Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 9’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 9’

9 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

 

4 நாட்கள் செல்ல மித்ரன் காலேஜில் தனியே கிரௌண்டில் படித்துக்கொண்டிருந்தவன் திடீரென சில்லென்ற காற்று வீச சற்று வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவனது மனக்கண்ணில் மித்து வண்டிய விட்டு இறங்கி நடந்து வா என மிரட்டியது, அவள் தன்னை ஆதி என அழைப்பது போல அவளுக்கு இவன் செல்ல பெயரிட சொல்லி வம்பிழுத்தது, அம்மாவின் முன்னே ‘உன்னை பாக்காம எப்படி இருப்பேன்னு’ கேட்டு திணறவைத்தது, என நினைத்து பார்த்தவன் அவளின் செய்கையில் மெலிதாக புன்னகைக்க அவ்வழியே வந்த குணா, ராஜீவ் “டேய்…அங்க பாரு.. மித்ரனா அது…சிரிக்கிறான்..எப்படி?” என ஆச்சர்யமாக பார்க்க அங்கே வந்த குமார் அவனது நண்பர்களை நிறுத்திய குணா “ஏய்…உங்க கேங்ல ஒழுங்கா கொஞ்சம் மனுஷன் மாதிரி இருந்ததே மித்ரன் மட்டும் தான்… இப்போ அவனும் மெண்டல் ஆகிட்டானா?” என

குமாரும் மித்ரனை பார்த்துவிட்டு விழிக்க அருகில் இருந்தவன் “மித்து கைல பட்ட பால் இவன் மண்டைலையும் பட்டிருக்குமோ?” என தீவிரமாக யோசிக்க அவனிடமே வந்த கேட்க மித்ரன் இவர்களை பார்த்ததும் மீண்டும் தன் பழைய நிலைக்கு வந்தவன் “டேய் சும்மா நான் ஏதோ நினைச்சிட்டு இருந்தேன்..நீங்களா ஏதாவது யோசிச்சி குழப்பிக்கிட்டு மத்தவங்களையும் கொழப்பாதீங்க..” என அவன் தெளிவாக கூறிவிட்டு செல்ல

பின்னால் இருந்து கேட்ட குணா குமாரிடம் “ம்ம்ம்..எப்படி இருந்த பையன் இப்டி ஆகிட்டான்..என்னத்த சொல்றது.. ? எல்லாம் விதி..சேர்க்கை அப்டி” என கிண்டல் செய்ய

குமார் “ம்ம்…மித்ரன் அப்நோர்மல் ஆனது கூட எனக்கு வலிக்கலடா..ஆனா இந்த அரவேக்காடு எல்லாம் கலாய்க்கற அளவுக்கு வெச்சுக்கிட்டானேனு நினைக்கும்போது தான் ரொம்ப கஷ்டமா இருக்குது..உண்மைதான் எல்லாம் விதி..” என அவனும் பெருமூச்சுடன் சொல்லி குணாவை அசிங்கப்படுத்த சுற்றி இருந்த அனைத்து நண்பர்களும் ‘இது உனக்கு தேவையா?’ என சிரித்தனர்..

முன் போல அன்றி இப்போது எல்லாம் இரு குழுவும் சண்டை போடுவதில்லை..எதோ பேச்சில் அவ்வப்போது மாற்றி மாற்றி கிண்டல் செய்வதோடு சரி..அதையும் விளையாட்டாகவே எடுத்துக்கொண்டனர்..ஆனால் சிவா, மித்ரன் மட்டும் பேசிக்கொள்ளவில்லை..

 

மித்ரன் சொன்னது போலவே 2 வாரமாகியும் மித்ரா காலேஜ்க்கு வரவில்லை..அவனுக்கு ஏதோ உறுத்தினாலும் யாரிடமும் கேட்கும் எண்ணமில்லை..

அந்த வார இறுதியில் ஆசிரமத்தில் மித்ரன் வேலை பார்த்துக்கொண்டிருக்க அவனுக்கு மித்ராவின் சத்தம் கேட்க முதலில் அதை விட்டு வேலையை தொடர்ந்தவன் மீண்டும் கேட்க கீழே வந்து பார்த்தான்.. குட்டிஸ்களிடம் வேலை செய்ய சொல்லிக்கொண்டிருந்த மித்து அவனை பார்த்து உண்மையான ஆச்சரியத்தில் “ஹே ஆதி..நீயா? இங்க என்ன பண்ற? அதுவும் மரத்து மேல இருந்து வர?”

“அதை நான் கேட்கணும்….நான் இருந்தது வளந்தது எல்லாம் இந்த ஆசிரமத்துல தான்.. மேல இந்த கொடி கட்றதுக்காக போனேன்..நீ சொல்லு இங்க என்ன பண்ற? எதுக்கு வந்த?”

மித்து முகம் சுருக்கி “நான் இவங்க எல்லாரையும் பாக்க வந்தேன்..ரெகுலரா நான் இங்க வருவேன்..”

அவன் நம்பாமல் பார்க்க அதன் பொருள் உணர்ந்தவள் “ஹே..உண்மையைத்தான் சொல்றேன்..வேணும்னா பாலு அங்கிள்கிட்ட கேளு..” என அந்நேரம் பார்த்து அங்கே வந்த அந்த ஆசிரம உரிமையாளர், மேலாளர் திரு.பாலகிருஷ்ணன் இவர்கள் சாதாரணமாக பேசுவதை பார்த்து “என்னம்மா மித்ரா உனக்கு மித்ரனை முன்னாடியே தெரியுமா?”

அவள் வாயெடுக்கும்முன் மித்ரன் “ஆ…மாமா..எங்க காலேஜ் தான்…ஜூனியர் அதனால பழக்கம்..” என மித்ரா அம்மாவிடம் தான் சொன்னதைப்போல இங்கேயும் சொல்லிவிடுவேனோ என பதறி அவன் பதில் கூறியதை எண்ணி சிரித்தவள் வேறு வகையில் மாட்டி விட எண்ணி “அங்கிள் நீங்க சொல்லுங்க..நான் இங்க அப்போ அப்போ வருவேன் தானே..சொன்னா நம்பவே மாட்டேங்கிறாங்க..நான் இவரை பாக்க வந்த மாதிரி என்னை சந்தேகப்படுறாங்க..” என

“அவனை பாக்கவா? அது எதுக்கு?”

“அது ஏன்னா…”

மித்ரன் “ஆ..இல்லமாமா நான் இதுவரைக்கும் இங்க பாத்ததில்லைல..அதான் கேட்டேன்..வேறேதும் இல்லை..”

பாலகிருஷ்ணன் புன்னகையுடன் “இல்லமா மித்ரா நீ வாரக்கடைசில ஏதாவது ஒரு நாள் அதுவும் காலைல வந்துட்டு சாயந்தரம் போய்டுவ.. மித்ரனோ வரக்கடைசில எல்லாம் பார்ட் டைம்மா ஏதாவது வேலை பாக்க போயிடுவான்..நைட் தான் வருவான்..உன்னை பாத்ததில்லைல..அதான் கேட்ருப்பான்…ரொம்ப நல்ல பையன்..என் சொந்த பையன் மாதிரி..அதுக்கு மேலன்னே சொல்லலாம்…”

மித்ரனிடம் திரும்பி “மித்ராவும் அவங்க குடும்பமும் அப்பப்போ இங்க வருவாங்க..நிறைய ஹெல்ப் பண்ணுவாங்க…உனக்கு சொல்லிருக்கேன்ல என் நண்பர் வெங்கடாச்சலம் அவரோட பொண்ணு தான் மித்ரா…பல வருஷ பழக்கம்..”

மித்ரா “அவ்ளோதானா? மித்ரனை காட்டி அவரை மட்டும் உங்க பையன் மாதிரி சொன்னிங்க? நானு?” என

அவர் புன்னகையுடன் “ஹாஹாஹா…உன்னை தனியா சொல்லனுமாடா..உன்னை பொறந்ததுல இருந்து பாத்திட்டு இருக்கேன்..எல்லாருக்கும் தெரியுமே..நீ என்னோட செல்லபொண்ணுனு…நீங்க இரண்டுபேருமே எனக்கு கிடைச்ச பெரிய கிப்ட் தான்..” என்றவர் “சரி நீங்க இங்க கொஞ்சம் பாத்துக்கோ..நான் உள்ள போயி போன் பேசிட்டு வரேன்..நாளைக்கு நம்ம ஆசிரமத்துக்கு விசிட் வரவங்க எத்தனை மணிக்கு வராங்கனு கேட்டுட்டு வரேன்..” என கூறி அவர் நகர

மித்ரா புன்னகையுடன் “ஆதி, நீ திரும்ப மரத்துல ஏறி இத கட்டு போ…” அவன் முறைக்க “அங்கிள் இங்க வேலை பாக்க சொன்னாங்களே..” என பாவமாக கூற அவன் மௌனமாக சென்று வேலையை .தொடர்ந்தான்…பின் இருவரும் ஆளுக்கு ஒரு வேலையாக குட்டிஸ்களுடன் செய்ய சிறிது பொறுத்து குழந்தைகள் சாப்பிட்டு விட்டு சென்றதும் தனியே இருக்கையில் மித்ரன் “கேட்கணும்னு நினச்சேன்.. அன்னைக்கு ஏன் கிரௌண்டில அடிபட்டதுனு சொல்லவேண்டாம்னு சொன்ன?”

மித்ரா “அதுவா…நான் கிரௌண்ட்க்கு போனேன்னு தெரிஞ்சாலே வீட்ல செம டோஸ் விழும்..”

“ஹே..உங்க அம்மா அவ்ளோ பிரண்ட்லியா பேசுறாங்க…அவங்களா திட்டப்போறாங்க…சும்மா சொல்லாத..நீ ஏதாவது பண்ணிருப்ப..”

“ம்ச்…என்னை நம்பு ஆதி…நான் எதுவும் பண்ணல..அவங்களோட பயம்..எனக்கு ஏதாவது ஆகிடுமோனு..அதனால விடமாட்டாங்க..அதுக்கு பதிலா என்ன கேட்டாலும் செய்வாங்க..ஆனா எனக்கு ஸ்போர்ட்ஸ், கிரௌண்ட் ரொம்ப இஷ்டம்..”

“எதுக்கு பயம்?”

“அது..நீ பாத்த என் அம்மா மாதிரியே அவங்கள விட என் மேல பாசமா இருந்த இன்னொரு அம்மா என் லைப்ல இருக்காங்க.. என் அக்கா..பேரு சந்தியா..ரொம்ப பாசமானவ..ரொம்ப கிளவர்..ஷார்ப்..கொஞ்சம் டக்குனு கோபப்படுவா..தப்பு நடந்தா அவளால ஏத்துக்கமுடியாது..ரொம்ப தைரியமானவ..இன்பாக்ட் என்னை ரெகமெண்ட் பண்ணி இந்த உலகத்துக்கு கொண்டுவந்ததே அவ தான்…ஒரு பொண்ணு மட்டும் போதும்னு இருந்த என் அம்மா அப்பாகிட்ட  தங்கச்சி தான் வேணும்னு அடம்பண்ணி அவ ஆசைப்படியே நான் பொறந்தேன்…எனக்கும் அவளுக்கும் 9 வருஷ வித்தியாசம்…..நான் தான் அவளோட முத குழந்தை. அப்டி பாத்துப்பா..அவளுக்கு புட்பால்னா ரொம்ப இஷ்டம்..நல்ல பிளேயர்..அவ மேட்ச்க்கு போயிருந்த ஒரு இடத்துல தான் எதோ பிரச்சனை ஆகியிருக்கு…திரும்பி வரும்போது அவளுக்கு பெரிய ஆக்சிடென்ட்..அக்கா கோமாக்கு போய்ட்டா..அவங்க பிரண்ட்ஸ் சொன்னாங்க…அவகிட்ட யாரோ பெரிய இடத்து பையன் ப்ரொபோஸ் பண்ணான்..ஆனா இவ ரிஜெக்ட் பண்ணிட்டா..சோ அவன் அந்த கோபத்துல கூட இப்டி பண்ணிருக்கலாம்னு..பட் அது யாரு என்னனு யாருக்குமே தெரில..”

என் அம்மா அப்பா எல்லாருக்குமே என் அக்காகிட்ட எதெல்லாம் பாத்து பெருமைப்பட்டாங்களோ, அதெல்லாம் அப்புறம் நினச்சு ரொம்ப வருத்தப்பட்டாங்க..அவ விளையாட்டு தான் ஒரு அடையாளம் அதுல இருந்து தனக்கு எப்போவுமே ஒரு தனி தைரியம்னு சொல்லுவா..அது எனக்கு வேணாம்னு முடிவு பண்ணிட்டாங்க..

அந்த மேட்ச்னால தானே அப்டி ஒருத்தன பாக்கவேண்டியதா போச்சு.. அவளோட அளவில்லாத அந்த  தைரியத்தினால தானே அவ்ளோ பிரச்சனைனு இவங்களா முடிவு பண்ணி அதிலிருந்து முழுசா விலக சொல்லிட்டாங்க..அவ கனவும் அவளோட அப்டியே அழிஞ்சு போச்சு. இனி என் அக்கா விளையாடமாட்டா..இதோட எல்லா பிரச்னையும் முடிஞ்சது.. அவ உயிரோட கிடைச்சதே போதும்னு ஒரு அம்மா அப்பாவா இருந்து அவங்க சொல்லிறாங்க..ஆனா அவளோட இடத்துல இருந்து யோசிச்சா அது எவ்ளோ பெரிய இழப்பு.. திறமை இல்லாம, நமக்கு தகுதி இல்லாம ஒரு விஷயம்  கிடைக்கலேன்னா அது வேற..ஆனா அடுத்தவங்களோட அவசரத்துல முட்டாள்தனத்தால நம்ம வாழ்க்கை போகுதுன்னா அது எப்படி ஏத்துக்க முடியும் ஆதி..இதுக்கெல்லாம் எதிர நான் பேசுனா கூட இவங்க எனக்கு ஏதாவது பிரச்சனை வரும்னு பயப்படுறாங்க..அத யோசிச்சா பயங்கரமா கோவம் வரும்..ஆனா நீயாவது எங்களுக்கு வேணும்னு கெஞ்சும் போது என்னால எதுவும் பண்ணமுடில… என்றவளது கண்கள் கலங்கின..

 

“சில நிமிடம் மௌனமாக இருந்தவள் ஆதி, எனக்கு எப்போவுமே தோணும்.. ஆசிரமத்துல இருக்கிற குழந்தைங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி பிரச்சனை வந்தா யாரு அவங்களுக்காக முன்னாடி வருவாங்க…மத்தவங்கள குறை சொல்லியும் பிரயோஜனம் இல்லை. முழுசா நம்பியும் வேஸ்ட்…நமக்கு மீறி அந்த இடம் இருக்கின்னா சண்டை போடவும் யாரும் வரமாட்டாங்க..நம்மளையும் விடமாட்டாங்க. நம்ம கனவு அழியிது வாழ்க்கையே போகுதுன்னாலும் அட்வைஸ் நமக்கு தான்கிடைக்கும்..ஏன்னா இங்க கடைசியா ஜெயிருக்கிறது பணம் தானே…இதெல்லாம் மாறவேமாறாதா ஆதி..” என மௌனமாக எதையோ யோசித்தபடி இருந்தவள் “ஆதி நீ இதெல்லாம் பாத்து இந்த மாதிரி பிரச்சனைகள இருந்து வெளில வரமாதிரி கொஞ்சம்  ஏதாவது பண்ணு.. இந்த மாதிரி ஆதரவு இல்லாம இருக்கிறவங்களோட கனவு சுத்தி இந்த சொசைட்டி சொல்ற ஒண்ணுமில்லாத காரணங்களுக்காக  அழிஞ்சுபோக கூடாது..இதுக்காக நீ ஏதாவது பண்ணு ஆதி ப்ளீஸ்…” என்றவள் அமைதியாக பெருமூச்சுடன் எழுந்து சென்றாள்..

ஆதிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..சின்ன குழந்தை என நினைத்தவன் எவ்ளோ யோசிச்சிருக்கா. தனக்கு பிடிச்சாலும் மத்தவங்களுக்காக யோசிச்சு அவ பண்ற விஷயம். பல சமயத்துல சுத்தி நடக்குற பிரச்னைல அவ சட்டுனு கோவப்பட்டாலும் அதை கண்ட்ரோல் பண்ணிட்டு பேசியே பிரச்னைகளை சமாளிக்க பாக்குறது, விளையாட்டுத்தனமாவே ஹண்டில் பண்றது எல்லாம் எதனாலனு இப்போ புரியுது..அவள் தன்னிடம் இறுதியாக கேட்டதை எண்ணியபடியே அங்கிருந்து நகர்ந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 33’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 33’

33 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் செல்லும் வழியில் மித்ரா வெளியே புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தவள் அவன் அமைதியாக வருவதை கண்டவள் “என்ன ஆதி, என் மேல செம காண்டுல இருக்கியோ?” என வம்பிழுக்க அவனும் புன்னகையுடன் “நீ

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 23’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 23’

22 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   “எக்ஸாம் ரிசல்ட்க்கு வெயிட் பண்ணுற மாதிரி ஏன் இவளோ டென்ஷன இருக்க…ஜஸ்ட் பீ ரிலாக்ஸ்…” “கிண்டல் பண்ணாத ஆதி….அக்கா ஓகே சொல்லிடுவாள்ல? சிவா எதுவும் கோபப்பட்டு வரமாட்டான்ல?” வெளியே வந்த சிவா

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 24’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 24’

24 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் தொகுப்பாளர் : சூப்பர் சார்..அவங்க முழு பேர்? “மித்ராந்தியா” “இரண்டுபேரோட பேருமே இப்டி சிங்க் ஆகுதே..நைஸ் சார்..அவங்களை பத்தி சொல்லுங்க…”   தியாவ பத்தி சொல்லனும்னா “ரொம்ப நல்ல பொண்ணு..ரொம்ப பாசமானவ..எல்லாருக்கும் ஹெல்ப்