Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-35 (நிறைவுப் பகுதி)

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-35 (நிறைவுப் பகுதி)

35 – மீண்டும் வருவாயா?

 

பின்னர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாட நேத்ராவிற்கு ஒவ்வொருவரும் பரிசு தர ஜீவி “அம்மா..இந்தாங்க…” என ஒரு போட்டோ பிரேம் நீட்ட அதில் விஜய் நித்து ஜீவி ஜீவா நால்வரும் ஒன்றாக இருக்கும் பள்ளி விழாவின் போது எடுத்த புகைப்படம் இருக்க நேத்ரா விஜய் இருவரும் “ஹே சூப்பர் டா குட்டி ..இது எப்படி உனக்கு கிடைச்சது.. குமார் மாமா கூட்டிட்டு போயி எங்க மிஸ் கிட்ட பேசி போட்டோக்ராபர் அங்கிள் பிடிச்சு இத மட்டும் தனியா பிரேம் பண்ணி வாங்கினோமே…பிடிச்சிருக்கா மம்மி.?” என வினவ

நேத்ரா மகிழ்ச்சியில் “சோ ஸ்வீட் டா குட்டி மா.. ரொம்ப பிடிச்சிருக்கு… தேங்க் யூ சோ மச்..” என கட்டிக்கொண்டு முத்தமிட அனைவரும் ஜீவாவிடம் “டேய் இப்போவது சொல்லு டா…நீ அப்டி உங்க அம்மாவுக்கு என்னதான் கிப்ட் குடுக்கப்போற..” என ஜீவா “வெயிட் வெயிட்…” என உள்ளே ஓடினான்..

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க அவன் வந்து நேத்ராவிடம் ஒரு புடவையை நீட்டினான்..

அவளுக்கு மகிழ்ச்சி உடன் ஆச்சரியமும் கூட.. அவனிடம் மண்டியிட்டு “ஜீவா.. இது இந்த சாரி யாரு சூஸ் பண்ணது? எப்போ எடுத்தது?” என

ஜீவா “அதுவா மம்மி.. எனக்கு உடம்பு சரில்லாம இருந்தபோது நீங்க இதே மாதிரி சாரி தானே கட்டிட்டு வந்திங்க.. நான் வொமிட் பண்ணிட்டேன். அதோட அன்னைக்கு ஹாஸ்பிடல் போயிட்டு மழைல நாம வரும்போது கார் டோர்ல பட்டு அந்த சாரி கிழிஞ்சுபோச்சுல.. அதான் எனக்கு கஷ்டமாவே இருந்தது.. நான் அப்பா ஜீவி எல்லாரும் ஷாப்பிங் போனோம்ல அப்போ உங்களுக்காக சாரி அதுவும் இதேமாதிரி தான் எடுக்கணும்னு நான் தான் மம்மி சூஸ் பண்ணேன்..” என கூற அவள் வார்த்தைகளற்ற மகிழ்ச்சியில் அவனை அணைத்துக்கொண்டாள். “தேங்க்ஸ் செல்லம்..” என

அனைவரும் செமையா சூஸ் பண்ணிருக்கியே.. சூப்பரா இருக்கு.. என கூற அவன்

 

பின்னர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாட நேத்ராவிற்கு ஒவ்வொருவரும் பரிசு தர ஜீவி “அம்மா..இந்தாங்க…” என ஒரு போட்டோ பிரேம் நீட்ட அதில் விஜய் நித்து ஜீவி ஜீவா நால்வரும் ஒன்றாக இருக்கும் பள்ளி விழாவின் போது எடுத்த புகைப்படம் இருக்க நேத்ரா விஜய் இருவரும் “ஹே சூப்பர் டா குட்டி ..இது எப்படி உனக்கு கிடைச்சது.. குமார் மாமா கூட்டிட்டு போயி எங்க மிஸ் கிட்ட பேசி போட்டோக்ராபர் அங்கிள் பிடிச்சு இத மட்டும் தனியா பிரேம் பண்ணி வாங்கினோமே…பிடிச்சிருக்கா மம்மி.?” என வினவ

நேத்ரா மகிழ்ச்சியில் “சோ ஸ்வீட் டா குட்டி மா.. ரொம்ப பிடிச்சிருக்கு… தேங்க் யூ சோ மச்..” என கட்டிக்கொண்டு முத்தமிட அனைவரும் ஜீவாவிடம் “டேய் இப்போவது சொல்லு டா…நீ அப்டி உங்க அம்மாவுக்கு என்னதான் கிப்ட் குடுக்கப்போற..” என ஜீவா “வெயிட் வெயிட்…” என உள்ளே ஓடினான்..

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க அவன் வந்து நேத்ராவிடம் ஒரு புடவையை நீட்டினான்..

அவளுக்கு மகிழ்ச்சி உடன் ஆச்சரியமும் கூட.. அவனிடம் மண்டியிட்டு “ஜீவா.. இது இந்த சாரி யாரு சூஸ் பண்ணது? எப்போ எடுத்தது?” என

ஜீவா “அதுவா மம்மி.. எனக்கு உடம்பு சரில்லாம இருந்தபோது நீங்க இதே மாதிரி சாரி தானே கட்டிட்டு வந்திங்க.. நான் வொமிட் பண்ணிட்டேன். அதோட அன்னைக்கு ஹாஸ்பிடல் போயிட்டு மழைல நாம வரும்போது கார் டோர்ல பட்டு அந்த சாரி கிழிஞ்சுபோச்சுல.. அதான் எனக்கு கஷ்டமாவே இருந்தது.. நான் அப்பா ஜீவி எல்லாரும் ஷாப்பிங் போனோம்ல அப்போ உங்களுக்காக சாரி அதுவும் இதேமாதிரி தான் எடுக்கணும்னு நான் தான் மம்மி சூஸ் பண்ணேன்..” என கூற அவள் வார்த்தைகளற்ற மகிழ்ச்சியில் அவனை அணைத்துக்கொண்டாள். “தேங்க்ஸ் செல்லம்..” என

அனைவரும் செமையா சூஸ் பண்ணிருக்கியே.. சூப்பரா இருக்கு.. என கூற விஜய் “டேய் நான் எடுத்து குடுத்த சாரி தானே..” என வெறுப்பேற்ற அதேபோல் ஜீவாவும் “நோ இது நான் தான் அம்மாக்கு எடுத்து தந்தது… ” என கூற அவனது செய்கையை அனைவரும் ரசிக்க விஜய் விடாமல் “டேய் சூஸ் பண்ணது தான் நீ.. அமௌன்ட் நான் தானே குடுத்தேன்.. யார் அமௌன்ட் குடுத்தாங்களோ அவங்க தான் எடுத்து தந்ததா அர்த்தம்…” என எல்லோரும் மெல்லமாக சிரிக்க அனைவரையும் முறைத்தவன் வேகமாக உள்ளே சென்றான்.

“ஏன்டா அவன்கிட்ட வம்பிழுக்கிற..பாவம் பிள்ளை…கோவிச்சுக்கிட்டு பீல் பண்ணிட்டு போறான் பாரு ..” என கூற விஜய் “அவனா.. கோவிச்சுக்கிட்டான்னு சொல்லுங்க.. ஆனா பீல் எல்லாம் இல்லை. அவனை பத்தி நீங்க தெரியாம பேசிட்டிருக்கிங்க.”

மீண்டும் ஜீவா உள்ளேயிருந்து வர அனைவரும் ஆவலாக பார்த்தனர்.

“டாடி..இந்தாங்க.”என ஒரு டப்பாவை குடுத்தான்..

“என்ன டா இது?”

“ம்ம்.. இது இங்க நீங்க எல்லாரும் எனக்கு சேத்தி வெக்க குடுத்த அமௌன்ட்… இந்த பாக்ஸ்குள்ள  தான் வெச்சிருக்கேன்.. நீங்களே வெச்சுக்கோங்க.. வசந்த்திடம் வந்தவன் “அங்கிள் அதுல எவ்ளோ இருக்குனு எனக்கு தெரியாது. பாலன்ஸ் எவ்ளோனு சொல்ல சொல்லுங்க. நான் அப்புறமா குடுத்திடுவேன்..” என அமைதியாக சென்று முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு நித்துவின் அருகில் நின்றான். அனைவரும் அதிர்ச்சியில் இருக்க விஜயே சற்று ஆடிப்போய்விட்டான்.. இருந்தும் முதலில் நிதானத்திற்கு வந்த விஜய் “சரி சரி..பரவால்ல..இந்த வெச்சுக்கோ..” என

“ம்ஹூம்..இட்ஸ் ஓகே..அது உங்ககிட்டேயே இருக்கட்டும்… ” என தலையை அசைக்க அனைவரும் கூறியும் அவன் மறுத்துவிட நித்து “கண்ணா..என்ன இது.. அப்பாகிட்ட போயி இதுக்கு எல்லாம் கோவிச்சுக்கிட்டு…உன் டாடி எப்போவும் இப்டி உன்கிட்ட தானே வம்பிழுப்பாரு. உனக்கு தெரியும் தானே..அப்புறமும் ஏன் இப்டி பிடிவாதம் பண்ற… டாடிகிட்ட இதுக்கு எல்லாமே கோவிச்சுப்பாங்க?”

ஜீவா “நோ மம்மி.. இது நான் மட்டும் தான் என் மம்மிக்கு எடுத்து குடுத்த சாரி அதுவும் பஸ்ட்டா..சோ யார்கூடவும் இத ஷேர் பண்ணமாட்டேன்..மத்தபடி எனக்கு கோபம் எல்லாம் இல்ல.. ” என்றான்.. விஜயும் புன்னகையுடன் “ம்ம்..கிரேட்.. அப்போ டாடி பிடிக்குமா? வந்த உடனே மாட்டிவிட்ட?”

ஜீவா “அது சும்மா.. ஜாலிக்கு தான்… பட் எனக்கு எப்போவுமே உங்கள ரொம்ப பிடிக்கும்.. ஐ லவ் யூ பா..” என இவனும் கட்டிக்கொண்டான்.

 

பின் அனைவரும் படுக்க சென்றதும் நித்து புடவையை பார்க்க ஜீவாவை பார்க்க என எதிரே அமர்ந்திருக்க உள்ளே வந்த விஜய் “ஓய்.. என்ன டியர் உன் புள்ளைங்கள மட்டுமே தான் பாப்பியா கவனிப்பியா?” என கேட்டுக்கொண்டே டிரஸ் மாற்றி விட்டு அருகே வந்து அமர்ந்தான்.

“ஷ்ஷ்..ஏன் கத்துறிங்க..”

“சரி சரி.. என்ன பண்ணிட்டு இருக்க?” என அவனும் மெதுவாக கேட்க

“ஜீவா அன்னைக்கு அவ்ளோ காய்ச்சல் அதுலையும் எனக்கு கார்ல பட்டு புடவை கிளிஞ்சது  எல்லாம் கவனிச்சிருக்கான்ல .. அதே மாதிரி டிசைன்ல கலர்ல எப்படி ஞாபகம் வெச்சிருக்கான் பாருங்களேன்..”

“ம்ம்.. அந்த வீக் ஷாப்பிங் போகும் போது இவன் எந்த மாதிரி சாரி தேடி போறானே தெரியாம பின்னாடியே போனேன். அவனுக்கு என்ன மாடல் நேம் சொல்லவும் தெரில.. கடைசில ஒரு கடைல இத பாத்து என் நித்து இந்த மாதிரி சாரி வெச்சிருந்தாலனு  நான் ஒரு நிமிஷம் பாத்துட்டு நின்னேன். இவன் சூப்பர் டாடினு சொல்லிட்டு நேரா உள்ள போனான். கலர் சொல்லி அதே மாதிரி கேட்டான்.. எனக்கு ஆச்சரியமா இருந்தது..அவன்கிட்ட கேட்டதும் “நிரும்மா க்கு சொல்லிட்டான்..அப்போ நிரு வேற யாரோ தானே.. புடவை எடுத்து குடுக்கறது எல்லாம் சரி வராது நானும் எவ்வளவோ சொல்லியும் கேக்காம வாங்கினான்..” அன்னைக்கு இவன் பண்ண அட்டகாசம் இருக்கே.. என சிரிக்க

நித்துவும் சிரித்துவிட்டு “ஆனா விஜய் உங்களுக்கு தெரியுமா இந்த சாரி தான் நான் இந்த வீட்டை விட்டு போகும்போது கடைசியா கட்டிருந்தது.. வேற எதுவுமே இங்கிருந்து நான் எடுத்திட்டு போகல.. வீட்டை விட்டு போயும்கூட இந்த சாரி மட்டும் அப்போ அப்போ எடுத்து பாத்துப்பேன்.. அன்னைக்கு நடந்த பிரச்சனையும் அந்த இழப்பும் சேந்தே ஞாபகத்துக்கு வரும்.. சோ கட்டவே மாட்டேன்.. பல வருஷம் கழிச்சு அன்னைக்கு ஜீவாவுக்கு உடம்பு சரி இல்லேனு சொன்னதும் அவசரத்துல எந்த சாரி எடுத்து கட்டுனேனு கூட நான் பாக்கல.. வீட்டுக்கு வந்து அது கிழிஞ்சு இருக்கும்போது தான் பாத்தேன்.. ஏதோ சங்கடமாவும் இருந்தது.. இருந்த ஒரே நினைவு..அதுவும் போச்சுன்னு..ஆனாலும் ஜீவாவை பாத்ததும் சரி ஆகிடுச்சு.. அப்புறம் நான் அதை பத்தி கண்டுக்கல.. ஆனா இன்னைக்கு இவன் அதே மாதிரி ஒண்ணு வாங்கிட்டு வந்து தந்ததும் என்ன சொல்றதுனு தெரில.. சோ ஸ்வீட் ல..” என

“ம்ம்.. அதுங்க இரண்டுமே ஸ்வீட் தான்..ஆனா அப்போ நான் இல்லையா?” என அவன் பாவமாக கேட்க “நீங்க தானே ..குழந்தைங்க கூட எனக்கு கிப்ட் கொடுத்தாச்சு..நீங்க எங்க பாஸ்?..” என விஜய் “நான் தர கிப்ட் உடனே நீ பாக்க முடியாதே..”

“ஏன் ஆர்டர் ஏதாவது பண்ணிருக்கீங்களா? உடனே வராதா?” என அவளும் சீரியசாக கேட்க

விஜய் “அது உடனே வராது.. ப்ரோஸஸ் ஆகணும்ல.. மினிமம் 10மந்த்சாவது ஆகும்..” என அவள் “உங்களை…” என தலையணை எடுத்து அடிக்க வர அவன் அதோடு அவளை அணைத்தவன் “ஷ்ஷ்..ஏன் மா கத்துற.. குழந்தைங்க தூங்கிறாங்க.. அதோட என்னோட இரண்டு செல்லம்ஸ்க்கு தம்பி தங்கச்சி வேணுமாம்… வீட்லயும் எல்லாரும் குழந்தையை குட்டில இருந்தே வளத்தணும்னு சொல்ராங்க.. நானும் வேற ஓகே சொல்லிட்டேன். அதோட நீ அப்போ ப்ரெக்னன்ட்டா இருந்த போது நான் கூட இலேல..சோ இப்போ நான் பாத்துக்கறேன்..” என அவன் காரணங்களை அடுக்கி கொண்டே போக அவன் கைகளும் எல்லை மீறியது..

 

மறுநாள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்து பேசிவிட்டு கோவிலுக்கு சென்றுவிட்டு வந்தவர்கள் மாலையில் அப்பார்ட்மெண்ட் கிளம்ப தயாராகினர்… வசந்தா சுந்தரம் “என்னதான் வளந்தாலும் நம்ம புள்ளைங்க உயிர் தான் முக்கியம்.. நாம எடுக்கற முடிவு சரியா தான் இருக்கும்னு நாங்க அவசரப்பட்டுட்டோம்.. ஆனா ஜீவி ஜீவா இரண்டுபேரும் இப்போதான் வளராங்க சின்னவங்கன்னாலும் அவங்களுக்கு ஒரு மனசு இருக்கும்னு நீங்க இரண்டுபேரும் புரிஞ்சிகிட்டு எவ்ளோ விஷயம் பாத்து பாத்து பண்றீங்க.. வெறும் அன்பும் மட்டும் காட்டி அவங்க சுயத்தை இழக்க வெக்கக்கூடாது. அவங்க உணர்வுகளை அழிக்ககூடாதுனு இப்போ நல்லாவே புரியுது.. ஜீவா ஜீவி இரண்டுபேரும் ரொம்ப லக்கி..நீங்க அங்க இருந்தாலும் சந்தோசமா இருங்க.. தோணும் போது வந்திட்டு போங்க.. லீவு விட்டா கண்டிப்பா கூட்டிட்டு வாங்க.. ” என மனதார வாழ்த்தி அனுப்பிவைத்தனர்..

ஜீவி ஜீவா விஜய் நித்துவும் அவர்களின் அழகான கூட்டுக்குள் ஒரு தனி உலகத்தில் வாழ பறந்து சென்றனர்.

 

 

 

————————————- **************முற்றும்****************** ————————————

 

 

1 thought on “ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-35 (நிறைவுப் பகுதி)”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-28ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-28

28 – மீண்டும் வருவாயா? வீட்டிற்கு நேத்ரா விஜய் இருவரும் குழந்தைகளுடன் வந்ததும் ஆரத்தி எடுத்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். அனைவரும் அவளிடம் விசாரிக்க என்ன வேணுமோ சொல்லு நாங்க செஞ்சு தரோம் நீ நல்லா ரெஸ்ட் எடுடா மா..

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-14ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-14

14 – மீண்டும் வருவாயா?   விஜய் கூறியது போல என்றும் தன் புன்னகை மறையா முகத்தோட வலம் வந்த நேத்ரா எதிர்பார்த்த அந்த காலமும் வந்தது. மாதங்கள் கடக்க மீண்டும் அவன் இவளை தேடி வந்தான். பெரியர்வர்கள் அனைவரும் மனதார

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-13ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-13

13 – மீண்டும் வருவாயா?     சிவகாமி “அதோட உங்க குடும்பமோ பெரிய குடும்பம், நிறையா பேர் இருப்பாங்க. நீங்க கூட இருந்தாலாவது பரவால்லை. கல்யாணம் பண்ணி அவங்ககிட்ட விட்டுட்டு போறது, எப்படி ஒத்துவரும்னு தெரில..தப்பா எடுத்துக்காதீங்க தம்பி. இப்போ