யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 44

நிலவு 44

 

“என் உடம்பில் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உன்னை காதலிச்சிட்டே இருப்பேன், என்னோட உயிருக்கும் அதிகமா உன்னை நேசிப்பேன், ஐ லவ் யூ கண்ணம்மா” என்று அவள் ரோஜா இதழ்களை மென்மையாக சிறைபிடித்தான்.

 

அவளும் கண்மூடி இருக்க, வினாடிகள் நிமிடங்களாக மாற அவள் மூச்சிற்கு சிரமப்பட, அவளை விடுவித்து அவள் முகம் பார்க்க, வெட்கத்தில் முகம் சிவக்க மறுபுறம் திரும்பி நின்றாள் கண்ணனின் கண்ணம்மா. அவளை பின்னிருந்து அணைத்தவன், அவள் கழுத்து வளைவில் தன் தாடையை அழுத்தி

 

“என்ன மெடம் புரொபோஸ் பன்னி இருக்கேன், நீ பதில் சொல்லாமல் திரும்பி இருக்கிறிங்க?” என்று கூற

 

“நீங்க…” என்று தடுமாறி அவள் பேச,

 

“என்னடி மரியாதை எல்லாம் பலமா இருக்கு” என்று அவள் முகம் பார்க்க, வெட்கத்தில் மேலும் சிவப்பேறிய முகத்தை மறைக்க அவள் குனிந்துக் கொண்டாள்.

 

“கண்ணம்மா பதில் சொல்லுடா” என்று அவள் முகத்தை கையில் ஏந்த

 

அவள் புன்னகைக்க, “பதில் சொல்ல சொன்னால் சிரிக்கிற?” என்று அவள் கன்னங்களில் இதழ்பதிக்க அவனை தள்ளிவிட்டு சிறிது தூரத்தில் சென்று நின்றுக் கொண்டாள்.

 

“இங்க பாரு, எது பேசுறதா இல்லை கேட்குறதா இருந்தாலும் இப்படி தள்ளி நின்னே பேசு. நீ பக்கத்துல வந்தால் எனக்கு பேச்சு வர மாட்டேங்குது” என்றாள்.

 

“அதெல்லாம் முடியாது, இனி எப்படி பேசுறதா இருந்தாலும்” என்று அவளை பிடித்தவன் அங்கிருந்த மேசையில் அமர்ந்து அவளை தன் மடியில் அமரவைத்து,

 

“இப்படி தான் பேசனும்” என்றான் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து..

 

“கண்ணா, பீளிஸ் டா இப்போ நீ ரொம்ப கெட்ட பையன் ஆகிட்ட, கை கால் வச்சிகிட்டு சும்மா இருக்க மாட்டேங்குற. என்னால் இப்படி பேச முடியிது இல்லை டா, பேச்சே வர மாட்டேங்குது, எவளோ கஷ்டபட்டு பேசுறேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்” என்றாள் உட்சென்ற குரலில்.

 

“சரி நான் ஒன்னும் பன்ன மாட்டேன். நீ பேசு ஆனால் இந்த பொஷிஷன் மாற கூடாது” என்று அவள் இடையோடு கட்டிக் கொள்ள, கிறு அவனை முறைத்தாள்.

 

“இவளோ இறங்கி வந்தது பெரிசு” என்றான். அவள் சிரித்து,

 

“சரி நீ அப்போ என் முகத்தை நான் பேசும் போது பார்க்க கூடாது. ஒகே வா? நீ பார்க்குறது எனக்கு வித்தியாசமா இருக்கு. என்னால இயல்பா பேச முடியல்ல பிளீஸ்” என்று கூற

 

“சரி” என்று சுவரில் தொங்கிக் கொண்டிருந்த அவள் புகைப்படத்தைப் பார்த்தான். 

 

“ஆரவ் நான் உன்னை காதலிக்கிறேன்னு உனக்கே தெரியும். நீ சொன்னது போல நாம கண்ணை பார்த்து ஒருத்தர் நம்மளை காதலிக்கிறாங்கன்னு புரிஞ்சிகிட்டாலும், நாம அதை வாயால் சொல்லும் போது காதலிக்கபடுகிறவங்களுக்கு கிடைக்குற சந்தோஷம், ரொம்ப பெரிசு. அந்தக் காதல்ல உறுதி அதிகமா இருக்கும். அந்த பவர் அந்த மூன்று வார்த்தையில தான் இருக்கு. என்னால் இன்றைக்கு அதோட பதிலை சொல்ல முடியல்லை. கண்டிப்பா நான் எனக்கு தோணும் போது சொல்லுவேன்” என்று கூறி அவன் முகம் பார்க்க,

 

அவன் இவளையே காதல் பொங்கி வழியும் விழியுடன் பார்க்க, அதில் தடுமாறியவள்,

 

“கண்ணா என்னாச்சு?” என்று கேட்கும் முன்னே, அவள் இதழ்கள் இவன் இதழ்களினுள் சிறையுற்றன. 

 

சிறிது நேரத்தில் விடுவித்தவன்,

 

“தயவு செஞ்சி இரசணையா பேசாத டி, என்னால் என்னை கன்ட்ரோல் பன்ன முடியாமல் போயிரும். நீ சொன்னது போல பேசும் போது தூரமா இருந்தே பேசு. அது தான் நம்ம இரண்டு பேருக்குமே நல்லது” என்று நெற்றியில் இதழ்பதித்து அவளை அழைத்துக் கொண்டு இருவருக்கும் இவனே காபி போடச் செல்ல, கிறு தந்தையுடன் பேச ஆரம்பித்தாள். 

 

“அப்பா எப்படி இருக்கிங்க?” என்று கேட்க,

 

“நான் நல்லா இருக்கேன் மா, நீ எப்படி இருக்க?” என்று அரவிந் கேட்க,

 

“ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று கூற அவள் குரலில் சந்தோஷத்தைக் கண்டவர் நிம்மதியை உணர்ந்தார்.

 

எந்த தகப்பனுக்கும் மருமகன் நல்லவன், தன் மகளை நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தாலும் அதை தன் மகளே தன் வாய் மூலமாக கூறும் போது அதைவிட நிம்மதியான, சந்தோஷமான விடையம் அவர்களுக்கு வேறு எதுவுமில்லையே.

 

“அப்பா இங்க இருக்கிற நம்ம பிரான்ச் எம்.டி யாக நான் நாளைக்கே சார்ஜ் எடுத்துக்கலாம் என்று நினைக்குறேன்” என்று கூற

 

“ரொம்ப சந்தோஷமான விஷயம், நான் அதற்கான எல்லா ஏற்பாட்டையும் பாக்குறேன். ஆனால் யேன்மா திடீர்னு?” என்று கேட்க,

 

முதலில் தடுமாறியவள் பின், ” இல்லை பா, எனக்கு ஆரவோட கம்பனியில வேர்க் பன்னி எக்ஸ்பீரியனஸ் கிடைச்சிருச்சு. அதான்” என்று கூற

 

தன் மகள் தன்னிடம் எதையோ மறைக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டவர் அதை வெளிக்காட்டாது,

 

“சரி மா, நான் அப்பா,வீட்டில் எல்லாரு கிட்டவும் இந்த சந்தோஷமான விஷயத்தை சொல்றேன். மாப்பிள்ளை எங்கே மா?” என்று கேட்க,

 

“இதோ இருக்கான், கொஞ்ச இருங்க பா கொடுக்குறேன்” என்று கூறி அவன் கையில் இருந்த காபியை வாங்கிக் கொண்டு மொபைலை அவனிடம் கொடுத்து கார்டினிற்குச் சென்றாள்.

 

‘அப்பா இதற்கே இவளோ சந்தோஷபடுறாரே, நான் இன்டர் நெஷனல் நெட்போல் பிளேயராக  இருந்தால் எவளோ சந்தோஷபட்டு இருப்பாரு, எல்லாத்துக்கும் கொடுத்து வச்சிருக்கனும்’ என்று பெருமூச்சை வெளிவிட்டு கார்டனை இரசித்துக் கொண்டு காபியைப் பருகினாள்.

 

ஆரவ்,” சொல்லுங்க மாமா” என்று கூற

 

“இல்லை மாப்பிள்ளை அவ எதுக்கு திடீர்னு இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கா? அவ எதையோ என் கிட்ட மறைக்குறா,அது எனக்கு நல்லாவே புரிஞ்சுது” என்று அரவிந் கூற

 

“ஆமா மாமா, இன்றைக்கு பெரிய விஷயம் தான் நடந்தது. நேரம் வரும் போது கண்டிப்பா உங்க கிட்ட சொல்லுவேன், இப்போ அவ எடுத்து இருக்கிற முடிவு அவளோட மாற்றத்துக்கு தேவை தான்” என்று கூற

 

“மாப்பிள்ளை நீங்க அவளுக்கு எந்த பிரச்சனையும் வராமல் அவளை சந்தோஷமா பார்த்துப்பிங்கன்னு தெரியும்” என்று மனதாற கூற

 

“மாமா உங்க பொண்ணோட சந்தோஷம் இதில் இல்லை மாமா. அவ நெட்போல் பிளேயர் ஆகுறதுல தான் இருக்கு” என்று கூற

 

“என்ன மாப்பிள்ளை சொல்றிங்க?” என்று கூற

 

அவளுக்கு நடந்த அனைத்தையும் கூற அரவிந்தின் கண்கள் கலங்கிவிட்டன. 

 

“மாமா இதை இப்போதைக்கு யார்கிட்டவும் சொல்லாதிங்க. நான் அவளோட கனவை நனவாக்கி வைப்பேன். அதற்கு உங்களோட உதவி தேவை” என்றான்.

 

“சொல்லுங்க மாப்பிள்ளை, நான் என்ன வேண்னாலும் பன்ன தயாரா இருக்கேன்” என்று கூற

 

“மாமா நான் சொல்றதை கவனமா கேளுங்க” என்று தன்திட்டம் முழுவதையும் கூறினான். “இதில் மாதேஷ், கவின் முக்கியமான போஸ்டிங்ல இருக்கனும் மறந்துறாதிங்க, மற்றைய அவளோ விஷயங்களையும் நான் பார்த்துக்குறேன்” என்றான்.

 

“சரி, மாப்பிள்ளை நீங்க சொன்னது போலவே எல்லா வேலையையும் செய்ய ஆரம்பிக்கிறேன். ஆனால் என் பொண்ணு எந்த ஜென்மத்திலேயோ உங்களை மாதிரி ஒருத்தர் புருஷனா கிடைக்க புண்ணியம் பன்னி இருக்கா” என்று கூற,

 

“மாமா அவளோட கனவை நனவாக்குறது என் கடமை. தாலி கட்டிட்டா அவளுக்கு தேவையானதை வாங்கி கொடுக்கனும், வீட்டை பாத்துக்க சொல்லனும், என் வேலைகளை செய்யனுங்குறது இல்லை மாமா, அவளோட ஆசைகளை நிறைவேற்றுறது மட்டும் இல்லை புருஷோன கடமை, அவளோட அடைய முடியாத கனவை நனவாக்குறதும் தான் அவனோட கடமை. ஒரு மனைவி நமக்காக எல்லா தியாகத்தையும் பன்ன தயாரா இருக்கும் போது, அவளுக்காக, நாம இதை கூட பன்னாட்டி நம்ம புருஷனா இருக்கிறதுக்கு தகுதியே இல்லை. எனக்கு என் கிறுஸ்தியோட கனவு என்னான்னு தெரிஞ்சதுனால நான் அவ கனவை நனவாக்க முயற்சி செய்றேன். எத்தனையோ கணவன்கள் தன்னோட மனைவி கல்யாணத்துக்கு முன்னாடி அவளோட இலட்சியம் எதுவா இருந்ததுன்னே கேட்டு இருக்க மாட்டாங்க. அவங்க கிட்ட இதை பற்றி கேட்டாலே அவங்க மனசு குளிர்ந்து போயிடும். அவங்க இதை தான் புருஷன் நிறைவேற்றனும்னு கூட ஆசைபடமாட்டாங்க. யேன்னா தன்னை பற்றி, தன்னோட இலட்சிய பற்றி கேட்டு இருக்காறேங்குற அந்த சின்ன சந்தோஷமே அவங்களுக்கு போதும். அது தான் மனைவி. சில பொண்ணுங்க வேறு மாதிரி கூட இருக்காங்க. அவங்களை பற்றி இங்கே நான் பேச இல்லை. புருஷனுக்காக மட்டும் வாழுற பொண்ணுங்களை பற்றி தான் பேசுறேன்” என்றான்.

 

இதை மனதில் பூரிப்புடன் கேட்டுக் கொண்டு இருந்தார் அரவிந்.

 

“மாமா சீக்கிரமா இந்த வேலையை முடிங்க. மீராவோட அரங்கேற்றத்துக்கு முன்னாடி எல்லாம் தயாரா இருந்தால் நல்லா இருக்கும். கிறுஸ்திக்கு பிஸ்னசில் இன்ரஸ்ட் ஆகிட்டான்னா நம்ம கையை மீறி எல்லாமே போயிரும். அவ பிடிச்சு போச்சுன்னா இலகுவில் விடமாட்டா” என்றான்.

 

“சரி மாப்பிள்ளை நான் என் பொண்ணுக்காக இதை பன்னுவேன். அவளை கண்டிப்பா விளையாட வைக்கலாம்” என்றார் அரவிந் உறுதியாக.

 

“சரி மாமா நான் என் வேலையையும் பார்க்க இருக்கு. அப்பொறமா பேசுறேன்” என்று அழைப்பை துண்டித்தான்.

 

கிறுவுடன், கார்டினில் அமர்ந்து சிரித்து காபியைப் பருகினான்.

 

இரவு உணவிற்கு பிறகு, அவளுக்கு அறைக்குச் செல்ல தயக்கம் காட்ட ஆரவ் அவள் கைபிடித்து அழைத்துச் சென்று எந்நாளும் போலவே அவளை அணைத்துக் கொண்டு உறங்கினான். அவளோ தூக்கம் வராமல் அவனையே பார்த்துக் கொண்டு இருக்க, கண்மூடி இருந்தவன் கண்களைத் திறந்து இமைகளில் இதழ்பதிக்க சட்டென்று கண்மூடிக்கொண்டு உறங்கியும் போனாள். அவனும் புன்னகைத்து கண்களை மூட நித்ராதேவி அவனையும் ஆட்கொண்டாள்.

 

அடுத்த நாள் காலை கிறு, ஆரவ் இருவரும் தத்தமது  ஆபிசிற்குச் செல்ல தயாராகி வர, ஆளுயரமான பிரேம் ஒன்று வந்திறங்க அதைப் பார்த்த ஆரவும், கிறுவும் புன்னகைத்தனர். அவர்கள் ரிசப்ஷனின் போது எடுத்த போடோவே அது. அதே போல் ஆரவின் ஆபிசிற்கு ஒன்றும் கிறுவின் ஆபிசிற்கு ஒன்றும் கொண்டு செல்லப்பட்டது. வீட்டில் வரவேற்பரையில் அந்த பிரேம் மாட்டப்பட்டது.

 

இருவரும் தத்தமது அலுவலகத்திற்குச் சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 16யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 16

“பாருடா மத்தவங்க தூங்குறாங்களே, டிஸ்டபனஸ் இல்லாமல்  இருக்கனுமே, அந்த எண்ணம் கொஞ்சமாவது அவளுங்களுக்கு இருக்கா?” என்று பொரிந்தான் கவின்.   “வாடா போய் பாக்கலாம் எதுக்கு சிரிக்கிறாளுங்க?” என்று அனைவரும் அடுத்த அறையை நோக்கிச் சென்றனர் நால்வரும்.   அறைக்கதவை திறந்த

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 56யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 56

நிலவு 56   கிறு, மற்றும் தெலுங்கானா சென்டர் பிளேயர் எழுந்து நிற்க இருவருக்கும் மீண்டும் டொஸ்அப் செய்பட்டு பந்து தெலுங்கான அணிக்குச் சென்றது. அதில் பந்து வேகமாக மாற்றபட்டு தெலுங்கான அணிக்கு இன்னுமொரு புள்ளி கிடைத்தது. அத்தோடு முதலாம் இடைவேளையும்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 19யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 19

காலை 6 மணிக்கு ஹொஸ்டலின் முன் கார் வந்து நின்றது. வார்டன் அறைக் கதவைத் தட்ட, ஒருவரும் விழிக்காமல் தூங்கினர்.   “மீரா” என்று பலமாகத் தட்ட அதில் விழித்த கிறு, அறைக் கதவை திறக்க வார்டன் கார் வந்திருப்பதாகக் கூறி