Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 8’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 8’

8 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

அடுத்து வந்த நாளில் மேட்ச் என்றாக சிவா, மித்ரன் இருவரும் இம்முறை ஜெயிக்க வேண்டுமென்பதில்  தீவிரமாக இருந்தனர். அதேபோல போட்டியில் வெற்றியும் பெற இங்கே சிவா, மித்ரன் பிரண்ட்ஸ், மித்ரா அவளது தோழிகள் என அனைவரும் அங்கேயே கத்தி கொண்டாட்டமாக இருக்க எதிரணியில் “டேய் என்னடா இரண்டுபேரும் ஒண்ணா விளையாண்டிருக்கானுங்க..? பேசி சமாதானம் ஆகிட்டானுங்களா?”

“இல்லடா..பேசாமையே சமாதானம் ஆன மாதிரி தான் இருக்கானுங்க. இப்போ எல்லாம் சண்டையே இல்லை..”

“எப்படி இது நடந்தது?”

“எல்லாம் ஒருத்தி வந்திருக்கா. சிவா அவனோட கேங்கூட பெஸ்ட் பிரண்ட்டாம், மித்ரனை லவ் பண்றாளாம் என மித்ராவை பற்றி கூற இதுவரை நடந்தவற்றை கூறி இந்த தடவ மட்டும் அவனுங்க சேந்து விளையாட்டாட்டி நாம தான் மச்சான் இப்போவும் வின்..எல்லாமே அவ கெடுத்துவிட்டுட்டா…” என அதை கேட்டு கடுப்பானவன் “இது ஏன்டா என்கிட்ட முன்னாடியே சொல்லல…?” என்றவனை சுற்றி சிவா மித்ரன் பிரண்ட்ஸ் கிண்டல் செய்து வெற்றியை கொண்டாட ஓடிவிட அங்கே இருந்து மரத்தருகில் தண்ணீர் குடிக்க வந்த மித்ராவை கண்டவன் அவளிடம் “ஏய் என்ன ஜூனியர்னா அடக்கஒடுக்கமா இருக்கனும்…ஏதோ தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்க போல?”

மித்ரா பாவமாக தண்ணீ குடுக்கிறது ஹெல்த்க்கு தேவையான விஷயம் தானே..?

“ஏய் என்ன கிண்டலா..இன்னொரு தடவ மித்ரன் சிவா பக்கம் தலைவெச்சு கூட படுக்கக்கூடாது..மீறி பண்ண ஒழுங்கா வீடு போயி சேரமாட்ட..”

“ஹா ஹா ஹா..அவனுங்க இரண்டுபேரையும் நான் சேத்தி வெக்கல பாஸ்.. நீங்களும் உங்க கேங்கும் தான்..”

என அவர்கள் புரியாமல் விழிக்க

“ஆமா, நானும் சொல்லி, கெஞ்சி, மிரட்டி, சண்டை போட்டு கூட பாத்தேன்.. இரண்டுமே இறங்கி வரல..ஆனா நீ மேட்ச்னு ஒரு ரூட் போட்டு குடுத்து அதுல அவனுங்கள பேசி பேசி வெறுப்பேத்துனிங்களே..செம டைமிங்..அதான் யூஸ் பண்ணிக்கிட்டேன்..எப்டியோ ரொம்ப தேங்க்ஸ்.. ஓ…சாரி இந்த மேட்ச் நீங்க தோத்து போயி பீலிங்ஸ்ல இருக்கீங்கள்ல..ஆழ்ந்த அனுதாபங்கள்..” என அவள் மேலும் வெறுப்பேற்றி விட்டு செல்ல

அவள் சற்று தூரம் சென்றதும் பாலை அவளை குறி பார்த்து வீச அது அவளது வலது கையை முழு வீச்சுடன் தாக்கியது..

“அம்மாஆஆஆ….”

சிவா “மித்து..” என ஓடி வர

மித்ரன் அவளை பாய்ந்து சென்று தாங்கினான்..

சுற்றி அவர்களது நண்பர்கள் சூழ அடித்தவனோ “அய்யய்யயோ…சாரி சாரி…என்ன மா பாத்து வரதிலையா? பால் பட்டா கூட தாங்கமுடில..நீ எல்லாம் எதுக்கு கிரௌண்ட்க்கு வர..பாத்து போ..”

“பால் வரத கவனிக்கறதில்லையா? சீக்கிரம் போயி டாக்டர் பாரு மா..” என சொல்ல

சுற்றி எல்லாரும் ஒருவேளை இவள் கவனிக்காமல் வந்துவிட்டாலோ என பார்க்க மித்து “டேய் இடியட்ஸ். உங்கள..நீங்க வேணும்னே தான் அடிச்சிருக்கீங்க..எனக்கு தெரியும்” என சற்று முன் அவன் மிரட்டியதை கூற

அவனோ “ஆமா வேணும்னு தான் பண்ணேன்..இப்போ அதுக்கு என்ன டி..”

“ஏய்..டி சொல்லி கூப்பிடாத….எனக்கு கோபம் வந்தா அவ்ளோதான்..” என வலியில் இருந்தும் அவர்களை மிரட்ட

“என்னடி பண்ணுவ” என அவள் அருகில் இருந்த கல்லை எடுத்து வீச கை வலியில் “ஆ…” எனஅவள் கத்த

அவளுக்கு இருபுறத்திலும் இருந்த மித்ரன் சிவா இருவரும் “ஏய்..பாத்து…” “மித்து இரு..வேண்டாம்” என

“அடடாடா..என்னமா தாங்குறானுங்கடா….சிவா பிரண்ட்.. மித்ரன் லவர்னு சொன்னிங்க…இப்போ இவனுங்க பாசத்தை பதட்டத்தை பாத்தா இரண்டுபேர்ல யாரு லவர்னே தெரிலையே..ஒருவேளை இரண்டுபேருமே இருக்குமோ?” என அசிங்கமாக பேசி சிரிக்க மித்ரன் கை முஷ்டிகளை இறுக்க

சிவா பைக் சாவி எடுத்து மித்ரனிடம் தந்தவன் “மித்துவ நீ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ.. நான் இவனுங்களை பாத்துக்கறேன்..” என அனுப்பி வைத்தான்..

அவனும் அவர்களை முறைத்தவன் மித்து வலியில் துடிக்க மௌனமாக சாவியை வாங்கிகொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.

 

அவளுக்கு பிரேக்ச்சர் என கூறி கட்டு போட, ஊசி மருந்து என அனைத்தும் தர அனைத்தும் முடிந்து வெளியே வரும்வரை பொறுமையாக அவளுடன் காத்திருந்தவன் வெளியே வந்ததும் பொரிய துவங்கிவிட்டான்..

“ஆதி..உனக்கு என்னாச்சு..அவனுங்க அப்டி நடந்துக்கிட்டதுக்கு நீ ஏன் என்னை திட்ற..”

“லவ் பண்றே அது இதுனு சொல்லி இப்போ பாரு உனக்கு இது எல்லாம் தேவையா? வந்தியா படிச்சியா உன் லைப் பாத்தியா போனியானு இருக்கனும்..இது எல்லாம் ஜஸ்ட் ஒரு அட்ட்ரக்ஷன்..இன்பாக்சுவேஷன் அவ்ளோதான்..அத முதல புரிஞ்சுக்கோ..இப்போ எல்லாம் ஜாலியா தான் இருக்கும்..ஆனா பிராக்டிகலா ரொம்ப பிரச்சனை வரும்..புரிஞ்சுப்பேனு நினைக்கிறேன்..இனிமேல் என்னை டோடல அவொய்ட் பண்ணிக்கோ அதுதான் உனக்கு நல்லது..” என அவன் கத்திமுடிக்க

மித்து நிதானமாக ஆனால் கடுப்புடன் “ஆதி, எனக்கு தெளிவான பதில் சொல்லு. உனக்கு பிரச்னை நான் உன்னை லவ் பண்றதா? இல்ல எல்லாருக்கும் தெரியமாதிரி வெச்சுகிட்டதா?”

அவன் அவளை முறைக்க மித்து “எதுக்காக நீ இப்போ என்னை திட்டறேனே எனக்கு புரில..லவ் பண்ணதே தப்புனா, நீ அன்னைக்கே என்கிட்ட சொல்லி திட்டி அனுப்பிச்சிருக்கலாம்….இவளோ நாள் எதுக்கு அமைதியா இருந்த?”

மூச்சை உள்ளிழுத்தவள் அவனிடம் “பாரு ஆதி, நான் எந்த தப்பும் பண்ணல..சோ யாருக்கும் பயப்படணும்னு அவசியமில்லை.. எனக்கு உன்னை பிடிச்சது சொன்னேன்…மத்தவங்க வேலை வெட்டி இல்லாம இதை கவனிச்சு டாபிக் கிடைக்கலன்னு இத பேசுறதுக்கு எல்லாம் நான் பொறுப்பாகமுடியாது. என் மேல அன்பா இருந்தாலும் சரி, பிடிக்கலைனு வெறுப்பா இருந்தாலும் சரி அது எனக்காக இருக்கணும்னு தான் நான் எதிர்பார்ப்பேன்.. உனக்கு என்னை பிடிக்கல என்கிட்ட பிரச்னைனா அதை நேரா சொல்லு..சும்மா அடுத்தவங்க சொல்ராங்க கேக்கறாங்கனு எல்லாம் என்னால வாழமுடியாது.. அதோட அட்ட்ரக்ஷனல சுத்துற அளவுக்கு இது ஒன்னும் கிட்ஸ் லவ் இல்லை.. நான் தெளிவா தான் இருக்கேன்.. நீ தெளிவா இல்லாட்டி நீதான் பொறுமையா யோசிக்கணும்…நான் என் லைப்ல என்ன பண்ணிட்டு இருக்கேன். எது எனக்கு வேணும்னு எல்லாமே நான் தெளிவா யோசிச்சிட்டேன்..அவசரத்துல எந்த முடிவும் எடுக்கல… அதை புரிஞ்சுக்கோ..இனிமேல் இப்டி மத்தவங்களுக்காக என்னை திட்றது, அட்வைஸ் பண்ற மாதிரி இருந்தா நீ எனக்கு எதுமே செய்ய வேண்டாம்..” என கூறிவிட்டு அவள் முன்னே நடந்து சென்றுவிட்டாள்.

 

ஒரு சில நொடிகளே மித்ராவின் பின் தொடர்ந்து சென்றவன் “அதுக்கு மேல உன் இஷ்டம்.. இனி நான் எதுவும் சொல்லல..இப்போ வா…உன்னை வீட்ல ட்ராப் பண்றேன்.”

திரும்பி பார்த்தவள் “வேண்டாம்…நடந்தே போய்க்கறேன்..” என திரும்பி நடக்க கடுப்பானவன் “நீ தேவையில்லாம இப்போ ரியாக்ட் பண்ணிட்டு இருக்க…இவளோ தூரம் வந்தேள்ல இப்போ மட்டும் என்ன? இதுக்கெல்லாம் கோவப்பட்டா ரொம்ப கஷ்டம்..கூட வந்திட்டு பாதில விட்டுட்டு போகணுமாம்..” என அவன் கத்திகொண்டே இருக்க

மித்து அவனை ஏதோ ஜந்து போல பார்த்துவிட்டு “ஏய்..ஆதி நீ உண்மையாவே அவசரக்குடுக்கை தான்…நான் கோபப்பட்டு ஒன்னும் சொல்லல..வண்டில உக்காந்தா எதுவும் பிடிக்கமுடில..இதோ கைல நல்லா கட்டு போட்டு பேக் பண்ணிட்டாங்க..வலிக்கிது..அதான் நடந்தே போகலாம்னு சொன்னேன்…அதோட நான் உன்னை எப்போ பாதில போன்னு சொன்னேன்..ஒழுங்கா இறங்கி வண்டிய தள்ளிட்டு என் கூடவே வா..” என அவள் மிரட்ட இவனுக்கு தான் என்ன சொல்வது என்றே தெரியாமல் விழிக்க

அவளோ சொடக்கிட்டு “வண்டிய விட்டு இறங்கு…எனக்கு பசிக்கிது மில்க்கிபார் வேணும்…வாங்கிக்குடுத்தா சமத்தா வருவேன்….இல்லை சிவாகிட்ட சொல்லி அங்க அடிச்சுகிட்டு இருக்கறவங்கள விட்டுட்டு வந்து உன்னை அடிக்க சொல்லுவேன்..” என அவனுக்கு சிரிப்பதா திட்டுவதா என்றே தெரியவில்லை..

“சரி வா..போற வழில கடை இருக்கும்..வாங்கி தரேன்..” என அழைத்துக்கொண்டு சென்றான்..

அவளோ வரும் வழியில் பார்க்கும் அனைத்தையும் பற்றி பேசிக்கொண்டே வர ஆதியால் அவளை வளர்ந்த பெண்ணாக என்னவே முடியவில்லை..குழந்தைத்தனம் மாறாத இவளை பக்குவப்பட்ட பெண்ணாக காதலியாக அவனால் எண்ண முடியவில்லை..

வீடு வந்ததும் “ஆதி நான் சொல்றபடி சொல்லு..எனக்கு கிரௌண்ட்ல அடிபடல..ஓகே..வீட்ல யாரு கேட்டாலும் அத மட்டும் சொல்லக்கூடாது..சரியா..?” என அவனுக்கு டயலாக்ஸ் ரெடி செய்ய அதற்குள் அவளின் அம்மா வெளியே வந்தவர் “அய்யயோ மித்து, என்னடா என்னமா..எப்படி கைல அடிபட்டது..? என்னாச்சு..வா டாக்டர்கிட்ட போகலாம்..என்னங்க..மித்து வலிக்கிதா..” என கவிதா துடித்துப்போக

“மா மா…என்னை பாரு மா..நான் இப்போ நல்லா இருக்கேன்.. டாக்டர்கிட்ட போயிட்டு தான் வந்திருக்கேன்..பாரு பான்டாஜ் எடுத்து சுத்த சொன்னா அந்த டாக்டர் அங்கிள் கை தெரியாதளவுக்கு ஒரு பெட் எடுத்து சுத்தி விட்ருக்காரு…இதுல மறுபடியுமா?” என அவள் விளையாட்டாய் ஆனால் சாதாரணமாக பேச அவரும் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு “விளையாடாத மித்து…ஏப்பா என்ன ஆச்சு இவளுக்கு..?”

மித்ரன் “அவளுக்கு ப..”

“ஆ..படில விழுந்துட்டேன் மா..இல்லையா ஆதி..?” என கண்ணசைக்க அவனும் “ம்ம்.. ஆமாமா..”

“அப்டி என்ன உனக்கு அவசரம்..ஒழுங்கா பாத்து வரமாட்டியா? ”

மித்து “யாரை பாத்து மா…?” என கண்ணடிக்க கவிதா அவள் கன்னத்தில் செல்லமாக தட்டிவிட்டு “போக்கிரி..இந்த தம்பி..?”

“இது மித்ரன்…என்னோட சீனியர்…சிவா கேங்கோட பரமஎதிரி..அண்ட் இப்போ இரண்டுபேரும் செம கிளோஸ்…அதோட மித்ரன் எனக்கு என கண்ணடிக்க”

மித்ரன், “ம்ச்…அதெல்லாம் ஒண்ணுமில்லை மா..  நானும் சிவா எல்லாரும் ஒரே கிளாஸ் தான்..சும்மா பிரண்ட்ஸ்குள்ள சண்டைவரும்ல அதான் சொல்லவரா…டாக்டர்கிட்ட பாத்தாச்சு..இந்தாங்க மெடிசின்ஸ்…ஒன் வீக் கழிச்சு வரசொல்லிருக்காங்க..ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணவேண்டாம்னு ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காங்க…”

“அய்ய்ய்..அப்போ ஒன் வீக் கட்டபோற்றவேண்டியது தான்..என்றவள் திடீரென பல்ப் அணைய ‘அய்யொ அப்போ நான் உன்னை பாக்காம எப்படி இருப்பேன்?’ என மித்ரன் அவளையும் அம்மாவையும் பார்க்க கவிதா சிரிப்புடன் “உன் இம்சை இல்லாம அவங்க எல்லாரும் கொஞ்சம் ரிலாக்ஸ இருப்பாங்க..” என கிண்டல் செய்ய மித்ரன் “கரெக்டா சொன்னிங்கமா..முடிஞ்சா 2 வாரமா ரெஸ்ட் எடு..” என மித்து முகம் சுருக்கி முறைக்க பழிப்பு காட்ட கவிதா “உள்ள வா பா எதாவது சாப்பிட்டு போலாம்..”

“இல்லமா…”

மித்து “வேண்டாம்..அவன் போகட்டும்..என்னை பாக்கமாட்டேனு சொன்னல..கிளம்பு கிளம்பு..”

கவிதா அதை மதியாமல்  “ம்ச்…அவ கிடக்குறா..நீ வா பா..” என மித்ரன் சிரிப்புடன் “இல்லமா காலேஜ்ல எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க… நான் இன்னொரு நாள் வரேன்..”

“சரி பா பாத்து போய்ட்டு வா..” என அவனும் வண்டியை கிளப்பினான்..மித்து அவன் தன்னிடம் சொல்லிவிட்டு செல்வான்..திரும்பியாவது பார்ப்பான் என எண்ண கோபமாக இருப்பதாக அவள் முகம் திருப்பிக்கொள்ள அவனோ கண்டுகொள்ளாமல் கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டு சென்றுவிட்டான்..

கவிதா “ரொம்ப நல்ல பையனா தெரியறான்…எனக்கு ஏதோ ரொம்ப பழகுன மாதிரி ஒரு பீல்..எங்க மித்து பாத்திருப்பேன்..” என

மித்ரா கடுப்பில் “ம்ம்…போனஜென்மத்துல பரங்கிமலை பாறை மேல வெச்சு பாத்திருப்ப….” என செல்ல கவிதா “இருக்கும் இருக்கும்…ரொம்ப காலம் ஆகிடிச்சில..அதான் ஞாபகம் இல்ல போல…” என சீரியஸக சொல்ல மித்து “ஆஆ…போ மம்மி..” என கத்திகொண்டே உள்ளே சென்றாள்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 13’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 13’

13 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   அதன் பின் நடந்தவை,  கனடா வந்தது வரை அனைத்தையும் அசைபோட்டவன் அப்டியே உறங்கியும் விட்டான். ஏனோ மனம் அலைபாய்ந்துகொண்டே இருந்தது..எதிலும் ஆர்வமும் இன்றி பிடிப்பும் இன்றி அவன் தனது அன்றாட பணிகளை

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 3’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 3’

3 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் சிவா “எது எதுல விளையாட்றதுன்னு இல்லை? அதுவும் காலேஜ்ல வந்து அர்ரெஸ்ட் ம்ம்? ரொம்ப மோசமானவனா இருந்து இதுக்காகவே உன்கிட்ட பிரச்சனை பண்ணிருந்தா என்ன பண்ணுவ? நாங்க ஏதோ நல்ல பசங்கள இருக்கறதால

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 5’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 5’

5 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் அவள் ஒரு நொடி இவளை மேலிருந்து கீழ் வரை யாரென பார்க்க “ஹாய் நான் மித்ரா..நீங்க பேசுனது எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன்..உங்களுக்கு பதில் தானே வேணும்…எதனால விட்டு பிரியறதுக்கு சான்ஸ் இருக்குனு