Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 45

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 45

நிலவு 45

 

கிறு அவளது அலுவலகத்திற்கு சென்று காரில் இருந்து இறங்கும் போதே மெனேஜர் அவளுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்க, அவளும் தனது நன்றியை தெரிவித்து உள்ளே செல்ல அனைவரும் அவளை வரவேற்க வரவேற்பரையில் நின்றிருந்தனர். 

 

அதே நேரம் ஆரவ், கிறுவின் ரிசெப்ஷன் ஆளுயர புகைபடம் பிரேமில் வைத்து மாட்டப்பட்டது. அனைவரும் இவர்களுடைய ஜோடிப் பொருத்தத்தை பாராட்ட, சிலர் இவள் திருமணமானவள் என்று கவலைக் கொண்டனர்.

 

உள்ளே சென்று தனது சீட்டில் அமர்ந்தவள் முதலில் கடவுளை வணங்கிய பிறகு, தனது தாத்தா, அப்பா, சித்தப்பா அனைவரையும் நினைத்து மானசீகமாக ஆசிர்வாதம் பெற்று வேலையை ஆரம்பித்தாள். அவளுடைய. பி.ஏ அவளுக்கு அனைத்தையும் ஒரு முறை விளக்க அதை கவனமாக கேட்டவள், அலுவலகம் முழுவதையும் சுற்றிப் பார்த்தாள். பின் உடனடியாக மீடிங் ஒன்றை அரேன்ஞ் செய்தாள்.

 

“ஹலோ காய்ஸ், நீங்க என்னை எம் டி ஆக பார்க்காமல் உங்க பிரன்டாவே நினைங்க. பட் டோன்ட் குரொஸ் யூவர் லிமிட்ஸ் எனக்கு பங்சுவாலிடி ரொம்ப முக்கியம், சொ டைமுக்கு எல்லாரும் ஒபீஸ்ல இருக்கனும். எந்த பிரச்சனை என்றாலும் தயங்காமலஃ சொல்லுங்க. உங்க சபோர்ட் கண்டிப்பா எனக்கு தேவை, உங்க ஆதரவு எனக்கு கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன்” என்றாள்.

 

இன்னும் சில விஷயங்கள் பேசப்பட்டும், விவாதிக்கப்பட்ட பிறகு மீடிங் நிறைவடைந்தது. கிறு அவளுடைய வேலைகளை செய்யும் போது தனக்கு சந்தேகம் வரும் போது மேனஜரிடமும், பி.ஏ விடமும் தயங்காமல் கேட்கும் போது, அவளிடம் இருக்கும் நற்குணங்களைக் கண்டு அனைவருக்குமே பிடித்துப் போனது. ஒரே நாளில் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தாள். அதே போல் அவளது திறமையைக் கண்டு வியந்ததும் உண்மையே.

 

அவளுக்கு அரவிந் அழைப்பை ஏற்படுத்த,

 

“ஹாய் பா” என்று கூற

 

“ஹாய் டா மா, எல்லாம் ஒகே தானே? ஒரு பிரச்சனையும் இல்லையே?” என்று கேட்க,

 

“இல்லை பா, எல்லாம் கரெக்டா இருக்கு, சாப்டிங்களா பா?” என்று கேட்க

 

“ஆமா டா, இப்போ தான், இன்றைக்கு மும்பைக்கு கிளம்புறிங்க தானே?” என்று கேட்க,

 

“ஆமா பா, ஈவினிங் கிளம்புறோம், நைட்டுக்கு வந்து சேர்ந்திருவோம். நாளைக்கு நடக்கப் போகிற பிஸ்னஸ் பார்டியோட அரேன்ஜ்மன்ட் எல்லாம் ஒகே தானே பா? எதாவது குறைவு இருந்தால் சொல்லுங்க, நான் அதை பார்த்துக்குறேன்” என்றாள்

 

“எல்லாம் ஒகே மா, நீங்க இரண்டு பேரும் பத்துரமா வந்து சேருங்க. மாதேஷ், கவின், நம்ம வீட்டுல இருக்கிற எல்லோருமே இப்போவே கிளம்பி இருப்பாங்க” என்று கூற

 

“ஒ.கே பா” என்று கூறி இன்னும் சிறிது நேரம் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

 

ஆரவிற்கு அழைப்பை ஏற்படுத்தியவள்,

 

“சொல்லு கிறுஸ்தி” என்றான்.

 

“சாப்டியா நீ?” என்று கேட்க,

 

“இல்லை டி” என்று கூறி முடியும் முன்னே அவள் அழைப்பைத் துண்டித்தாள். ஆரவ் பல முறை அழைத்தும் அவள் அழைப்பை ஏற்காமல் துண்டித்தாள்.

 

அன்று மாலை ஆரவே அவளை அழைத்துச் செல்ல வந்தான்.

 

“எக்கியூஸ் மீ மேம்”என்று கூற

 

“யெஸ் கம் இன்” என்று கூற ஆரவ் உள்ளே நுழைந்து சுவறில் சாய்ந்து கைகளை மார்பிற்கு குறுக்காக கட்டிக் கொண்டு அவளையே பார்த்தான். அவள் லெப்பில் மூழ்கி இருந்ததால் அவனைக் கவனிக்கவில்லை. 

 

“என்ன வேணும்னு சொல்லுங்க?” என்று லெப்பில் பார்வையை பதிந்தவாறு கேட்க, பதில் இல்லாமல் போக, தலையை நிமிர்த்திப் பார்த்தாள்.

 

முதலில் ஆரவைப் பார்த்து அதிர்ந்தவள் அதை வெளிக்காட்டாது,

“என்ன வேணும்?” என்று கோபமாக கேட்க,

 

“என் பொன்டாட்டியை பார்க்கனும்” என்றான்.

 

“அவங்களை நீங்க உங்க வீட்டில் தான் தேடனும்” என்று வேலையைச் செய்து லெப்பை மூடிவைத்தாள்.

 

ஆரவோ அசையாமல் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

அவள் பேகை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல எத்தனிக்க, அவள் கைபிடித்து நிறுத்தியவன், 

 

“சொரி டி, இதற்கு அப்பொறம் நான் டைமுக்கு சாப்பிடுவேன்” என்று கூற

 

அவள் அவனை நம்பாத பார்வையை பார்த்து வெளியே சென்றாள்.

 

அவள் தான் இப்போது கூப்பிட்டாலும் வரமாட்டாள் என்பதை அறிந்தவன், அவளை செல்லும் போது அவளை கையில் ஏந்தி நடந்தான்.

 

“டேய் என்னடா பன்ற? விடு டா என்னை, எல்லாருமே பார்க்குறாங்க கண்ணா” என்று அவள் இறங்கத் துடிக்க

 

எதையுமே சாட்டை செய்யாதவன், அவளை காரிற்கு அருகில் வந்த பிறகே அவளை விட்டான்.

 

“யேன் டா இப்படி பன்ற?” என்று கேட்க, அவளை காரில் அமர வைத்தவன் நேராக வீட்டிற்கு சென்றான்.

 

“இங்க பாரு கண்ணம்மா இப்போ நாம சண்டை போடுறதுக்கு டைம் இல்லை. மும்பை போய்ட்டு அங்க ஆசை தீர சண்டை போடலாம்” என்று அவசரமாக ஆடைகளை எடுக்கும் வேலையில் ஈடுபட்டான்.

 

“மும்பைக்கு போய் சொக்லேட் வாங்கி தரேன்னு, சொல்றது போல சொல்றான், இவனை….” என்று திட்டிவிட்டு இவளும் அனைத்து வேலைகளையும் முடித்த பிறகு குளித்து டெனிம், டொபிற்கு மாறினாள். ஆரவும் போர்மல் ஆடையில் இருந்து, கேசுவல் ஆடைக்கு மாறி இருவரும் ஏயார்போர்டிற்குச் சென்றனர்.

 

மும்பைக்கு சென்று சேரும் வரையில் ஆரவை முறைத்துக் கொண்டே இருந்தாள். இருவரும் அங்கு உள்ள கெஸ்ட்ஹவுஸிற்குச் செல்ல அங்கே இவர்களிற்கு முன்னரே அனைவரும் அங்கு வந்திருந்தனர். தன் தாய்களுடன் பேசிய பின்னர், தந்தைமார்களுடன் பேசினாள். பின் மீரா, ஜீவி, தர்ஷூவுடன் பேசினாள். ஆனாலும் அவளிடம் வித்தியாசம் இருப்பதை மூவரும் கண்டு கொண்டனர். 

 

இருந்தும் அவளிடம் அதைப் பற்றி கேட்கவில்லை, மூவருக்கும் அங்கு நடந்தவைகள் தெரியும் என்பதால். நான்கு நண்பர்களும் இவர்கள் இடத்திற்கு வந்து அமர்ந்துக் கொண்டனர். கிறு மாதேஷின் கைகளைப் பார்க்க முயல அவன் கைகளை மறைத்துக் கொண்டான் அவளைப் பேசவைப்பதற்காக, அவளும் பார்க்க முடியாமல் அவனிடமே பேசினாள்

 

“கை எப்படி இருக்கு?” என்று கேட்க,

 

“பரவால்லை டி இப்போ நல்லா தான் இருக்கு” என்று அவள் முகம் பார்க்க, அவள் அமைதியானாள்.

 

கவின், அஸ்வின், மாதேஷ் மூவருமே கிறுவின் தவிர்ப்பால் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

 

“எக்ஸ்கியூஸ் மீ” என்று அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள். தனியாக சென்றவள் தனது அறைக்குச் சென்று அழுதாள்.

 

“என்னால் உங்க கூட பேசாமல் இருக்க முடியல்ல டா. நான் பேசினால் அவ சொன்னது எல்லாமே ஞாபகம் வருது டா, சொரி டா சொரி” என்று அழுதாள்.

 

“மச்சான் அவ என் கூட பேசவே இல்லை டா, அவ எனக்கு குழந்தை டா பிளீஸ் ஆரவ் அவளை என் கிட்ட பேச சொல்லு” என்று அஸ்வின் அழ,

 

“அவ என்னை அடிக்கட்டும் திட்டட்டும் நான் திருப்பி எதுவுமே சொல்ல மாட்டேன் டா, என் கூட பழைய மாதிரி இருக்க சொல்லுடா” என்று ஆரவை அணைத்து அழுதான் கவின். மற்றவர்கள் அனைவரும் கண்கலங்கி நின்றனர்.

 

“அண்ணா அழாதிங்க அண்ணா, நாம தான் நம்ம கிறுவை பழையை மாதிரி கொண்டு வரனும். அதற்கு நிகாரிகாவுக்கு தண்டனை கொடுக்கனும், அதுவும் கிறுகையால் அப்போ தான் அவ முழுசா எல்லாவற்றையுமே மறப்பா” என்றான் வினோ வருத்தமான குரலில்.

 

“அதற்கு தான், நான் ஒரு பிளேன் பன்னி இருக்கேன், அதாவது ஒரு கல்லுல ரெண்டு மாங்காய் போல இதனால கிறு நெட்போலும் விளையாடி இன்டர்நெஷனல் டீமிற்கும் சிலெக்ட் ஆகுவா. நிகாரிகாவுக்கும் தண்டனை கிடைச்சது போல இருக்கும்” என்று தன் திட்டம் முழுவதையும் கூறினான்.

 

“மச்சான், இது வர்க்அவுட் ஆகும் டா நான் என் வேலையை கச்சிதமா முடிக்கிறேன் டா” என்றான் கவின்.

 

மாதேஷ்,” மச்சான் நாம இப்போ போய் அவ கூட பேசி புரிய வைக்கலாம் டா பிளீஸ்” என்று கெஞ்ச அனைவரும் கிறுவின் அறைக்குச் சென்றனர்.

 

“கிறுஸ்தி” என்று ஆரவ் அழைக்க கிறு முகத்தைக் கழுவிக் கொண்டு கதவைத் திறக்க அனைவரும் இருப்பதைக் கண்டு எதுவும் கூறாமல் அமைதியாய் இருந்தாள். 

 

“கிறு இப்போ நீ பேச மாட்டியா?” என்று மாதேஷ் கவலை தோய்ந்த குரலில் கேட்க,

 

“எப்படி நான் பேசுறது? நான் பேசும் போது அவ சொன்னது எல்லாமே தானே ஞாபகம் வருது” என்று மறுபுறம் திரும்ப

 

“கிறு இங்க பாரு நாங்க உன் அண்ணனுங்க” என்றான் அஸ்வின். 

 

“நான் உங்க கூட பேசினால் மத்தவங்க கூட அப்படி தானே என்னை பார்ப்பாங்க” என்று கூற

 

“சீ வாயை மூடு, என்னை பேசுற நீ அவ ஒருத்தி தப்பா பார்த்தால், அதற்காக எல்லார் கூடவும் பேசாமல் இருப்பியா?” என்று ஜீவி கோபமாக கேட்க,

 

“உனக்கு புரியல்லை ஜீவி என்னை அவ ரொம்ப ரொம்ப சீபா பேசினா, அதே போல மற்றவர்களும் பேசமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? அதே போல இவங்களும் என்னை அந்த மாதிரி பொண்ணா…” என்று கூறி முடியும் முன்னே அவள் கன்னத்தை பதம் பார்த்தது ஒரு கை.

 

அனைவரும் அடித்தவனை திரும்பிப் பார்க்க, கோபத்தின் உச்சியில் வினோ நின்று இருந்தான்.

 

“எவளோ ரோட்டுல போகிற ஒருத்தி நீ நடத்தை கெட்டவன்னு சொல்லி இருக்கா, அண்ணன் தங்கை உறவை, ஒரு அழகான நட்பை, அம்மா, பையன் உறவை கொச்சபடுத்தி இருக்கா அதற்காக நீ எங்க கூட பேசாமல் இருப்பியா? அவளுக்கு இந்த புனிதமான உறவுகளோட மகிமையை பத்தி எதுவுமே தெரியாது. அவளோட ஒரே நோக்கம் ஆரவ் அண்ணாவை அடையிறது தான், அதற்காக நீ கெட்டவன்னு பொய் சொல்லி இருக்கா நீ அது பெரிய விஷயம்னு தலையில் தூக்கி வச்சி ஆடுற” என்று கத்தினான்.

 

“உனக்கு எங்க டி போச்சு புத்தி? யாரு என்ன சொன்னால் என்ன? நான் என்னை மாதிரி தான் இருப்பேன்னு, உறுதியா இருந்திருந்தால் இப்படி இருப்பியா? மற்றவங்களோட பேச்சுக்காக தன்னோட சொந்தங்களையே இழக்க தயாரா இருக்க” என்றான் வினோ கோபமாக. 

 

கிறுவோ அதிர்ச்சியாக அவனை பார்த்துக்கொண்டு இருந்தான். இது வரையில் ஒரு வார்த்தை அதட்டி பேசாத வினோ இன்று தன்னை அறைந்தது மட்டுமின்றி கோபமாக பேசுகின்றேனே என்று.

 

“கிறு, நீ பாதிக்கப்பட்டு இருக்க சரி, மற்றவர்கள் உன்னோட தவிர்ப்பால் எவளோ கஷ்டபடுறாங்கன்னு யோசிச்சு பார்த்தியா? இவனுங்க மூன்று பேருமே உன் மேல உயிரையே வச்சிருக்கானுங்க டி, யேன் புரிஞ்சுக்க மாட்டேங்குற?” என்று மீரா கேட்க,

 

கிறு அமைதியாகவே இருந்தாள்.

 

“உனக்கு தெரியாது கிறு, மாதேஷ் எவளோ அழுதான்னு, அன்றைக்கு அவன் கையை தட்டிவிட்டு போகும் போது எனக்கே ரொம்ப வலிச்சது டி, இவனை பற்றி யோசிச்சு பார்த்தியா? மற்றவர்கள் ஆயிரம் சொல்லட்டும், நம்ம குடும்பத்துக்கும், நமளை நெருங்கினவங்களுக்கும் நாம உண்மையா இருந்தால் சரி டி, அவ சொன்னன்னு உன் அண்ணன்களையும் வினோவையும் தூக்கி எறிஞ்சிறாத கிறு” என்று அழுதாள் தர்ஷூ.

 

ஒவ்வொருவரும் கூறும் போது கண்ணீர் வடித்தவள், ‘ யார் என்ன பேசினாலும் இவர்கள் என் சொந்தம் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது. அவ்வாறு நான் அவர்களை விட்டு தூரமாகினால் அவள் கூறியது உண்மையாகிவிடும்’ என்று எண்ணியவள் நால்வரிடமும் அருகில் வந்து,

 

“சொரி டா ஐம் ரியலி சொரி டா, நான் அப்படி பன்னி இருக்கக் கூடாது. என்னை மன்னிச்சிருங்க டா, பிளீஸ்” என்று கெஞ்ச நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு அவளை அணைத்துக் கொண்டனர்.

 

மற்ற பெண்கள் மூவரும், ஆரவும் கண்கலங்கி நின்றிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 52யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 52

நிலவு 52   “வா அஜெய் வா யஷூ” என்று ஆரவ் உள்ளே அழைத்துச் சென்றான்.    “ஹாய் காய்ஸ்” என்று உள்ளே வரும் போது,   “வா மா, வா பா” என்று சாவி அழைத்துச் சென்றார்.   அத்தை,

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 20யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 20

அடுத்த நாள் சூரியன் அழகாக வெளியே வந்தான். காலையில் அனைவரும் தத்தமது வேலைகளை முடித்து காலை உணவை உண்ண டைனிங் டேபளில் அமர்ந்தனர். அனைவரும் கதையளந்துக் கொண்டே சாப்பிட   “இன்றைக்கு எங்கேயும் போக இல்லையா அஸ்வின்?” என்று தாத்தா கேட்க,

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 23யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 23

வீடு வரை மயங்கிய கிறுவை அஸ்வின் கையில் ஏந்தி வந்தான். வீட்டில் உள்ளவர்கள் கிறுவின் நிலையைக் கண்டு பதறினர். அஸ்வின் அவள் சாதாரண மயக்கத்தில் இருப்பதாகக் கூறவே மற்றவர்கள் நிம்மதியடைந்தனர். அஸ்வின் கிறுவை அவளது அறையில் விட்டான். மீரா அவளுடன் இருக்க,