Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 30

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 30

பனி 30

 

அவள் உள்ளே நுழைய கூற முடியா ஓர் உணர்வு அவளுள் எழுந்தது. சுற்றிப் பார்த்து உடனடியாக அவ்வறையின் ஜன்னலை திறந்தாள். அப்போதே அவள் சுவரில் தொங்கிய புகைப்படத்தைப் பார்த்து சிலையானாள்.

 

“இவங்க யாரு? இந்த போடோ நான் எங்கேயோ பார்த்து இருக்கேன். பட் ஞாபகம் இல்லை ” என்று கிருஷி கேட்க,

 

“இவங்க எங்க வீட்டோட இளவரசி. இந்த குடும்பத்து கடைசி வரிசு. மகா,சங்கரன் சித்தப்பா,என் அப்பா, அத்தையோட தங்கை பனிமலர் ” என்று கூற

 

கிருஷியோ அவர் புகைபடத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

“இவங்க உனக்கும் சொந்தம் தான்” என்றான் ஆதி.

 

அவள் அவனைப் புரியாமல் பார்க்க,

 

“இவங்க கல்யாணம் பன்னது உன் சித்தப்பா ராஜாவை” என்றான்.

 

“என்ன?” என்று அவள் அதிர

 

“ஆமா நவி, அத்தை கல்யாணம் பன்னது சிவபெருமாளோட தம்பி ராஜாவை” என்றான்.

 

“அது எப்படி?” என்று கேட்க,

 

“நமளை போல தான், யாருன்னே தெரியாமல் காதலிச்சாங்க” என்று அவர்கள் இருவரின் காதலைப் பற்றி கூற ஆரம்பித்தான்.

 

“எங்க அத்தை ப்ளஸ் டூ முடிஞ்சதுக்கு அப்பொறமா, சென்னைக்கு படிக்க போனாங்க. அவங்க லோ படிச்சாங்க. அதே கோலேஜ்ல தான் ராஜ் மாமாவும் பைனல் இயர் படிச்சுட்டு இருந்தாங்க. எங்க இரண்டு குடும்பமுமே பரம்பரை எதிரிங்க. அதனால் இரண்டு பேருக்கும் அறிமுகம் இல்லை.

 

முதல் நாள் கோலேஜில் அத்தையை ரெகிங் பன்னப்போ, ராஜா மாமா காப்பாத்தி இருக்காங்க. அப்போ அவங்க ரெண்டு பேரோட நட்பு ஆரம்பிச்சது. நாட்கள் செல்ல இரண்டு பேருக்கும் இடையில் இருந்த நட்பு காதலா மாற ஆரம்பிச்சுது. அவங்க அதை உணரந்தாலும் சொல்லவே இல்லை.

 

செமெஸ்டர் எக்சேம் நடந்து அத்தை, மாமா இரண்டு பேருமே வீட்டிற்கு வந்தாங்க. அத்தைக்கு நான் உயிரு. என்னை விட்டு நகரவே மாட்டாங்க. ஆனால் அப்போ எனக்கு ஐந்து வயசு. என் கூட விளையாடுறது குறைவா இருந்தது. எப்போவும் சோகமாவே இருப்பாங்க. அந்த பிரிவு இரண்டு பேருக்கும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் இருக்க முடியாதுங்குறதை உணர்த்தியது.

 

திரும்ப அவங்க கோலேஜூக்கு போய் இரண்டு பேருமே தன்னோட காதலை பகிரந்தாங்க. இரண்டு வருஷம் காதலிச்சாங்க. மாமா ஒரு கேசை எடுத்து ஜெயிச்சாரு. அந்த நம்பிக்கையில் இனிமேல் அத்தையை கல்யாணம் பன்னலாம்னு முடிவு பன்னாரு. அதனால் அவர் வீட்டுல தான் காதலிக்கிறதை சொன்னாரு. அவங்களும் ஏத்துகிட்டாங்க.

 

அடுத்த நாள் கோயிலில் அத்தையையும், அவங்க குடும்பத்தையும் சந்திக்க வர சொன்னாங்க. அப்போ தான் தெரிந்தது இரண்டு குடும்பமும் பகை குடும்பம் என்று. அப்பொறமா இரண்டு பேரையுமே பிரிச்சு வீட்டிற்கு அழைச்சிட்டு வந்தாங்க. இரண்டு பேராலும் அவங்க காதலை மறக்க முடியல்லை. அவங்க பிரன்ஸ் மூலமாக மறைமுகமா பேசினாங்க.

 

ஒரு வாரத்திற்கு அப்பொறமா இரண்டு பேரும் ஓடி போயிட்டாங்க. இதனால் இருக்கிற பகை இன்னும் அதிகரிச்சது. அவங்களை தேடி பார்த்தும் கிடைக்கவே இல்லை. ஒரு வருஷமா அவங்க எங்க இருக்காங்கன்னு தகவல் கிடைக்கவே இல்லை. ஒரு நாள் அவங்களை திருனல்வேலி ஹொஸ்பிடலில் அத்தையை சிவபெருமாள் பார்த்து இருக்கார்.

 

எங்க அப்பாவும் அத்தையை பார்த்து இருக்காரு. அவரோட கோபத்துல அவங்களை கொல்ல முயற்சி பன்னப்போ அப்பா இடையில போனாங்க. அதனால் அவரோட வயிற்றில கத்தி இறங்கி அங்கே இறந்துட்டாரு. அப்பொறமா உங்க அப்பா பனி அத்தையையும் கொன்னுட்டாரு. ராஜ் மாமா ஹொஸ்பிடலில் இருந்து வெளியேறும் போது வீதியை கடக்கும் வழியில் எங்க ஆளுங்க அவரை இடிச்சு இருக்காங்க.

 

அதில் அவரு தூக்கி வீசி கம்பியில் குத்தி இறந்துட்டாரு. ஒரே நாளில் எல்லாமே நடந்தது. யாராலும் ஏத்துக்க முடியல்லை. நான் ஊரில் இருந்தால் என்னையும் கொன்னுடுவாங்கன்னு, என்னை பெங்களூரில் இருக்கும் அம்மாவோட பிரன்டு வீட்டில் தங்கி படிக்க வச்சாங்க. அங்கே தான் விகி என் பிரன்டானான். என்னால் என் அத்தை இல்லைங்குறதை ஏத்துக்க முடியவே இல்லை.

 

இந்த நிமிஷம் கூட அவங்க என் கூட இருக்காங்கன்னு நினைச்சுப்பேன். இந்த ரூம் அவங்களோடது தான். அவங்க வீட்டை விட்டு ஓடினாலும் அவங்களை யாராலும் வெறுக்க முடியல்லை. அவங்களோட ஞாபகங்கள் எல்லாமே இங்கே இருக்கு. எனக்கு அவங்க ஞாபகம் எப்போ எல்லாம் வருமோ இங்கே வருவேன்.

 

நான் இங்கே வந்தால் என் மனசு இலேசாக பீல் பன்னும். என் பக்கத்துல இருந்து எனக்கு ஆறுதல் சொல்கிறது போல இருக்கும். அவங்களை ரொம்ப ரொம்ப புடிக்கும் நவி மா. எனக்கு இவங்களை போல ஒரு மனைவி வேணும்னு நினைச்சேன். அதே போல தான் நீ இருந்தாய். நீ சிவபெருமாளோட பொண்ணுன்னு தெரிஞ்சப்போ நான் இங்கே தான் இருந்தேன். அப்போ இவங்க நீ எனக்கு தான்னு சொன்னது போல இருந்தது.

 

அப்பொறம் தான் நீ எனக்கு மனைவியா வருவாய் அப்படிங்குற நம்பிக்கை வந்தது. இவங்க எனக்கு ஸ்பெஷல் நவி. தேவ், தேவ் என்று என் பின்னாடி சுத்திட்டே இருப்பாங்க. ஆனால் அவங்களையும், என் அப்பாவையும் கொன்னப்போ உன் அப்பா மேலே கொலை வெறியே வந்தது. ஆனால் நானும், சூர்யா மாமாவும் பொறுமையா இருந்து சாதிக்க நினைச்சோம். அதற்குள்ள சூர்யா மாமாவை கொன்னுட்டாங்க, என் அத்தையை போலவே” என்று கீழே அமர்ந்து அழத்துவங்கினான்.

 

அவன் அருகில் அமர்ந்து அவன் கண்ணீரைத் துடைத்தவள்,

 

“நீ அழாதடா எனக்கும் அழுகையா வருது” என்றாள்.

 

“நான் அழமாட்டேன் நவி மா, உன்னை கஷ்டப்படுத்துறது போல எதையுமே பன்ன மாட்டேன்” என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

 

“நான் உங்க அத்தை கூட பேசி இருக்கேன்” என்றாள் கிருஷி.

 

“வாய்ப்பே இல்லை. உனக்கு 23 வயசு. அத்தை இறந்து 23 வருஷமாகுது” என்றாள்.

 

“இல்லை டா, நான் அவங்க கூட பேசி இருக்கேன் டா” என்றாள் உறுதியாக.

 

“அப்போ கனவில் தான் பேசி இருக்கனும்” என்று கூற

 

“ஆமா டா. நான் சின்ன வயசுல இருக்கும் போது என் கனவில் வருவாங்க. நான் அம்மா கிட்ட சொல்லி இருக்கேன். ஒரு அக்கா என் கிட்ட கனவில் வராங்கன்னு. அம்மா அப்பா கிட்ட சொன்னாங்க. எனக்கு தாயம் கட்டிவிட்டாங்க, அதில் இருந்து கனவு வருகிறது இல்லை” என்றாள்.

 

“என்ன டி சொல்ற?” என்று கேட்க,

 

“நம்பு டா. நான் பொய் சொல்ல இல்லை” என்றாள்.

 

“அவங்க கனவில் பேசுவாங்களா?” என்று அவன் கேட்க,

 

“ஆமா டா, பட் என்னன்னு தெரியாது. நான் தூங்கி எந்திரச்ச உடனே அவங்க என்ன பேசினாங்கன்னு மறந்துடுவேன்” என்றாள்.

 

“நீ எனக்கு தான்னு சின்ன வயசுலயே சொல்ல வந்து இருப்பாங்க” என்று கூறி புன்னகைக்க, அவள் அவனை முறைத்தாள்.

 

“சூர்யா சித்தப்பா கல்யாணம் பன்ன இல்லையா?” என்று கேட்க,

 

“இல்லை, அவரு பனிமலர் அத்தையை காதலிச்சாரு. அவங்க வேறு ஒருத்தரை விரும்புறாங்கன்னு தெரிந்ததும் ஒதிங்கிட்டாரு. வேறு பொண்ணை கல்யாணம் பன்ன இல்லை” என்றான்.

 

“எங்க அம்மா சொன்னாங்க, நீ தான் என் புருஷன். என் கழுத்துல தாலி கட்டுவன்னு. யேன்னா அவங்க காதலுக்காக எதையும் பன்ன கூடியவங்கன்னு. இப்போ தான் புரியிது” என்றாள்.

 

“அப்படியா அத்தை சொன்னாங்க? அவங்க எங்களைப் பற்றி நல்லா புரிஞ்சு வச்சிருக்காங்க” என்று ஆதி கூற கிருஷி சிரித்தாள்.

 

“நீ வீட்டிற்கு வந்ததுக்கு அப்பொறமா தான் சிரிக்க ஆரம்பிச்சு இருக்காங்க. எங்க அத்தை போனதுக்கு அப்பொறமா எங்க குடும்பம் சிரிப்பையே மறந்து இருந்தாங்க” என்றான் ஆதி அவள் நெற்றியில் இதழ்பதித்து.

 

“நாம இந்த ரூமிற்கு ஷிப்டாகலமா?” என்று கேட்க,

 

“யேன் டி?” என்று ஆதி கேட்டான்.

 

“எனக்கு அவங்க கதையை கேட்டதுக்கு அப்பொறம் எனக்கு இந்த அறையை விட்டு வரதுக்கு மனசே இல்லை. நீ சொன்னதுக்கு அப்பொறமா அவங்க என் கூட இருக்கிறது போலவே நானும் பீல் பன்றேன்” என்றாள்.

 

“சரி டி நான், வேலைக்காரங்க கிட்ட சொல்லி கிளீன் பன்ன சொல்றேன்” என்று கூற

 

“வேணாம் நானே எல்லாவற்றையும் சுத்தம் செய்கிறேன், உனக்கு முடியுமா இருந்தால் மட்டும் எனக்கு உதவி பன்னு” என்றாள்.

 

அவனும் சரி என்று தன் தாயிடம் விடயத்தைக் கூறி கிருஷிக்கு உதவி செய்ய ஆரம்பித்தான்.

 

பனிமலரின் புகைபடத்தை துடைத்துக் கொண்டே ஆதி, “நவி நான் உன் அப்பாவை திட்டும் போது உனக்கு கோபம்  என் மேலே வரவே இல்லையா?” என்று கேட்க,

 

அவனைப் பார்த்தவள், “அவர் தப்பு பன்னி இருக்காரு. உங்க சைடும் தப்பு இருக்கு, அப்படி இருக்கும் போது நான் உன் மேலே மட்டும் எப்படி கோபப்பட முடியும்?” என்று கேட்க,

 

அதே நேரம் விகியிடம் இருந்து ஆதிக்கு அழைப்பு வந்தது. அதனால் கிருஷியிடம் கூறி அவன் வெளியே சென்று பேச ஆரம்பித்தான்.

 

“மச்சான் எங்கே டா இருக்க? உடம்பு இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்க,

 

“வீட்டில் இருக்கேன். நல்லா இருக்கேன் டா, என்ன விஷயம் மச்சான்?” என்று ஆதி கேட்க,

 

“குணாவை பிடிச்சிட்டோம் மச்சான். அவங்க தலை MLL தான், அவன் யாருன்னு இவனுக்கும் தெரியாது. பட் நம்ம டீம் அந்த MLL இப்போ திருனல்வேலியில் தான் இருக்கான்னு கண்டு பிடிச்சிட்டாங்க டா, நாங்க நாளைக்கே அங்கே கிளம்பி வரோம்” என்றான்.

 

“வா டா, நானும் வரேன்” என்று கூறினான்.

 

“நீ இப்போதே வராத டா. அவன் நிச்சயமா உன்னை வொச் பன்னிட்டே இருப்பான். உனக்கு இப்போ உடம்பிற்கும் முடியாது” என்று விகி கூற

 

“எனக்கும் தெரியும் டா, அவன் என்னை வொச் பன்னிட்டு இருக்கான்னு. நாங்க நெருங்கிட்டோம்னு கண்டுபிடிச்சால் அவனை காப்பாத்திக்க அவன் நிச்சயமா ஒரு தப்பு பன்னுவான். அந்த தப்பே அவனிடமே எங்களை அழைசிட்டு போகும் டா” என்றான்.

 

“அதைப் பற்றி அப்பைறமா பேசலாம்” என்று அழைப்பை துண்டித்தான் விகி.

 

அவன் அதே இடத்தில் நின்று யோசிக்க கிருஷியின் “அம்மா” என்ற கத்தலில் அறைக்கு ஓட கோமதி, நிலாவும் ஓடினர். அப்போதே வீட்டிற்கு வந்த திவியும் அவர்கள் பின்னால் சென்றாள்.

 

அங்கே கிருஷியின் காலில் ஒரு பூச்சாடி விழுந்து இருந்தது. அவளை அமர வைத்த ஆதி

 

“பார்த்து பன்ன மாட்டியா நவி?” என்று அவள் பொடமை உயர்த்தி மருந்து இட்டான்.

 

முதலில் திவி மூடிய அறைக்குள் செல்வதைப் பார்த்து அதிர்ந்தாள். ஏனென்றால் ஆதி அவனைத் தவிற வேறு எவரையும் இந்த அறைக்குள் வரவிடமாட்டான். உள்ளே நுழைந்தவள் கிருஷியின் காலில் ஆதி பிடித்த பெண்ணிற்காக வாங்கிய கொலுசை அணிந்து இருப்பதைக் கண்டு அதிர்ந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 13யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 13

பனி 13   சிவபெருமாளின் வீட்டிற்குச் செல்ல ஜீப்பில் ஏறியவன் தன் நண்பன் ஒருவனிடம்   “வீட்டில் யாரு யாரு இருக்காங்க?, மற்றவர்கள் எல்லோருமே போயிட்டாங்களா? இல்லை கொஞ்சம் பேர் சரி வீட்டில் இருக்காங்களா?” என்று கேட்க,   “மச்சான் நமளுக்கு

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 7யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 7

பனி 7   டாக்டர் கிருஷி விழித்து விட்டதாக கூறி அவர்களது சண்டைக்கு முற்றிப் புள்ளி வைத்து, அடுத்த டொம் என்ட் ஜெரி சண்டையை ஆரம்பிக்க உதவி செய்தார். மூவரும் கிருஷியைப் பார்க்க உள்ளே சென்றனர்.  கிருஷி மூவரையும் பார்த்தாள்.  

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 23யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 23

பனி 23   “மச்சான் தங்கச்சை சமாளித்தாலும் உன் குடும்பத்தை சமாளிக்க முடியுமா?” என்று விகி கேட்க,   “கேள்வியை மாற்றி கேக்குற டா” என்றான் ஆதி.   “புரியிர மாதிரி சொல்லு?” என்று கூற   “என் குடும்பத்தை சமாளிப்பேன்,