Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 37

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 37

பனி 37

 

சிவபெருமாள், “பகைக்காக, கௌரவத்திற்காகவும் தம்பியை கொன்ன எனக்கு அவன் பொண்ணு உயிர் பெரிசு இல்லை ஆதி” என்றார்.

 

ஆதியோ இதைக் கேட்டு சிலையாக நின்று இருந்தான்.

 

“என்ன தேவ் அதிர்ச்சியா இருக்கா?, உன் பொன்டாட்டி என்னை பார்க்க தான் வருகிறா. அவளை உயிரோட பார்க்கனும், உன் கேள்விகளுக்கான பதில் வேணும் என்றால் நான் சொல்கிற இடத்துக்கு நீ மட்டும் தனியா வா” என்றார்

 

“நான் வரேன்” என்று வண்டியை எடுத்துக் கொண்டு சிவபெருமாள் கூறிய இடத்திற்குச் சென்றான்.

 

கிருஷி சிவபெருமாள் கூறிய இடத்திற்கு வந்தாள். அந்த இடம் ஆள் அரவமற்ற ஊரின் ஒதுக்குப் புறம் இருந்தது. சுற்றிவர மரங்கள் உயரமாக வளர்ந்து அவற்றின் நிழல் அவளுக்கு பயத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் இரண்டு உயிருக்காக தன்னை தைரியப்படுத்தி நடந்தாள் தூரத்தில் தெரிந்த குடோனை நோக்கி. அவள் நடக்கும் சத்தமே மீண்டும் ஒலித்தது.

 

சுற்றி முற்றும் பார்த்துக் கொண்டு குடோனை நோக்கி நடந்தாள். அவள் உள்ளே நுழைய,

 

“வாங்க கிருஷ்ணவேனி ஆதிலக்ஷதேவன்” என்ற கம்பீரக் குரல் கேட்க,

 

அவள் அக்குரல் சிவபெருமாளின் குரலே என்று யூகித்தவள், உள்ளே நடந்து சென்றாள். அங்கே இருந்த ஒரு மேசையின் மீது அமர்ந்து கைகளை கட்டிக் கொண்டு ஏளனச் சிரிப்போடு அமர்ந்து இருந்தார் சிவபெருமாள். அவள் தளிரைத் சுற்றித் தேட,

 

“யாரை தேடுறிங்க பனிமலர் பொண்ணே?” என்று அவர் கேட்க,

 

“தளிர் எங்கே?” என்று கேட்க,

 

“டேய் அவங்க இரண்டு பேரையும் இழுத்து வாங்கடா” என்று அவர் ஆணையிட,

 

தளிர் மற்றும் இன்னொருவரையும் இழுத்து வந்தனர் சிவபெருமாளின் ஆட்கள்.

 

கிருஷி மற்றவரைப் பார்த்து “ராஜேஸ்” என்றாள்.

 

“எதுக்கு இவங்களை அழைச்சிட்டு வந்திருக்கிங்க?” என்று கோபமாகவே கிருஷி கேட்க,

 

“வேறு எதுக்கு உன்னையும், இவங்க இரண்டு பேரையும், உன் புருஷனையும் கொல்றதுக்காக தான்” என்றார் அவர்.

 

“உங்க பழிவாங்கும் படலம் எங்களை கொன்னுட்டா முடிந்துவிடுமா?” என்று கிருஷி கேட்க,

 

“எனக்கு மற்றவர்கள் மேலே இருக்கிற கோபத்தை விட உன் மேலவும், உன் புருஷன் மேலவும் தான் கோபம் அதிகம். நீங்க இரண்டு பேருமே என்னை ஏமாற்றி இருக்கிங்க” என்றார்.

 

அதே நேரம் ஆதியும் தன் காரை நிறுத்தி உள்ளே நுழைந்தான். கிருஷி, தளிர், ராஜேஸ் மூவரும் இருப்பதைப் பார்த்து திகைத்தவன், சிவபெருமாளிடம் சென்றான்.

 

“இப்போ எதுக்கு தளிரையும், ராஜேசையும் கடத்தி வந்திருக்கிங்க?” என்று கோபமாகக் கேட்க,

 

“உன் பொன்டாட்டியை இங்கே வர வைக்க வேணுமே தேவ். உன் பொன்டாட்டியை அதிகமாவே பாதுகாக்குற, இவளை வீட்டை விட்டு வெளியே வரவைக்கிறதற்காக தான்.  இவளுக்கு தளிர் என்றால் உயிர் அவளை கடத்தும் போது இவன் ஹீரோ போல காப்பாரத்த பார்த்து இருக்கான். அதான் அவனையும் கொண்டு வர வேண்டியதா போச்சு” என்றார் சிவபெருமாள் சலித்துக் கொண்டே.

 

“என்ன உங்களை அரெஸ்ட் பன்ன முடியல்லையங்குர திமிருல பேசுறிங்களா?” என்று ஆதி கேட்க,

 

“ஹாஹா, சரியா சொன்னியே தேவ். இந்த டிரக்சை நான் தான் இந்தியாவிற்கு வரவழக்கிறேன். இவளோ யேன், என் தம்பி, அவன் பொன்டாட்டியையும் நான் தான் கொன்னேன். உன்னால் என்ன பன்ன முடிஞ்சது?” என்று அவர் திமிராகக் கேட்க,

 

“என்ன என் அப்பாவை நீங்களா கொன்னிங்க?” என்று கிருஷி அதிர்ச்சியாய் கேட்க,

 

“அது உனக்கு தெரியாது இல்லையா? நானே சொல்றேன், உன் அம்மாவை கொன்னுட்டு, நான் வெளியேறும் போது என் தம்பி மருந்தை வாங்கி அந்த அறைக்குள்ள வந்துட்டான். அவன் குழந்தையை என் கிட்ட இருந்து பறிக்க பார்த்தான். நான் அவன் மேலே கோபமா இருந்தேன். குழந்தையை என் கிட்ட இருந்து பறிக்க பார்த்தது என்னை இன்னும் கோபப்படுத்திச்சு. அதான் அவன் ஆசை பொன்டாட்டியை கொன்ன கத்தியை எடுத்து அவன் வயிற்றுல சொருகினேன்.

 

அவன் அங்கிருந்து என்னை தள்ளி விட்டு ஓடினான். ஹொஸ்பிடல் பின் வாசல் வழியா அவன் உதவி கேட்டு ஓடுகிற நேரம் தான் இவங்க வீட்டு ஆளுங்களால் தூக்கி வீசி எறிஞ்சதுல இறந்தான். ஆனால் நான் கத்தியால் குத்தினது அவன் வயிற்றுல ஆழமா இறங்கிருச்சு. அதனால் தேவ் வீட்டு ஆளுங்க அந்த இடத்திற்கு வர முன்னாடி அவனை அங்கே இருந்து கேர்டின் கூரான முனையில் நான் இறக்கி விட்டேன் என் ஆளுங்க உதவியோடு.

 

என்னோட நல்ல நேரத்திற்கு அது ஹொஸ்பிடல் பின்புறம் அப்படிங்குறதால் யாருமே இருக்க இல்லை. தேவ் குடும்பத்தை பொறுத்த வரைக்கும் அவங்க தான் ராஜாவை கொன்னாங்க. நான் அருகில் ஒளிஞ்சதுக்கு அப்பொறமா இவங்க தங்களோட வண்டியில் அடிபட்டு இப்படி இப்படி கேர்ட் கூர் முனை குற்றி இறந்ததா சொன்னாங்க. எனக்கும் நிம்மதியா இருந்தது யாருமே என் மேலே சந்தேகபடவோ இல்லை என்னை பார்க்கவோ இல்லைன்னு” என்று கூறினார்.

 

“உங்க மனசுல கொஞ்சமாவது இரக்க மனப்பான்மையே இல்லையா? அநியாயமா என் அப்பா அம்மாவை கொன்னுட்டிங்களே” என்று கிருஷி அழ

 

“நவி உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா? தயவு பன்னி அழாத” என்றான் ஆதி கோபமாக.

 

“லக்ஷன் என் அம்மா அப்பாவிற்கு கத்தியால் குத்தும் போது வலிச்சு இருக்குமே. அதை விட அப்பா தன்னோட அண்ணனே தன்னையும், அவரோட குடும்பத்தையும் அழிச்சிட்டாருன்னு வலியில் துடிச்சிருப்பாரே” என்று கிருஷி கதறி அழுதாள்.

 

ஆதிக்கு இவளை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று புரியவே இல்லை. அவள் அருகில் வந்தவன்,

 

“இங்கே பாரு நவிமா, நடந்து முடிந்தது முடிந்துவிட்டது. நடக்க போகிறதை பார்க்கலாம்” என்றான் கண்ணீரைத் துடைத்தான்.

 

“இதற்கு அப்பொறமா என்ன நடக்க இருக்கு ஆதி? நீங்க இரண்டு பேருமே சாக போறிங்க” என்றார் வெற்றிச் சிரிப்போடு.

 

“பெரியப்பா, நீங்க இவளோ கொடூரமானவரா?, எதுக்காக ஒவ்வொருத்தரையும் கொல்றிங்க? உங்களுக்கு யாரு மேலேயும் பாசமே இல்லையா?” என்று தளிர் கத்த

 

“என்னடி சவுன்டு கொடுக்குற?” என்று சிவபெருமாள் அவளிற்கு அறைந்தார்.

 

மற்றவர்கள் தடுக்க முயல மற்ற மூவரையும் அவருடைய ஆட்கள் அசைய முடியாதவாறு பிடித்துக் கொண்டனர்.

 

“ஒரு சின்ன பொண்ணை கை நீட்டி அடிக்கிறியே உனக்கு வெட்கமா இல்லையா?” என்று ராஜேஸ் வெகுண்டு எழ

 

“ஓஓஓ இவளுக்கு அடிச்சா அங்கே வலிக்குதா?” என்றவர் மீண்டும் தளிரை அறைந்தார்.

 

“யோவ் எதுக்கு அவளை காயபடுத்துற? எங்க உயிரு தான் உனக்கு தேவை, அதை எடுத்துக்கோ அவளை விட்ரு” என்று கத்தினாள் கிருஷி.

 

“அப்பா உனக்கு யோவ் ஆ மாறிட்டேனா? இதான்டி இவன் குடும்பம் நீ போய் கொஞ்ச நாளிலேயே என்னை வெறுக்க வைத்துட்டாங்க” என்றார் கோபமாக.

 

“அவங்க யாரையுமே மாற்ற இல்லை. அவங்க மனசுல இருக்கிற பாசம் தான் எல்லோரையும் அவங்க பக்கமா சாய்க்குது” என்றாள்.

 

“இந்த அளவிற்கு என்னை எதிர்த்து பேச ஆரம்பிச்சிட்டியா?” என்று சிவபெருமாள் கேட்டார்.

 

“நான் அப்பான்னு உங்க மேலே உயிரா இருந்தேனே. நீங்க என் மேலே காட்டின பாசத்தை உண்மை நம்பினேன். ஆனால் எப்போ உங்க பொண்ணா என்னை பார்க்காமல் அந்த கேடுகெட்ட நேசன் கிட்ட என்ன வேணுன்னாலும் பன்னிக்கன்னு விட்டுட்டு போனிங்களோ அப்போவே ஒரு அப்பாவா செத்துட்டிங்க. நீ என்ன எல்லாம் தப்பு பன்னிங்கன்னு தெரிந்ததோ அப்போ இருந்து நீங்க எனக்கு மூன்றாவது மனிஷனா மாறிட்டிங்க. என் அம்மா, அப்பாவை எப்போ கொன்னிங்கன்னு உங்க வாயாலேயே சொன்னிங்களோ அப்போ ஒரு கொலைகாரனா என் மனசுல பதிவாகிட்டிங்க. ஒரு கொலைகாரன் கிட்ட எதிர்த்து பேசுறதுல எந்த தப்பும் இல்லைன்னு நினைக்கிறேன் மிஸ்டர் சிவபெருமாள் எம்.எல்.ஏ” என்றாள் கிருஷி.

 

இதைக்கேட்டு அவர் மனதில் துளியும் இரக்கம் வரவில்லை. ஏதோ கதை கேட்பது போல் கேட்டுக் கொண்டு இருந்தவர் கொட்டிவி விட்டார்.

 

“சூப்பரா பேசுற. ஒரு வேலை சினிமாவிற்கு போய் இருந்தா ஒரு நல்ல டயலோக் ரைட்டரா வந்து இருப்ப. அதற்கு உனக்கு கொடுத்து வைக்க இல்லையே. என்ன பன்றது உன் அம்மாவைப் போல அல்ப ஆயுளிள் போக போறன்னு கடவுள் எழுதி இருக்காரு” என்று துப்பாக்கியை எடுத்து நீட்டினார் அவளுக்கு நேராக.

 

மற்ற மூவரும் பதற, மீண்டும் துப்பாக்கியை எடுத்து அதை தடவிக் கொண்டே,

 

“நீ நல்லா யோசிச்சு பாருங்க கிருஷி, ஆதி உங்க குடும்ப ஆளுங்க  எல்லோருமே என் கையால் சாகனும் அப்படி வரம் வாங்கி வந்திருக்கிங்க. அது யாருக்கும் கிடைக்காத கொடுப்பினை. அந்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்க” என்று கூறி மீண்டும்,

 

“அது மட்டுமில்லை எனக்கும் மனசில் கொஞ்சம் ஈரம் இருக்கு. அதனால் தான் உயிருக்குயிரா காதலிக்கிற இரண்டு பேரையும் ஒன்னாவே மேலே அனுப்புறேன். ஒருத்தரை அனுப்பிட்டு மற்றவர் படுகிற கஷ்டத்தை பார்த்து ரசிக்கிற அளவிற்கு நான் ஒன்னும் கொடுமைகாரன் இல்லை” என்று கிருஷியின் நெஞ்சில் ஒரு புளட், ஆதியின் நெஞ்சில் ஒரு புலட் மீண்டும் இருவருக்கும் ஒரு புலட் இறங்க அவர்கள் இருவரும் அப்படியே விழுந்தார்கள்.

 

அவர்களுடைய முதுகுப்புறமே அனைவருக்கும் தெரிய இருவரும் விழ ஆதி, கிருஷி இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்தவாறே கண்களை மூடினர்.

 

அங்கே “அக்கா, மாமா” என்ற கதறலும், “தேவ் கிருஷி” என்ற கதறலுமே மீண்டும் மீண்டும் கேட்டது.

 

“அநியாயமா அவங்களை கொன்னுட்டியே” என்று தளிர் கத்த அவளுக்கு ஒரு புலட்டை சுட இடையில் ராஜேஸ் பாய்ந்து அதை வாங்கிக் கொண்டான்.

 

தளிர் மடியில் இருந்தவன், ” ஐ லவ் யூ இளா” என்று கண்களை மூடினான்.

 

“ஜேஸி” என்று தளிர் கத்த மீதி ஒரு புலட் அவள் நெஞ்சில் இறங்கியதோடு அந்த அரவமும் அடங்கியது.

 

சிவபெருமாள் சிரித்து,

 

“நாலு கொலை பன்ன வேண்டியதா இருக்கே” என்று எழுந்து தன் மொபைலில் ஒருவருக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.

 

“எல்லோரையும் முடிச்சிட்டேன். நீங்க கடைசியா ஒரு முறைப் பார்த்தால் பொடியை டிஸ்மிஸ் பன்னிடலாம் பாட்னர்” என்று கூற

 

“வரேன் பாட்னர், எனக்கு இத்தனை நாளாக தொல்லை கொடுத்து இருந்தவன், செத்து கிடக்குறான்னு சொல்றிங்க வராமல் இருக்க முடியுமா பார்டனர். பத்து நிமிஷத்தில் அங்கே இருப்பேன்” என்று அழைப்பை துண்டித்தார்.

 

பத்து நிமிடத்திற்கு பிறகு அந்த குடோனின் முன்பு ஒரு கார் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய நபர் நடந்து உள்ளே வந்தார்.

 

“வாங்க MLL, அதாவது என் பார்டனர்” என்று சிவபெருமாள் வரவேற்க,

 

“எங்க இருக்காங்க அவங்க?” என்று MLL கேட்க,

 

“உள்ளே” என்று அவர்களின் பொடி இருக்கும் இடம் அழைத்துச் சென்றார் சிவபெருமாள்.

 

“என்ன உங்க தம்பி பொண்ணு, நீங்க வளர்த்த பொண்ணு இரண்டு பேரையுமே கொன்னு இருக்கிங்க” என்று கூற

 

“உங்க குடும்பத்து ஆளுங்க தானே” என்று சிரித்தார் சிவபெருமாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 13யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 13

பனி 13   சிவபெருமாளின் வீட்டிற்குச் செல்ல ஜீப்பில் ஏறியவன் தன் நண்பன் ஒருவனிடம்   “வீட்டில் யாரு யாரு இருக்காங்க?, மற்றவர்கள் எல்லோருமே போயிட்டாங்களா? இல்லை கொஞ்சம் பேர் சரி வீட்டில் இருக்காங்களா?” என்று கேட்க,   “மச்சான் நமளுக்கு

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 16யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 16

பனி 16   கிருஷி கால்களை நனைப்பதற்காக கோயிலின் குளத்தில் கடைசிப் படியில் நிற்க, அதே நேரம் மகாலிங்கம் அனுப்பிய ஆள் அவள் அவளை தன் புறம் திருப்பி வயிற்றில் கத்தியை இறக்க கையை ஓங்கும் அதே நேரம் அவளை குளத்தில்

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 32யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 32

பனி 32 “அப்பா நான் உங்க பொண்ணு பா” என்றாள் கிருஷி அழுகையுடன்.   “நீ என் பொண்ணே இல்லை. நான் பெத்த பொண்ணு இருபத்து மூன்று வருஷத்துக்கு முன்னாடியே செத்துப் போயிட்டா” என்று சென்றுவிட்டார்.   கிருஷி இதைக்கேட்டு அதே