Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 1’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 1’

அன்பு அரவணைப்பு ஏதுமின்றி யாருமற்று தனிமரமாய் வளர்ந்து  தனக்கென்று பாதையை அமைத்து விருட்சமாய் வாழ்வில் தன்னோடு பிறரையும் முன்னேற்ற எண்ணும் நாயகன். தன் வாழ்க்கை பாதைக்கு   தனியாளாய் இருப்பதே சிறந்தது என்ற எண்ணத்தோடு வாழ்பவன். உறவு நட்பு என சுற்றம் சூழ குறும்புடன் தன்னோடு பிறரையும் மகிழ்வுடன் வைக்கும் வாழ்வில் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் நாயகி. இரு வெவ்வேறு சூழலில் வாழ்ந்த அதே சூழலை விரும்பும் இவர்கள் இருவரும் வாழ்வில் இணைந்தால், பாலைவனம் போன்ற அவனது வாழ்வில் இவளது வருகை சோலைவனமாக மாறுமா இல்லையா? அந்த வாழ்வை அவன் ஏற்பானா இல்லையா? என்பதே இக்கதை. “வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்”.

 

1 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

 

முதல் நாள் கல்லூரி, ராகிங் அது இதுவென அனைவரும் பயமுறுத்த மனதில் தெரிந்த தெரியாத அத்தனை கடவுளையும் அவள் வேண்டிக்கொண்டே வர சட்டென்று விழுந்த அடியில் தன் தவம் கலைந்த கோபத்தில் அடித்தவளை முறைத்தாள் மித்ரா என்றழைக்கப்படும் மித்ராந்தியா.

 

அடித்தவளோ “இங்க பாரு… இப்போ எதுக்கு நீ இப்டி கடவுள கத்தி கத்தி கூப்பிட்டு கழுத்தறுக்கற… உன்கூட பிரண்ட்ஷிப் வெச்சுக்கிட்டதுக்கு நான் தான் எல்லா சாமியையும் கும்பிடணும்… எந்த நேரத்துல எங்க மாட்டிவிடுவியோன்னு இருக்கு..” என்றாள் உண்மையான பயத்துடன்.

ஆனால் அவளோ “மக்கு… நீ ஏன் பீல் பண்ற… எதுனாலும் நான் பேசி சமாளிச்சுக்கறேன்.” என்றாள் தோழியின் தோளில் கைபோட்டுக்கொண்டு.

அவளோ மேலும் பதறி “ஐயோ…தெய்வமே.. வேண்டவே வேண்டாம்.. நீ அமைதியா இரு..அது போதும் எனக்கு…வீட்ல அம்மா அப்பா எல்லாரும் சொல்லி அனுப்பிச்சிருக்காங்கள…எதுக்கும் அவசரப்படாத, உடனே ரியாக்ட் பண்ணாத… முக்கியமா கொஞ்ச நேரம் பேசாத..” என

அவளோ “நான் என்ன தேவையில்லாம பேசுறேனா…இல்ல தப்பான விசயத்துக்கு சப்போர்ட் பண்ணேனா…” என முகத்தை உம்மென வைத்துக்கொள்ள மனம் தாளாமல் “இங்க பாருடா மித்து… நீ பேசி கடைசில எதுனாலும் சமாளிப்பன்னு எனக்கு தெரியும்..ஆனா கிளைமாக்ஸ் வரதுக்குள்ள நமக்கு கிளைமாக்ஸ் எழுதிடுவாங்களேமா.. நீ சமத்தா அமைதியா இருந்தா ஈவினிங் உனக்கு நான் தேன்மிட்டாயும், பஞ்சுமிட்டாயும் வாங்கி தரேன்.”  என்றாள்.

மித்து கண்கள் பளிச்சிட வேகமா தலையசைத்து “மக்கு யூ சோ ஸ்வீட்..” என கட்டிக்கொள்ள போக

அவளோ மீண்டும் பட்டென்று கையில் ஒன்று வைத்து “இங்க பாரு மித்து..இது காலேஜ்..ஸ்கூல்ல தான் என் பேரை மாத்திட்ட… காலேஜ்ல பரப்பிவிட்ட மவளே நீ காலி டி… ஒழுங்கா என் பேர் சொல்லி கூப்பிடு.. மக்கு மக்குனு கூப்பிடாத…”

 

மித்து “இதென்ன வம்பா இருக்கு… என் பேரு மித்ரா… நீ அத ஷார்ட்டா மித்துனு தானே கூப்பிட்ற… அதேமாதிரிதான். உன் பேரு மகிளா ஷார்ட் பண்ணா இப்டி மக்குனு தானே நேம் வரும்.. மித்ரா மித்துவாகும்போதும், மகிளா மக்கு ஆகறதுதானே முறை…

நான் எப்போவுமே ஒரேமாதிரி தான் இருப்பேன்.. அது எதுக்கு பாக்குறவங்க பழகறவங்கன்னு ஒவ்வொருத்தருக்காகவும் நாம மாறணும்.. அதெல்லாம் நான் பண்ணமாட்டேன். வேணும்னா என்னை தவிர வேற யாரும் உன்னை அப்டி கூப்பிடாம நான் பாத்துக்கறேன்..

அவங்கள தட்டி தூக்கி வீசி….” என அவள் முடிப்பதற்குள்

 

மகிளா அவள் வாயை பொத்திவிட்டு “இங்க பாரு..நீ எப்டியோ கூப்டு.. பட் கொஞ்சம் அடக்கி வாசிடி.. வா… உள்ள போலாம்…” என அவளையும் அழைத்துக்கொண்டு சென்றாள்.

 

தண்ணீர் பிடிக்கவென மித்து செல்ல அங்கே அமர்ந்திருந்த சீனியர்ஸ் மகிளாவை அழைக்க சுற்றும் முற்றும்  பார்த்துக்கொண்டே அமைதியாக சென்றாள்.

“சீனியர்ஸ்க்கு விஷ் பண்ணாம போற?”

மகிளா “குட் மார்னிங் அண்ணா..” என அனைவரும் சிரிக்க கேட்டவனோ “ஓய்… எதுக்கு இப்போ நீ அண்ணாங்கிற.. சேப்டி?… ஒழுங்கா… விஷ் மட்டும் பண்ணு.” என்றான் மகேஸ்.

மகிளா “குட் மார்னிங்”.

சிவா “ஓ… அப்போ அவனுக்கு மட்டும் தான் விஷ் பண்ணுவியா? எங்களுக்கு எல்லாம் பண்ணமாட்டேயா? அவன்தான் ஸ்பெஷல்லா?”

மகிளா “ஐயயோ..அப்படியெல்லாம் இல்லை.. என பதறி அனைவருக்கும் தனித்தனியே விஷ் பண்ணினாள்.”

மகேஷ் “மேனேஜ்மென்ட்டா? கவுன்சிலிங்ல வந்தியா?”

சிவா “டேய் ஆள பாத்தாலே தெரில… நல்லா விடிய விடிய படிச்சு இன்ஜினியரிங்ல மெரிட்ல சீட் கிடைக்கவே தவம் இருந்த மாதிரி இருக்கு.. இவள பாத்தா மேனேஜ்மென்ட்டானு கேக்குற? படிப்ஸ்டா…என்ன சரி தானே..” என அவள் தலை அசைத்து ஆமாம் என கூற

ராஜீவ் “ம்ம்.. எந்த டிபார்ட்மென்ட்…?”

மகிளா “சிவில்..”

சிவா “அட நம்ம டிபார்ட்மென்ட்…. அப்போ சரி..சொல்லு மா… இந்த கூழாங்கல்ல வெச்சு அங்க இருக்கற நம்ம காலேஜ் கான்டீன் அளவுக்கு ஒரு ரூம் கட்ட முடியுமா? எவ்ளோ கல்லு தேவைப்படும்.. இத சொல்லிட்டு நீ கிளாஸ்க்கு போ..” என

மகிளாவிற்கு என்ன செய்வது என தெரியாமல் பதிலும் தெரியாமல் அங்கேயே நிற்க அனைவரும் கிண்டல் செய்துகொண்டே இருக்க இவளோடு இன்னும் பல ஜூனியர்ஸ் இதேபோல் மாட்டிக்கொண்டு தத்தளிக்க சிறிது நேரத்தில் மகிளாவிற்கு அழுகை வருவது போல ஆனதும் மித்து நேராக வந்தவள் யாரையும் கவனியாது மிகவும் சாதாரணமாக

“மக்கு வா..தண்ணி பிடிச்சிட்டேன்…கிளாஸ்க்கு டைம் ஆச்சு போலாம்…” என இழுக்க சீனியர்ஸ் அனைவரும் தங்களுக்குள் பார்த்துக்கொண்டே “ஓய்.. நாங்க சீனியர்ஸ் இருக்கறது கண்ணுக்கு தெரில?” என

இவளோ ஆச்சரியமாக பார்த்துவிட்டு “சீனியர்ஸ் சூப்பர்.. நான் காலைல வந்ததுல இருந்து உங்கள தான் தேடிட்டு இருந்தேன்… ஏன் டி நீ மட்டும் வந்துட்டே.. என்கிட்ட சொல்லமாட்ட.. உன்னை அப்புறமா கவனிச்சுக்கறேன்” என மகிளாவை திட்டிவிட்டு இவர்களிடம் திரும்பியவள் “ஆல் சீனியர்ஸ் குட் மோர்னிங்…ஓ..சாரி அதுல ஏன் கஞ்சத்தனம் பண்ணனும்.. தனித்தனியாவே சொல்லலாமே.. என ஒவ்வொருவருக்கும் குட் மார்னிங் சொன்னவள்…இறுதியாக “என்ன எல்லாரும் திகைச்சு போயிருக்கிங்க… திரும்பி குட் மார்னிங் சொல்லமாட்டீங்களா? ஒருவேளை யாருக்கும் பேசவராதா?” என அதிர்ச்சியாக கேட்க அவர்கள்

“அதெல்லாம் இல்ல. குட் மார்னிங்…”

மித்து “குட்… சீனியர் நாங்க சிவில் டிபார்ட்மென்ட்… நீங்க எல்லாரும் எந்த டிபார்ட்மென்ட்?” அவர்கள் முழிக்க மித்து “அட எதுக்கு பயப்படுறீங்க? சும்மா சொல்லுங்க பா..”

ராஜீவ்”எது பயமா.. நாங்களும் சிவில் தான்…”

மித்து “ஹே..ஜாலி..சூப்பர் சூப்பர்…அப்போ சரி புக்ஸ்க்கு ட்ரெயினிங், எந்தெந்த ஸ்டாப் எப்படினு எல்லா டீடைல்ஸும் உங்ககிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்கறோம்.. உங்க நேம்ஸ் என்ன?..சீக்கிரம் சொல்லுங்க சீக்கிரம் சொல்லுங்க..”

சிவா, ராஜீவ், குணா, மகேஷ்…

மித்து “என் நேம் மித்ரா…எங்களுக்கு கிளாஸ் முடிஞ்சதும் இங்கேயே வந்து பாக்குறோம்…இப்போ டைம் ஆயிடிச்சு..நாங்க போறோம்.. வாடி..” என மகிளாவை இழுத்துக்கொண்டு சென்றவள் ஒரு நொடி நின்று மீண்டும் வந்து “எனக்கு ஒரு டவுட் சீனியர்… இது தான் நம்ம பிளாக் சொன்னாங்க.. ஆனா இது என்ன ஷேப் ஆப் பில்டிங்.? ஒருவேளை கூழாங்கல் வெச்சு கட்டுனாங்களோ?” என உண்மையாகவே சந்தேகம் போல கேட்க அவர்களோ ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ள

மித்ரா “அச்சச்சோ.. உங்களுக்கும் தெரிலையா?.. பரவால்ல.. நான் நம்ம சூப்பர் சீனியர்ஸ்கிட்ட கேட்டுக்கறேன்… நீங்களும் கொஞ்சம் நல்லா படிங்க…” என்றவள் சுற்றி இருந்தவர்களை பார்த்துவிட்டு “நீங்க எல்லாரும் ஏன் சீனியர்ஸ டிஸ்டர்ப் பண்றீங்க… கிளாஸ்க்கு போங்க… பாரு..நமக்கு சீனியர் ஆகிக்கூட அவங்களுக்கு இன்னும் பதில் தெரில.. நாம இப்டியே நின்னு அவங்க படிப்பையும் கெடுத்து நாமளும் உருப்படாம போகவா? வாங்க.. அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம நாம போகலாம்… டாடா.. பை சீனியர்ஸ்.. இனிமேல் உங்கள யாரும் இப்டி சுத்தி நின்னு டிஸ்டர்ப் பண்ணமாட்டாங்க..” என கூறிவிட்டு அவள் ஓடிவிட அனைவரும் விட்டால் போதும் என்று பின்னோடு ஓடினர்.

 

ராஜீவ்  “பொண்ணு..நல்ல பொண்ணுல? நமக்கு டிஸ்டர்ப்ன்னு எல்லாரையும் அனுப்சிடிச்சு…வெரி ஸ்மார்ட் கேர்ள்..”

மகேஷ் “டேய் அவங்கள எல்லாரையும் நாம தானேடா நிக்க வெச்சிருந்தோம்…”

குணா “எனக்கு ஒரு டவுட்டா.. அவ ஜூனியரா நாம ஜூனியரா? அவதான் நம்மள ராகிங் பண்ணாமாதிரி இருக்கு.”

மகேஷ் “அட ஆமா… அவ பாட்டுக்கு வேகமா பேசிட்டே இருந்தா…நாமளும் கவனிக்காம பதில் சொல்லிட்டு இருந்திருக்கோம்.. அட ச்ச…கொஞ்ச நேரத்துல கொழப்பிவிட்டுட்டாளே..”

சிவா “விடுங்கடா…நம்ம டிபார்ட்மென்ட் தானே…போகப்போக பாத்துக்கலாம்..”

 

மித்து”என்னடா மக்கு..என்னை அப்டி பாக்குற.. சைட் அடிக்கிறியா?” என கண்சிமிட்டி வினவ

மகிளா “நீ தெரிஞ்சு பண்ணியா? தெரியாம பண்ணியா? இது நல்லதா? கெட்டதா? எதுவுமே புரியல மித்து.” என குழப்பமாக பாவமாக மித்துவை பார்க்க

மித்துவோ “அனைத்தும் பின்னால் புரியும். யாமிருக்க பயமேன்..”

“அதான் என் பயமே..” என கவலை கொள்ள

“அட என்னங்க நீங்க. எவ்ளோ சூப்பரா பேசி நம்மள அங்க இருந்து கூட்டிட்டு வந்திட்டாங்க. அவங்கள பாத்து பயம்னு சொல்றிங்க… ஹாய் நாங்களும் உங்க டிபார்ட்மென்ட் தான். நாங்க ஸ்கூல்ல இருந்தே பிரண்ட்ஸ்…பவ்யா, விஜயா, சுஜா..பிரெண்ட்ஸ்?” என கை நீட்ட

மித்து மகிழ்ச்சியாக “கண்டிப்பா.. என் பேரு மித்ரா.. மித்ராந்தியா..”

இவ என் பெஸ்ட் பிரண்ட் மக்கு.. சாரி மகிளா. ஆனா என்னை தவிர யாரும் அவளை மக்குனு அவ காதுபட கூப்பிடக்கூடாது.” என அறிமுகம் செய்ய மகிளா பத்ரகாளியாய் முறைத்தாள்.

 

சுஜா “அவங்க எப்போவுமே கோவமா தான் இருப்பாங்களா?” என மகிளாவை காட்டி மெதுவாக கேட்க மித்து “அய்யய்ய…அப்படியெல்லாம் என் மக்கு ரொம்ப சாப்ட்.. ஒழுங்கா கோபப்படவே தெரியாது…ரொம்ப பிரண்ட்லி… இப்டி எல்லாம் நீங்க சந்தேகப்பட்டா தான் அவ பீல் பண்ணி கோபப்படுவா. நீங்க ஜாலியா பிரண்ட்லியா இருங்க..வெரி இன்னொசென்ட்..உண்மையாவே மக்கு அவ..இல்லை மக்கு?” என பெருமை போல அவளை அசிங்கப்படுத்திவிட்டு அவளை பார்க்க சுற்றி மூவரும் சிரித்துவிட மகிளா முறைக்க மித்து தான் கூறியதன் பொருளை உணர்ந்து திருதிருவென விழித்துவிட்டு ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் அடுத்த நொடியே சாதாரணமாக மீண்டும் “ஏன் மக்கு எல்லாரும் சிரிக்கறாங்க?” என எதுவும் நடவாதது போல கேட்க  “உன்னை  இன்னைக்கு கொல்லாம விடமாட்டேன்டி..” என துரத்த பின் பிடிபட்டு அடிபட்டு ஒரு முடிவுடன் அனைவரும் நண்பர்களாக சேர்ந்தனர். அவர்களின் நட்பு பட்டாளாம் அந்த கல்லூரி வாழ்க்கையில் அழகாய் மகிழ்வுடன் துவங்கியது.

 

முதல் நாள் காலேஜ் முடியும் வேளையில் மகிளா வரும்முன் மைதானத்தில் காத்திருக்கிறேன் என கூறி மித்து முன்னே சென்றுவிட்டாள். விஜயா அனைவரும் மேலிருந்து பார்க்கும் போது காலையில் பார்த்த சீனியர்ஸ் சுற்றி நிற்க மித்து மட்டும் அங்கே பேசிக்கொண்டிருப்பதை பார்த்து அவள் மகிளா, பவ்யா, சுஜாவிடம் கூற அனைவரும் ஏதோ பிரச்சனையோ என்னவோ என பயந்து விரைந்து வந்தனர். அதற்குள் மித்துவும் பேசிவிட்டு அங்கிருந்து விலக அவளிடம் வந்த மகிளா “ஏய் என்னடி என்னாச்சு?”

மித்து “என்ன என்னாச்சு…?”

விஜயா “நீ சீனியர்சோட பேசிட்டு இருந்தியே.நான் மேல இருந்து பாத்தேன்.”

பவ்யா “ஏதாவது ப்ரோப்லேமா மித்து?”

ஒரு நொடி சிந்தித்தவள் அனைவரையும் பார்த்துவிட்டு “அட்சோ அதெல்லாம் ஒண்ணுமில்ல..மோர்னிங் ‘குட் மோர்னிங்’ சொன்னமாதிரி ஈவினிங் ஒரு ‘குட் ஈவினிங் டாடா’..அவ்ளோதான்…”

மகி நம்பாமல் “மித்து உண்மைய சொல்லு..”

மித்து மகியின் தோளில் கைபோட்டு “என்ன மக்கு நீ.. நான் தான் சொல்றேன்ல. ஏதாவது ப்ரோப்லேம்ன்னா நான் இப்டி சாதாரணமா பேசுவேனா சொல்லு..உனக்கு என்னை பத்தி தெரியாதா? டியர் பிரண்ட்ஸ் நான் இருக்கேன்ல ஏன் இவளோ டென்ஷன் ஆகுறீங்க..ஆமா இந்த வீகென்ட் எந்த மூவி போலாம்..என்னை எப்போ உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்க..எங்க வீட்டுக்கு வாங்க… என் மினியன்க்கு உங்களை இன்ட்ரோ கொடுக்கறேன் ” என அவள் பேசியே அவர்களை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 12’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 12’

12 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   சாப்பிடும் இடத்தில் ஒரு குழந்தை ஐஸ் கிரீம் கேட்டு அடம்செய்ய அவர்கள் காய்ச்சல் வரும் என தர மறுத்தனர்…இதேபோல மித்துவுடன் இருக்கும் போது நடந்து நிகழ்வு அழையா விருந்தாளியாக அவனுள் வந்தது.

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 2’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 2’

2 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் மறுநாள் குணா hod வாசுகி மேடம் முன் தலைகவிழ்ந்த படி நிற்க எதிரே நின்ற சிவா அவனை முறைத்தான். இதை கண்ட வாசுகி “சிவா இப்போ எதுக்கு குணாவ முறைக்கிற?” என தன்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 8’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 8’

8 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் அடுத்து வந்த நாளில் மேட்ச் என்றாக சிவா, மித்ரன் இருவரும் இம்முறை ஜெயிக்க வேண்டுமென்பதில்  தீவிரமாக இருந்தனர். அதேபோல போட்டியில் வெற்றியும் பெற இங்கே சிவா, மித்ரன் பிரண்ட்ஸ், மித்ரா அவளது தோழிகள்