Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 52

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 52

நிலவு 52

 

“வா அஜெய் வா யஷூ” என்று ஆரவ் உள்ளே அழைத்துச் சென்றான். 

 

“ஹாய் காய்ஸ்” என்று உள்ளே வரும் போது,

 

“வா மா, வா பா” என்று சாவி அழைத்துச் சென்றார்.

 

அத்தை, மாமா இவன் அஜெய் ரிபோர்டர் (உன்னில் என்னைத் தொலைத்தேன் கதையின் கதாபாத்திரம்) இவ யஷ்தவி டிடெக்டிவ் என்றான்.

 

பெரியவர்களிடம் பேசிய பிறகு இருவரும் சிறியவர்களிடம் சென்றனர்.

 

இவ “யஷூ” என்று கூற  

 

“எங்களுக்கு நல்லா தெரியுமே” என்று அனைவரும் கோரசாக கூற

 

“நான் என்ன அவளோ பேமசா?” என்று யஷூ கேட்க,

 

“எங்களுக்கு மட்டும் தான் தெரியும். ரொம்ப பேசாத” என்று கவின் கூற

 

“உனக்கெல்லாம் யாரு டிடெக்டிவா வேலை கொடுத்தது” என்று வினோ கேட்க,

 

“எனக்கு என்ன குறை?” என்று யஷூ கேட்க,

 

“இவளோ குள்ளமா இருக்கியே அதான்” என்றான்.

 

“நீங்க எல்லாருமே தடிமாடு போல வளர்ந்ததுக்கு நான் என்ன பன்னுவேன்?, மிஸ்டர் வினோ, இங்க என் கட்சியில நிறைய பேர் இருக்காங்க. வுமன் பவரை காட்டினால் நீ தாங்கமாட்டாய்” என்று யஷூ கூற

 

“அம்மா தாயே விட்டுடு” என்று வினோ கும்பிட மற்றவர்கள் சிரித்தனர்.

 

“முதலில் அவங்க சாப்பிடட்டும், அப்பொறமா பேசுங்க” இந்து கூற அனைவரும் சாப்பிடச் சென்றனர்.

 

அனைவரும் மூக்குப்பிடிக்கச் சாப்பிட்டனர். பின் பெரியவர்கள் அவர்கள் உரையாடிவிட்டுச் செல்ல சிறியவர்கள் அமர்ந்து பேச ஆரம்பித்தனர். 

 

“இவங்களை எங்கே எப்படி கண்டு பிடிச்சிங்க?” என்று கேட்க,

 

அஜெய் கூற ஆரம்பித்தான்…..

 

நானும் இவளும் நல்ல பிரன்ஸ், என்னோட டீம் இவ டீம் இரண்டு பேரும் சேர்ந்து தேட ஆரம்பிச்சோம். இவங்க ஹொஸ்பிடலுக்கு வந்து இருந்த புடேஜை வச்சி இவங்க கிளம்பின ஆட்டோ டிரைவர் கிட்ட இருந்து, தேட ஆரம்பிச்சேன். இவ ஷ்ரவன் கிட்ட இருந்து கிடைச்ச டீடெய்லசை வச்சி தேட ஆரம்பிச்சா. 

 

அதாவது இவங்க ஐந்து பேருமே கீதாவை ஹொஸ்பிடலில் அட்மிட் பன்னதுக்கு அப்பொறமா ஒன்றாக காணமல் போயிட்டாங்க. சோ இவங்க எதுக்கோ பயந்து இப்படி பன்னி இருக்கனும்னு யோசிச்சோம். அடுத்தநாள் எல்லோரும் முன்னே தங்கி இருந்த இடங்களில் இருந்து போயிட்டாங்க.

 

அவங்க தன்னோட சொந்த வீட்டுல நிச்சயமா இருக்கமாட்டாங்க அது உறுதியான விஷயம். அதனால் அவங்களோட ரிலேஷன்சை பற்றி தேட ஆரம்பிச்சு, எல்லோரிடமும் விசாரிச்சோம். அப்படி தேடும் போது,

 

கீதா திருனல்வேலியில் இருக்கிறதாகவும், சௌமி கேரளாவில் அவங்க அத்தை வீட்டில் இருக்கிறதாகவும், ஜெசி ஜெய்ப்பூர்ல இருக்கிறதாவும் கண்டு பிடிச்சோம்” என்று கூறினான்.

 

“இவங்க எப்படி நெட் போல் விளையாட ஒத்துகிட்டாங்க?” என்று கிறு கேட்க,

 

“அதை உன் புருஷன் கிட்ட கேளு” என்றாள் யஷூ

 

“இவங்க கண்டுபிடிச்ச இடங்களை சொன்னாங்க. நான் அவங்களை தேடி போனேன். முதலில் நான்  சௌமியாவை தான் பார்க்க போனேன், நல்ல நேரம் அவங்க பேரன்சும் அங்கே இருந்தாங்க. அவங்களோட மனசுல இருக்கிற பயத்தை நீக்கினேன். கிறுவோட நிலமையையும் சொன்னேன். அதற்கப்பொறமா நடக்க இருக்கின்ற மெச்சை பற்றி சொன்னேன்.

 

அடுத்தாக கீதாவை பார்க்க போனேன், அவ கோமால எட்டு மாசம் இருந்து இருக்கா. அவளால் பழையதை எதுவுமே மறக்க முடியாம இரண்டு வருஷமா ரொம்ப கஷ்டபட்டு இருக்கா. அதற்கு அப்பொறமா திருனல்வேலியில் இருக்கிற ஒரு கிராமத்தில் ஒரு டீச்சராக இருக்கா. நான் அவ அப்பா அம்மாக்கு நம்பிக்கை கொடுத்தேன்

 

அவளுக்கு ஒரு அண்ணனா, அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்குறது மட்டும் இல்லாமல் அவளோட இலட்சியம் நிறைவேற உதவி பன்னுவேன் என்று. அவளுக்கு எப்போவும் பாதுகாப்பா இருப்பேன்னு. அவளை என்னை நம்பி அனுப்பினாங்க.

 

நான் ஜெசி வீட்டிற்கு போய் பேசுரப்போ அவ முஸ்லிம் பொண்ணு அப்படிங்குறதால் விளையாட விடமாட்டேன்னு சொன்னாங்க. அவ விளையாடினால் எந்த பையனும் அவளை கல்யாணம் பன்னமாட்டாங்க, அவளோட வாழ்க்கையே போயிரும் அதனால் முடியாதுன்னு மறுத்துட்டாங்க. ஹபீஸ் கூட இதைபற்றி பேசும் போது அவன் ஜெசியை பார்த்ததில் இருந்து காதலிக்கிறதா சொன்னான்.

 

ஹபீசோட பேரன்சிடம் பேசினேன். ஹபீசும் அவளோட கனவை பற்றி சொன்னான். அவளோட போடோ  அவ டீடெய்ல்ஸ் பூரா அவங்களுக்கு அனுப்பி வைத்தோம். அவங்களுக்கு ஜெசியை பார்த்த உடனே பிடிச்சி போச்சு. அவங்க வீட்டுல ஒகே சொன்னதுக்கு அப்பொறமா திரும்ப ஹபீசை அழைச்சிட்டு ஜெசி வீட்டிற்கு போய் பேசினோம். ரொம்ப நேரத்துக்கு அப்பொறமா அரைமனதா சரி சொன்னாங்க.

 

ஹபீசோட குடும்பத்தையும், ஜெசி குடும்பத்தையும் பேச வச்சோம். இரண்டு குடும்பத்துக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு போச்சு. கல்யாணம் பன்ன ஓ.கே சொல்லிட்டாங்க. எல்லோரையும் நேற்று காலையில் ஊருக்கு வர சொன்னேன். அதனால் தான் எனக்கு மூன்று நாளா வீட்டிற்கு வர முடியல்லை. பின்னர் நடந்தது எல்லாமே உங்களுக்கு தெரியுமே” என்று ஆரவ் கூறி முடித்தான்.

 

“எத்தனை நாளில் கண்டுபிடிச்ச யஷூ?” என்று அஸ்வின் கேட்க,

 

‘அவங்களை மறச்சி வச்ச என் கிட்டையே கேட்குறானே இதெல்லாம் எங்க போய் சொல்றது?’ என்று மைன்ட் வொய்ஸ் என்று சத்தமாக பேச,

 

“அடியேய் யஷூ, எங்களை பிரிச்சு வைக்குறதுல உனக்கு என்ன அவளோ சந்தோஷம்?” என்று ஹபீஸ் கேட்க

 

‘ஐய்யையோ, கண்டு பிடிச்சுட்டானுங்களே’ என்று தன்னுள் எண்ணியவள்,

 

“சும்மா பா, எனக்கும் கதை வேணுமே” என்றாள்.

 

“உனக்கெல்லாம் கல்யாணமே ஆகாது, இது எங்க எல்லாரோட சாபம்” 

 

“அடேய் யேன்டா இப்படி ஒரு சாபம், உன்னையும் உன் ஆளையும் நான் என்ன இப்போ பிரிச்சா வச்சேன், யேன் ஹபீஸ் உன் வீட்டுல அவளை பற்றி எதாவது பத்தவச்சேனா? அஸ்வின் உனக்கும் மீராவிற்கும் இடையில தீப்தியை திரும்ப கொண்டு வந்தேனா? மாதேஷ் நான்……”  என்று அவள் தொடர

 

“உனக்கு இந்த ஐடியா எல்லாமும் இருக்கா?” என்று ஹபீஸ் கேட்க,

 

“அம்மா தாயே, நீ நல்லா இருப்ப, சந்தோஷமா கடைசி வரைக்கும் வாழுவ எங்க வாழ்க்கையில கும்மியடிச்சிராதிங்க மா”என்று வினோ கூற

 

“அப்போ சாபம்…” என்று  யஷூ இழுக்க

 

“அதை அப்போவே வாபஸ் வாங்கிட்டேனே”என்றான் வடிவேலு பானியில்.

 

“ஒ.கே காய்ஸ் எங்களுக்கு நேரமாச்சு, நான் என் பிரன்டு சித்தார்த்தோட (நம்ம ஹீரோ) கல்யாணத்திற்கு போக இருக்கு வரேன்” என்று எழ யஷூவும் அனைவரிடமும் சென்று கூறி செல்ல முன்

 

“கிறுஸ்திகா அதர்வா உன்னை வலை வீசி தேடுறான். நிச்சயமா உன் கண் முன்னாடி வருவான். பீ ரெடி டூ பேஸ் ஹிம்” என்று கூறி அவர்களிடம் இருந்து விடைப் பெற்றாள் யஷூ.

 

வீட்டிற்குள் அனைவரும் தத்தமது அறைகளுக்குச் செல்ல அங்கே ஷ்ரவனும், கீதுவும் தனித்து விடப்பட்டு இருந்தனர். 

 

“நீ எப்படி இருக்க ஷ்ரவன்?” என்று கேட்க,

 

“இருக்கேன், நீ ரொம்ப மாறி இருக்க துகி” என்று கூற அவள் கண்கள் கலங்கின.

 

“இப்ப எதுக்கு அழற?” என்று கேட்க, 

 

“ஒன்னும் இல்லை” என்று அவள் எழ அவளை கைபிடித்து அவன் அருகில் அமர வைத்தான்.

 

“துகி, நீ தைரியமான பொண்ணு, இப்படி பன்னாத” என்று கூற

 

அவனை அணைத்துக் கொண்டவள்,

 

“என்னால முடியல்லை டா, உண்மையான காதலுக்கும், பொய்யான காதலுக்கும் வித்தியாசம் தெரியாதவளா இருந்து இருக்கேனே ரவி”என்று அழ 

 

அவள் தன்னை ரவி என்று அழைத்ததில் காற்றில் மிதந்தான். 

 

“பழையதை மறந்திரு, உனக்காக ஒரு வாழ்க்கை இருக்கு அதை வாழு” என்று கூறினான்.

 

“சரி நீயும் எனக்கு உதவி செய், என்னை விட்டு போயிறாத, உன் பக்கத்துல இருக்கும் போது சேபா பீல் பன்றேன்” என்று கூற

 

“சரி துகி மா” என்றான் ஷ்ரவன்.

 

மாடியில் ஹபீசும், ஜெசியும் பேசிக் கொண்டு இருந்தனர்.

 

“சீரா உனக்கு என்னை பிடிச்சிருக்கா?” என்று கேட்க, அவள் அமைதியாய் தலையைக் குனிந்து இருந்தாள்.

 

“பிடிக்கல்லன்னா சொல்லு நான் வீட்ல பேசுறேன்” என்று ஒரு வித வலியான குரலில் கூற

 

“பிடிக்காமல் தான் உன் கூட பேசிட்டு இருக்கேனா?” என்று ஜெசி கேட்க,

 

ஹபீஸ் அவளை அணைத்துக் கொள்ள அவளும் அணைத்துக் கொண்டாள்.

 

மாதேஷ் தர்ஷூ வாந்தி எடுத்து கடினப்பட அவளுக்கு ஆறுதலாக தலையை வாஞ்சையாக தடவியவன் அவளுக்கு இளஞ்சுடு நீரை புகட்டிய பிறகு, அவளை தன் மடியில் படுக்க வைத்தான்.

 

கவின் மடியில் அமர்ந்து ஜீவி ஆரவின் காதலைப் புகழ்ந்துக் கொண்டு இருந்தாள். 

 

“போதும் டி உன் அண்ணன் புராணம்” என்று கூற 

 

அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள அவளை சமாதானபடுத்தும் முயற்சியில் இருந்தான் அவன்.

 

கிறு தனியாக அமர்ந்து மௌனமாக கண்ணீர் வடிக்க,

 

“நான் உனக்கு அழ கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்லையா?” என்று ஆரவ் கண்ணீரைத் துடைத்து விட

 

“கண்ணா, நான் உனக்கு எதுவுமே பன்னது இல்லையே டா, ஆனால் நீ எனக்காக ஒவ்வொரு வீட்டிலேயும் போய் கெஞ்சி இருக்க, எனக்காக எவளோ கஷ்டபட்டு இருக்க? உன் காதலுக்கு நான் தகுதியானவளா?” என்று கேட்க,

 

“யாரு சொன்னா எனக்காக நீ எதுவுமே பன்ன இல்லைன்னு, எனக்காக மட்டுமே ஐந்து வருஷம் காத்துட்டு இருந்த, நான் வராமல் இருந்தாலும் எனக்காக இன்னும் காத்திருப்ப, என்னை அந்த அளவுக்கு காதலிக்குற, நான் குழப்பத்தில் இருக்கிறப்போ என்னை சரி பன்ற, எனக்காக நிறைய யோசிக்கிற, என்னை எல்லா கஷ்டங்களில் இருந்தும் என்னை உன் அன்பாலையும் காதலாலையும் வெளிக் கொணர்ந்தாய் இப்போவும், எப்போவும் எனக்காக மட்டுமே வாழுற, இதை விட என்ன டி நீ  பன்ன இருக்கு? 

 

நீ என் மேலே காட்டுற அன்புக்கு நான் அவங்க கிட்ட இந்த அளவு கெஞ்சினது கூட எள்ளளவும் ஈடாகாது. என் காதலுக்கு உன்னை விட தகுதியானவங்க யாருமே இல்லை. இந்த ஜென்மம் மட்டும் இல்லை, இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் காதலும், என் அன்பும் உனக்கு மட்டும் தான். வேறு யாருக்கும் இடம் இல்லை” என்று அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

 

சௌமி தனியாக நின்று தன் நண்பியுடன் பேசித் திரும்ப அங்கே வினோ இவளைப் பார்த்து நின்று இருந்தான். 

 

“என்ன?” என்று கேட்க

 

“ஐ லவ் யூ” என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டான். அவளோ அதிர்ச்சியில் அங்கு சிலையாக நின்று இருந்தாள்.

 

மீரா, அஸ்வின்  இருவரும் அமர்ந்து இருக்க மீராவின் கால்களை தன் மடியில் வைத்துக் கொண்டு கால்களை மென்மையாக பிடித்துவிட்டான். 

 

“இன்னும் வலி இருக்காடி?” என்று கவலையாக கேட்க ,

 

“இல்லை டா, இப்போ ஒகே இன்னும் மூன்று நான்கு நாளில் பழைய மாதிரி நடக்க ஆரம்பிச்சிருவேன். சொ டோன்ட் வொரி” என்று கூற அஸ்வின் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

 

அவன் மொபைல் அலற அதைப் பார்த்து அழைப்பை ஏற்றான். எதிர் முனையில் கூறிய செய்தியைக் கேட்டு அஸ்வினின் முகம்  சந்தோஷத்தில் மின்னியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 24யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 24

நிலவு 24   மகா பூஜைக்கு முன்னைய நாள் வீட்டில் அனைவரும்  கோயிலை நோக்கிச் சென்றனர். அனைவரும் சாமி கும்பிட்டு வெளியேறும் போது சித்தர் அவர்கள் அனைவரையும் அழைத்தார். அதில் ஒவ்வொருவராக சென்று ஆசிர்வாதம் பெறச் சென்றனர்.    அவர் அருகில்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 9யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 9

நிலவு 9   இரவு உணவை அனைவரும் சிரித்துப் பேசி உண்டு முடித்து உறங்கச் சென்றனர்.    தனது அறைக்கு வந்த கிறுஸ்தி முகம் கழுவி, லோங் ஸ்லீவ் டீசர்ட், பொடம் அணிந்து, தனது கூந்தலை பின்னிக் கொண்டு இருந்தாள்.   

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 63யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 63

நிலவு 63   “அம்மா நான் அவனோட பெத்த அம்மா அப்பாவைப் பற்றி தேட சொல்லி யஷூ கிட்ட கொடுத்து இருந்தேன். அவை தேடி கண்டு பிடிச்சு என்கிட்ட சொன்னாள். ஆரவ் கண்ணா வேறுயாரும் இல்லை அருணாச்சலம் மாமா, தேவி அத்தையோட