Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 15

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 15

ஆரவின் கதையைக் கேட்டவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. கிறு கூறமுடியா ஒரு வலியை உணர்ந்தாள்.

 

ராம், “அவன் அப்பா பேர் என்ன?” என்க,

 

“தேவராஜ்” என்றான் அஸ்வின்.

 

“அவங்க கம்பனியோட பெயர்” என்று அரவிந் கேட்க

 

அஸ்வினோ “ஞாபகம் இல்லை” என்றான்.

 

மாதேஷ், சிறிது நேரம் யோசித்து, “CD construction” என்றான்.

 

இதைக் கேட்டு, ராம் மற்றும் அரவிந் அதிர்ந்தனர்.

 

“அஸ்வின் அவங்க நம்ம கம்பனிக்கு கீழே தான் வேலை செய்றாங்க” என்றார் அரவிந்,

 

ராம், “ஆரவை வீட்டே விட்டு எப்போ வெளிய போட்டாங்க?” என்று கேட்டார்.

 

“ஏழு வருஷத்துக்கு முன்னாடி அப்பா” என்றான் அஸ்வின்.

 

“நாம தான் பா அவங்களுக்கு அந்த புரொஜெக்ட கொடுத்தது, யேன்னா அவங்௧ எல்லா புரொஜெக்டையும் ரொம்ப நல்லா பன்னுவாங்க அதான்” என்றார் அரவிந் கவலையாக.

 

அஸ்வின் கோபமடைந்து, “அப்பா அவங்களோட அத்தனை புரொஜெக்ட்சையும் கென்சல் பன்னுங்க” என்றான்.

 

கவின், மாதேஷ் இருவருமே அதை ஏற்றுக் கொண்டனர்.

 

கிறு, “வேனாம்பா அப்படி ஏதும் பன்ன வேனாம்” என்றாள்.

 

“என்னடி லூசு மாதரி பேசுற?” என்று கவின் கோபமாக கேட்க,

 

“இப்போ எதற்காக எல்லோரும் தையாதக்கானு குதிக்கிறிங்க?” என்று அவள் கேட்க,

 

மாதேஷ், “ஆரவோட இந்த நிலமைக்கு காரணமே அவங்க தான், அதற்கு தண்டனை கொடுக்க வேண்டாமா?” என்றான்.

 

“உங்க யாருக்கு அவங்க எதுவும் பன்ன இல்லையே என்ட் இது அன்ஆபிஷியல் எப்படி நீங்க அதை ஆபிஷியலாக எடுத்துப்பிங்க?” என்று கேட்டாள்.

 

வினோ, “சரி இப்ப என்ன பன்னலாம்னு சொல்ற?” என்றான்.

 

“எனக்கு அவங்களை பழி வாங்குறுதை விட, ஆரவை சரி பன்கிறது தான் முக்கியம்” என்றாள்.

 

“நீங்க எல்லோரும் ஒரு அப்பாவா, ஒரு அண்ணனா, ஒரு நண்பனா அவனுக்காக யோசிக்கிறிங்க, அது நல்ல விஷயம் தான் ஆனால் அந்த பனைமரம் அதை புரிஞ்சிக்கிற நிலமையில் இல்லை. அவனுக்கு அவங்களை பழிவாங்கனும் என்றால் அதை எப்பவோ பன்னி இருப்பான். ஆனால் ஆரவ் அதை பன்ன இல்லையே. அவன் அவங்களோட சகவாசமே வேனான்னு நினைக்குறான். நீங்க யாராவது அவனுக்கு நல்லது செய்கிறேன் என்ற பெயரில் ஏதாவது பன்ன போய் அவன் மனசுல உங்களுக்காக வச்சிருக்கிற இடத்தை தாழ்த்திக்க வேணான்னு சொல்றேன்”

 

“அதற்காக அவங்களை நான் சும்மா விட மாட்டேன், என் புருஷனை கஷ்டபடுத்தினதுக்கான தண்டனையை அவன் கையால் தான் கொடுப்பேன்” என்றாள் கிறு தெளிவான தீர்க்கமான முடிவில்.

 

அனைவரும் அவளை இமைக்க மறந்து பாரத்தனர்.

 

“என்ன எல்லோரும் முழிக்கிறிங்க?” என்று கேட்க,

 

“கிருத்தி நீ எவளோ பெரிய ஆள் மாதிரி பேசற தெரியுமா? வாழ்கையில் நிறைய அனுபவத்தை பெற்றவங்க போல பேசினாய்” என்றாள் மீரா.

 

“அடிபோடி காமடி பன்னிக்கிட்டு” என்றாள் கிறு.

 

“சாமி சத்தியம் டி” என்றனர் தர்ஷூ, ஜீவி.

 

வினோ, “கொஞ்ச நேரம் முன்னாடி காளி மாதிரி இருந்த, இப்போ ஒரு அனுபவசாளி போல பேசுற” என்றான். அவள் அவனைப் பார்த்து புன்னகைக்க அஸ்வின்,

 

“கிறு ஆரவ் கன்னத்தில் நீ விட்ட பாரு ஒன்னு அப்பா என்னா அடி” என்றான்.

 

கவின் “அந்த ஹீட் எங்களுக்கே தாவிச்சுன்னா பார்த்துக்கோயேன்” என்றான்.

 

“ஆரவ் உன்னை அடிக்காம விட்டது பெரிய விஷயம்” என்றான் மாதேஷ்.

 

“இல்லை டா அவன் அப்படி பேசும் எனக்கு வந்த கோபத்துல தான் அடிச்சேன், அப்போ எனக்கு எதுவுமே தோனல்ல டா, அவளோ கோபத்துல இருந்தேன்” என்றாள்.

 

“டேய் வெட்டி பேச்சு பேசாம ஆரவ் ரூம்ல தனியா உக்ந்துட்டு இருப்பான், போய் அவனுக்கு கம்பனி கொடுங்க” என்றாள் கிறு.

 

“நீ அவன் தூங்கினதுக்கு அப்பொறம் தானே கீழே வந்தாய்” என்று கவின் கேட்க,

 

“நான் கீழே போறதுக்காக அந்த பனைமரம் தூங்குறது போல நடிச்சான்” என்றாள்.

 

“அப்போவே சொல்ல வேண்டியது தானே, அவன் மட்டும் தனியா உட்கார்ந்துட்டு இருப்பான்” என்றான் மாதேஷ்.

 

“அவனை கொஞ்சம் யோசிக்க விடனும் அதற்காக தான் சொல்லவில்லை” என்றாள் கிறு.

 

“இன்னும் கொஞ்சம் யோசிக்கட்டும்” என்றான் அஸ்வின்.

 

“டேய் ஆரவை யோசிக்கவிடனும் டா ஆனால் அளவுக்கு அதிகமாக யோசிக்க விட்டோம்னா தான் பிடித்த முயலுக்கு மூனு கால்னு பிடிச்ச பிடியில நிப்பான்” என்றாள் கிறு.

 

“அது மட்டும் இல்லை, நீங்க மூனு பேரும் அவன் கூட தான் இன்றைக்கு நைட் தூங்கனும்” என்றாள் மீரா.

 

மாதேஷூம், கவினும் பாவமாக தம் துணைகளைப் பார்க்க,

 

“அங்கே என்ன டா லுக்கு? பேசாம வா” என்றான் அஸ்வின்.

 

“ஒரு நாள் உனக்கும் இதே நிலமை வரும்” என்றனர் இருவரும்.

 

“அதை அப்போ பார்க்கலாம்” என்றான் அஸ்வின்.

 

“டேய் நீ வரவில்லையா?” என்று மாதேஷ் வினோவைப் பாரத்து கேட்க,

 

“நான் எதுக்கு?” என்றான் வினோ.

 

“நாங்க மட்டும் அங்கே மொக்கை போடனும் நீ இவளுங்க கூட இருப்பியா? மரியாதையா வந்துரு” என்றான் கவின்.

 

அஸ்வின், “வாடா மச்சான்” என்று அவனை இழுத்துச் சென்றான் ஆரவின் அறைக்கு.

 

பெரியவர்களும், சிரித்து சற்று நிம்மதியான மனதுடன் அவரவர் அறைகளுக்குச் சென்றனர்.

 

“இப்போ நாம என்னடி பன்றது?” என்று ஜீவி கேட்க

 

“முதலில் ரூமுக்கு போலாம் அங்கே வைத்து ஏதாவது ஐடியா பன்னலாம்” என்றாள் மீரா.

 

“மச்சான்” என்று அறைக்குள் நுழைந்தனர் நால்வரும்.

 

ஆரவ் அவர்களை பாரத்து தன் யோசணையை தொடர்ந்தான்.

 

“எந்த நாட்டை டா பிடிக்க போற” என்று கவின் சீரியசான முகத்துடன் ஆரவைப் பார்த்து கேட்க,

 

மற்ற மூவரும் அவனை பார்த்து விழித்தனர்.

 

“பின்ன என்னடா நாங்க வந்ததுக்கு அப்பொறமாவும் யோசிக்கிறான்” என்றான் கடுப்பாக.

 

“அப்போ நீ காமடி பன்னியாடா” என்று மாதேஷ் கேட்க, மற்ற மூவரும் தலையில் அடித்துக் கொண்டனர்.

 

“கவின் அண்ணா எனக்கு சிரிப்பே வரவில்லை” என்றான் வினோ.

 

மற்ற முவரும் சிரிக்க

 

“வினோ என்னை நீ ரொம்ப அசிங்கபடுத்துறடா” என்றான் கவின்.

 

“அதை விடு டா நம்ம ஆரவைப் பாரு எப்படி செரி மாதரி சிவந்து இருக்கான்” என்றான் அஸ்வின்.

 

“எல்லாம் உன் தங்கச்சியோட கைவண்ணம் டா” என்றான் கவின்.

 

“ரொம்ப பலத்த அடியோ” என்று மாதேஷ் கேட்க,

 

“பாரத்தால் எப்படி இருக்கு?” என்றான் ஆரவ்.

 

“உனக்கு கோவம் வரவில்லையாடா?” என்று கவின் கேட்க,

 

அவனை வினோவும், அஸ்வினும் முறைத்தனர்.

 

“இல்லை டா, என் லைப்பில் முதல் தடவையா நான் அம்மாவ பாத்தது போல இருந்திச்சி டா. அவ கூறியதுலையும் நியாயம்  இருக்கு” என்றான் அமைதியாக.

 

அப்போது கிறு அவனை சிந்திக்க வைத்திற்கான காரணம் புரிந்தது.

 

“மச்சான் நீ ரொம்ப பாவம் டா, கல்யாணத்துக்கு முன்னாடியே அடி இப்படி இருக்கே, கல்யாணத்துக்கு அப்பொறாமா” என்று மாதேஷ் யோசிக்க ஆரவ் சிரித்தான்.

 

“அவளுக்கு அவளோ தைரியம் இல்லை டா என் மேல அவளுக்கு முன்னாடி இருந்த பயம் இன்னும்  இருக்கு, அவ என்னை அடிச்சதுக்கு என்னை விட அவ தான் அதிகமா கவலை பட்டிருப்பா” என்றான்.

 

ஆரவ் கிறுவைப் புரிந்து வைத்திருப்பதை எண்ணி நண்பர்கள் மகிழ்ந்தனர். வினோவும் சேர்ந்து அவர்களுடன் அரட்டை அடித்து, பன்னிரெண்டு மனியளவில் தூங்கச் சென்றான். இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க, அடுத்த அறையில் அவர்கள் நால்வரும் சிரிக்கும் சத்தம் கேட்டது.

 

“பாருடா மத்தவங்க தூங்குறாங்களே, டிஸ்டபனஸ் இல்லாமல் இருக்கனுமே, அந்த எண்ணம் கொஞ்சமாவது அவளுங்களுக்கு இருக்கா?” என்று பொரிந்தான் கவின்.

 

“வாடா போய் பார்க்கலாம் எதுக்கு சிரிக்கிறாளுங்க?” என்று அனைவரும் அடுத்த அறையை நோக்கிச் சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 48யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 48

நிலவு 48   ஆரவின் அருகில் சென்ற கிறு அவன் தோளில் இடித்தாள். அவன் புன்னகையுடன் புருவத்தை உயர்த்தி ‘என்ன’ என்று கேட்டான்.   “என்ன அமைதியா இருக்க? ஹீரோ எங்க என்று கேட்குங்குறாபா?” என்று கண்ணடிக்க   அவள் இடையில்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 32யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 32

  நிலவு 32   “மீரா, இப்போ நீ நிற்க இல்லை, இனிமேல் உன் கூட பேசவே மாட்டேன்” என்று அவள் பின்னே சென்றான் அஸ்வின் அவள் அறைக்கு.   “அச்சு, இது சின்ன குழந்தைகள் பேசுறது போல இருக்குடா” என்று

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 23யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 23

வீடு வரை மயங்கிய கிறுவை அஸ்வின் கையில் ஏந்தி வந்தான். வீட்டில் உள்ளவர்கள் கிறுவின் நிலையைக் கண்டு பதறினர். அஸ்வின் அவள் சாதாரண மயக்கத்தில் இருப்பதாகக் கூறவே மற்றவர்கள் நிம்மதியடைந்தனர். அஸ்வின் கிறுவை அவளது அறையில் விட்டான். மீரா அவளுடன் இருக்க,