யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 1

அறிமுகம்

 

அவரை நோக்கி, அந்த சித்தர் கூறினார். 

 

“உன் இறுதி வாரிசே முதலில் திருமணம் செய்வாள். அவள் நெற்றியில் திலகம் இடுபவனே அவளவன். அதை யாராலும் மாற்ற இயலாது. இறைவனால் விதிக்கப்பட்டது.

அவளுக்காக இவன் இரவாக மாறி அவளை பௌர்ணமி நிலவாக ஜொலிக்க வைப்பான். அவனுக்காக இவள் இரவாக மாறி அவனை நிலவாக ஜொலிக்க வைப்பாள்” என்று கூறி விட்டு அங்கு இருந்து மறைந்தார்.

 

சில வருடங்களிற்குப் பின் மீண்டும் அதே சித்தர் ஒருவனை அழைத்து, 

 

“உன்னவள் உன் கையில் கிடப்பாள். நீ இடும் திலகமும், உன் மூச்சும் அவள் உயிர் காக்கும்”என்று கூற 

 

ஏளனமாக புன்னகைத்து விட்டு அங்கிருந்து சென்றான் அவன். 

 

“உன்னவள் உன்னிடம் வருவாள், உன்னாலே அந்த குருவிக் கூடும் கலையப் போகிறது. எல்லாம் இறைவன் செயல்” என்று கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தார் அந்த சித்தர்.

 

நிலவு 1

 

கோயமுத்தூரில் கொடிகாமம் கிராமத்தில் ( கற்பனை ஊர்) கம்பீரமாக தோற்றம் அளித்தது அந்த ஜமீன் வீட்டு அரண்மனை. வெளித்தோற்றம் பார்ப்பதற்கு பழைமையாக இருந்தாலும் உள்ளே அனைத்தும் நவீன வசதி வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு அரண்மனையாகவே தோற்றம் அளித்தது அது.

 

இரண்டு மாடிகளைக் கொண்ட அரண்மனையில், மேல் மாடியில் ஆறு அறைகளும், கீழ் மாடியில் ஐந்து அறைகளையும் கொண்ட, கண்ணாடியாலான ஒரு நவீன ரக வீடு அது. ஒவ்வோரு இடத்திலும் பணத்தின் செழுமையைக் காணலாம். அவ்வீட்டைச் சுற்றி பல வகையான மரங்கள் ஒரு ஒழுங்கு முறையில் நடப்பட்டு இருந்தன.

 

வாயிலில் புற்களும் மரஞ்செடிகளும் நடப்பட்டு இருந்தன. அங்கிருந்து சிறுது தூரத்தில் பல வகையான பூ மரங்கள் வெவ்வேறு வடிவம் கொண்ட பூக்களுடன் ஒரு சிறிய பூங்காவாக அமைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்தே பராமரிப்பின் தன்மையை விளங்கலாம். பார்ப்போரின் கண்களை அழகால் வியப்பில் ஆழ்த்துவதோடு மனதிற்கு நிம்மதியையும் தரும் வீடு அது.

 

ஆனால் அங்கு வசிப்போருக்கு மட்டும் நிம்மதி இல்லாமல் இருந்தது. அங்குள்ள ac அறையினில் கண்களை மூடி சாய் கதிரையில் அமர்திருந்தார் ஜமீன்தார் விஜயசோதிலிங்கம்.

 

“மாமா தேவி கிட்ட பேசினிங்களா?” என அங்கே வந்தாள் அவரின் மூத்த மருமகள் சாவித்ரி. 

 

“அண்ணா என்ன சொன்னாரு? இங்க தேவிய அழைச்சிட்டு வருவேன்னாரா?”என கேட்டாள் அவ் அரண்மனையின் இரண்டாவது மருமகள் இந்துமதி.

 

அவர் புன்னகைத்து விட்டு, “தேவிக்கு எப்பவும் போல இங்க வாரதுல இஷ்டம் தான். ஆனால் மாப்பிள்ளை தான் பிடிவாதமா இருக்காரு. முடியாதுன்னும் அவரு சொல்ல இல்லை” என்றார். விஜயசோதிலிங்கம். 

 

“மாமா எனக்கு நம்பிக்கை இருக்கு அண்ணா தேவியையும், பிள்ளைகளையும் அழைச்சிட்டு வருவாருன்னு” என்றாள் மூத்தவள்.

 

“இதை தானே மா 5 வருஷமா சொல்ற?” என அவர் கவலையாக கூற, 

 

“மாமா எனக்கு மனசு பூரா நம்பிக்கை இருக்கு மாமா, எல்லாமே பழைய மாதிரி மாறிடுன்னு. நிச்சயமா அண்ணா வருவாரு” என்றாள் இளையவள். 

 

“பார்க்கலாம்” என்றார் அவர். 

 

வாயிலில் கேட் திறக்கும் சத்தம் கேட்க, 

 

“மாமா அவங்க வந்துட்டாங்க, நாங்க போய் பாத்துட்டு வாரோம்” என்றனர் மருமகள்கள் இருவரும். 

 

“சரி மா” என்றார் சோதிலிங்கம்.

 

இவர்களின் வீட்டின் முன்னே நின்றது கறுப்பு நிற ஆடிக் கார் ஒன்று. அதிலிருந்து இறங்கி வந்தனர் இவ்வீட்டின் பிள்ளைகள் மூத்தவன் அரவிந்நாதன், இளையவன் ராம் பிரசாத். இருவருமே 45 வயதை தாண்டி இருந்தாலும் அவர்களுக்குரிய கம்பீரமான தோற்றம் மட்டும் மாறவில்லை. கதவினருகே வரவேற்ற மனைவிகளிடம் காபியை எடுத்துக் கொண்டு தந்தை அறைக்கு வருமாறு கூறிவிட்டு சென்றனர் இருவரும். இருவருமே ராம லக்ஷ்மணனனே.

 

“அப்பா” என்று அழைத்து, அவர்கள் உள்ளே செல்ல ‘அமருமாறு’ சோதிலிங்கம் கூறிய பின்னரே இருவரும் அமர்ந்தனர். 

 

“அப்பா மிஸ்டர் வில்லியம் 3000 கோடி புரொஜெக்ட நமளுக்கு தந்துட்டாரு பா. அதை அஸ்வின் கிட்ட ஒப்படைக்க சொல்லி சொல்றாரு பா அஸ்வின் மும்பைல இருந்து அங்கே போரின் கிளைன்ட்ஸ், company அ பாத்துக்குறதால தான் நம்மளுக்கும் எந்த கஷ்டமும் இல்லாமல் பிஸ்னஸை கொண்டு போக முடியுமா இருக்கு. அஸ்வின தான் கிளைன்ட்ஸ் எல்லாரும் பாராட்டுராங்க” என்றான் மூத்தவன்.

 

“நாம தான் இப்போவும் business ல no 1 position ல இருக்கோம். இந்த புரொஜெக்டும் கிடைச்சி இருக்குறதால நம்மளுக்கும் இரண்டாவது இடத்தில் இருக்கிறவங்களுக்கும் வித்தியாசம் ரொம்ப அதிகமா இருக்கு” என்றான் இளையவன். 

 

“Echoma groups and company இந்தியாவோட no 1 company அந்த இடத்த எப்பவுமே தக்கவச்சிக்கங்க. நேர்மையும், உழைப்பும் ரொம்ப முக்கியம்” என்றார் அவர்.

 

மகன்களும் தலை அசைத்து, மனைவிகள் கொண்டு வந்த காபியை அவர்களும், ஜமீன்தாரும் பருகினார்கள். 

 

“அப்பா நாங்க அஸ்வின் கூடவும், கிறுஸ்தி கூடவும் பேசினோம், அவங்க வரமுடாயாதுன்னு சொல்லிட்டாங்க” என்றான் மூத்தவன் தயங்கித்தயங்கி. 

 

“இதை எதிர்பாத்தது தான்” என்றார் சோதிலிங்கம் வெற்றுப் புன்னகையை சிந்தி. 

 

“கிறுஸ்தி அவளோட படிப்பையும் முடிச்சிட்டா, அவளுக்கு சரி இங்கே வரலாம் இல்லையா?” என்று கவலையாக கேட்டார் சாவித்திரி.

 

“நடந்தது எல்லாத்தையும் மறந்துட்டியா என்ன?” என அரிவிந் கேட்க, மற்றவர்கள் அமைதியாக கண்கலங்க நின்றனர். 

 

சென்னையில்…..

 

“என்னங்க?” என்று இரண்டாவது முறை தேவி அழைக்க, அருணாச்சலமோ எதுவும் கேட்காதது போல அமைதியாக இருந்தார், பத்திரிகை வாசித்தபடி. 

 

‘தன் மனைவி என்ன கூறப் போகிறாள் என்று அறிந்தும் அவளாகவே கூறட்டும்’ என்று பேசாமல் இருந்தார் அருணாச்சலம். 

 

“மீண்டும் என்னங்க?” என்று தேவி அழைக்க, 

 

“வயசானதால் காது கேட்குதா இல்லையான்னு check பன்றியா தேவி மா” என்று கேட்க, தேவியோ அமைதியாக இருந்தாள்.

 

தன் மேல் உயிரையே வைத்திருக்கும் கணவர், தன் சிறிய ஆசைகளையும் நான் கேட்கும் முன்னே நிறைவேற்றும் கணவர், தன் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றால், ருத்ரமூர்த்தியாக மாறுகிறார். சில வருடங்களுக்கு முன்பு தன்னால் பிறந்த வீட்டிற்கு வர முடியாது என்று கூறினாலும் தன்னை வற்புறுத்தி அங்கு அழைத்துச் செல்வார் என் கணவர். ஏனென்றால் தன் வீட்டில் உள்ளோர் மீது அதீத பாசமும், ஈடுபாடும் உடையவர். ஆனால் அந்த நாள் அனைத்தையும் மாற்றி விட்டதே என கண்கலங்கினார் தேவி.

 

தேவி கண்கள் கலங்குவதற்கான காரணத்தை அறிந்த அருணாச்சலம், “நான் உன் கிட்ட எத்தனையோ தடவை சொல்லிட்டேன். என்ன அந்த ஊருக்கு கூப்பிடாதன்னு. திரும்பத் திரும்ப அதைப் பற்றி பேசுறதால் என்னோட முடிவை நான் மாத்திக்க போறது இல்லை”

எனக் கூறும் போதே, அங்கு வந்து நின்றான் ஆறடி ஆணழகன் வினோத். 

 

“அப்பா நான் உங்க கிட்ட பேசனும்” என்றான். 

 

“சரி பேசு” எனக் கூறினார் அருணாச்சலம்.

 

“அப்பா இது வரைக்கும் நான் உங்களை எதிர்த்து பேசினதோ இல்லை, உங்களை மீறி ஏதும் செஞ்சதோ கிடையாது. அப்படி பன்னவும் மாட்டேன். யேன்னா என்ன வளர்த்தது என்னோட சாவி அத்தையும், இந்து அத்தையும் தான். என்ன காரணமா வச்சு நீங்க அவங்களோட இருக்கிற உறவையும் துண்டித்துட்டு இங்க வந்திட்டிங்க. எனக்கு இப்போ 25 வயசு என்னால என் வாழ்க்கைய பத்தி தனி முடிவு எடுக்கலாம். But நான் அதையும் பன்ன மாட்டேன். யேன்னா அரவிந் மாமாவோ, ராம் மாமாவோ எனக்கு அப்படி சொல்லி கொடுக்க இல்லை. என்னோட ரோல் மோடல் யாருன்னு கேட்டா கண்டிப்பா அது என்னோட மாமாக்கள் தான்னு சொல்லுவேன். என்னோட ஹீரோ யாருன்னா அது நீங்க தான் பா. எந்த ஹீரோவும் மத்தவங்களை கஷ்டப்படுத்த மாட்டாங்க. நீங்க தெரிஞ்சோ தெரியாமலோ எல்லாரையுமே கஷ்டப்படுத்துறிங்க. மீரா பூனேயில் இருக்கா. இதோ இவளோ பெரிய வீட்ட விட்டுட்டு, அஸ்வின் மும்பை தான் கதின்னு அங்கே இருக்கான். கிறுஸ்தி பெங்களூர்லயே படிச்சி முடிச்சிட்டு வீட்டுக்கு வராம சுத்திட்டு இருக்கா. ஆரவ் டில்லியில் தன்னோட business அ காரணம் காட்டி ஒதுங்கி வாழ்ந்துட்டு இருக்கான். அம்மா எல்லாத்தையும் மனசுல போட்டு தினம் தினம் கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. தாத்தா வீட்டில் எல்லாருமே நிம்மதியே இல்லாமல் கவலைபடுறாங்க. எல்லாமே உங்களோட வரட்டு பிடிவாதத்தால தான் அப்பா. பண்டிகை அப்பிடின்னாலே முன்னாடி நம்ம வீடு கலகட்டும் ஆனா இப்போ 5 வருஷமா யாருமே பண்டிகை எதுவுமே கொண்டாடுறது இல்லை. இவளோ யேன் 5 வருஷமா யாருமே யாரையுமே பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை. உங்களோட வரட்டு பிடிவாதத்தால் மட்டும். அஸ்வின் , ஆரவ், மீரா, கிறுஸ்தி , என்னோட வாழ்க்கைய நாசமாக்கிறாதிங்க… உங்க பிடிவாதத்தை விட்டிங்கன்னா எங்க 5 பேரோட வாழ்க்கையும் நல்லா இருக்கும். அப்பா நம்ம எல்லாரிடமும் அளவுக்கதிகமான பணம் இருக்கு, ஆனா நிம்மதி, சந்தோஷம் இல்லஸலை. அதை இரண்டையும் உங்களால் மட்டும் தான் எங்க எல்லாருக்கும் திருப்பி தர முடியும். என்னோட ஹீரோ இதுக்கு அப்பொறமா யாருக்கும் எந்த கஷ்டத்தையும் கொடுக்காமல் எல்லாருக்கும் உதவி பன்னுவாருன்னு நினைக்குறேன்” என்று கூறி அங்கிருந்து நகர்ந்தான் வினோ. 

 

அவர் பின்னே அழுதுக் கொண்டே அங்கிருந்து வெளியாகினார் தேவி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 24யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 24

நிலவு 24   மகா பூஜைக்கு முன்னைய நாள் வீட்டில் அனைவரும்  கோயிலை நோக்கிச் சென்றனர். அனைவரும் சாமி கும்பிட்டு வெளியேறும் போது சித்தர் அவர்கள் அனைவரையும் அழைத்தார். அதில் ஒவ்வொருவராக சென்று ஆசிர்வாதம் பெறச் சென்றனர்.    அவர் அருகில்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 54யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 54

நிலவு 54   “என்ன கிறுஸ்திகா அரவிந்நாதன், என்னை மறந்திட்டிங்க போல” என்ற அவள் பின்னிருந்த ஒரு குரல் கேட்க,   அந்தக் குரல் காதுவழியாக மூளைக்குச் சென்று அக்குரலுக்கு சொந்தமானவரை படம்பிடித்து காட்ட அவள் உதடுகள் ” அதர்வா” என்று

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 53யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 53

நிலவு 53   அஸ்வின் மொபைல் அலற அதைப் பார்த்து அழைப்பை ஏற்றான். எதிர் முனையில் கூறிய செய்தியைக் கேட்டு அஸ்வினின் முகம்  சந்தோஷத்தில் மின்னியது.     “மேம் நான் ஒரு ஐந்து நிமிஷத்தில் கூப்பிடுறேன்” என்று அழைப்பைத் துண்டித்தான்.