட்டா, இல்ல எங்கேயாவது கிளம்பி போய்ட்டேன்னா..அதுக்கு தான் சொல்ல வந்தேன்..”

அவளும் புன்னகையுடன் “அதுக்கு வாய்ப்பேயில்லை ஆதி….இன்னைக்கு நான் ரொம்பபப சந்தோசமா இருக்கேன்..என் ஆதி என்னை ஞாபகம் வெச்சி எனக்கு விஷ் பண்ணிருக்கான்..அண்ட் மேரேஜ் பண்ணிக்க வேற நீயே கேட்டிருக்க..எல்லாமே மேஜிக் மாதிரி இருக்கு..உப்..என மூச்சு விட்டவள்

‘யாருக்கும் பிரச்சனை இல்லாத ஒருவிஷயத்தை ஆசைப்பட்டு அதை முழு மனசோட நம்புனா கண்டிப்பா கெடைக்கும்னு அம்மா சொல்லுவாங்க…அது எவ்ளோ உண்மை…எனக்கு அந்த மேஜிக் நடந்திரிச்சு…இதுக்கு மேல என்ன வேணும்..உன் கூடவே இருந்திருந்தா இன்னும் ஹாப்பி ஆகிருப்பேன்..பட் இது ஓகே…இன்னைக்கு இதை நினைச்சே இப்டியே ஜாலியா போயி நல்லா சூப்பரா தூங்குவேன்..” என அவள் கூற அவளின் குதூகலம் அவளின் கண்களில் தெரிய

ஆதி அவளது தலையை வருடியவன் “எஸ்..நீ எப்போவுமே இப்டியே ஜாலியா சிரிச்சிட்டே தான் இருக்கனும்..” என அவளும் “ம்ம்” என்றதும் அவன் குட் நைட் சொல்லிவிட்டு செல்ல சில அடி தூரம் சென்றதும் “ஆதி..”

“ம்ம்..” என திரும்பியவன் அவள் ஓடிவந்து எக்கி அவனது கன்னத்தில் இதழ் பதித்து விட்டு “தேங்க் யூ அண்ட் லவ் யூ ரோபோ..” என்று கூறிவிட்டு ஓடி அறைக்குள் சென்றுவிட்டாள்..

ஆதி புன்னகையுடனே அவ்விடமிருந்து சென்றான்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 30’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 30’

30 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் நண்பர்கள் அனைவரும் விஷயம் அறிந்து வர மித்ரனுக்கு என்னதான் ஆறுதல் கூறினாலும் அவன் எதற்கும் அசையவில்லை..அவன் முகத்தில் அவ்வளவு பதட்டம், கவலை அன்றுதான் அனைவரும் கண்டனர்..சந்தியா, கவிதா கூட அழுதபடி இருந்தாலும் மித்ரனின்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 14’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 14’

14 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   மறுநாள் கால் வர “ஹலோ..” “குட் மோர்னிங் இன்னும் 2 மினியானும் எந்திரிகலையா?” “ஹா ஹா ஹா..பெருசு ஆதி எழுப்பறதுகாக வெய்ட்டிங்…எழுப்பிட்டா இன்னொன்ன அது பாத்துக்கும்..” “சரி..எந்திரிச்சு பிரெஷ் ஆகிட்டு உன்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 27’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 27’

27 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   “ஓகே ஓகே சொல்றேன்..சிவா, நம்ம பிரண்ட்ஸ், அம்மா அப்பா எல்லாரும் மேரேஜ்க்கு சொல்லிட்டே இருந்தாங்க..நானும் மேரேஜ் ஓகே சொன்னேன்..அன்னைக்கு ராத்திரி நான் மாடில தனியா நின்னுட்டு இருந்தேன்..அம்மா வந்து என்கிட்ட பேசுனாங்க..”