Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 26

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 26

நிலவு 26

 

நேரம் செல்ல அரவிந் ஆரவ்விடம் கிறுவை வீட்டிற்கு அழைத்துவறுமாறு கூறினார். அவனும் அவர் பேச்சைத் தட்ட முடியாமல் அவளைத் தன் கையில் ஏந்தி காரிற்குச் சென்று, அவளை காரில் அமர வைத்து தானும் அமர்ந்து அவளை தன்னோடு சாய்த்துக் கொண்டான். மற்றவர்கள் அனைவருமே அவனைத் தொடர்ந்து கார்களில் ஏறி வீட்டிற்குச் சென்றனர். ஆரவே காரில் இருந்து அவளை கையில் ஏந்தி சோபாவில் கிடத்தி தனியாகச் சென்று நின்றான்.

 

மற்றவர்கள் அனைவரும் வீட்டிற்கு ஆஜராகினார்கள். ஒருவருமே எதையும் பேசாமல் கிறு மயக்கம் தெளியும் வரை இருந்தார்கள். சிறிது நேரத்தில் கண்விழித்தவள் அனைவரையும் எழுந்து பார்க்க, அவர்களின் முகபாவனைகளை வைத்தே ஏதோ தவறு நடந்து இருப்பதை யூகித்தாள்.

 

கிறு, “அம்மா என்னாச்சு? எதுக்கு எல்லோரும் இப்படி இருக்கிங்க?” என்று  கேட்க, 

 

அருணாச்சலம் அவருடைய மொபைலில் செல்பி கெமராவை எடுத்து அவளிடம் வழங்க அவள் திகைத்து தன் தாய், தந்தையரை நோக்கினாள்.

 

“அம்மா என்ன இது? என் நெற்றி வகுட்டுல எப்படி குங்குமம் வந்தது?” என்று கேட்க, அந்தத் தாய் அமைதியாய் இருந்தார்.

 

“இந்துமா, நீங்களாவது சொல்லுங்களே” என்று கண்ணீர் வடிக்க, அவள் மயங்கியது முதல் இங்கு அழைத்து வரும் வரை நடந்ததைக் கூறினார்.

 

கிறுவோ அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டாள். தனக்கு தன் தமையனின் நண்பனுடன் திருமணம் முடிந்துவிட்டது என்று. அவள் அதே இடத்தில் கீழே “தொப்” என்று விழுந்தாள். 

 

“கிறு” என்று அனைவரும் பதற அவள் தன் கைகளைக் காட்டுவதன் மூலம் அனைவரையும் நிறுத்தினாள்.

 

அவள் ஆரவைப் பார்க்க, அவன் தற்போது இவள் அருகில் வர முடியாமல் தவித்தையும், அவளை ஏறிட முடியாமல் தலைகுனிந்து இருப்பதையும் பார்த்து நேரடியாக தன் தாத்தாவின் அருகில் சென்றாள்.

 

“தாத்தா நீங்க அமைதியா இருக்கிறதை பார்த்தால் ஏதோ ஒரு முடிவு எடுத்து இருக்கிங்கன்னு புரியிது. என்ன முடிவு எடுத்து இருக்கிங்க?” என்று தெளிவான குரலில் கேட்க, மற்றவர்கள் அவளையே பார்த்தனர்.

 

தாத்தா, “இதில்  முடிவு எடுக்குறதுக்கு எதுவும் இல்லை. ஆரவ் தான் இந்த வீட்டோட மாப்பிள்ளை. அவன் தான் உன் புருஷன்” என்றார். இதைக் கேட்ட அருணாச்சலமோ கொதித்து எழுந்துவிட்டார்.

 

” அதை எப்படி நீங்க முடிவு எடுப்பிங்க மாமா? கிறுஸ்திக்கும் வினோவுக்கும் கல்யாணம் பன்னலாம்னு சின்ன வயசுலையே முடிவு பன்னது தானே. திடீர்னு ஒருத்தன் வந்து அவளோட நெற்றியில குங்குமம் வச்சிட்டா அவளோட புருஷன் ஆகிறுவானா? அப்போ என் புள்ளைக்கு என்ன பதில் சொல்ல போறிங்க? ” என்று கேட்க,

 

“அதான் பா சித்தர் சொன்னாரே இவன் தான் கிறுவோட புருஷன்னு. நம்மளால் என்ன பன்ன முடியும்? நான் உன் கிட்ட அப்படி ஒரு வாக்கை தரவே இல்லையே அஸ்வினுக்கு தான் மீரான்னு தானே சின்ன வயசுலேயே பேசி வச்சோம்” என்று தாத்தா கூற 

 

“எல்லோரும் சேர்ந்து என்னை ஏமாத்த பார்க்குறிங்களா? அரவிந் கிட்ட நான் இதைப் பற்றி பேசி இருக்கேன்” என்று கூற, அனைவரும் அரவிந்தை நோக்கினர்.

 

அவரும் “ஆம்” என்று கூற, 

 

“யாரைக் கேட்டு இந்த முடிவை எடுத்தாய்?” என்று தாத்தா அவரை அறைந்தார்.

 

அனைவரும் அதிர்ச்சியாக இருவரையும் பார்த்தனர்.

 

“இந்த அளவுக்கு பெரிய முடிவை எடுக்குறதுக்கு உனக்கு யாரு அதிகாரம் கொடுத்தா? நான் என்ன செத்தா போயிட்டேன். ஒரு வார்த்தை என் கிட்ட கேட்கனும் தோன இல்லையா?” என்று கத்த,

 

“மன்னிச்சிருங்க பா” என்றார் அரவிந். 

 

“மாப்பிள்ளை இங்க பாருங்க நடந்தது  நடந்திருச்சு, அதனால் அதை விட்டுடலாம்” என்று தாத்தா கூற

 

“என்னால முடியாது மாமா. உங்க யாராலையும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியல்லை. இதே மாதிரி என் பொண்ணுக்கும் பன்ன மாட்டிங்கன்னு என்ன நிச்சயம்?” என்று கூற,

 

“மாப்பிள்ளை என்ன பேசுறிங்க” ராம் கேட்க,

 

“என்னங்க எதுக்கு இப்படி எல்லாம் பேசுறிங்க, அஸ்வின் மீரா விஷயத்தை எதுக்கு இதோட முடிச்சு போடுறிங்க?” என்று தேவி கேட்க,

 

“வாயை மூடு தேவி” என்று கத்தினார் அருணாச்சலம்.

 

இது வரை சிறிய விடயத்திற்கேனும் அதட்டாமல் இருந்த தன் கணவர் இன்று தன் மீது கோபப்படுவதை அவரால் ஏற்கமுடியவில்லை.

 

“இவங்க யாருக்கு எனக்கு பன்னி கொடுத்தை சத்தியத்தை மீறிட்டோமேன்னு ஒரு குற்ற உணர்வே இல்லை. இவங்க யாரும் என்னை அவங்க குடும்பத்தில் ஒருத்தனா பார்க்கவே இல்லை. நான் தான் இவங்க தான் என் குடும்பம், இவங்க தான் என் சொந்தம்னு வாழ்ந்துட்டு இருந்திருக்கேன். என்னை சொல்லனும் இவங்க மேலே நம்பிக்கை வச்சிருந்தேன் பாரு. இன்றைக்கு என் பையனுக்கு இந்த நிலமை என்றால் நாளைக்கு என் பொண்ணுக்கும் இதே நிலமை தான்” என்று கண்ணீரைத் துடைத்தார்.

 

“இப்போ சொல்றேன், நல்லா கேட்டுக்கங்க, இப்போ உங்க வீட்டு புது மாப்பிள்ளைய தலையில் தூக்கி வச்சு  கொண்டாடுங்க. இன்றையோடு இந்த பழைய மாப்பிள்ளைய மறந்துருங்க. இனி உங்களுக்கும் என் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மீராவுக்கும், அஸ்வினுக்கும் கூட எந்த சம்பந்தமும் இல்லை. தேவி போ போய் bag பெக் பன்னு நாம இப்போவே சென்னைக்கு கிளம்புறோம்” என்று கூற தேவி தன் கண்களால் கெஞ்ச,

 

“உனக்கு உன் பொறந்த வீடு வேனுமா? இல்லை உன் புருஷன் வேனுமான்னு நீயே முடிவு பன்னு” என்று கூற,

 

தாத்தா, “தேவி போ போய் தயாராகு” என்றார் அதட்டலாக. 

 

தேவியும் அமைதியாக சென்றார். மற்ற அனைவரும் நடக்கும் தொடர் அதிர்ச்சியிலேயே இருந்தனர். மீராவோ அஸ்வினை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவன் அதிர்ச்சியில் இருந்ததால் எதையுமே கவனிக்கும் நிலையில் இருக்கவில்லை. 

 

அதற்கிடையில் ஆரவ் பேகுடன்  அனைவர் முன்னிலையிலும் நின்றான்.

 

“தாத்தா நான் டில்லிக்கு கிளம்புறேன்” என்று வெளியேறும் போது திரும்பி கிறுவை ஒரு முறைப் பார்த்து விட்டு வெளியேறினான். 

 

அப்போது கிறுவை முழுமையாக தன் கண்களில் நிரப்பிக் கொண்டான். இவை அனைத்தும் நொடிப் பொழுதில் நடந்தால் ஒருவருக்கும் ஆரவை தடுக்க வழியில்லாமல் போனது.

 

சிறிது நேரத்தில் தேவியும் தன் பைகளுடன் நிற்க, அருண் மீராவின் கைகளை பற்றி இழுத்துக் கொண்டு வெளியேறினார். அவள் போகும் போது அஸ்வினைப் பார்த்துக் கொண்டே சென்றாள். 

 

அஸ்வின் ‘நடப்பது அனைத்தும் கனவா?’ என்று பார்த்தான். 

 

கிறுவோ ‘ஆறுதல் தருவதற்கு தோழியும் இல்லாமல் தன்னைத் தேற்ற தன் கணவனும் இல்லையே’ என்று நினைத்து கண்ணீர் வடிக்க அறைக்குள் ஓடி கதவை மூடிக் கொண்டாள்.

 

ஜீவி, தர்ஷூ, அவர்கள் குடும்பத்தினர், மாதேஷ், கவின் அனைவரும் அவர்களுக்கு ஆறுதல் கூறி சென்னையை நோக்கி பயணப்பட்டனர். 

 

‘அருணாச்சலத்தின் கோபம் சில நாட்களில் குறைந்துவிடும்’ என்று நினைத்த தாத்தாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

 

கிறு பத்தாம் வகுப்பு இறுதிப் பரீட்சை முடிந்தவுடன் சென்னையில் இருந்து பெங்களூரை நோக்கி பயணித்து ஐந்து வருடங்களாக யாரும் இல்லாமல் தனியாக வாழ்ந்தாள். அவளுடைய பாதுகாப்பிற்காக கார்ட்ஸ் மட்டுமே இருந்தனர். 

 

அஸ்வின் தன்னவளைப் பிரிந்து விட்ட கவலையில் இருக்க , மும்பையில் சென்று அங்குள்ள அவர்களது கம்பனியின் கிளையை கவனித்தான். 

 

ஆரவ் டில்லியில் தனது தொழிலைக் கவனித்து பாரியளவு வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டான். 

 

மீரா ப்ளஸ் டூ எக்சாமை சென்னையில் எழுதி, பூனேயில் உள்ள கோலேஜில் சேர்ந்துப் படித்தாள்.

 

இதற்கிடையில் மாதேஷ், தர்ஷூ திருமணம் நிகழ அனைவரையும் ஒன்று சேர்பதற்காக அழைத்தும் ஒருவருமே அதில் கலந்துக் கொள்ளவில்லை. கவின், ஜீவி திருமணத்திற்கு அழைத்தும் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. 

 

இந்த ஐந்து வருடங்களில் நண்பர்கள் நால்வருமே பேசிக் கொள்ளவில்லை. அதில் அஸ்வின், ஆரவ் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை.

 

ஆரவ் ‘அஸ்வின், கிறுஸ்தி, அவர்கள் குடும்பத்தினர் கோபத்தில் இருப்பதாக’ நினைத்திருந்தான். 

 

அஸ்வின் ‘ஆரவுடன் எவ்வாறு பேசுவது? அன்று நான் அவனுக்கு ஆதரவாக பேசவில்லையே என்று கோபத்தில் இருப்பான்’ என்று நினைத்து இருந்தான். 

 

கிறு, மீரா இருவருமே எதுவென்று கூற முடியா மனநிலையில் இருந்தனர்.

 

இந்த ஐந்து வருடங்களில் பூஜைக்காக தேவியின் குடும்பத்தினரை அழைக்கத் தவறவில்லை. ஆனாலும் அவர்கள் எதிலும் கலந்துக் கொள்ளவில்லை. அதே போல் பிள்ளைகளையும் அழைக்க அவர்களும் இந்த ஐந்து வருடங்களில் ஒரு முறையேனும் ஊரிற்கு வரவேயில்லை………….

 

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த கிறு, ஆரவ் தன்னிலையை அடைந்தனர். கிறு வேகமாக வெளியே கார்டனிற்கு வந்தாள். ஏனோ அவளால் கண்களில் சுரக்கும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

 

‘அன்று ஆரவ் தன்னருகில் இருந்து ஆறுதல் கூறியிருக்கலாம் இல்லை நான் உனக்காக இருக்கிறேன் என்றாவது கூறியிருக்கலாமே. எதுவுமே நடக்காதது போன்று சென்று விட்டானே’ என்று அவள் மனம் கூறியது.

 

தூரத்தில் இருந்து பார்த்த ஆரவிற்கு அன்று கிறுவைத் தனியாக விட்டுச் சென்றது மிகப் பெரிய தவறு என்று புரிந்தது. அவள் அருகில் செல்லப் போக தாத்தாவின் குரலில் நின்றான்.

 

தாத்தா “ஆரவ் இங்க வா” என்று கூற அவனும் சென்றான். 

 

அங்கே பெரியவர்கள் அனைவரும் இருந்தனர் அதாவது கிறுவைத் தவிற அனைவருமே இருந்தனர். 

 

“நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன். மகா பூஜை நடக்குற அதே தினத்துல பூஜை நடக்குறதுக்கு முன்னாடி காலை ஆறு முப்பதுக்கு உனக்கும் கிறுஸ்திக்கும் சாஸ்திர, சம்ரதாய முறைப்படி கல்யாணம் பன்னலாம்னு முடிவு எடுத்து இருக்கேன். இதில் உனக்கு சம்மதமா?” என்றார்.

 

“தாத்தா பெரியவங்க நீங்க என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் தான். என்னை பற்றி யோசிக்க உங்க எல்லோரையும் தவிற எனக்கு வேறு யாரும் இல்லை” எனக் கூற, அனைவருமே கவலை அடைந்தனர்.

 

“என் மகன் ஆரவுக்கும், என் மருமகள் கிறுஸ்திகாவுக்கும் நான் முன்னாடி நின்று கல்யாணத்தை நடத்துகிறேன். ஆரவ் உனக்கு அப்பா, அம்மா நாங்க இருக்கோம்” என்றார் அருணாச்சலம். 

 

அனைரின் மனதும் இன்பத்திலும், நிம்மதியிலும் நிறைந்து இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 35யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 35

நிலவு 35   “நிறுத்துங்க” என்ற கர்ஜிக்கும் குரல் கேட்டது.   ஆரவ் அனைவரின் முன்னிலையில் ருத்ரமூர்த்தியாக நின்று இருந்தான்.    ” என்னை பார்த்தால் இப்போவும் ஏமாளி போல இருக்கா? உங்க நடிப்பு எல்லாம் என் கிட்ட காட்டாதிங்க” என்றான்.

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 2யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 2

நிலவு 2   வினோவும், தேவியும் அங்கிருந்து சென்ற பிறகு, அப்படியே கதிரையில் அமர்ந்தார் அருணாச்சலம்.    ‘என் மகன் வளர்ந்து விட்டானா? எனக்கு அறிவுரை கூறும் அளவிற்கா? நான் அனைவரின் சந்தோஷத்திற்கும், நிம்மதிக்கும் குறுக்காக இருக்கிறேனா? ஒரு வேளை வினோ

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 17யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 17

கிறு அவளறியாமல் ஆரவின் கையில் சாய்ந்து உறங்க, அதைப் பார்த்த ஆரவின் இதழ்கள் விரிந்தன. அவள் உயரித்திற்கு ஏற்றவாறு அவன் அமர்ந்து அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான் கிறுவின் கண்ணா. அழகான விடியலாக அனைவருக்கும் அன்றைய விடியல் இருந்தது. அஸ்வின்