அத்தியாயம் – 16 காலை நேரம் பரபரப்பாய் கிளம்பிக் கொண்டிருந்தான் ப்ரித்வி. சனிக்கிழமை என்பதால் நந்தனாவுக்கு விடுமுறை. நீளமுடியைக் கொண்டையாக முடித்துக் கிளிப் போட்டு, வீட்டில் போடும் பைஜாமாவுடன் சமையலறையில் சப்பாத்தியைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். “டிபன் சாப்பிட்டுட்டு போங்க” உள்ளிருந்து கத்தினாள்.