Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 43

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 43

நிலவு 43

 

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு கண்விழித்த கிறு தான் முதலில் வீட்டில் இருப்பதைக் கண்டு திகைத்தவள், பின் நடந்தது நினைவுர கண்ணீர் வடிந்தது. ஆரவ் அவளைப் பார்ப்பதற்கு வந்தவன்,

 

“இப்போ எதுக்கு அழற?” என்று கேட்க,

 

“நான் அப்படி பட்ட பொண்ணு..” என்று கூறும் போது,

 

அவள் இதழில் கைவைத்தவன் 

 

“அடுத்தவங்க ஆயிரம் பேசுவாங்க, அதையெல்லாம் நீ தலையில் போட்டன்னா நம்மளால வாழ முடியாது கிறுஸ்தி. உன்னை பற்றி எனக்கு நல்லாவே தெரியும். அவங்க சொன்னதுக்காக நான் உன்னை தப்பா நினைக்க போறது இல்லை. நீ, நான் தப்பா நினைக்க போறேன்னு நினைச்சா, நீ அவளோ தான் என்னை புரிஞ்சிக்கிட்டதுன்னு அர்த்தம்” என்றான் கவலையாக.

 

“சொரி கண்ணா நான் இதெல்லாம் இனி தலையில் போட்டுக்க மாட்டேன். ஒரு காதால் கேட்டு மற்றைய காதால் வெளிய விட்ருவேன். புரொமிஸ்” என்றான்.

 

“அப்போ நீ பழையபடி இருப்பியா?” என்று கேட்க,

 

“நான் இந்த சம்பவத்தை மறக்குற வரைக்கும், என்னால பழையபடி இருக்கமுடியுமான்னு தெரியல்லை. கண்டிப்பா நிகாரிகாவுக்கு தண்டனையை நானே கொடுப்பேன். இரண்டாவது நான் இனிமேல் உன் ஆபிசிற்கு வர மாட்டேன். டெல்லியில் இருக்கிற எங்க கம்பனி பிரான்ச் எம்.டியா சார்ஜ் எடுத்துக்க போறேன்” என்றாள் தீர்க்கமான குரலில்

 

“உன்னால எல்லாத்தையும் பேஸ் நம்பிக்கை இப்போ இருக்குன்னு நினைக்கிறேன். ஐ வில் சபோர்ட் யூ ஆல்வேய்ஸ், கிவ் யூவர் பெஸ்ட்” என்றான்.

 

“தேங்க் யூ ஆமா, எதுக்கு நீ என்னை காதலிச்சி தான் கல்யாணம் பன்னன்னு பொய் சொன்ன?” என்று கேட்க,

 

“நான் பொய் சொல்ல இல்லை கண்ணம்மா. உண்மையை தான் சொன்னேன்” என்றான். இப்போது அதிர்வது கிறுவின் முறையானது.

 

“என்ன சொல்ற? நீ எப்போ என்னை காதலிச்ச?” என்று கேட்க,

 

“ஒன்பது வருஷமா உன்னை காதலிக்கிறேன்” என்றான்.

 

“என்ன ஒன்பது வருஷமா? நாம பார்த்ததே ஐந்து வருஷமா தான்” என்றாள் நம்பாத குரலில்.

 

“கண்ணம்மா, உனக்கு எல்லாதையும் விளக்கி சொல்றேன் முதல்ல நீ என் ஆபிஸ் ரூமிற்கு வா” என்று கை பிடித்து அழைத்துச் சென்றான்.

 

அதில் ஒரு ஆளுயர புகைபடம் மாட்டப்பட்டு இருந்தது. 

 

“இந்த போடா, இது என் கிட்ட கூட இல்லையே” என்றாள்.

 

“இந்த போடோ என் கிட்ட மட்டும் தான் இருக்கு. நீ முதன் முதலாக தாவணி கட்டினப்ப எடுத்த போடோ, அதை விட தெளிவா சொல்லனும்னா நம்ம கல்யாணம் நடந்த நாள் எடுத்த போடோ, அதுவும் நீ வீட்டு படியில் இறங்கி வரும் போது எல்லாரும் உன்னை பார்த்தூட்டு இருந்தப்போ எடுத்த போடோ” என்று கண்ணடித்தான்.

 

அதில் தடுமாறியவள்,”நீ எப்படி ஒன்பது வருஷமா என்னை காதலிச்ச?” என்று கேட்க,

 

அங்கிருந்த ஒரு கதிரையில் அமர்ந்தவன், அவளை மடியில் அமரத்தி இடையோடு கட்டிக் கொண்டான். அவள் நெளிய அதை இரசித்தவன், 

 

“உங்க அண்ணனை மீட் பன்னி பிரன்ஸ் ஆனபோ உன்னை பத்தி சொல்லுவாங்க மூன்று பேரும். யேன்னு தெரியாது உன்னை பார்க்க ஆர்வமா இருக்கும். நான் உன் கூட பேசினால் நீ எப்படி என் கூட பேசுவன்னு நான் கனவுல பேசுவேன். இப்படியே நான் கொலேஜ் போகும் வரைக்கும் உன்னை பார்க்கமலேயே உன் மேலே ஒரு ஈர்ப்பு வந்திருச்சு. 

 

என் பதினெட்டு வயசுல தான் உன் குரலை முதன் முதலா கேட்டேன். நீ அவங்க மூன்று பேரோட பேசும் போது. அந்த குரல் என் மனசுல ஆழமா பதிஞ்சிரிச்சு. அவனுங்க கூட நீ சண்டை போடும் போது நான் பார்த்து சிரிச்சிட்டு இருப்பேன். அதற்கு அடுத்த நாள் நான் கோலேஜ் போனப்போ எனக்கு யாரு பேசினாலும் உன் குரல் போல தான் இருந்தது. அப்போ எனக்கு ஒரு பொண்ணு புரொபோஸ் பன்னா. 

 

அந்த நேரம் நீ எனக்கு புரொபோஸ் பன்னா எப்படி இருக்கும்? உன் குரல் இதை விட அழகா இருக்குமேன்னு நான் நினைக்கும் போது தான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்னு புரிஞ்சுது. அவளுக்கு புரியும் படி சொல்லிட்டு நான் தனியா போய் உட்கார்ந்து யோசிக்கும் போது எனக்கே அதிசயமா இருந்தது. ஒரு குரலை மட்டும் வச்சு ஒரு பொண்ணை லவ் பன்ன முடியுமான்னு. நீ கியூட்டா இருப்பன்னு இவனுங்க சொல்லி இருந்தாங்க.

 

குரலை வச்சே நான் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன், உன்னை ஒரு தடவை பார்த்தேன்னா கண்டிப்பா பிளெட் ஆயாருவேன்னு தான் உன் வீட்டு பக்கமே வர இல்லை. எனக்கு எப்போ கஷ்டம் வந்தாலும் உன்னை தான் தேடுவேன். உன் குரல் தான் எனக்கு ஆறுதல். மனசை ஒரு நிலைப்படுத்தி ஐந்து வருஷத்துக்கு முன்னாடி உன் வீட்டிற்கு வந்தேன்.

 

உன்ன பார்த்த செக்கனே நான் காலி.  உன்னை மறக்கனும், நீ என்னை விட்டு தூரமா இருக்கனுமனா தான் கோபமா இருந்தேன். நீ என்னை உரிமையா டா போட்டு பேசும் போதும் சரி, பனை மரம்னு சொல்லும் போதும் கூட அவளோ சந்தோஷமா இருந்தது. நீ சிம்பளா டிரஸ் பன்றது எனக்கு ரொம்ப புடிக்கும். நாங்க பிரன்ஸ் சேர்ந்து கோயிலுக்கு போனப்போ உன்னை நான் சைட் அடிச்சிட்டு தான் இருந்தேன்.

 

அப்பொறமா நீ அந்த கல்லுமேல தனியா உட்கார்ந்து இருக்கும் போது நான் உன் பக்கம் வந்தப்போ என் ஹக் பன்னப்போ நீ எனக்கானவ தான்னு என் மனசு சொல்லிச்சு. நீ மேல இருந்து கீழ விழ பார்த்தப்போ என் உயிரோ போயிட்டு திரும்ப வந்தது போல தான் இருந்தது. அதான் அடிச்சுட்டேன். அப்போ தான் உன்னை விட்டு என்னால வாழ முடியாதுன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். நீ படிச்சு முடிஞ்சதுக்கு அப்பொறமா உன்னை வீட்டுல பேசி நான் கல்யாணம் பன்னுமனு நினைச்சேன்.

 

எனக்கு அப்போ நிறைய குழப்பம் என் பிரன்டுக்கு நான் துரோகம் பன்றேனோன்னு மற்றையது எனக்கு உங்க வீட்டு ஆளுங்க தான் ஹெல்ப் பன்னாங்க. நான் நல்ல நிலைமைக்கு வந்ததுக்கு அப்பொறமா உன்னை பொண்ணு கேட்கலாம்னு இருந்தேன். அவங்க வீட்டு பொண்ணை ஒரு அநாதைக்கு கட்டி கொடுப்பாங்கலான்னு நான் உன்னை விட்டு தூரமாகனும்னு நினைச்சேன்.

 

ஆனால் மகா பூஜை டைம் உன் நெற்றியில அந்த சித்தர் சொன்னது போலவே குங்கும் வச்சேன். எனக்கு அப்போ உன்னை காப்பாற்றனும் அதை தவிற வேறு எதுவுமே என் மைன்ட்டில் ஓடவே இல்லை. வீட்டுக்கு வந்ததுக்கு அப்பொறமா யாரும் எனக்கு சாதகமா பேச இல்லை. அருண் அப்பாவே கோச்சிகிட்டாரு. ஒரு அநாதை என்னால உன்னை நல்லா பாத்துக்க முடியாதுன்னு நினைச்சாங்களோன்னு நினைச்சு தான் போனேன். நீ கூட என்னை ஏத்துக்க மாட்டேன்னு சொன்னால் என்னால் தாங்க முடியாது அதற்காக தான் போனேன்.

 

நான் அங்க போனதுக்கு அப்பொறமா உன்னை நல்லா பாத்துக்குறதுக்கு இரண்டு வருஷமா என்னோட பிஸ்னசை நல்லா முன்னாடி கொண்டு வரனும்னு கஷ்டபட்டு உழைச்சேன். ஆனாலும் உன்னை நான் சந்தோஷமா பார்த்துப்பேனான்னு ஒரு சந்தேகம். என் அப்பா சொன்னது போல் என்னால உனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா அந்த பயம் வந்ததுக்கு அப்பொறமா உன்னை கல்யாணம் பன்னவும் கூடாது, காதலிக்கவும் கூடாதுன்னு முடிவு எடுத்தேன்.

 

அந்த இரண்டு வருஷத்துல தான் உனக்கு நெட்போல் பிரச்சனை வந்து இருக்கு. மூன்றாவது வருஷத்துல இருந்து நீ உன் வீட்டுக்கு போகிற வரைக்கும் உன்னோட ஒவ்வொரு அக்டிவிடியையும் கவனிக்க தனியா டிடெக்டிவ்வச்சி உன்னை வொச் பன்னேன். ஒவ்வொரு நாளும் உன் போடோ எனக்கு வந்து சேரும்” என்று ஒருரெக்கில் இருந்த ஒவ்வொரு பைலையும் எடுத்துக் காட்ட, அவள் சென்ற ஆட்டோ நம்பர் முதல் அதில் அடங்கி இருந்தது.

 

“உன்னோட சேப்டி எப்போவும் முக்கியம்னு நான் என் சார்பாவும் உனக்கு பொர்டிகார்ட்சை நியமிச்சு இருந்தேன். நான் வீட்டுல திரும்ப உன்னை பார்த்ததுக்கு அப்பொறம் தேவதை போல என் முன்னாடி வந்து 

நின்னப்போ உன்னை விட்டுக்கக் கூடாதுன்னு மனசு சொன்னாலும், நீ சந்தோஷமா இருக்கனும்னு தான் அன்றைக்கு வினோவை கல்யாணம் பன்ன சொன்னேன். அப்போ நீ விட்ட அறையில் நான் குழம்பி இருந்தது எல்லாமே தெளிவாச்சு. 

 

நான் இங்க இருந்தப்போ எப்பவுமே ‘கண்ணா என்னை விட்டுட்டு போயிடுவியான்னு’ எப்பவுமே ஒரு குரல் என் கனவுல வரும். ஆனால் அது யாருன்னு கண்டுபிடிக்க முடியல்லை. நீ தான்னு நினைச்சா,நீ அப்போ ஒரு தடவை சரி கண்ணான்னு கூப்பிட்டதே இல்லை. நீ என்னை கண்ணான்னு கூப்பிட்டு மயங்கிய போது தான் அந்த குரலுக்கு சொந்தகாரி நீன்னு தெரிஞ்சுது.

 

நீயும் என்னை காதலிக்கிறன்னு உன் கண்ணை பார்த்து புரிஞ்சுகிட்டேன். அப்பொறம் நானே எதிர்பார்க்காத விதமா தாத்தா கல்யாணத்துக்கு ஏற்பாடு பன்னாரு. என் பொன்டாட்டி என் கிட்டவே வர போறான்னு சந்தோஷமா இருந்தது. கனவில் உன் கூட வாழ்ந்த நாட்களை நிஜத்துலையும் வாழபோறேன்னு அவளோ சந்தோஷமா இருந்தது. எப்போ உன் கழுத்துல தாலி கட்டினேனோ, அப்போ நான் தான் உலகத்தை வென்றவன் போல இருந்தது.

 

உன்னை ஒவ்வொரு முறை பார்க்கும் போது என்னோட பீலிங்சை ரொம்ப கஷ்டபட்டு அடக்கிட்டு இருப்பேன். நான் என் காதலை என் கனவை நனவாக்கிட்டு சொல்லனும்னு நினைச்சேன். இப்போ அதுக்கு முன்னாடியே சொல்ற நிலமையை அந்த லூசு நிகாரிகா உருவாகிட்டா” என்றான்.

 

‘தன்னை இந்த அளவிற்கு காதலித்து இருக்கிறானா?’ என்று நினைக்கும் அவளுள் மகிழ்ச்சி கடல் பொங்கியது. ஆனால் தற்போது அவனுடன் நெருக்கத்தில் இருப்பது அவளுள் ஏதோ செய்ய அவனை விட்டு சற்று தூரம் தள்ளி நின்றாள். அதைப் புரிந்துக் கொண்ட அவள் கள்வன் அவளை அழைத்துக்  கொண்டு வேறு ஒரு அறைக்குச் சென்று அங்கிருந்த ஒரு அலுமாரியைத் திறந்தான். அதில் அத்தனையும் பெண்களுக்கான ஆடைகளே இருந்தன. 

 

குருத்தி, சேலை,தாவணி, சுடி, டெனிம், டொப்ஸ் என பலவகையான ஆடைகள் இருந்தன. மேலும் அதற்கு மெச்சாக மெல்லிய நகைகள் கூட காணப்பட்டன.

 

“இது…” என்று கிறு கூற

 

“உனக்கா நான் வாங்கினது. நான் உன்னை மிஸ் பன்றேன்னு நினைக்கும் போதெல்லாம் இப்படி ஒவ்வொரு டிரஸ் வாங்கி வச்சிருவேன்” என்றான்.

 

அவள் அதிர்ச்சியாக அவனைப் பார்க்க, அவளைக் கைபிடித்து அருகில் இழுத்து, அவள் இடையில் கைவைத்து தன்னோடு அணைத்துக் கொண்டான். அவள் முகத்திற்கு நேராக தன் முகத்தை கொண்டுவந்தவன், அவள் கண்களோடு தன் கண்களை கலக்கவிட்டான்.

 

“என் உடம்பில் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உன்னை காதலிச்சிட்டே இருப்பேன், என்னோட உயிருக்கும் அதிகமா உன்னை நேசிப்பேன், ஐ லவ் யூ கண்ணம்மா ” என்று அவள் ரோஜா இதழ்களை மென்மையாக சிறைபிடித்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 22யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 22

வீடு வரை மயங்கிய கிறுவை அஸ்வின் கையில் ஏந்தி வந்தான். வீட்டில் உள்ளவர்கள் கிறுவின் நிலையைக் கண்டு பதறினர். அஸ்வின் அவள் சாதாரண மயக்கத்தில் இருப்பதாகக் கூறவே மற்றவர்கள் நிம்மதியடைந்தனர். அஸ்வின் கிறுவை அவளது அறையில் விட்டான். மீரா அவளுடன் இருக்க,

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 68யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 68

நிலவு 68   அடுத்த நாள் காலையில் கிறு எழமால் இருக்க ஆரவ் அவள் அருகில் வந்தான்.   “கிறுஸ்தி பாருடி பத்து மணியாச்சு எந்திரி” என்று ஆரவ் கூற   “கண்ணா என்னால் முடியல்லை டா, ரொம்ப டயர்டா இருக்கு”

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 26யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 26

நிலவு 26   நேரம் செல்ல அரவிந் ஆரவ்விடம் கிறுவை வீட்டிற்கு அழைத்துவறுமாறு கூறினார். அவனும் அவர் பேச்சைத் தட்ட முடியாமல் அவளைத் தன் கையில் ஏந்தி காரிற்குச் சென்று, அவளை காரில் அமர வைத்து தானும் அமர்ந்து அவளை தன்னோடு