Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 68

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 68

நிலவு 68

 

அடுத்த நாள் காலையில் கிறு எழமால் இருக்க ஆரவ் அவள் அருகில் வந்தான்.

 

“கிறுஸ்தி பாருடி பத்து மணியாச்சு எந்திரி” என்று ஆரவ் கூற

 

“கண்ணா என்னால் முடியல்லை டா, ரொம்ப டயர்டா இருக்கு” என்று மீண்டும் சுருண்டுக் கொண்டாள்.

 

அவளை வற்புருத்தி எழ வைக்க அவள் கடினப்பட்டு எழுந்து நிற்க அவன் கைகளியே மயங்கிச் சரிந்தாள்.

 

அவள் மயங்கியதைப் பார்த்து பயந்த ஆரவ்,

 

“கண்ணம்மா” கன்னம் தட்ட அவள் எழவில்லை. 

 

உடனே மேலிருந்து குரல் கொடுக்க, அனைவரும் மேலே வந்தனர். மீராவை அஸ்வின் கைதாங்கலாக அழைத்து வந்தான்.

 

உடனடியாக வரவழைக்கப்பட்ட டாக்டர் அவளை பரிசோதிக்கும் வரையில் அனைவரும் வெளியே இருந்தனர். பரிசோதித்து முடித்து வெளிய வந்தவரிடம்,

 

“டாக்டர் கிறுஸ்திக்கு என்னாச்சு? எதுக்கு அவ மயங்கி விழுந்தா?” என்று ஆரவ் பதறிக் கேட்க,

 

“மிஸ்டர் ஆரவ் ரிலேக்ஸ் பயபடுறது போல ஒன்னும் இல்லை, சந்தோஷமான விஷயம் தான் நீங்க அப்பாவாக போறிங்க” என்று கூற

 

“டாக்டர் உண்மையாவா?” என்று சந்தோஷமாக கேட்க,

 

“ஆமா மிஸ்டர் ஆரவ், வாழ்த்துக்கள்” என்று கூறி முடிய அறையினுள் நுழைந்தான் கண்ணம்மாவின் கண்ணா. 

 

அப்போதும் அவள் மயக்கத்தில் இருக்க, அவள் அருகில் அமர்ந்துக் கொண்டான். அவள் நெற்றியில் இதழ்பதிக்க கிறுவும் கண்களைத் திறந்தாள். 

 

“கண்ணா” என்று அவள் பேச,

 

அவள் இதழில் விரல் வைத்து தடுத்தவன், 

 

“நான் உன் கிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும்” என்றான் சிரித்த முகத்துடன்.

 

‘என்ன’ புருவம் உயர்த்திக் கேட்க,

 

“நீ அம்மாவாக போறடி” என்றான்.

 

அவள் ஆனந்த அதிர்ச்சியில் பார்க்க,

 

“ஆமா டி செல்லகுட்டி” என்றான்.

 

அதே நேரம் மற்றவர்களும் உள்ளே நுழைந்து இருவருக்கும் வாழ்த்தை தெரிவித்து நாகரிகம் கருதி வெளியே சென்றனர்.

 

“கண்ணா ஒரு பதினைந்து நிமிஷம் இரு, நான் குளிச்சிட்டு வரேன்” என்று கூறி குளித்து வந்தாள்.

 

அவளை அமர வைத்தவன் அவள் மடியில் படுத்துக் கொண்டான்.

 

“உன்னால பைனல் மெச் விளையாட முடியாதே டி” என்று ஆரவ் கூற

 

“இன்னும் பதினொரு பேர் இருக்காங்க டா, அவங்க மெச்சை வின் பன்னி கொடுப்பாங்க, பட் நான் ரிசோவா இருந்தாலும் கண்டிப்பா அங்க போகனும், நாம ஸ்டேடியத்துக்கு போலாம்” என்றாள் சிறு குழந்தைக்கு போல்.

 

“சரி, டி பட் உனக்கு கவலை இல்லையா?” என்று கேட்க,

 

“எனக்கு அதை விட உன் சந்தோஷம் முக்கியம், நம்ம குழந்தை முக்கியம் டா” என்றாள் அவன் கேசத்தை கோதிவிட்டு.

 

“கண்ணா எனக்கு பசிக்குது டா, கீழே போலாமா?” என்று கேட்க,

 

“போலாமே” என்று அவளை கையில் ஏந்த 

 

“டேய் டேய் என்ன பன்ற? கீழ இறக்கி விடுடா, பிளீஸ் பிளீஸ்” என்று கெஞ்ச

 

“முடியாது டி, நான் உன்னை நல்லா பார்த்துக்கனும்” என்றான்.

 

அவன் கன்னத்தில் இதழ்பதிக்க அதை எதிர்பாரதவன் தடுமாற அதைப் பயன்படுத்தி அவனிடமிருந்து தப்பித்து ஓடிவிட்டாள்.

 

“என்ன மெடம் அமைதியா வந்து உட்காரிங்க?” என்று அஸ்வின் கேட்க,

 

“சும்மா டா, ஆமா வினோ, சௌமி வரங்களா?” என்று கிறு கேட்க,

 

“நாங்க வந்துட்டோம்” என்று இருவரும் உள் நுழைந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின் மாதேஷ், கவின் குடும்பத்தாரும் கிறு, ஆரவிற்கு வாழ்த்தை தெரிவிக்க இருவருமே அதை மனமாற ஏற்றுக் கொண்டனர். பின் கோர்ச்சிடம் இதை அறிவிக்க அவர் கிறுவின் திறமை பற்றி நன்கு அறிந்ததால் அவளின் துணை இல்லாமல் வெற்றி பெற முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தாலும் அவர் மனமாற இருவரையும் வாழ்த்தினார்.

 

நாட்கள் நகர ஆரவை அவளை தங்கத் தட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ளாத குறையே. அவளை விட்டு ஒரு அடியும் நகரவில்லை. மெச் தினமும் வருகை தந்தது. கிறு ஸ்போர்ட்ஸ் ஆடையை அணிந்து ரிசோ இடத்தில் அமர்ந்து இருக்க மீடியா அனைத்துமே அவளைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் சென்னையில் இறுதி மெச் நடைபெற இருந்ததால் அனைத்து செனல்களும் அங்கே வந்திருந்தது.

 

பைனல் மெச்சைப் பார்க்க மக்கள் அலை அலையாய் திரண்டு வந்தனர். மற்றைய நாட்களில் வழங்கப்பட்ட பாதுகாப்பை விட அதிகமாகவே இருந்தது. இறுதி மெச் தென் ஆபிரிக்கா உடன் நடைபெற இருந்ததால் அவர்களின் நாட்டினரும் பார்க்க வந்திருந்தனர். சென்னை மக்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல இடங்களிலும் இருந்து மக்கள் வந்திருந்தனர். மற்றும் ஸ்டேட் லெவல் பிளேயர்சும் வந்திருந்தனர்.

 

அது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டு சி.எம் மற்றும், பி.எம் இருவருமே வருகை தந்திருந்தனர். இது வரையில் இந்தியா நெட்போலில் இப்படி முன்னேறவில்லை. இன்னும் முக்கிய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்களும் வந்திருந்தனர். இதனால் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது. ஸ்டேடியத்தில் அதிக நெரிசல் காரணமாக வெளியே  மக்கள் குழுமி இருந்தனர். அவர்கள் கண்டு கழிப்பதற்காக திரை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

 

அவர்களுக்கும் வெளியே பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டது. இரண்டு அணிகளும் தங்களுக்காக வழங்கப்பட்ட இடத்தில் இருந்தனர். இன்னும் ஐந்து நிமிடங்களில் மெச் ஆரம்பிக்க இருந்தது. இந்திய அணியின் சென்டராக சௌமி இருந்தாள் அவள் இடத்திற்கு ரிசோவில் இருந்த ஒரு பெண் நியமிக்கப்பட்டாள்.

 

காவ்யா : குமார் ஒரு அதிர்ச்சியான தகவல் என்ன என்றால் இத்தனை நாட்களாக எங்க நாட்டிற்காக விளையாடிய கிறுஸ்திகா ஆரவ் இன்றைக்கு விளையாடாமல் ரிசோவாக உட்கார்ந்து இருக்காங்க. மக்கள் குழம்பி இருக்காங்க.

 

குமார் : இந்தியா அணியோட முக்கியமான ஒரு வீராங்கனை கிறுஸ்திகா. அவங்க விளையாடுற ஸ்டைலே வேறு, கிடைக்குற கெப்புல புகுந்து போய் பீரீ ஆகாருவாங்க. இவளோ நல்ல பிளேயரை விட்டுட்டு எதுக்காக வேறு ஒருத்தரை தெரிவு செய்தாங்கன்னு தெரியல்லை.

 

காவ்யா : எல்லோருமே ஏ.கே இல்லாமல் இருக்கிறதால் ஒரு பயத்தோடேயே இருக்காங்க. நாங்களும் தான். பட் அவங்க யோசிச்சு இந்த முடிவை எடுத்து இருப்பாங்க.

 

குமார் : இந்தியா இந்த மெச்சை வெற்றி பெற்றால் இது ஒரு சாதனை தான். பார்க்கலாம் என்ன நடக்க போகுதுன்னு

 

காவ்யா : ஏ.கே எல்லோருக்கும் சிரித்த முகமா விஷ் பன்றாங்க. அவங்க கூட ஏதோ பேசிட்டு இருக்காங்க.  

 

குமார் : எல்லோரும் நெட்போல் கோர்டுக்குள்ள போறாங்க. கைகளை குலுக்குறாங்க. இப்போ அவங்களோட பிளேஸ் கிட்ட போயிட்டாங்க.

 

காவ்யா : டொஸ்அப் நடக்குது, SA அணி தான் பந்தை பிடிச்சி இருக்காங்க. இப்போ சென்டர் பாஸ்

 

குமார் : வாவ் செம்மையா விளையாடி எஸ்.ஏ அணி ஒரு புள்ளியை பெற்றுக் கொண்டுட்டாங்க.

 

காவ்யா : இப்போ இந்தியா அணியோட கையில் பந்து இருக்கு. சென்டர் பாஸ்.

 

குமார் : நோ, நோ அந்த பந்தை எஸ்.ஏ அணி பிடிச்சி திரும்பவும் ஒரு புள்ளியை எடுத்துட்டாங்க.

 

இவ்வாறு முதலாம் பிரேகிற்கு முன்னர், India vs South Africa 0:4 என்ற புள்ளிகளை பெற்றுக் கொண்டனர்.

 

காவ்யா : இந்தியா அணிக்கு என்ன ஆச்சு? எதுக்காக இவங்க விளையாடாமல் இருக்காங்க? எதுவுமே புரியமாட்டேங்குது குமார்.

 

குமார் : இங்கே இருக்கிற எத்தனையோ மக்களோட எதிர்பார்ப்புகள் வீண் போகிறது போலவே இருக்கு. ரொம்ப பதட்டமான சூழ்நிலையில் இருக்கோம்.

 

காவ்யா : இந்தியா அணி வீராங்கனைகள் எல்லோருமே இப்போ தடுமாற்றத்துல இருக்காங்க. என்ன முடிவு எடுக்க போறாங்கன்னு தெரியாது.

 

கோர்ச் “என்னாச்சு கேர்ள்ஸ்? இப்படியே விளையாடினால் தோற்க வேண்டி இருக்கும்” என்றார் கோபமாக.

 

“சேர் எங்க பொசிஷன்ஸ் எல்லாம் மாறினதால் ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றாள் சௌமி தலைக் குனிந்துக் கொண்டு.

 

அவள் கூறுவது உண்மையே இத்தனை போட்டிகளில் ஒரு போஸ்டில் விளையாடிய பிறகு திடீரென்று அதுவும் இறுதி மெச்சின் போது மாற்றினால் யாரால் விளையாட முடியும்? என்றே கோர்ச்சிற்கு தோன்றியது.

 

அவர்கள் இடத்திற்கு ஆரவ் கிறுவை அழைத்துக் கொண்டு வந்தான். 

 

“கோர்ச் கிறுஸ்தி சென்டர் பிளேயரா விளையாடுவா” என்று கூற கிறு அவனைப் பார்க்க அவன் கண்களில் இருந்த தைரியம், உறுதி இவளிற்கும் தொற்றிக் கொண்டது.

 

“ஆரவ் விளையாடாதிங்க, இப்போ ஏ.கே இருக்கிற நிலமையில் அவ விளையாட கூடாது” என்று கூற

 

“இல்லை கோர்ச் நான் விளையாடுறேன். என்னை பூரா கடவுள் கிட்ட ஒப்படைக்கிறேன். இத்தனை நாட்கள் நாங்க பட்ட கஷ்டத்திற்கான பிரதிபலன் கிடைக்குற நேரத்தில் நான் யாரையும் கைவிடமாட்டேன்” என்றாள் தீர்க்கமாக.

 

“இல்லை டி” என்று கீது கூற வரும் முன்

 

“நான் விளையாடுறேன், கடவுள் எனக்கு துணையா இருப்பாரு” என்று கூறினாள் கிறு.

 

கிறு தயாராகி வர ஆரவ் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

 

“பார்த்து விளையாடு டி” என்று கூறி நெற்றியில் இதழ்பதித்தான்.

 

கிறு இப்போது நெட்போல் கோர்டிற்குள் நுழைய இது வரை இல்லாத ஆர்ப்பரிப்புகளும், கரகோஷங்களும் கிடைத்தது.

 

குமார் : காவ்யா நம்ம சென்டர் களத்துல இறங்கிட்டாங்க. இப்போ தான் உண்மையான ஆட்டமே ஆரம்பிக்கபோகுது

 

காவ்யா : இப்போ தான் ரசிகர்கள் உற்சாகமா இருக்காங்க. 

 

மீண்டும் சைடு மாற்றப்பட்டு மெச் ஆரம்பிக்கப்பட்டது. அதில் கிறு பாதுகாப்பாக விளையாடிக் கொண்டு இருந்தாள். இரண்டாவது பிரேகிற்கு முன்  india vs south Africa 8:8 என்ற புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது. கிறு தனது இடத்திற்குச் செல்ல ஆரவ் அவளை அணைத்துக் கொண்டான்.

 

காவ்யா : குமார் இத்தனை நேரம் இந்தியா அணி அவங்க போஸ்ட் மாறினதால் விளையாட இல்லை.

இப்போ எல்லோரும் பழைய போஸ்ட்லயே இருக்காங்க. அதனால் சூப்பரா விளையாடுறாங்க.

 

குமார் : இப்போ தான் ஆட்டம் சூடு பிடிச்சு இருக்கு காவ்யா, ரசிகர்களுக்கு மத்தியில் இன்னும் எதிர்பார்ப்புகள் நம்பிக்கை அதிகமாச்சு.

 

மீண்டும் சைடு மாற்றப்பட்டு மெச் ஆரம்பிக்கப்பட்டது. மூன்றாவது பிரேக் முடியும் தருவாயில் இந்திய அணி லோங் பாஸ் செய்யும் போது கிறு பந்தை பிடிக்கச் செல்ல அதற்கு இடையில் எஸ்.ஏ அணி செனடர் இடையில் புகுற அவள் கால்கள் மாட்டி பின்னால் விழ, அதற்கு பின் கிறு நின்று இருந்ததால் அவளும் சேர்ந்தே கீழே விழுந்தாள்.

 

கிறு விழும் போது அவள் இடுப்பு பின்னால் அடிபடும் அதே நேரம், முன்னால் நின்ற வீராங்கனை அவள் வயிற்றின் மேல் விழுந்தாள். அதில் “அம்மா” என்ற கிறுவின் அலறல் ஸ்டேடியம் முழுவதுமே எதிரொலித்தது. ஆரவோ இதைப் பார்த்து அதே இடத்தில் சிலையாகி நின்றான். பிரேக் கொடுக்கும் தருவாயில் இருந்ததால் உடனடியாக பிரேக் கொடுக்கப்பட்டு கிறுஸ்தியை டாக்டர் பரிசோதிக்க கிறு அவர் கையைப் பற்றி தடுத்து நிறுத்தினாள்.

 

“டாக்டர் நான் நல்லா இருக்கேன், எனக்கு எதுவும் இல்லை” என்று கூறி இறுதியாக விளையாட தயாராகினாள். அவள் வலியை மறைத்துக் கொண்டு அவனிற்காக புன்னகைப்பது நன்றாகவே தெரிந்தது. பின் இறுதியாக விளையாடி இந்தியா vs தென் ஆபிரிக்கா 18:16 என்ற புள்ளிகளைப் பெற்று செம்பியன்ஷிப்பைப்  பெற்றுக் கொண்டது.

 

ஆரவின் அருகில் வந்த கிறு,

 

“கண்ணா, உன் ஆசை படி இந்தியா ஜெயிச்சிரிச்சி டா, என்னையும் என் குழந்தையையும் காப்பாத்தி கொடு” என்று அவன் நெஞ்சில் சாய அப்படியே மயங்கினாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 15யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 15

ஆரவின் கதையைக் கேட்டவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. கிறு கூறமுடியா ஒரு வலியை உணர்ந்தாள்.   ராம், “அவன் அப்பா பேர் என்ன?” என்க,   “தேவராஜ்” என்றான் அஸ்வின்.   “அவங்க கம்பனியோட பெயர்” என்று அரவிந் கேட்க  

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 46யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 46

நிலவு 46   அன்று மாலை வேளையில் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பிஸ்னஸ் பார்ட்டி ஆரம்பமானது. அதில் இந்தியாவின் முதல் இருபது இடத்தில் உள்ள அனைத்து கம்பனிகளின் எம்.டி, சி.இ.ஓ  மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர். இது

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 60யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 60

நிலவு 60   “நீ உன் அம்மா, அப்பா நேரில் வந்தால் அவங்களை ஏத்துப்பியா?” என்று  கிறு கேட்டாள்.   “கிறுஸ்தி இந்த டொபிக்கை விடு, காலையில் இருந்தே ரொம்ப டயர்டா இருக்க, கொஞ்சம் தூங்கி எந்திரி” என்று மறுபுறம் திரும்பிப்படுத்தான்.