Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 8

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 8

நிலவு 8

 

கிறுஸ்தியின் அருகில் கதிரையில்  அமர்ந்து கட்டிலின் ஓரத்தில் ஆரவ் தலைவைத்து உறங்கினான். இவனைப் பாரக்க வந்த நண்பர்கள் விழித்தனர் இதைப் பார்த்து, 

 

மாதேஷ், “இவனை யோசிச்சு ஒரு முடிவு எடுன்னா தூங்கிட்டு இருக்கான்டா” என்றான். 

 

கவின், “அதுவும் கிறுவிற்கு பக்கத்தில் தூங்குறான் டா, கேட்டால் சொல்லுவான் எல்லாரையும் விட்டு தூரமாகனும், தனியா வாழனும், கிறுவை விட்டு தூரமாகனும்னு இவனை என்ன பன்றதுன்னு சொல்லு டா” என்று அறை வாசலில் தீவிரமாக யோசித்தினர்.

 

“டேய் ஆரவ்வை கூப்பிடுறதுக்கு உனக்கு இவளோ நேரமா?” என்று அங்கு வந்தான் அஸ்வின். 

 

“என்ன என் முகத்த பார்த்துட்டு இருக்கிங்க?” என்க, 

 

“அங்க பாருடா” என்றனர் மாதேஷ், கவின். 

 

உள்ளே பாரத்தவனின் முகத்தில் புன்னகை பூத்தது. 

 

“மச்சான் இதை ஒரு போடோ எடுக்கலாம், எப்போவாவது ஒரு தடவை தேவைபடும்” என்றான் கவின். 

 

அஸ்வின், மாதேஷ் இருவரும் ஒப்பு கொண்டு அவர்களை போடோ எடுத்தனர். 

 

“சரி வாங்க டா அவன் டயர்டில் தூங்குறான் அப்பொறமா வந்து எழுப்பி விடலாம்” என்றான் அஸ்வின்.

 

மீராவோ அஸ்வின் அவ்வாறு கூறியதில் இருந்து அஸ்வினைப் பார்ப்பதையும், அவன் முன் செல்வதையும் தவிர்த்தாள். அவளுக்கு அவனை ஏறிட தயக்கமாக இருந்தது. 

 

இதை கவனித்த ஜீவி, தர்ஷூ “என்ன மெடம் பம்முறிங்க?” என்க, 

 

“நானா யாரு சொன்னது?” என்றாள் மீரா. 

 

தர்ஷூ “நீ எதுக்காக அஸ்வினைப் பார்த்த உடனே ஓடுற?” என்று கேட்க, 

 

“சே சே அப்படியெல்லாம் எதுவும் இல்லையே, அம்மா இதோ வரேன்” என்று கூப்பிடாத அம்மா அழைத்தார் என்று அவர்களிடம் இருந்து நழுவிச் சென்றாள் மீரா.

 

“மச்சி இவ போக்கே சரியில்லை. அஸ்வின் கூட பேசவும் மாட்டேங்குறா, அவன் முன்னாடி போகவும் மாட்டேங்குறா” என்றாள் தர்ஷூ. 

 

“எனக்கு அஸ்வினை நினைத்தால் தான் கவலையா இருக்கு, பழைய மாதிரியே மீராவும் அஸ்வினும் ஒன்னு சேந்துட்டாங்கன்னா சரி” என்றாள் ஜீவி. 

 

ஆரவிற்காக காபியை எடுத்து கிறுவின் அறைக்குச் சென்ற தேவி, இருவரும் உறங்குவதைக் கண்டு, காபியை அருகில் உள்ள டேபளில் வைத்து விட்டு புன்னகையுடன் சென்றார். கிச்சனிற்கு சென்று தன் அண்ணியர்களிடம் அவர் பார்த்ததை கூற, இருவருக்கும் ஒரளவு மனம் நிம்மதி அடைந்தது. 

 

முதலில் கண் விழித்த ஆரவ் கிறுவின் அருகில் உறங்கியதையும், அவளின் கைகளை இன்னும் பிடித்திருப்பதை பார்த்ததும் இவனுக்கே அதிர்ச்சி. 

 

‘சே நான் என்ன வேலை பன்னி இருக்கேன்? அவளோட கையும் வலிச்சிருக்கும், யாராவது இதை பாத்திருந்தா என்னை பற்றி என்னை நினைத்திருப்பாங்க. நல்ல வேளை எல்லாரும் எனக்கு யோசிக்க டைம் கொடுத்ததால் வரவில்லை. வந்திருந்தால்?’ என நினைக்கும் போதே அவனுக்கு சங்கடமாக இருந்தது. 

 

‘கிறுஸ்தி எனக்கு முன்னாடி எந்திரிச்சி இருந்தால், நான் அவளோட கைய பிடிச்சதைப் பார்த்து என்னைப் பற்றி தப்பா தான் நினைச்சிருப்பா. நல்ல வேளை நான் முன்னாடி எந்திரிச்சிட்டேன்’ என்று அவளுடைய மென்மையான கையை விடுவித்து, அவள் தலையை தடவி அறையை விட்டு வெளியேறினான் அவசரமாக.

 

அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று குளித்து விட்டு வெளியே வந்தான். கிறுஸ்தியின் அறையில் இருந்து பேச்சுச் சத்தம் வருவதைக் கண்டவன் அங்கே தயங்கிச் சென்றான். அவளருகில் அவளது குடும்பம் முழுவதும் அமர்ந்திருந்தது. அதாவது, ஆரவைத் தவிற அனைவருமே அவ் அறையில் இருந்தனர். கிறுஸ்தி, வினோவுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். ஆரவைக் கண்டவள் அமைதியானாள். அப்போதே மற்றவர்களும் ஆரவ் இவ்வறைக்கு வந்திருப்பதைக் கண்டனர். 

 

வினோ, “ஆரவ் அண்ணா உள்ள வாங்க” என்றான்.

 

ஏனோ, ஆரவிற்கு கிறுஸ்தி வினோவுடன் சிரித்துப் பேசியதும், அவனைக் கண்டவுடன் அமைதி காத்ததையும் பார்த்து வினோவின் மேல் கொஞ்சம் பொறாமை எழுந்தது. அவனே அறியவில்லை அது ஏன் என்று. கிறுஸ்தி அமைதியாய் இருப்பதை பார்த்தவன் ‘தான் வந்தது இவளுக்கு பிடிக்கவில்லை’ என்று திரும்பி போகும் போது, மற்றவர்கள் தடுக்க நினைக்க, 

 

“எங்க போற ஆரவ்? உள்ள வா” என்று கிறுஸ்தியின் குரல் கேட்டது. 

 

அனைவருக்குமே அவள் பேசியது அதிர்ச்சியே.

 

அவனுக்கு ‘தான் தவறாக ஏதாவது கேட்டுவிட்டேனா’ என்று மற்றவர்களைப் பார்க்க, அவர்களின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைக் கொண்டே உண்மை என்று அறிந்தான். 

 

மீண்டும் அவளைப் பார்க்க, 

 

“என்ன மிஸ்டர் ஆரவ் பூமாலை போட்டு வரவேற்றால் தான் உள்ள வருவிங்களா?” என்று நக்கலாக கேட்டாள் கிறு. 

 

ஆரவுடன் கிறுஸ்தி சகஜமாக பேசியதைக் கண்டு அனைவருக்கும் அதிர்ச்சி ஒரு புறம் இருந்தாலும் சந்தோஷமும் குடி கொண்டது. தாத்தா அனைத்தையும் பார்த்து மனதில் குறித்துக் கொண்டார்.

 

அமைதியாக உள்ளே வந்தவன் அவளைப் பார்த்தே நின்றான். இவளும் அவனையே பாரத்தாள். தான் பேசியது ஆரவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது என்பதை அவன் முகப்பாவனையை வைத்தே கண்டுக் கொண்டாள். அவளை மலங்க மலங்க விழித்து பாரத்த ஆரவைப் பார்த்தவளுக்கு எழுந்த சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டாள்.

 

வினோவிடம் திரும்பி, “வினோ எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வருகிறாயா? எனக்கு பசிக்குது” என்றாள். 

 

“அதானே பார்த்தேன், என்னடா சொரணாக்கா இன்னும் பீமனா மாற இல்லைன்னு” என்றான் வினோ.

 

“வெட்டிப் பேச்சு பேசாம போய் சாப்பிட ஏதாவது கொண்டு வா” என்றாள் கிறு. 

 

அவன் எழுந்து செல்லும் போது வீட்டின் மூத்த பெண்கள் அனைவருக்கும் இரவு உணவை எடுத்து வைப்பாதாகவும், கீழே வருமாறும் கூறிச் சென்றனர். அனைவருமே சாப்பிட கீழே சென்றனர் ஆரவையும் கிறுவையும் தவிற. 

 

“என்ன ஆரவ் என் கூட பேச இவளோ தயங்குற?” என்றாள் கிறுஸ்திகா. 

 

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, 

 

“ஆரவ் கட்டிலில் வந்து உட்காரு” என்றாள். 

 

அவனும் அமர்ந்து மீண்டும் அவளையே பார்க்க, 

 

“என் முகத்துல ஏதாவது படம் ஓடுதா?” என்றாள் சீரியசாக.

 

‘இல்லை’ என்று அவன் தலையாட்ட, 

 

“டேய் பனைமரம் நீ பேசினால் உன் வாயில் முத்தா கொட்டிடும்? ஊமை மாதிரி பேசாம இருக்க” என்றாள் கோபமாக. 

 

பனைமரம் என்று கூறியதற்கு கோபம் கொண்டவன், 

 

“எதற்கு இப்போ பனைமரம்னு சொன்ன?” என்று அவன் கேட்க, 

 

“இந்த பெயரை நான் இப்போ முதன்முதலா சொல்ல இல்லை ஆரவ்,என்ட் நீ பனை மரம் மாதிரி உயரமா இருக்க அதனால் தான் சொன்னேன்” என்றாள். 

 

“வெளியில் நீ நிறைய மாறி இருந்தாலும் உன் வாயும், குணமும் இன்னும் மாறாமல் அதே போல் தான் இருக்கு” என்றான்.

 

அவள் சிரித்து, “நான் எப்பவுமே மாறமாட்டேன். இதே போல் தான் இருப்பேன்” என்று கூறினாள் கிறுஸ்திகா, 

 

அவள் சிரித்ததில் தன்னை தொலைத்து இருந்தான் அவன். 

 

“என்ன ஆரவ் அப்படி பார்க்குற?” என்க, 

 

“ஒன்னும் இல்லை” என்று அமைதியானான். 

 

“நீ என்கிட்ட ஏதோ பேச நினைக்குறன்னு புரியுது, தைரியமா சொல்லு ஆரவ்” என்றாள். 

 

அவன்,”கிறுஸ்தி அது..” என்று தடுமாற, 

 

“சொல்லு” என்றாள் அவள். 

 

“ஐந்து வருஷத்துக்கு முன்னாடி” என அவன் ஆரம்பிக்கும் போதே 

 

“நிறுத்து” என்றாள் அவள்.

 

“இதோ பாரு ஆரவ், நடந்தைப் பற்றி நான் பேச விரும்பவில்லை, நாம எல்லாரும் ஐந்து வருஷமா தொலைச்ச சந்தோஷம் திரும்ப கிடைச்சிருக்கு, அதை பழையதை பேசி கெடுக்கவும் நான் விரும்பவில்லை. இருக்கிற பத்து நாளையும் சந்தோஷமா கொண்டாடலாம்” என்று அவள் கூறி எழுந்து செல்லும் போது, 

 

அவள் தாவணிக்கு தடுமாறி விழப்போக அவள் இடைப் பற்றி தன் வலிய கரங்களால் தாங்கினான்.

 

இருவரும் ஒருவரை ஒருவர் காதல் நிறைந்த விழிகளுடன் பார்க்க முதலில் தன்னிலை அடைந்த கிறு நேராக நின்று, 

 

“சொரி” என்று கூறி கீழே சென்றாள். 

 

ஏனோ அவள் கூறியதைக் கேட்டவனுக்கு மனதின் ஓரத்தில் சிறு வலி தோன்றியது. 

 

‘பத்து நாட்களுக்குப் பிறகு தனியாக வாழ வேண்டுமா? அவளை விட்டு நான் செல்ல வேண்டுமா?’ என்று அவன் காதல் மனம் நினைக்க, 

 

‘ஆரவ் நீ ரொம்ப பெரிய தப்பு பன்ற, உன்னால தான் இந்த குடும்பம் இவளோ கஷ்டத்தை அனுபவிச்சு இருக்கு. நீ தனியா தான் உன் கடைசி மூச்சு வரைக்கும் வாழனும். உனக்கு எப்படி அவ மேலே காதல் வரலாம்?  அவ மேலே உனக்கு காதல் வர ஆரம்பிச்சி இருந்ததுன்னா இப்போவே குழி தோண்டி அதை புதைத்திடு’ என்றது இன்னொரு மனது.

 

,அவன் இனிமேல் அவள் மீது காதல் கொள்ள மாட்டேன்’ என்று உறுதி பூண்டான். அம்முடிவை எடுத்து, அவனும் கீழே சென்றான். 

 

அனைவருமே கலகலப்பாக பேசி, இரவு உணவை முடித்தனர். இன்றே இத்தனை வருடங்கள் இழந்த சந்தோஷமும், நிம்மதியும் திரும்பி வந்ததாக தோன்றியது அனைவவருக்கும். 

 

இதில் நான்கு உள்ளங்கள் மட்டும் நிம்மதி இன்றி தவித்துக் கொண்டு இருந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 52யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 52

நிலவு 52   “வா அஜெய் வா யஷூ” என்று ஆரவ் உள்ளே அழைத்துச் சென்றான்.    “ஹாய் காய்ஸ்” என்று உள்ளே வரும் போது,   “வா மா, வா பா” என்று சாவி அழைத்துச் சென்றார்.   அத்தை,

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 37யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 37

நிலவு 37   ஆரவ் ஷ்ரவனையும், கிறுவையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்த இருவரும் மற்றவரைப் பார்த்து அதிர்ந்ததோடு இருவருக்கும் கண்கள் கலங்கிவிட்டன. அதைப் பார்த்த ஆரவ் மென்புன்னகையை வீசினான்.    “ஏ.கே நீ இங்கே எப்படி?” என்று கேட்க,   “அதை நான்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 5யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 5

நிலவு 5   கீழே உருண்டு விழுந்த அஸ்வின் ‘யார் அவன் கையணைப்பில் உள்ளார்’ எனப் பார்த்த போது மீரா கண்கள் சிவக்க அவன் கீழ் விழுந்து இருந்தாள். அவனோ தன்னவள் நெருக்கத்தில் அவளை இரசித்துக் கொண்டிருந்தான். ஐந்து வருடங்களுக்கு முன்