Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 59

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 59

நிலவு 59

 

ஆரவ் செய்வதறியாது நிற்க, யோசித்தவன்

 

“வினோ உங்க மேனஜர் கிட்ட சொல்லி மிளகாய் ஒன் கே.ஜி வாங்கி வர சொல்லு, சீக்கிரம்” என்று அவன் அவசரபடுத்த

 

“சரி அண்ணா” என்று அவனும் மேனஜருக்கு அழைப்பை ஏற்படுத்த அவரும் வாங்கி வருவதாகக் கூறினார்.

 

“அஸ்வின் axe oil இருக்கும் இவங்க பேக்ஸ்ல அதை எடுத்து வா” என்று ஆரவ் அவசரபடுத்தினான்.

 

கவின், மாதேஷ், வினோ, அஸ்வின், ஷர்வன், ஹபீஸ் அவர்களின் பைகளில் தேடி எடுத்து வர, பெண் வைத்தியரும் வருகை தர, அவரவர் துணைகளின் கண்ளின் கீழே, கன்னங்களின் மேல் பகுதி, புருவத்திற்கு அருகாக அதைப் பூச எரிவு தாங்காமல் கண்களை திறக்க முயற்சித்தனர்.

 

ஐந்து நிமிடங்களில் மிளகாயும் கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு உண்பதற்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் காரம் தாங்காமல் அங்கும் இங்கும் அலைந்து ஊதினர். சிலர் வாந்தியும் எடுத்தனர். கிறு எரிவைப் பொறுக்க முடியாமல் அழ, ஆரவிற்கே அவளின் நிலையைப் பார்த்து கண்கள் கலங்கிவிட்டது.

 

“கண்ணம்மா, கொஞ்சம் பொறுத்துக்க மா, உன்னால் முடியும் இன்னும் கண்ணை திறந்து பாரு, இதை சாப்பிடு” என்று மிளகாயை அவள் கையில் திணித்தான்.

 

“கண்ணா முடியல்லை கண்ணா, ஒரு பக்கம் கண் எரியுது. இன்னொரு பக்கம் காரம் தாங்க முடியல்லை” என்றாள் எரிவுடன்.

 

மற்றவர்களும் அதே நிலையிலேயே இருந்தனர். ரசிகர்கள், நடுவர்கள் அனைவருமே இவர்களின் நிலையைப் பார்த்து பரிதாபப்பட்டனர். ஓரளவு ஏழு பேரும் தேறியிருக்க மெச் ஆரம்பமாக இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தது.

 

ஆரவ் இவர்களுக்கு வேறாக குளுகோசு, தண்ணீர் போத்தல்கள் அனைத்தையும் வரவழைத்தான். அனைவரும் காரம் தாங்க முடியாமல் ஒரு போத்தல் நீரை காலி செய்தனர். எரிவினால் முகத்தை பேஸ்வொஷ் இட்டு முகத்தை கழுவினர். அனைவரும் டிஸ்டர்பாக இருக்க அஸ்வின் பேசினான்.

 

“கர்ள்ஸ் ஜஸ்ட் ரிலேக்ஸ் உங்களால் முடியும் 10-1 ரிவர்சில் கவுன்ட் பன்னுங்க, கண்களை மூடி” என்று கூற

 

அனைவரும் அதே போலச் செய்தனர். 

 

“ஓகே கர்ள்ஸ், பர்ஸ்ட் பிரேகிற்கு முன்னாடி நர்மலா விளையாடுங்க, எந்த ஒரு ரிஸ்கும் எடுக்க வேணாம்” என்றாள் கிறு.

 

மெச் ஆரம்பிக்க அனைவரும் மைதானத்திற்கு இறங்கினர். இரு அணிகளும் கைகளை குலுக்கி தத்தமது இடங்களை அடைந்தனர். 

 

காவ்யா : டொஸ்அப்,பந்தை பீகார் சென்டரே பிடிச்சாங்க. இப்போ நடந்த கலவரத்துல தமிழ்நாட்டு பிளேயர்ஸ் சோர்வா இருக்கிறது போல இருக்கு.

 

குமார் : இவங்க எல்லோருக்குமே திடீர்னு என்ன நடந்ததுன்னே தெரியாது, டாக்டர்ஸ் செக் செய்ய அனுப்பி இருக்காங்க. 

 

காவ்யா : இப்போ சென்டர் பாஸ், பீகார் அணி ரொம்ப நல்லா விளையாடுறாங்க. ஒரு கோல் எடுத்து விட்டாங்க. 

 

குமார் : தமிழ்நாடு மேலே நிறைய பேர் நம்பிக்கையோடும், எதிர்பார்பார்போடும் இருக்காங்க. பிளேயர்ஸ் ரொம்ப கஷ்டத்தில் விளையாடுறாங்க, ரொம்ப சோர்வா எல்லோருமே இருக்காங்க காவ்யா.

 

காவ்யா : ஆமா குமார், இப்போ தமிழ்நாடு சென்டரிடம் பந்து இருக்கு. வாவ் ரொம்ப நல்லா விளையாடி ஒரு புள்ளியை எடுத்து கொடுத்துட்டாங்க.

 

குமார் : இப்போதும், நல்லா ஆர்வமா மெச் இருக்கு. தமிழ்நாட்டு அணி இரசிகர்களுக்கு இது பெரும் தைரியத்தை வழங்கி இருக்கு. இப்போ இரசிகர்கள் உற்சாகமாக ஆர்பரிக்கிறாங்க.

 

இவ்வாறு மெச் நடைப்பெற்று முதல் பிரேக்கிற்கு முன்னே தமிழ்நாடு vs பீகார் 3:5 என்ற புள்ளிகளைப் பெற்றது. இடைவேளையின் போது,

 

“கேர்ள்ஸ் முடியுமான வரைக்கும் குளுகோசு சாப்பிடுங்க, இப்போ நாம கண்டிப்பா வெறித்தனமா விளையாடியே ஆகனும், இப்போ விளையாடி நமளுக்கும் அவங்களுக்கும் டிபரன்ட் 6 பொயின்சுக்கு மேலே வருகிறது போல நாம அதிகமா பொய்ன்ஸ் எடுக்க வேணும், 3 passes மறக்காதிங்க” என்றாள் கிறு.

 

மீண்டும் ஆரம்பிக்க கோர்ட் சைடும் மாற்றப்பட்டு மெச் ஆரம்பிக்கப்பட்டது. அதில் 3 passes முறையைப் பயன்படுத்தி தமிழ்நாடு அணி தொடர்ந்து புள்ளிகளைப் பெற்றது. அதில் இரண்டாவது பிரேக் கொடுக்கப்பட முன், தமிழ்நாடு vs பீகார் அணி 13 : 7 என பெற்றது. இதை எவருமே எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாடு இரசிகர்ள் உச்சகட்ட சந்தோஷத்தில் இருந்தனர்.

 

குமார் : இந்த டிவிஸ்டை யாருமே எதிர்பார்க்க இல்லை. சூப்பரா விளையாடுறாங்க தமிழ்நாடு அணி.

 

காவ்யா : ஆமா, இங்கே யாருமே இப்படி ஓரேவாட்டி, இப்படி பெரிய ஸ்கோர் டிபரன்டை எடுத்துப்பாங்கன்னு எதிர்பார்க்க இல்லை.

 

அவர்களுக்கான கரோகோஷங்கள் மற்றும் ஆர்ப்பரிப்புகள் அனைத்துமே பலமடங்கு அதிகமாகியது. இது பிளேயர்சிற்கு ஊக்கமருந்தாக இருந்தது. பீகார் அணியோ தடுமாற்றத்தில் இருந்தது. அவர்கள் எவ்வாறு மீண்டும் எழுந்து விளையாடுகிறார்கள் என்று, அதனால் அடுத்ததாக இவர்களும் நன்றாக விளையாட வேண்டும் என்று முடிவு எடுத்தனர். 

 

“இப்போ நாம, கோல் போடுறதுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேணாம், அவங்க கோல் போடாமல் தடுங்க” என்று கிறு கூற

 

“ஏ.கே நாம இப்போ இன்னும் ஸ்கோர் முன்னாடி எடுத்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்” என்று சௌமி கூற

 

“இல்லை சௌமி, இப்போ நாம இந்த வாட்டியும் கோல் போடுவோம் என்று நம்பி அவங்க போஸ்ட் கொஞ்சம் மாத்தி நமளை கோல் போட விடாமல் தடுக்க பார்ப்பாங்க, சோ அதை நாம பன்ன கூடாது, இப்போ அவங்களை கோல் போட விடாமல் பன்னும், 3 passes இப்போ வேணாம்” என்று கிறு கூற

 

“ஆமா டி, ஏ.கே சொல்றதே எனக்கும் சரின்னு தோணுது, நாம கொஞ்சம் தந்திரமா தான் விளையாடனும்” என்றாள் ஜெசி.

 

“அது மட்டுமில்லை அவங்க குழம்பினால் தான் நாம ஸ்கோர் பன்ன முடியும்” என்றாள் கீது.

 

கிறுவின் திட்டத்திற்கு ஏற்ப அனைவரும் விளையாட ஆரம்பித்தனர். 

 

காவ்யா : குமார் தமிழ்நாடு அணி ரொம்ப நல்லா விளையாடுறாங்க, இப்போ என்ன நடக்க போகுதுன்னு தெரியல்லை.

 

குமார் : பீகார் அணி பிளேயர்ஸ் அவங்க போஸ்ட் கொஞ்சம் மாற்றி இருக்காங்க, பார்க்கலாம்.

 

மீண்டும் கோர்டில் சைடு மாற்றப்பட்டு விளையாட ஆரம்பித்தனர். 

 

காவ்யா : சென்டர் பாஸ், இப்போ பந்து பீகார் அணியோட சென்டரிடம் இருக்கு. அவங்க. WA நோக்கி வீசுறாங்க, சூப்பர் சூப்பர் தமிழ்நாடு சென்டர் இடையில் பாய்ந்து பந்தை பிடிச்சிட்டாங்க.

 

குமார் : ஆமா வேகமாக பந்தை மற்றைய பிளேயர்ஸ்சுக்கு மாற்றுகிறாங்க GS சூட் பன்னியதன் மூலம் ஒரு புள்ளியைப் பெற்றுக் கொள்கிறாங்க.

 

மெச் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் அதே நேரம், ஹொஸ்பிடலுக்குச் சென்ற ஆரவ் டாக்டரிடம் பேசிக் கொண்டு இருந்தான்.

 

“டாக்டர் என்னாச்சு?” என்று கேட்க,

 

“மிஸ்டர் ஆரவ் மினரல் வோடர் போட்டுலிலேயும், குளுகோசிலும் மயக்க மருந்து கலந்து இருக்காங்க” என்று கூற

 

“டாக்டர், ஹவ் இஸ் தெட் பொசிபள்?, நாங்க தான் முதன் முதலா ஓபன் பன்னோம்” என்று கேட்க,

 

“பொசிபல் தான் மிஸ்டர் ஆரவ், அவங்க இன்ஜெக்ஷன் மூலமாக உள்ளே அனுப்பி இருக்காங்க அந்த  லிக்வீடை” என்று டாக்டர் கூற

 

“மினரல் வோட்டர் போட்டிலிற்கு இது சாத்தியமாக இருக்கலாம், ஆனால் குளுகோசுல எப்படி சாத்தியமாகும்?” என்று கவின் கேட்க,.

 

“அவங்க பெக்கில் இன்ஜர்ட் பன்னதுக்கு அப்பொறமா, நல்லா ஷேக் பன்னி இருக்காங்க, அந்த லிக்வீட் 2 or 3ml தான் மிக்ஸ் பன்னி இருக்காங்க, அதனால சாத்தியம் தான்” என்றார் டாக்டர்.

 

அவரிடம் இருந்து விடைப் பெற்றவன்,

 

“யாரு இதை பன்னி இருப்பாங்க?” என்று அஸ்வினிடம்  ஆரவ் கேட்க,

 

“அதான் மச்சான் தெரியல்லை, இப்படி ஒரு அசிங்கமான வேலையை யாரு பன்ன முடியும்?” என்று அவன் கூற

 

“யேன் பீகார் டீமிற்காக யாராவது பன்னி இருக்கலாமே” என்று கவின் கூற

 

“ஆதாரம் இல்லாமல் யார் மேலேயும் பழி சொல்ல முடியாது டா” என்றான் மாதேஷ்.

 

“சரி நமளுக்கு குளுகோசு கொடுத்தவனை முதலில் பிடி, அவன் கிட்ட இருந்து மிகுதி என்குவாரியை ஆரம்பிப்போம்” என்றான் ஆரவ்.

 

மூன்றவுது பிரேக்கிற்கு முன்னர் எதிரணி புள்ளியைப் பெற விடவேயில்லை தமிழ்நாட்டு அணி. பீகார் முற்றிலும் குழம்பி இருக்க, தமிழ்நாடு கடைசியாக மீண்டும் வெறித்தனமாக விளையாடி 16:8 என்ற புள்ளிகளைப் பெற்று தமிழ்நாட்டு அணி வெற்றியை ஈட்டிக் கொண்டது. இறுதியாக செம்பியன்ஸ் என்று பதக்கங்களையும், ட்ரோபியையும் பெற்றனர். அங்கே அத்தனை மீடியாக்களும் ஆஜராகி இருந்தன.

 

இவர்களுக்கு என்ன நடந்தது என்பதை ஆரவ் வெளிவிடவில்லை. சப்ளே செய்தவனை விசாரித்த போது அவன் அடி தாங்க முடியாமல் விக்டரின் பெயரை உழறினான். அவர்கள் பீகார் அணியின் ஸ்பொன்சரை பார்க்க செல்ல இவர்களைத் தேடி அவரும் அவரது அணியும் வந்தது. 

 

“சேர் நாங்க ரொம்ப தப்பு பன்னிட்டோம், எப்படியாவது எங்க டீம் வின் பன்னனும்னு என் அப்பா எனக்காக இப்படி பன்னிட்டாரு, தப்பான வழியை பின்பற்றினால் தோல்வி நிச்சயம். அதை நான் இதில் இருந்து தெரிந்துக் கொண்டேன், நீங்க கம்பிளைன் பன்றதாக இருந்தால் கம்பிளைன் பன்னுங்க சேர், தப்பு பன்னா நிச்சயமா தண்டனை வேணும்” என்றாள் அந்த பெண்.

 

“ஐ ஏம் ரியலி சொரி. பொண்ணு ஜெயிக்கனும்னு தப்பான வழியை தேர்ந்து எடுத்துட்டேன்” என்றார் அவர்.

 

“நீ எப்போ உன் தப்பை உணர்ந்தியோ அதுவே போதும். போய் உன் வாழ்க்கையை பாரு” என்றான் ஆரவ் அப்பெண்ணைப் பார்த்து.

 

கிறுவிடம் வந்த அப்பெண், ” திறமை இருந்தால் எதையும் ஜெயிக்கலாம்னு நீங்களும், உங்க டீமும் புரூவ் பன்னிட்டிங்க” என்று அனைவருக்கும் கைகுலுக்கினாள்.

 

அனைவரும், நடுவர்களிடம் சென்று வாழ்த்தைப் பெற்ற பிறகு மீடியா குழுவினரின் கேள்விகளுக்கு பன்னிரண்டு பேரும் சேர்ந்து பதிலை வழங்கினர். பின் தம் பதக்கங்கம், ட்ரொபியுடன் அந்த ஸ்டேடியத்தை வலம் வந்தனர். பின் இரசிகர்களிடம் கைகளை குழுக்கி பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேறினர்.

 

நான்கு வீராங்கனைகளையும் ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பினர் பெற்றவர்கள். அன்று அனைவருக்கும் இதுவே தலைப்புச் செய்தியாக இருந்தது. லைவாக பார்த்த மக்கள் தமிழ்நாடு அணியினருக்கு டீவீடர், பேஸ்புக், வட்ஸ்அப் மூலமாக தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழ்நாடு சி.எம் மற்றும் பி.எம் போன்றோர் அவர்களுக்கு வாழ்த்தைத் தெரிவித்தனர்.

 

அன்றைய இரவு சிறியவர்கள் pizza hut ற்குச் சென்று தமது கலாட்டாக்களை செய்து குதூகலித்து தத்தமது வீடுகளிற்குச் சென்றனர்.

 

அஸ்வின் அறையில்,

 

“ரொம்ப சந்தோஷமா இருக்கு மீரு, கிறுவிற்கு உள்ளே இந்த அளவிற்கு டெலன்ட் இருக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை, இதற்கு எல்லாவற்றிற்கும் காரணம் ஆரவ் தான்” என்றான்.

 

“ஆமா டா, இதைப் போல் பிரன்டு கிடைக்க நீயும், புருஷன் கிடைக்க கிறுவும் கொடுத்து வச்சிருக்கனும்” என்றாள் மீரா.

 

“ஆமா டி” என்று அவளை அணைத்துக் கொண்டு உறங்கினான் அஸ்வின்.

 

கிறுவோ தனது அறையில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்.

 

“எந்த நாட்டை பிடிக்க போற கிறுஸ்தி?, இவளோ தீவிரமா தூங்காமல் யோசிச்சிட்டு இருக்க” என்று ஆரவ் அவள் அருகில் அமர்ந்து கேட்க,

 

“அது, நீ உன் அம்மா, அப்பா நேரில் வந்தால் அவங்களை ஏத்துப்பியா?” என்று கேட்டாள்.

 

அவன் கூறிய பதிலில் கிறுஸ்தி அதிர்ச்சியடைந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 33யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 33

நிலவு 33   ஏ.வி குரூப்ஸ் என்ட் கம்பனி என்று சில்வர் நிறத்தில் அந்தப் பெயர் மிகப் பெரிய பிரம்மாண்டமான கட்டத்தில் பெரிய எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு மின்னியது. அந்த கட்டடத்தின் முன்னே சென்று நின்றது ஆரவின் கறுப்பு நிற கார். அதிலிருந்து

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 12யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 12

அஸ்வினும், கிறுவும் வீட்டிற்கு வந்தனர்.   இந்து “அண்ணனும் , தங்கச்சியும் எங்க போனிங்க இவளோ நேரமா?” என்று கேட்க,   இந்துவின் அருகில் அமர்ந்தவள் அவர் கன்னத்தைக் கிள்ளி   “இந்துமா, அஸ்வின் என்னை சில்ரன்ஸ் பார்க்கிற்க்கு கூட்டிட்டு போனான்”

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 24யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 24

நிலவு 24   மகா பூஜைக்கு முன்னைய நாள் வீட்டில் அனைவரும்  கோயிலை நோக்கிச் சென்றனர். அனைவரும் சாமி கும்பிட்டு வெளியேறும் போது சித்தர் அவர்கள் அனைவரையும் அழைத்தார். அதில் ஒவ்வொருவராக சென்று ஆசிர்வாதம் பெறச் சென்றனர்.    அவர் அருகில்