Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 63

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 63

நிலவு 63

 

“அம்மா நான் அவனோட பெத்த அம்மா அப்பாவைப் பற்றி தேட சொல்லி யஷூ கிட்ட கொடுத்து இருந்தேன். அவை தேடி கண்டு பிடிச்சு என்கிட்ட சொன்னாள். ஆரவ் கண்ணா வேறுயாரும் இல்லை அருணாச்சலம் மாமா, தேவி அத்தையோட மூத்த பிள்ளை தான். அதற்கான DNA ரிபோர்ட்” என்று அதை தாத்தாவிடம் வழங்க அவர் அதிரந்து மகளைப் பார்த்தார்.

 

ஆரவின் கைகள் அவள் கைகளில் இருந்து தானாக விடு பட, கிறுவின் பிடி இறுகியது. அவள் அவன் முகத்தைப் பார்க்க இறுகிய முகத்துடன் இருந்தான். 

 

“கண்ணா” என்று கிறு அழைக்க, அவன் உணர்ச்சியற்ற பார்வையை அவள் மீது வீசினான். 

 

அவள் பயத்தில் எச்சிலை விழுங்க, 

 

“உனக்கு யாரு இதை பன்ன சொன்னது கிறுஸ்திகா?” என்று அவன் கேட்க,

 

அவனது கிறுஸ்திகா என்ற அழைப்பில் தன் மீது உள்ள கோபத்தைக் கண்டு கொண்டாள் கிறு.

 

தாத்தா “தேவி வினோவிற்கு முன்னாடி உனக்கு ஒரு குழந்தை இருந்தது உண்மையா?” என்று கேட்க, 

 

அவர் தன் கணவனைப் பார்க்க அவர் ஆரவை அதிர்ச்சியாய் பார்த்தார்.

 

தேவி ஆம் என்று தலை அசைக்க அவரைப் பார்த்த ஆரவ் அவன் நின்று இருந்த இடத்தில் தொப்

அமர்ந்தான்.

 

“கண்ணா” என்று கிறு தோளைப் பற்ற அவனின் எரிக்கும் பார்வையைப் பார்க்க அவள் கையை எடுத்தாள். 

 

கிறுவால் ஆரவின் இப்புறக்கணிப்பை தாங்க முடியவில்லை. கலங்கிய கண்களுடன் அவனையே பார்த்தாள்.

 

“கண்ணா, நான் சொல்கிறதை கேளு” என்று கிறு கூற

 

“எதை கேட்க சொல்ற? இத்தனை நாள் நான் உண்மையான பாசம் வச்சிருந்தவங்களையே வெறுக்குற போல பன்னிட்டியே” என்றான் விரக்தியான குரலில்.

 

“இங்க பாரு, உனக்கு உன் பெத்தவங்க பாசம் கிடைக்கனும் தான் பன்னேன் டா” என்றாள் அழு குரலில்.

 

அதில் கோபமுற்று எழுந்தவன் “நான்  உன் கிட்ட கேட்டேனா எனக்கு பெத்தவங்க பாசம் வேணும்னு” என்று அவள் தோள்களைப் பற்றி கோபத்தில் கத்த

 

“நான் என்ன தான் உன் மேலே உயிரா இருந்தாலும், என்னால் உன் அம்மா இடத்தை நிரப்ப முடியாது, அதே அளவு பாசம் நான் கொடுத்தாலும் தாய்ப்பாசத்திற்கு அது ஈடாகது” என்றாள் பொறுமையாக.

 

“எனக்கு தேவையில்லை தேவையில்லை எனக்கு எந்த பாசமும் தேவையில்லை” என்று கத்தினான் ஆரவ்.

 

“கண்ணா நீ எனக்கு ஒரு வாக்கு கொடுத்து இருக்க, ஞாபகம் இருக்கா?” என்று அவள் கேட்க,

 

அன்று அவள் கூறுவதை செய்வதாக கூறியது ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் அதை இங்கே பயன்படுத்துவாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.

 

“நீ இவங்களை ஏத்துக்க கண்ணா, நான் சொல்றதை பன்னுவேன்னு சொல்லி இருக்க” என்று கிறு கூற

 

அவன் அவளை முறைத்துப் பார்த்தான்.

 

“முறைக்குறதில் எந்த பயனும் இல்லை” என்று கூற

 

அவன் கோபத்தில் வெளியே செல்ல எத்தனிக்க கிறு அவன் கைகளை இறுகப்பற்றிக் கொண்டாள்.

 

“யேன் இதைப் பற்றி சொல்லவே இல்லை” என்று தாத்தா உறும

 

அவ்விடமே அமைதியானது. 

 

“விடுங்க தாத்தா, பெத்த பிள்ளை வேணான்னு முடிவு பன்னி இருப்பாங்க” என்று ஆரவ் கூறினான்.

 

“கண்ணா என்ன நடந்ததுன்னு தெரியாமல் வார்த்தையை விடாத” என்றாள் கிறு கோபமாக.

 

“கிறுஸ்திகா உன் மேலே செம கோவத்துல இருக்கேன் அமைதியா இரு, உன்னை காயப்படுத்த கூடாதுன்னு அமைதியா இருக்கேன்” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

 

“கண்ணா புரிஞ்சிக்க முயற்சி பன்னு” என்று கிறு கெஞ்சலாய் கூற

 

“என்னால் என்னோட பழைய வாழ்க்கை, நான் அனுபவித்த கஷ்டம், அவமானம் எதையுமே மறக்கமுடியாது. அதை நினைக்கும் போது என்னை பெத்தவங்க மேலே கொலை வெறியே வரும், அது போக போக வெறுப்பா மாறிருச்சு டி” என்று கூறி அங்கிருந்து செல்ல தேவி அழுதுக் கொண்டே இருந்தார். அதே நேரம் வெளியே சென்றவர்களும் உள்ளே வந்தனர்.

 

அதன் பின் நடந்த அனைத்தையும் மறந்து நாளை திருமண வீடு என்பதால் திருமண வேலைகள் நடைப்பெற்றன. பின் வெகு நேரத்திற்கு பிறகு உறங்கச் செல்ல கிறு தேவியுடன் பேசிய பிறகு உறங்கச் சென்றாள். அவள் இரவுடைக்கு மாறி வெளியே இருந்த கார்டனில் உள்ள கதிரையின் மேலே அமர்ந்துக் கொண்டாள். 

 

ஆரவ் அவள் மேலே வருவாள் என்று எதிர்பார்த்தவன் வெகு நேரமாகியும் வராததால் அவள் கார்டனில்  இருப்பாள் என்று சரியாக யூகித்தவன் அங்கே வந்தான். கிறு அவன் அருகில் அமர்ந்து அவளை தோளோடு அவன் அணைக்கும் வரையில் அவள் உணரவில்லை. அவளும் எதுவும் கூறாமல் அவன் தோளிலேயே சாய்ந்தாள்.

 

சிறிது நேரம் அங்கிருந்தவர்கள், பனி வர ஆரம்பிக்க

 

“பனி கொட்ட ஆரம்பிக்குது கிறுஸ்தி, உள்ள வா” என்றான்.

 

“இல்லை நீ போ அப்பொறமா வரேன்” என்று கிறு கூற

 

அவன் அவளை முறைத்தான். அவள் எதுவும் கூறாமல் அவனுக்கு முன்னே அறையை அடைந்து அவளிடத்தில் படுத்துக் கொண்டாள். ஆரவால் அவளை இவ்வாறு பார்க்க முடியவில்லை. அவள் அருகில் உறங்கியவன் அவளை இழுத்து தன் மேலே போட்டுக் கொண்டான். அவள் கண்ணீர் வடிக்க, ஆரவின் அணைப்பு இறுகியதே தவிற அவளிடம் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை.

 

அடுத்த நாள் காலை அனைவரும் பரபரப்பாக வேலை செய்துக் கொண்டு இருந்தனர். நலங்கு வைபவம் மணமக்களுக்கு இனிதே நிறைவடைந்தது. திருமணத்திற்கு அனைவரும் வருகை தர ஆரம்பித்தனர். அக்னியின் முன்னே தன்னவளின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தான் வினோ. அவனை அதிக நேரம் காக்க வைக்காது சௌமியும் அழைத்து வரபட்டாள்.

 

பெரியவர்களின் ஆசிர்வாதத்தோடு சௌமியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னில் சரிபாதியாக்கிக் கொண்டான். பின் அனைத்து சடங்குகளும் இனிதே நிறைவடைந்தது. உணவும் பரிமாற ஆரம்பிக்கப்பட்டது.

 

மாலை வேளையில் வீடு வந்து சேர்ந்தவர்கள் அனைவருமே களைப்பின் காரணமாக ஓய்வெடுத்தனர். பின் இரவு உணவு தயார் செய்யப்பட்டது. இரவு உணவிற்கு பின் சௌமியை அழைத்துக் கொண்டு வினோ அறையில் விட்டு விட்டனர். வினோ அவளின் முழு அனுமதியுடன் அவளை முழுமையாக தன்னவளாக்கிக் கொண்டான்.

 

கிறு, ஆரவிடம் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்கவில்லை. அனைவருக்கும் தேவி, அருண் மீது மிகுந்த கோபம் இருந்தது. வினோ, சௌமியின் ரிசப்ஷன் முடிந்த பிறகு இதைப் பற்றி பேசலாம் என்று விட்டுவிட்டனர். இதைப் பற்றி பேசி தற்போது இருக்கும் சந்தோஷத்தை கெடுக்க வேண்டாம் என்று நினைத்தனர் அனைவரும்.

 

அடுத்த நாள் ரிசப்ஷனிற்காக அனைவருமே தயாராகினர். அஸ்வினின் திருமணத்தின் போது இருந்த சந்தோஷம் இன்று இருக்கவில்லை. ஆனால் வினோ, சௌமி கவலையுறக் கூடாது என்று முடியுமான வரை பிரச்சனைகளை ஒதுக்கி வைத்து சந்தோஷமாக இருக்க முயற்சி செய்தனர். ரிசப்ஷன் மாலை ஏழுமணி போல் ஆரம்பமானது.

 

அதில் பலர் கலந்துக் கொள்ள, கிறு ஆரவின் வளர்த்தவர்களை அதற்கு அழைத்து இருந்தாள். இதனால் ஆரவிற்கு அவளின் மீது இருந்த கோபம் இன்னும் அதிகரித்தது. மற்றவர்கள் கிறு எதையும் பல யோசித்தே இந்த முடிவை எடுத்து இருப்பாள் என்று விட்டுவிட்டனர். இரவு உணவிற்கு அனைவரும் சென்று உணவு முடித்து அனைவரும் மணமக்களுக்கு வாழ்த்தை தெரிவித்து வீடு சென்றனர்.

 

பதினொரு மணியைப் போல் ரிசப்ஷன் முடிவடைய இவர்களின் குடும்பம் மாத்திரமே அங்கே இருந்தனர். மற்றவர்கள் காரில் வீட்டை நோக்கிச் சென்றனர். அது வரையில் ஆரவை வளர்த்வர்கள் அங்கிருந்து செல்லவில்லை.

 

“இப்போ எந்த பிரச்சனைக்காக இவங்களை அழைச்சிட்டு வந்த?” என்று ஆரவ் கோபமாக கேட்க,

 

“நீ நிதானமா, பொறுமையா கேளு பதில் சொல்றேன்” என்றாள்.

 

“சரி சொல்லு” என்றான் தன்னை ஆசுவாசப்படுத்திய பிறகு.

 

“அது உன்னோட முழுக் கதையிலும் இவங்க சம்மந்தபட்டு இருக்காங்க” என்றாள்.

 

“எனக்கு எந்த கதையும் தேவை இல்லை கிறுஸ்தி” என்று செல்ல அவன் கைபிடித்து நிறுத்தியவள்,

 

“எனக்காக கேளேன்” என்று கெஞ்சும் தொனியில் கேட்க,

 

அதை மீற முடியாமல் அதே இடத்தில் நின்றான் கண்ணம்மாவின் கண்ணா.

 

“அத்தை நீங்க நடந்ததை சொல்லுங்க” என்று கூற

 

தேவியும் 27 வருடங்களுக்கு முன் நடந்ததைக் கூற ஆரம்பித்தார்….

 

நானும், அவரும் கல்யாணம் பன்னி இவரோட பிஸ்னஸ் விஷயமா மும்பை போயிருந்தோம். அப்போ இவரோட பிசுனசுக்காக அங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருச்சு. அங்க போயி கொஞ்ச நாளையிலேயே நான் கர்பமாகிட்டேன். இதை வீட்டிற்கு சொல்ல முடியல்லை. முன்னாடி எல்லாம் தொடர்பு கொள்றதுக்கு வசதிகள் ரொம்ப ரொம்ப குறைவு. ஏதாவது ஒரு தடங்கல் வந்துட்டே இருந்தது. அது மட்டுமில்லாமல் இவரோட பிசினசுல சின்ன சறுக்கல் வர ஆரம்பிச்சது.

 

அதில் நானும் இவருக்கு உதவி செய்ய ஆரம்பிச்சேன். இதனால் முழுமையா என் குடும்பத்தோட தொடர்பு குறைந்தது. எனக்கு ஒன்பதாவது மாதத்துல பிரசவ வலி ஆரம்பிச்சது. அப்போ நான் மட்டும் தான் வீட்டில் இருந்தேன். இவரும் வெளியே போயி இருந்தாரு. எங்க பக்கத்து வீட்டு அக்கா தான் என்னை ஹொஸ்பிடலில் சேர்த்துவிட்டாங்க. அப்போ ரொம்ப கஷ்டபட்டு எனக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது.

 

அவனை ஒரு முறை பார்த்த பிறகு நான் மயங்கிட்டேன். அதற்கு அப்பொறம் கண்விழிச்சு பார்த்தால் இவரு மட்டும் தான் இருந்தாரு குழந்தை இருக்க இல்லை. பொலிசும் விசாரிச்சு பார்த்தாங்க. குழந்தை எங்கே போச்சுன்னே தெரியாது. என்ன பன்றதுன்னே தெரியல்லை. இரண்டு பேருமே மனசளவில் உடைஞ்சி போயிட்டோம். நான் எப்போவும் குழந்தை நினைப்பாவே இருந்தேன்.

 

அதனால் அவரு என்னை திருப்பி வீட்டிற்கு அழைச்சிட்டு போறதா சொன்னாரு. எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கவே இல்லைன்னு மனசை தேத்திகிட்டோம். வீட்டில. இதைப்பற்றி சொல்லி எல்லோரையும் கஷ்டபடுத்த கூடாதுன்னு மறைச்சோம்” என்று அழுகையுடன் கூறி முடித்தார்.

 

“என்ன என் புருஷனை வளர்த்வங்களே, உங்களுக்கு ஆரவ் எப்படி கிடைச்சான்னு உண்மையை சொல்றிங்களா? இல்லையா?” என்று கிறு மிரட்ட 

 

அவர்கள் இருவருமே கூறத்தொடங்கினர்…..

 

“இவங்களை அட்மிட் செய்த அதே ஹொஸ்பிடல்லை தான் என்னையும் அட்மிட் செய்து இருந்தாங்க. இரண்டு பேருக்குமே பக்கத்து கட்டில் தான். எனக்கு பிறந்த குழந்தை இறந்து பிறந்தது. எங்களால் குழந்தை இல்லாமல் வீட்டிற்கு போக முடியாது. இவரோட அம்மா ரொம்ப திட்டுவாங்க அதனால் ரொம்ப பயந்துட்டு இருந்தோம். 

 

அதே நேரம் நாங்கள் ஆரவைப் பார்த்தோம். அப்போ ஜோசியர் எனக்கு அழைச்சு பேசினார். நான் எங்க குழந்தை இறந்திருச்சுன்னு சொன்னேன். அப்போ அவரு இதே நேரத்தில் நீ இருக்கிற இடத்துல ஒரு பையன் பிறந்து இருக்கான் அவனை தூக்கிட்டு வர சொன்னாரு. அவன் ராஜ வம்சத்தில் பிறந்தவன், அவன் இருக்கிற இடத்துல பணம் பஞ்சம் இருக்காதுன்னு சொன்னாரு. இதனால் நாங்க யாருக்கும் தெரியாமல் ஆரவை தூக்கிட்டு வந்துட்டோம்” என்று கூறி முடியும் போது ஆரவின் வளர்ப்புத் தாயின் கன்னத்தை பதம் பார்த்தது ஒரு கை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 9யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 9

நிலவு 9   இரவு உணவை அனைவரும் சிரித்துப் பேசி உண்டு முடித்து உறங்கச் சென்றனர்.    தனது அறைக்கு வந்த கிறுஸ்தி முகம் கழுவி, லோங் ஸ்லீவ் டீசர்ட், பொடம் அணிந்து, தனது கூந்தலை பின்னிக் கொண்டு இருந்தாள்.   

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 26யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 26

நிலவு 26   நேரம் செல்ல அரவிந் ஆரவ்விடம் கிறுவை வீட்டிற்கு அழைத்துவறுமாறு கூறினார். அவனும் அவர் பேச்சைத் தட்ட முடியாமல் அவளைத் தன் கையில் ஏந்தி காரிற்குச் சென்று, அவளை காரில் அமர வைத்து தானும் அமர்ந்து அவளை தன்னோடு

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 14யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 14

ஆரவ் கன்னத்தில் கை வைத்துப் பார்க்க, அவன் முன் காளியாய் நின்று இருந்தாள் கிறு.   “இதற்கு அப்பொறம் உன்னை தாழ்த்தி ஒரு வார்த்தை பேசினாய் என்றால் கொன்னுடவேன்” என்றாள் கண்கள் சிவக்க.   இன்று அனைவரும் பார்ப்பது புதிய கிறுவை.