Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 39 (நிறைவுப் பகுதி)

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 39 (நிறைவுப் பகுதி)

பனி 39

 

“நீங்க இரண்டு பேருமே எதிரிங்க தானே? எப்படி பார்ட்னர்ஸ் ஆனிங்க?” என்று ஆதி உறும அவர்கள் பதில் கூற ஆரம்பித்தனர்.

 

“நாங்க இந்த நிமஷம் கூட குடும்ப ரீதியா எதிரிகள் தான். இந்த தொழில் ரீதியா மட்டும் பார்ட்னர்ஸ்” என்றார் மகாலிங்க.

 

“மேய்கிறது எருமை அதில் ஒரு பெருமை” என்றான் ராஜேஸ்.

 

“என் குடும்ப விஷயத்துல இவனோ அவன் குடும்ப விஷயத்தில் நான் தலையிட மாட்டேன்” என்றார் சிவபெருமாள்.

 

“மச்சான் இவங்ககிட்ட இருந்து தான் எப்படி குடும்ப எதிரியை பிசினஸ் பாட்னரா மாத்தனுங்குறதை கத்துக்கனும்” என்றான் ஆதி.

 

“எப்படி பார்ட்னர்ஸ் ஆனிங்கன்னு இன்னும் சொல்லவே இல்லையே MLL” என்று கிருஷி கேட்க

 

மகாலிங்கம் கூற ஆரம்பித்தார்.

 

ஒரு முறை நான் எங்க ஆளுங்க இறக்கி வைத்த சரக்கை பார்க்க போனேன். அப்போ இந்த சரக்கை ஒருத்தர் முழுமையா வாங்குறதா சொன்னாரு. சரி அவரை மட்டும் பார்க்கலாம்னு வர சொன்னேன். அப்போ என்னை பார்க்க வந்தது சிவபெருமாள். இதைப் பார்த்து இரண்டு பேருக்குமே அதிர்ச்சி. அதில் இருந்து இரண்டு பேரும் பேசி தொழின்முறை நண்பர்களாகினோம்.

 

எங்க தொழில் நல்லா போயிட்டு இருந்தது. தேவ், விகி இரண்டு பேருமே கேசை கையில் எடுக்கும் வரை. இரண்டு பேருமே மும்முரமா இறங்கி வேலை பார்த்தாங்க. எங்க ஆளுங்களில் முக்கியமான ஒரு ஆள் தான் ரகு. அவன் ஒரு நாள் பொலிஸ் கிட்ட மாட்டிகிட்டான். அவன் வாயைத் திறந்தான்னா, எங்களை கண்டுபிடிக்கிறது ஈசியாகிறும். அதான் அவன் தப்பிச்சு கோலேஜூக்குள்ள நுழையும் போது ஒரு ஷாப் ஷூடரை வச்சி அவன் கதையை முடிச்சோம். அவனுக்கு போட்டியா நிறைய பேர் இருக்காங்க. அதனால் எங்களுக்கு சரக்கை இறக்கி கொடுக்க கஷ்டமா இருக்க இல்லை.

 

நீங்க இரண்டு பேருமே இன்னும் வேகமா இந்த கேசில் ஈடுபட்டிங்க. அது எனக்கு ரொம்ப பயமா இருந்தது. அதே நேரம் நான் போதைப் பொருள் விற்கிறதைப் பற்றி சூர்யாவிற்கு தெரிந்து விட்டது. அவன் உன் கிட்ட சொல்லிருவானோ பயம் இருந்தது. நில ஏல விற்பனையில் சிவபெருமாள் கிட்ட சொல்லி நேசனை தூண்டி விட்டேன். அந்த கலவரத்தை பயன்படுத்தி சிவபெருமாள் ஆளுங்க சூர்யாவை போட்டு தள்ளினானுங்க.

 

நாங்க எதிர்பார்க்கதது மாரியோட இறப்பு. ஆனாலும் ஒரு புறம் நிம்மதியா இருந்தது. நீ இந்த கேசை இதற்கு அப்பொறம் பார்க்க மாட்டேன்னு. அன்றைக்கு நாங்க ஹொஸ்பிலில் இருக்கும் போது தான் நேசனை கொன்னுட்டதா நியூஸ் வந்தது. அதைப் பார்க்க தான் பக்டரியில் பிரச்சனை வந்ததுன்னு பொய் சொல்லி அங்கிருந்து வெளியாகினேன். ஆனால் எங்களை பிடிக்க நீ இப்படி பன்னுவன்னு எதிர்பார்க்கவே இல்லை. நேசனுக்கோ மற்றவர்களுக்கோ நாங்க பார்ட்னர்ஸ் தெரியாது. இப்போ தான் எல்லோருக்கும்  தெரியும்” என்று கூறி முடிய அவர் கன்னத்தில் ஆதியின் கை பதிந்தது.

 

“சே பணத்துக்கா இவளோ கேவலமான வேலையை பார்த்து இருக்கிங்க. சூர்யா மாமாவை கொன்னு, என்னை கொல்ல பார்த்து பார்க்கவே அசிங்கமா இருக்கு” என்றான் கோபத்தில்.

 

“நீங்க என் அம்மாவோட கூட பிறந்தவரு நினைக்கும் போதே அருவெறுப்பா இருக்கு” என்றாள் கிருஷி.

 

“என்ன டி ரொம்ப,பேசுற? நீ எங்க வீட்டிற்கு வந்தவ அதை மறந்திருதா” என்று மகா கூற

 

“ஒரு நிமிஷம் சின்ன கரெக்ஷன் எங்க குடும்பம் இல்லை. என் குடும்பம், இவ அந்த வீட்டு வாரிசு. உங்க அனுமதி இனி தேவையே இல்லை. எங்களை பொறுத்தவரை நீங்க செத்துட்டிங்க” என்றான் ஆதி.

 

“தேவ்” என்று அவர் கூற

 

“அந்த பெயர் என் அத்தை என்னை ஆசையா கூப்பிட்டது. அதை கூப்பிட உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை” என்ற ஆதி விகியின் புறம் திரும்பி,

 

“இரண்டு பேரையும் அரெஸ்ட் பன்னுங்க” என்று கூற அவர்களை அரெஸ்ட் செய்து அடுத்த நாள் கோர்ட்டில் புரொடியூச் பன்னினர். இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அவர்களை ஜெயிலுக்கு அழைத்துச் செல்லும் போது அந்த வண்டி வெடித்துச் சிதறியது.

 

மீடியாக்களின் முன்னிலையில் அது அவர்களின் எதிரிகளால் செய்யப்பட்டது என்று கேசை மூடினர் ஆதி மற்றும் விகி. உண்மை யாது என்பதை அவர்கள் இருவரும் மட்டுமே அறிவர். இருவரின் குடும்பத்தினரும் ஆதியின் வீட்டில் ஒன்றுகூடினர். அவர்களை சமாதானப்படுத்தும் போது இவர்கள் ஐவருக்கும் போதும் போதும் என்றாகிவிட்டது.

 

ஆரம்பத்தில் அவர்கள் இருவரின் துரோகத்தை நினைத்து அழுதவர்கள் ஆதி, கிருஷியின் அறிவுரைகளால் ஐந்து நாட்களில் அவற்றை மறந்து இயல்புநிலைக்குத் திரும்பினர். பின் இரண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்தது. அவர்கள் ஒன்றாகவே விகி, பவியின் திருமணத்திற்குச் சென்றனர். அவர்கள் அனைவரையுமே பவி, விகி குடும்பத்தினர் அன்பாக வரவேற்று உபசரித்தனர்.

 

விடிந்தால் திருமணம் என்ற நிலையில், விகி அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டு இருந்தான்.

 

“என்ன டா ரூமை அளந்துட்டு இருக்க?” என்று ஆதி கேட்க,

 

“இல்லை டா, நான் இன்னும் பவி கூட ஒழுங்கா பேசவே இல்லை டா. என் மேலே அவ கோபமா இருப்பா. அவளை சமாதானப்படுத்தனும். ஆனால் பொண்ணை பார்க்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க” என்றான் விகி பாவமாக.

 

“பெரியவங்க சொல்கிறது எல்லாவற்றையும் கேட்குற நல்லவன் இல்லையே நீ” என்று ஆதி கூற

 

“மச்சான் இந்த விஷயத்துல எல்லாம் கேட்டு தான் ஆகனும். இல்லை என் மீசக்கார மாமா கல்யாணத்தை நிறுத்திரும்” என்றான் சீரியசாக.

 

“நவிக்கு பவியை அழைச்சிட்டு வர சொல்றேன்” என்றான் ஆதி.

 

“மச்சான் இவனுங்க பேசவே விட மாட்டானுங்க டா. மொட்டை மாடியில் கூட ஆளுங்க இருக்காங்க டா” என்றான் விகி.

 

“உன் நிலமை ரொம்ப மோசம் தான் டா. எனக்கே பார்த்தால் பாவமா தான் இருக்கு” என்றான் ஆதி.

 

“உனக்காவது என் நிலமை புரியுதே” என்றான் விகி.

 

“அவ கிருஷி டிரசை போட்டு காருக்கு போகட்டும். நீ என் டிரசை போட்டு காரில் அவளை வெளியே கூட்டிட்டு போய் அவளை சமாதானப்படுத்து. பார்க்குறவங்களுக்கு நானும், கிருஷியுமா தான் இருப்போம்” என்றான் ஆதி.

 

“சூப்பர் ஐடியா மச்சான். ஆனால் நீ இவளோ நல்லவன் இல்லையே” என்றான் விகி.

 

“என் பொன்டாட்டி கூட டைம் ஸ்பென் பன்னது போல எனக்கும் இருக்கும்” என்றான் ஆதி அசடு வழிந்துக் கொண்டே.

 

“ஒரு கல்லில் இரண்டு மாங்காய், இதானே?” என்று விகி கேட்க ஆதி ஆம் என்று தலை ஆட்டினான்.

 

பின் இவர்கள் திட்டத்தை பெண்களுக்கு கூற அவர்களும் ஒத்துக் கொண்டனர். ஆதி, கிருஷி இருவரும் ஊரின் ஒதுக்குப் புறத்தில் இறங்க, விகி பவி வெகுதூரம் சென்றனர்.

 

“உனக்கு நான் யாருன்னு தெரியுமா?” என்று பவி விகியிடம் கேட்க,

 

‘ஆரம்பிச்சிட்டாடா’ என்று மனதில் நினைத்தவன்,

 

“சொரிடி ரொம்ப வேலை அதிகம்” என்றான் விகி.

 

“சரி விடு” என்று அவள் அமைதியாக விகியிற்கு அவளின் அமைதி காயத்தைத் தந்தது. அவள் சண்டை இட்டிருந்தால் சமாதானப்படுத்தி இருக்கலாம் ஆனால் இவள் அமைதியாக அல்லவா இருக்கிறாள் என்று அவளையே பார்த்தான்.

 

“இங்க பாரு டி, என் மேலே கோபம் இருந்தால் சண்டை போடு. தயவு பன்னி அமைதியா இருக்காத என்னால் தாங்க முடியல்லை டி” என்றான் விகி.

 

“என்னாலும் தாங்க முடியல்லை டா, ஒரு வார்த்தை என் கூட பேசமாட்டியா? என் கூட ஒரு ஐந்து நிமிஷம் எனக்கு ஆறுதலா இருக்க மாட்டியா? நம்ம கல்யாணத்தை என் கூட சேர்ந்து என்ஜோய் பன்ன மாட்டியான்னு எவளோ ஏங்கி இருக்கேன் தெரியுமா? ஆனால் யாருக்கோ கல்யாணம் போல் இரண்டு நாளைக்கு முதலில் தான் வந்தாய். அதை என்னால தாங்க முடியல்லை டா” என்று கூற

 

“பவி நான்…” என்று விகி கூற முயல

 

“நான் மனசுல இருக்கிறது எல்லாவற்றையுமே சொல்லி முடிக்கிறேன்….. நானும் சராசரி பொண்ணு டா. சிங்கம் பட ஹீரோயின் அனுஷ்கா இல்லை. எனக்கு உன் கூட நேரம் செலவளிக்கனும் ஆசை இருக்கும் டா. எல்லா பொண்ணுங்களும் தன்னோட திருமணத்தின் போது புருஷன் கூட ஒவ்வொன்றையும் சேர்ந்து இரசிக்கனும்னு நினைப்பாங்க டா. எனக்கும் அதை போல ஆசை இருக்கு டா” என்று அழ விகி அவளை அணைத்துக் கொண்டான்.

 

“நீ இந்த அளவிற்கு கஷ்டபட்டு இருப்பாய் நினைக்கவே இல்லை. வாழ்க்கை பூரா உன் கூட தானே டி இருக்க போறேன்” என்று விகி கூற

 

“தினமும் இதைபோல் யாரும் நமளுக்கு கல்யாணம் பன்னி வைக்க மாட்டாங்க டா” என்றாள் பவி.

 

அவன் புன்னகைத்து “சொரி டி, சொரி” என்று அவள் கன்னத்தில் இதழ்பதித்தான்.

 

அவள் அதிரந்து அவனைப் பார்க்க,

 

“ஐ லவ் யூ விது” என்றான்.

 

அவள் அவனை அணைத்துக் கொண்டு “லவ் யூ டூ மனு” என்றாள்.

 

பின் இருவரும் ஆதியையும், கிருஷியைம் அழைக்கச் சென்றனர்.

 

“லக்ஷன் இந்த இடம் சூப்பரா இருக்கு இல்லையா?” என்று கிருஷி தென்றல் காற்றை அனுபவித்து கேட்க,

 

“இல்லை நவி மா, நீ தான் சூப்பரா இருக்க” என்றான் ஆதி.

 

கிருஷி ஆதியைச் செல்லமாக முறைக்க அவளை பின்னிருந்து அணைத்தான்.

 

“நம்ம வாழ்கையை யோசிச்சு பார்த்தியா? வித்தியாசமா இருக்குடி எங்கேயோ இருந்த உன்னையும், என்னை சந்திக்வைத்து காதலிக்க வச்சாரு அந்த கடவுள். அப்பொறம் இரண்டு பேரும் தங்கோளோட குடும்பத்துக்காக காதலை மறக்க பார்த்தோம். ஏதேதோ நடந்து நீ என் செல்ல அத்தையோட பொண்ணா, என் பொன்டாட்டியா அந்த கடவுள் உன்னை மாற்றி இருக்காரு” என்றான்.

 

“ஆமா டா, உண்மையான காதலை யாராலையும் அழிக்க முடியாது. நம்மளோட அன்பு உண்மையானது டா” என்றாள்.

 

“சந்தோஷமான விஷயம் என்ன தெரியுமா? இப்போ இரண்டு ஊரும் ஒன்றுபட்டு இருக்கிறது தான். இரண்டு குடும்பமுமே மற்றைய குடும்பத்தை தன்னோட குடும்பமா தான் பார்க்குறாங்க” என்றான் ஆதி.

 

“கடவுள் எப்போதும் நல்லவங்களை கைவிடமாட்டாரு” என்று கிருஷி கூற ஆதி புன்னகைத்தான்.

 

“ஐ லவ் யூ நவி மா” என்று ஆதி அவள் கண்களைப் பார்த்து கூற

 

“லவ் யூ டூ லக்ஷன்” என்று அவள் கூறி முடியும் போது அவள் செரி இதழ்கள் அவன் இதழ்களுக்குள் அடங்கி இருந்தன.

 

பின் விகி, பவி ஜோடியினர் வருகை தர அவர்களுடன் யாரும் அறியாமல் வீடுவந்து சேர்ந்தனர். அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது. திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நிகழ ராஜேஸ்வரி கிருஷியிடம் சில நகைகளையும் பட்டு புடவை ஒன்றையும் வழங்கினார்.

 

“அத்தை எதுக்கு இது?” என்று கேட்க,.

 

“இது எங்க,பரம்பரை நகை மா, எங்க வீட்டு மருமகளுக்கு கொடுக்குறது. உன் கிட்ட கொடுக்குறதுக்கான சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை, இப்போ தான் கிடைச்சது. போ போய் தயாராகி வா” என்று அனுப்பி வைத்தார்.

 

அவள் தயாராகி வர பவி தயாராகவும் நேரம் சரியாக இருந்தது. பின் அனைவரும் மண்டப்பத்திற்கு செல்ல அனைவரும் கிருஷி அதிர்ந்து நின்றாள். ஏனென்றால் இரண்டு ஓமகுண்டங்கள் இரண்டு ஐயர்கள் இருந்தனர். மற்றைய திருமணம் யாருக்கு நடைபெற போகின்றது? என்பதை ஒருவருமே அறியவில்லை. பின் மாப்பிள்ளைகளை அழைத்து வரச் சொன்னார் ஐயர்.

 

ஆதியும்,விகியும் மாலையும் கழுத்துமாக வந்து அமர சிறிது நேரத்தில் கிருஷி பவியை அழைத்து வரும் போதே ஆதியை கவனித்து அதிரந்து நின்றாள். பின் கோமதி, தளிர் இருவருமே அவளை ஆதிக்கு அருகில் அமரவைத்தனர். சிறிது நேரத்தில் ஐயர் வழங்கிய தாலியை பவிக்கு விகி கட்டி மூன்று முடிச்சு இட்டு தன் மனைவியாக்கிக் கொண்டான். ஆதி பொன் தாலியை அவளுக்கு அனைவரின் முன்னிலையிலும் சூட்டி மீண்டும் ஒரு முறை மனைவியாக்கிக் கொண்டான்.

 

முற்றும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 37யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 37

பனி 37   சிவபெருமாள், “பகைக்காக, கௌரவத்திற்காகவும் தம்பியை கொன்ன எனக்கு அவன் பொண்ணு உயிர் பெரிசு இல்லை ஆதி” என்றார்.   ஆதியோ இதைக் கேட்டு சிலையாக நின்று இருந்தான்.   “என்ன தேவ் அதிர்ச்சியா இருக்கா?, உன் பொன்டாட்டி

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 7யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 7

பனி 7   டாக்டர் கிருஷி விழித்து விட்டதாக கூறி அவர்களது சண்டைக்கு முற்றிப் புள்ளி வைத்து, அடுத்த டொம் என்ட் ஜெரி சண்டையை ஆரம்பிக்க உதவி செய்தார். மூவரும் கிருஷியைப் பார்க்க உள்ளே சென்றனர்.  கிருஷி மூவரையும் பார்த்தாள்.  

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 25யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 25

பனி 25   கிருஷி சாப்பிட அமர்ந்து ஒருவரையும் பார்க்காமல் சாப்பிடுவதிலேயே குறியாய் இருந்தாள்.   ‘புருஷன் சாப்பிட்டானான்னு ஒரு வார்த்தை கேட்குறாளா? ஐயோ இவ சாபிடுற வேகத்தை பார்த்தால் நமளுக்கு சாப்பாடு இருக்காது’ என்று நினைத்தவன் அவசரமாக கைகளை கழுவி