Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 65

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 65

நிலவு 65

 

நாட்கள் நகர ஷ்ரவன், கீதுவின் நிச்சய நாளும் வந்தது. அன்று அனைவரும் மீண்டுமொரு முறை ஒன்று சேர்ந்ததால் மகிழ்ச்சியாக இருந்தனர். 

 

“மச்சான் உனக்கு இந்த ஹெயார் ஸ்டைல் செட் ஆகல்ல டா” என்று வினோ கலைக்க,

 

ஷ்ரவன் அவனை கொலைவெறியில் முறைத்தான்.

 

“டேய் இதோடு எட்டாவது முறை டா, எனக்கே முடியல்லை பாவம் டா, அவன் மாப்பிள்ளை டா” என்றான் ஹபீஸ் பொறுக்க முடியாமல்.

 

“என்ன நடக்குது இங்கே?” என்று உள்ளே நுழைந்தனற் மற்ற நால்வரும்.

 

“ஷ்ரவனுக்கு நல்லா ஹெயார் ஸ்டைல் பன்றேன்னு எட்டாவது தடவையா கலைச்சி விட்டுட்டான் இந்த எருமை” என்றான் ஹபீஸ்.

 

“யேன்டா உனக்கு இந்த புத்தி?” என்று கவின் கேட்க,

 

“நல்லது பன்றதுக்கு இப்போ காலமே இல்லை” என்றான் வினோ. அவனை மற்றவர்கள் முறைக்க கப்சிப் என்று அடக்கிக் கொண்டான்.

 

“எவனாவது என் தலையில் கையை வச்சிங்க, கொன்னுடுவேன்” என்று ஷ்ரவனே தன்னை தயார்படுத்திக் கொண்டான்.

 

நிச்சயமும் இனிதே நிறைவடைய அதற்கு அடுத்த நாளில் கீதாவிற்கு  மூன்று முடிச்சிட்டு அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான் ஷ்ரவன். இவ்வாறே ரிசப்ஷனும் இனிதே நிறைவடைய நான்கு நண்பிகளும் டெல்லியை நோக்கி பயணமானார்கள் தங்களது பயிற்சிக்காக. அவர்கள் அனைவருமே ஆரவ், கிறுவின் வீட்டிலேயே தங்கினர். 

 

“ஏ.கே உன் வெடிங் அல்பம் பார்க்கவே இல்லை நாங்க” என்று கூற

 

கிறு அறைக்குச் சென்று அல்பம் ஒன்றையும் இரண்டு சிடிக்களையும் எடுத்து வந்தாள். அவர்கள் நால்வரும் அரட்டை அடிக்க சப்ரைஸ் என்று மற்ற மூவரின் கணவன்மார்கள் அங்கு வந்து சேர்ந்தனர்.

 

“உங்க கிட்ட இருந்து தப்பிச்சிட்டு இருந்தோம், திடுதிப்புன்னு வந்து எங்களுக்கு கவலையான சப்ரைசை கொடுக்குறிங்களேன் டா” என்றாள் கீது.

 

“இந்த டையலோகை சௌமி இல்லை ஜெசி சொன்னாலும் பரவால்லை. நமளுக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரமாவது முடிய இல்லை டி” என்றான் ஷ்ரவன்.

 

“என் தங்கையை அவளோ கொடுமைபடுத்திருக்க?” என்று வினோ கேட்க,

 

“எப்போ டா நாம கொடுமை படுத்தி இருக்கோம்? அவளுங்க தான் நமளை கொடுமைபடுத்துறாளுங்க” என்றான் ஹபீஸ்.

 

ஜெசி அவனை முறைக்க 

 

“உன் வாய் தான் உனக்கு எதிரி” என்று சிரித்தாள் கிறு.

 

ஆரவும் வீடு வந்து சேர வீடே கலைக் கட்டியது. அடுத்த நாள் நால்வரும் பயிற்சிக்காக முதன் முறையாக அங்கே சென்றனர்.

 

“எங்க கனவு டி, பாரேன்” என்று கீது கூற

 

“இது நாம பட்ட கஷ்டத்திற்கான பிரதிபலன்” என்றாள் சௌமி.

 

“நல்லபடியா விளையாடனும் டி” என்றாள் ஜெசி

 

“இது என் கனவு மட்டும் இல்லை ஆரவோட ஆசை நிச்சயமா நிறைவேற்றுவேன் டி” என்றாள் கிறு தீர்க்கமாக.

 

நால்வரும் உள்ளே செல்ல இன்னும் எட்டு பேர் உள்ளே இருந்தனர். அவர்களில் மூவர் நெஷனல் லெவல்  மெச்சில் விளையாடியவர்கள், மற்றைய ஐவரும் இதற்கு முன்னேயே மூன்று வருடங்களாக இந்தியாவிற்காக விளையாடியவர்கள். அவர்கள் ஐவருமே இந்த நால்வரையும் தமிழ்நாட்டிலிருந்து தெரிவாகி இருப்பதால் அலட்சியப் பார்வை பார்த்தனர்.

 

பின் மற்றைய மூவரும் இவர்களுடன் சகஜமாகப் பேசினர். அதோடு கோச்சும் வருகைத் தர அனைவரும் எழுந்து மரியாதை செலுத்தினர். அவன் ஆறடி உயரத்தில் கட்டான உடலுடன் இருந்த இருப்பதியாறு வயது ஒரு இளைஞன். அவனை இந்நால்வரும் ஆராய ஏனோ நால்வருக்குமே அவனைப் பிடிக்கவில்லை. 

 

“ஹாய் கேர்ள்ஸ், ஐம் ராகவ்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

 

“யூ. ஓல் புரொம்” என்று கேட்க

 

அவ் ஐவரைத் தவிற மற்றவர்கள் தத்தம் இடங்களைக் கூறினர். 

 

“ஒகே செல் வி ஸ்டார்ட் கேர்ள்ஸ்” என்று முதலில் வார்ம் அப் செய்தனர். 

 

பின் விளையாடும் போது அத்தியவசியம் அற்ற தொடுகையை நால்வரும் உணர கிறுவிடம் நெருங்க ஆரம்பித்தான். அதை உணர்ந்துக் கொண்டவள், தனக்கு கால்கள் வலிப்பதாகக் கூறி அமர்ந்து விட்டாள். அவளுடன் மற்ற மூவருமே வந்து அமர்ந்தனர்.

 

“பார்த்தியா, வந்து ஒரு பதினைந்து நிமிஷம் தொடர்ந்து விளையாட முடியல்லை. இவளுங்களை எதற்கு தான் தெரிவு செய்தார்களோ?” என்று ஹிந்தியில் ஐவரில் ஒருவள் கூற

 

“தமிழ்நாடு ஆளுங்க இதை போல ஸ்போர்ட்சுக்கு செட் ஆக மாட்டாங்க டி, வேணுன்னா பாரேன் இன்னும் இரண்டு நாள் தாங்க முடியாமல் இவளுங்க மூட்டை முடிச்சை கட்டி ஓடிடுவாளுங்க” என்றாள் இன்னொருவள்.

 

“நெஷனல் லெவல் செம்பியன்ஸ் என்றால் நமளுக்கு சமனாக விளையாட முடியுமா?” என்றாள் ஒருவள்.

 

இவ்வாறு ஒவ்வொருவரும் மாறி மாறி பேச அதில் கீதுவிற்கு கடுப்பாக அவள் சண்டைக்குச் செல்லப் போக மற்ற மூவரும் அவளை அமைதிபடுத்தினர். ராகவின் பார்வை தவறாக இருப்பதைப் பார்த்தவர்கள்,

 

“இன்னொரு அதர்வாவா?” என்று சலிக்க,

 

அவன் கிறுவின் புறம் திரும்ப,

 

“மச்சி ஆரவ் அண்ணா கையால் அடிவாங்குறதுக்கு எங்கு இருந்து தான் வரானுகளோ” என்றாள் ஜெசி சிரிப்புடன்.

 

“சும்மா சொன்னவனுக்கே அந்த நிலமை இவன் டச் வேறு பன்னிட்டான், அண்ணா கையில் மாட்டி என்னாக போறானோ?” என்று சௌமி கூற

 

கிறு அமைதியாக இருப்பதைப் பார்த்து,

 

“என்ன டி அமைதியாகிட்ட?” என்று கேட்க 

 

“என்னை காப்பாற்ற என் புருஷன் இருக்கான் இதை போல இருக்கிற மிருகங்கள் கிட்ட இருந்து பாதுகாக்க முடியாத பொண்ணுங்க நிறைய பேர் இருக்காங்க, அதனால நிறைய பெண்கள் தன்னோட கற்பை பாதுகாக்க தன்னோட திறமைகளை மறைச்சு வாழுறாங்க” என்றாள் கவலையாக.

 

“எனக்கு ஒரு டவுட் மச்சி, இவளுங்களுக்கு இவன் தொடுகை தப்பா தெரியவே இல்லையா?” என்று கீது கேட்க,

 

“இவங்க எல்லாரும் பணக்காரங்க டி, நைட்டுக்கு பப் டிஸ்கோன்னு போவாங்க, அங்கே டான்ஸ் பன்னி பழகி இருக்காங்க, அதனால இது அவங்களுக்கு பெரிசா தோணவே இல்லை” என்றாள் கிறு.

 

“நீ இந்தியாவோட முதல் பணக்காரி தானே? யேன் நீ அப்படி இல்லை?” என்று சௌமி கேட்க,

 

“நாங்கள் பணக்காரங்களா இருந்தாலும் ராஜவம்சத்துல பிறந்தவங்க, அது மட்டுமில்லாமல் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்” என்றாள் கிறு.

 

சிறிது நேரத்தில் ராகவே இவர்களின் அருகில் வந்தான்.

 

“என்ன கேர்ள்ஸ் இவளோ சீக்கிரமா டயர்டாகிட்டன்னு சொல்றிங்க? கமொன் வந்து விளையாடுங்க” என்று கிறுவின் கைபிடித்து இழுக்க

 

“சேர் கையை விடுங்க” என்று கூற

 

“என்ன பேபி இப்படி பேசுற? இவளோ அழகா இருக்கிற பொண்ணு இப்படி பேச கூடாது” என்றான் அவள் கைகளை விடாமல்.

 

“சேர் அவ கையை விடுங்க” என்று கீது கோபமாக கூற

 

“என்னமோ உன்னை தொட்டது போல பேசுற” என்று அசிங்கமாகப் பேசி முடியும்  முன்னே மூன்றடி தூரத்தில் சென்று விழுந்தான்.

 

அனைவரும் திரும்பிப் பார்க்க ஆரவ் கோபத்தில் நின்று இருந்தான்.

 

“யாரு நீங்க? எதுக்கு எங்க கோர்ச்சை அடிச்சிங்க?” என்று கேட்க,

 

அவன் அதை சாட்டை செய்யாமல் ராகவை எழுந்து நிறுத்தி அவன் முகத்தில் இரண்டு குத்துவிட அவன் இரத்தம் வழிய கீழே விழுந்தான்.

 

“ஏய் நான் யாரு தெரியுமா? மினிஸ்டரோட பையன், எந்த தைரியத்தில் என் மேலே கையை வைக்கிற?” என்று அவன் கத்த 

 

ஆரவ் மீண்டும் அடிக்கச் செல்ல 

 

“கண்ணா விடு, போதும்” என்று தடுத்தாள் கிறு.

 

“எதுக்கு இப்போ கத்திட்டு இருக்க?” என்று கிறு கோபமாக கேட்க,

 

“நான் நினைச்சால் உங்க நான்கு பேரையும் விளையாட விடாமல் என்ன வேணுன்னாலும் பன்ன முடியும்” என்று எகத்தாளமாய் ராகவ் கூற

 

“நான் நினைச்சால் என்ன பன்ன முடியும்னு உனக்கு காட்டுறேன்” என்று தன் மொபைலை எடுத்து பி.எம் ற்கே அழைத்து பேச ஆரவும் சிறிது நேரம் பேசினான் பி.எம் உடன்.

 

பின் அவள் உடனே சி.பி.ஐ ற்கு அழைத்துப் பேச ராகவின் தொழில், தந்தையின் தொழில், அவர்களுக்கு சொந்தமான அத்தனை இடங்களிலும் உடனியாக ரைடு செய்யப்பட அதே இடத்திற்கு சிடியின் கமிஷனர் வருகை தந்தார்.

 

“ஹலோ சேர், ஹலோ மேம்” என்று கூற இருவரும் சிறிது நேரம் பேச

 

ராகவிடம் வந்த கமிஷனர்

 

“மாமியார் வீட்டிற்கு போகலமா ராகவ்?” என்று கேட்க,

 

“நான் மினிஸ்டரோட பையன் என் மேலே கையை வச்சா பின் விளைவுகள் ரொம்ப பெரிசா இருக்கும்” என்றான் ஆரவ், கிறுவைப் பார்த்து

 

“உங்க அப்பா இப்போ எக்ஸ் மினிஸ்டர், இன்னொரு விஷயம் உங்க அப்பாவை அடிமட்ட தொண்டர் பதவி இருந்து கூட கட்சியில் தூக்கிட்டாங்க, மற்றையது உனக்கு சொந்தமான அத்தனை புரொபடிஸ்லயும் சி.பி.ஐ ரைட்டு நடந்துட்டு இருக்கு, இப்போ நீ பன்ற இல்லீகல் பிசுனசிற்காக தான் ஆதாரதோடு அரெஸ்ட் பன்றாங்க” என்று கிறு கூற

 

அனைவருமே அவளை அதிர்ச்சியாய் பார்த்தனர். ராகவோ அவளை அதிர்ந்துப் பார்க்க

 

“நான் நினைச்சு ஒரு நிமிஷத்துல உன்னை நடுத்தெருவிற்கு கொண்டு வந்துட்டேன், இதான் பேசும் போது பார்த்து பேசனும்னு சொல்றது” என்று கிறு பொதுப்படையாகக் கூறினாள்.

 

“நீ யாரு?” ராகவ் கேட்க,

 

“கிறுஸ்திகா ஆரவ் கண்ணா அகோர்மா குரூப்ஸ் என்ட் கம்பனி டில்லி பிரான்சோட எம.டி” என்றாள்.

 

மற்றவர்கள் அவளை அதிர்ந்துப் பார்க்க, 

 

“இன்னொரு விஷயம் ராகவ், தமிழ் நாட்டுல இருந்து வந்திருந்தால் உன் காழுக்கு கீழ வச்சிக்கலாம்னு தப்பு கணக்கு போடாத, என்ட் நாங்க நான்கு பேருமே கல்யாணம் ஆனவங்க, அதனால் உன் தொடுகையோட அர்த்தம் நல்லாவே புரிஞ்சிது, தப்பா வாழ்ந்தால் இப்படி தான்” என்றாள்.

 

“தமிழ்நாட்டுல இருந்து வந்தவங்க தைரியம் இல்லாதவங்க, கோமாளிங்க, நாங்க என்ன பன்னாலும் பொறுத்துப்பாங்கன்னு நினைக்காதிங்க. நாங்க பொறுமையா இருக்கிறது உங்களுக்கு பயந்துட்டு இல்லை. எங்க ஊருக்கு எந்த விதத்திலும் அவ பெயரை எடுத்து கொடுக்கக் கூடாதுங்குற ஒரே காரணம் தான். எங்களுக்கும் பொறுமைக்கு எல்லை ஒரளவு தான். எங்க பொறுமையை சோதிக்கிறது போல ஏதாவது பன்னி தேவையில்லாமல் வாங்கி கட்டிகாதிங்க” என்றாள் கீது அனைரின் முன்னிலையிலும்.

 

பின் ராகவை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

 

“கண்ணா நீ எப்படி இங்கே வந்த?” என்று கேட்க,

 

“உனக்கு அவன் தப்பானவன்னு தெரிந்தும் எதுக்கு எனக்கு போன் பன்ன இல்லை?” என்று ஆரவ் கேட்க,

 

“வீட்டிற்கு வந்து சொல்லலாம்னு இருந்தோம்” என்றாள்.

 

“நான் வரவிட்டால் அப்படியே வாய்ச் சண்டை தான் போட்டு இருப்பிங்க இல்லையா?” என்று ஆரவ் திட்டினான்.

 

“இல்லை மாமா எனக்கு கராத்தே தெரியும்” என்று சௌமி கூற

 

“அப்போ எதுக்கு பார்த்துட்டு இருந்த?” என்று ஆரவ் கேட்க,

 

“நீங்க உள்ள வருகிறதை நான் பார்த்துட்டேன், சும்மா எதுக்கு நான் என் எனர்ஜியை வேஸ்ட் பன்னனும்னு அமைதியா இருந்தேன்” என்றாள் சௌமி.

 

அனைவரின் முன்னிலையிலும் சென்றவன் “போர்டால் உங்களுக்கு இவங்களை கோர்ச்சா போட்டு இருக்காங்க” என்று  ஒரு ஆணைக் பார்த்து ஆரவ் கூற

 

“எங்களால அவங்களை கோர்ச்சா ஏத்துக்க முடியாது” என்றனர் அந்த ஐவரும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 21யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 21

“மீரா என்னடி பேசாம இருக்க?” என்று அவளை உசுப்பேற்றி விட, மொபைலை அவனிடம் வீசி விட்டு அழுதுக் கொண்டே தனது அறைக்கு ஓடினாள் மீரா.   கவின், “எதுக்கு கிறு இப்படி பன்ன?” என்று கேட்க,   “நான் என்ன பன்னேன்?”

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 37யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 37

நிலவு 37   ஆரவ் ஷ்ரவனையும், கிறுவையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்த இருவரும் மற்றவரைப் பார்த்து அதிர்ந்ததோடு இருவருக்கும் கண்கள் கலங்கிவிட்டன. அதைப் பார்த்த ஆரவ் மென்புன்னகையை வீசினான்.    “ஏ.கே நீ இங்கே எப்படி?” என்று கேட்க,   “அதை நான்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 11யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 11

நிலவு 11   “ஜீவிதா இன்றைக்கு கோயிலில் ஒரு முக்கியமான பூஜை இருக்கு, நீயும் கவினும் கலந்துக்கங்க” என்று தர்ஷூவின் புறம் திரும்பிய சாவித்ரி     “தர்ஷூ நீயும் தான் மா, உன் புருஷனை கூட்டிக்கிட்டு வா” என்றார்.    “இப்போவே