Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 49

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 49

நிலவு 49

 

“இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே விறுவிறுப்பா மெச் ஆரம்பமாக போகுது. இதுக்காக இங்கே உள்ள எல்லோருமே ஆர்வமாக இருக்காங்க, எந்த கம்பனி செம்பியன்ஷிப் எடுக்க போகிறாங்கன்னு பார்க்குறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு. யேன்னா இங்க ஸ்டேட் லெவல் பிளேயர்ஸ் ஒவ்வொரு டீம்லையும் இருக்காங்க, நாமளும் என்ன நடக்க போகுதுன்னு பார்க்கலாம் காவ்யா” என்று அறிவிப்பாளர் குமார் கூற

 

“ஆமா குமார் இன்றைக்கு நடக்கப் போவது ஒன் டே மெச். அதனால் ரொம்ப டைம் எல்லாம் நமக்கு இல்லை. சொ, நொக்அவுட் டூர்னமன்ட் தான் நடக்கும், இங்கு பதினாறு டீம்ல எந்த எந்த டீம் மோத போறாங்க, அதை டீம் ஓனர்ஸ் குழுக்கள் முறை மூலமா தெரிவு செய்றதுக்காக காத்துக்குட்டு இருக்காங்க. எந்த இரண்டு டீம் முதலில் விளையாட போகுதுன்னு பார்க்க நாங்களும் ஆர்வமா இருக்கோம்” என்று அறிவிப்பாளர் காவ்யா கூறினார்.

 

இவ்வாறு அறிவிப்பாளர்களும் பேசுவது அனைவருக்கும் கேட்டுக் கொண்டு தத்தமது வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர். விளையாட்டு வீராங்கனைகள் தமக்கான ஆடைகளை அணிந்து குளுகோஸ் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். 

 

குலுக்கல் முறை மூலம் எவ் அணிகள் மோதப் போகின்றன என்பது தெரிவு செய்யப்பட்டது. முதலில் AGC அரவிந்தின் கம்பனியும் ராம் குமாரின் கம்பனியும் விளையாடுவதாக இருந்தது. 

 

“ஆமா நாம எதிர்பார்த்த நேரமும் வந்தாச்சு. முதலில் இந்தியாவோட முதலாவது இடத்தில் இருக்கிற கம்பனி அகோமா கம்பனியோட எம்.டி அரவிந்நாதனோட அணியும், இந்தியாவோட நான்காவது இடத்துல இருக்கிற ராம்குமாரோட அணியும் மோத போகுது. பார்க்கலாம்” என்று குமார் கூற

 

“அது மட்டும் இல்லை குமார், இங்க நடுவர்களா வர போறவங்க இந்தியாவோட இன்டர்நெஷனல் நெட்போல் போர்டோட மெம்பர்ஸ் தான், அதனால் டப்பா ஆ தான் இருக்க போகுது பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு” என்று காவ்யா கூறினாள்.

 

குமார் : இதோ டொஸ்அப் பந்தை மேலை வீசிட்டாங்க, ஆமா பிடிக்கிறாங்க, வாவ், நம்ம AGC C பந்தை பாய்ந்து பிடிச்சிட்டாங்க. இப்போ சென்டர் பாஸ் 

 

காவ்யா : நம்ம சென்டருக்கு மூன்று நிமிஷம் தான் டைம் இருக்கு அதுக்குள்ள யாருக்காவது பந்தை பாஸ் பன்னியாகனும். யாருமே பிரீ ஆகுறது போல தெரியிது இல்லை. வாவ் GA பந்தை பிடிச்சிட்டாங்க

சூப்பர் பாஸ், எவளோ தந்திரமா C க்கு கொடுத்து அவங்க GS க்கு கொடுத்தாங்க.

 

குமார் : பார்க்கலாம் கோல் போடுறாங்களா? இல்லையான்னு, பந்தை வீசிட்டாங்க, செம்ம ஒரு பொய்ன்டு AGC அணிக்கு கிடைச்சிருச்சு.

 

காவ்யா : ஆமா குமார் முதல் பாஸ் முதல் பொய்ன்டை எடுத௲துட்டாங்க. RKC அணியும் இப்போ வெறியா விளையாடுவாங்க, பார்க்கலாம் ஆமா C WA க்கு பந்தை கொடுத்துட்டாங்க சூப்பரா பாஸ் பன்றாங்க, ஓஓஓ ரெப்ரி ஸ்டெபிங் சொல்லிட்டாங்க, இப்போ advantage pass AGC அணிக்கு வழங்கப்படுகிறது. 

 

குமார் : வாவ், வாவ் செம்மயா போலை பாஸ் பன்றாங்க வாவ் GS கிட்ட போல் போயிருச்சு, சூட் பன்னுவாங்களா? 

 

காவ்யா : ஆமா சூட் பன்னி இ்போ இரண்டாவது பொய்ன்ஸ் எடுத்துட்டாங்க. வாவ் இப்போ ஸ்கோர் 2:0 

 

குமார் : திரும்ப போல் AGC அணிக்கு தான் கிடைச்சிருக்கு. பார்க்கலாம் இந்த முறையும் பொய்ன்ஸ் எடுக்குறாங்களான்னு

 

காவ்யா : இப்போ போல் AGC ஓட WD கிட்ட இருக்கு இப்போ AGC ஓட WA, இப்போ GA கிட்ட போயிருக்கு. வாவ் GS சூட் பன்னுவாங்களா?

 

குமார் : ஓஓ நோ போல் மிஸ் ஆச்சு. இப்போ advantage pass RKC ஓட GD கிட்ட போல் இருக்கு போல் வீசுறாங்க வாவ் AGC ஓட WA சூப்பரா பாய்ந்து போல பிடிச்சிருக்காங்க.

 

காவ்யா : போல் GA இடம் போயிருச்சு , வாவ் திரும்பவும் சூட் பன்னி மீண்டும் ஒரு பொய்ன்ட் எடுத்து கொடுக்குறாங்க.

 

இவ்வாறு இரண்டு இடைவேளையின் பின் AGG : RKC 6:2 என்ற விகிதத்தில் வெற்றி பெற்றது. 

 

Knockout முறைக்கேற்ப போட்டிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. அதில் AGC அணி அனைத்திலும் வெற்றி பெற்று semi finale ற்குத் தெரிவு செய்ப்பட்டது. Semi finale ற்கு மொத்தமாக நான்கு அணிகள் தெரிவாகியது. அதில் நிகாரிகாவின் அணியும் ஒன்று. ஆனால் நிகாரிகாவின் அணியும் இன்னொரு அணியுமே Semi finale ல் மோத இருக்க AGR அணியும் மற்றைய அணியும் மோதிக் கொள்ள இருந்தது.

 

முதலில் நிகாரிகாவின் அணிக்கான மெச் ஆரம்பித்து விறுவிறுப்பாகச் சென்றது. இறுதியில் 6 : 4 என்ற விகிதத்தில் நிகாரிகாவின் அணி வெற்றியைப் பற்றி finale ற்கு தெரிவு செய்யப்பட்டது. அடுத்த பத்து நிமிடங்களிற்குப் பிறகு அடுத்த semi finale ஆரம்பித்தது. அதுவும் பார்வையாளர்களுக்கு மத்தியில் சுவாரசியம் ஊட்டும் வகையில் நடைபெற்றுக் கொண்டு இருந்தது.

 

இறுதியில் ஒரே ஸ்கோரை இரண்டு அணிகளும் பெற இன்னும் ஆர்வம் அனைவரிடத்திலும் அதிகமாகியது. மீண்டும் டொஸ்அப் செய்து இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டு அதிகமான ஸ்கோரை பெறும் அணியே இறுதிச் சுற்றிற்கு தெரிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. 

 

கிறுவின் முகம் டென்ஷனிலேயே இருந்தது. இதைப் பார்த்த ஆரவ்,

 

‘Finale நீ தான் விளையாடனும். இப்போ இவங்க மெச்சை வின் பன்னிருவாங்கன்னு நம்புறேன். விளையாட தயாராயிரு கிறுஸ்தி’ என்று தன்னுள்ளே பேசிக் கொண்டே இருந்தான்.

 

பின் வழங்கப்பட்ட நூற்றி இருபது செக்கன்களில் AGC அணி ஒரு கோலைப் பெற்று இறுதிச் சுற்றிற்குத் தெரிவாகியது. இதைப் பார்த்த கிறுவிற்கு சந்தோஷத்தில் மின்னியது. இன்னும் முப்பது நிமிடங்களில் இறுதிச் சுற்று ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டது. நிகாரிகாவிற்கு பற்றி எரிந்தது. எப்படியாவது கிறுவை தோற்கடிக்க வேண்டும் என்று எண்ணினாள்.

 

அப்போது அவள் பி.ஏ கூறிய யோசணையை ஏற்றவள் நேரடியாக AGC அணியின் சில முக்கிய வீராங்கனைகளைப் பார்க்கச் சென்று சிறிது நேரம் அவர்களுடன் பேசிய பிறகு வெற்றியுடன் வெளியே வந்தாள்.

 

அங்கிருந்த மற்றைய வீராங்கனைகள் ஆரவிடம் அவசரமாக ஓடி வந்தனர்.

 

“என்னாச்சு?” என்று கிறு கேட்க,

 

“மேம் எங்க GA, C, WA, WD விளையாட முடியாதுன்னு சொல்லிட்டாங்க” என்றாள் ஒருவள்.

 

“வாட்? யேன் எதுக்காக விளையாட முடியாதுன்னு சொன்னாங்க?” என்று கிறு பதற,

 

“தெரியாது மேம்” என்றார்கள் மற்றவர்கள் கவலையாக.

 

அனைவருமே வீராங்கனைகள் இருக்கும் இடத்திற்கு சென்றனர்.

 

“எதுக்கு உங்களால் விளையாட முடியாது girls?” என்று வினோ கேட்க,

 

“சேர் முடியாதுன்னா விடுங்களேன்” என்று ஒருவள் கூற

 

அதில் வெகுண்டு எழுந்த கவின்,

 

“என்ன பேசுறிங்க? பைனல் வந்த பிறகு விளையாட முடியாதுன்னா என்ன அர்த்தம்?” என்று கத்தினான்.

 

“இது உங்களுக்கு வெறும் ஸ்போர்ட்ஸ், எங்களுக்கு எங்க கௌரவம்” என்றார் அரவிந்.

 

“நீங்க பன்றது, ஒருத்தரை நடுகடலுக்கு அழைச்சிட்டு வந்து அவங்களை தள்ளிவிடுறது போல இருக்கு” என்றான் ஆரவ் கோபமாக.

 

“சேர், எங்களுக்கு நீங்க வின் பன்னால் ஒவ்வொருத்தருக்கும் ஒரு லட்சம் தான் கொடுப்பிங்க, ஆனால் நாங்க விளையாடாமல் இருந்தால், எங்க நான்கு பேருக்கும் தலா பத்து லட்சம் தருகிறேன்னு ஒருத்தங்க சொன்னாங்க, அதான் விளையாட இல்லை” என்றாள் ஒருவள்.

 

அனைவரும் அவர்கள் நால்வரையும் கோபமாகவும், வெறுப்பாகவும் பார்த்தனர்.

 

அதே நேரம் அங்கு நிகாரிகா வருகை தந்தாள். 

 

“என்னாச்சு கிறுஸ்திகா ஆரவ்? முகத்தை தொங்க விட்டு இருக்கிங்க? அவங்க விளையாட முடியாது அப்படின்னு சொல்லிட்டாங்களா?” என்று கேலியாக கேட்க,

 

“ஓஓஓ நீ பன்ன வேலையா இது நிகாரிகா? உனக்கு வெட்கமா இல்லை நேரடியா மோதாமல் இப்படி கீழ்த்தரமா பன்ற?” என்றாள் கிறு.

 

“பரவால்லையே உடனே கண்டுபிடிச்சிட்ட, உன்னை தோற்க வைக்க நான் எந்த எல்லைக்கும் போவேன் கிறுஸ்திகா ஆரவ்” என்றாள் முகத்தில் திமிரை வைத்துக் கொண்டு.

 

நிகாரிகாவின் பேச்சு அனைவரையும் கோபப்படுத்தினாலும், கிறுவே அதைப் பார்த்துக் கொள்வாள் என்று அமைதியாய் இருந்தார்கள்.

 

“உங்க டீமில் இருக்கிறவங்க ஏழு பேர் தான். அதிலும் நான்கு பேர் விளையாட முடியாதுன்னு சொல்லிட்டாங்களே, இப்போ மூன்று பேர் தான் இருக்காங்க, குறைந்தது ஒரு டீமிற்கு ஐந்து பேராவது இருக்கனும். இப்போ என்ன பன்ன போற கிறுஸ்திகா?” என்று நக்கலாக பேசி 

 

“உன்னால எதுவும் பன்ன முடியாது, ஆடோமேடிக்காக என் கைக்கு செம்பியன்ஷிப் வந்துரும். நீ தோத்து போக போற, உன் கம்பனி, எல்லாமே தோத்துபோக போகுது” என்று கூறி வன்மமாய் சிரிக்க,

 

“ஒரு போதும் நான் என் கம்பனியை தோற்க விடமாட்டேன், என் கம்பனி தோற்றால் என் குடும்பம் தோற்றது போல ஆகிரும். கண்டிப்பா நான் ஜெயிப்பேன்” என்று கத்தினாள் கிறு.

 

“ஹாஹா குட் ஜோக், மூன்று பேரை மட்டும் வச்சு உன்னால் எப்படி ஜெயிக்க முடியும்?” என்று கேட்க

 

“நான் எப்படி ஜெயிக்கிறேன்னு நீ பார்க்க தானே போற? பட் வித் அ டீலிங். அப்போ தான் ஒரு கிக் இருக்கும்” என்றாள் கிறு புன்னகைத்து.

 

“நைஸ் ஐ லைக் டீலிங்ஸ், என்னன்னு சொல்லு?” என்று நிகாரிகா கூற

 

“நான் உன் கிட்ட விட்ட சவாலில் ஜெயிச்சால் என் அண்ணனுங்க மூன்று பேர், ஷ்ரவன், வினோ இடம் நீ மன்னிப்பு கேட்கனும்” என்று கூற

 

“அதே போல நான் ஜெயிச்சேன்னா, நீ என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கனும், என்ன டீல் ஓகே வா?” என்று கேட்க,

 

“டபுள்.ஓகே” என்றாள் கிறுஸ்தி சிரிப்புடன்..

 

நிகாரிகா ஏதோ சிந்தித்தபடி அங்கிருந்து வெளியாக அவளுடன் அந்த நான்கு வீராங்கனைகளும் வெளியாகினர். கிறு உட்கார்ந்து இருக்க,

 

“என்ன பன்ன போற மா?” என்று ராம் கேட்க,

 

“நான் விளையாட போறேன் ராம்பா, என் குடும்பத்துக்காக, ஆனால், இன்னும் ஒருத்தர் வேணுமே” என்று கவலையாகக் கூற

 

“யேன் நாங்க இல்லையா?” என்று சத்தம் கேட்க அந்தப் பக்கம் ஸ்போர்ட்ஸ் ஆடையில் விளையாட தயாராகிய நிலையில், கீதா, ஜெசி, சௌமி நின்றிருந்தனர்.

 

அவர்களைப் பார்த்த கிறு கீழே அமர்ந்து அழ அவளை மற்ற மூவரும் ஓடி அணைத்துக் கொண்டனர். 

 

“எப்படி டி இருக்கிங்க?” என்று மூவரையும் பார்த்து கேட்க,

 

“இதைபற்றி மெச்சுக்கு அப்பொறம் பேசலாம். இப்போ போய் நம்ம ஏ.கே ஆ தயாராகி வா” என்றாள் சௌமி.

மற்ற இருவருமே அதை ஆமோதிக்க நால்வரும் ஒரு முறை ஒரே நேரத்தில் அணைத்துக் கொண்டனர்.

 

பின் கிறுஸ்தி எழுந்து தயாராகச் சென்றாள். வினோவோ சௌமியை விழுங்கும் பார்வைப் பார்க்க, ஆரவ் அவன் தோளை இடிக்க அதில் சுயநினைவு அடைந்தவன், ஆரவைப் பார்த்து ஈஈஈஈ என்று இளித்து வைத்தான். ஆரவோ தலையில் அடித்துக் கொண்டான்.

 

கிறுஸ்தி அவர்கள் அணிக்கான ஆடையை அணிந்து தன் இடை தாண்டிய கூந்தலைப் பின்னலிட்டு, காதணி போன்ற எந்த ஆபரணங்களும் இல்லாமல் எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல் நெற்றியில் குங்குமம் மாத்திரம் வைத்து இருந்தாள்.

 

ஸ்போர்ட்ஸ் ஷூ, C என்ற எழுத்து பதிகப்பட்ட டீசர்ட், பொடம் அணிந்து தன் நிமிர்ந்த நடையுடன் வர நண்பர்கள் அனைவரும் பழைய கிறுவைப் பார்த்தில் மகிழ குடும்பத்தினர் பிரம்மித்து நின்றனர். 

 

கீதுவின் டீசர்டில் WA எனவும், சௌமியின் டீசர்டில் GA எனவும், ஜெசியின் டீசர்டில் WD எனவும் பொறிகப்பட்டு தன் கம்பீர நடையுடன் அணியின் ஏழுபேரும் மைதானத்திற்கு வருகை தந்தனர். நிகாரிகா கிறுவின்

இந்த அவதாரத்தில் அதிரந்து நின்றாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 10யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 10

நிலவு 10   “ஆரவ் இன்னும் நீ என்னை உன் மனைவியா ஏத்துக்கவே இல்லையா?” என்று கிறுஸ்திகா கேட்க,    அவன் அமைதியாக கண்கள் கலங்க அவளையே பார்த்தான்.    அவன் அமைதியைப் பார்த்தவளுக்கு ‘இதயத்தில் எவரோ ஈட்டியைப் பாய்ச்சியது போல’

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 57யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 57

நிலவு 57   அடுத்த நாள் காலையில் நலங்கு வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது. மணமக்கள் இருவரும் வெள்ளை, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்திருக்க, மற்றவர்கள் மஞ்சள் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து இருந்தார்கள். ரகு வம்சத்தின் வழக்கப்படி இருவரும் அருகருகாக அமரவைக்கப்பட்டனர். 

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 41யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 41

நிலவு 41   “கண்ணா உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையான்னு தெரியாது. நாம எல்லோருமே இந்த வாட்டி வீட்டிற்கு போன நேரம் நான் தோட்டத்தில் வெளியே உட்கார்ந்து இருந்தப்போ நீ என் கூட பேசின அப்ப கூட நான் வெளிச்சம் இருக்கிற