Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 11

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 11

பனி 11

 

“நவி” என்று ஆதி கத்தினான். கீழே விழுந்த கிருஷி எழுந்து நின்ற ஐந்து நிமிடங்களில் ஆதி அங்கு பைகில் வந்து இறங்கியவன் பைக்கை ஸ்டேன்ட் வைத்து நிற்பாட்டாமல் கீழே கிடத்தி விட்டு அவள் அருகில் ஓடி வந்தான். கிருஷி கையில் ஏற்பட்ட சிராய்ப்புகளை பார்த்து ஊதிக் கொண்டிருக்குமே போதே ஆதி வருவதைக் கண்டாள்.

 

“நவி மா உனக்கு ஒன்னும் ஆக இல்லையே?” என்று பதறிக் கேட்க,

 

“இல்லை பா, நீ எப்படி இங்கே?” என்று அவள் கேட்க,

 

அதை காதில் போடாமல் அவளுக்கு அடிபட்டு இருக்கின்றதா என்று பார்த்தவன், அவளை அணைத்துக் கொண்டான்.

 

அவனது முதல் அணைப்பை  எதிர்பார்க்காத கிருஷி அதிர்ந்து இருக்க அவள் உடல் ஒரு முறை நடுங்கி அடங்கியது. அதை உணர்ந்த ஆதி புன்னகைத்து அவளை இறுக்கமாக அணைத்தான்.

 

“ரொம்ப பயந்துட்டேன் நவி மா உனக்கு ஏதாச்சும் ஆயிருச்சோன்னு?” என்று பயத்தில் தழுத்த குரலில் கூற, அவள் அவன் பயத்தை உணர்ந்தாள்.

 

அவள் பேச முயல அவளுக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை. ஆனால் தான் பாதுகாப்பாக தற்போது இருப்பதை உணர்ந்தாள். கிருஷியோ அதே நிலையில் நிற்க, ஆதி அவளிடம் இருந்து விலகியவன்

 

“ஏன் அமைதியா இருக்க?” என்று கேட்க,

 

“அது அது,” என்று தடுமாறியவள் ஒரு நிலைக்குப் பின் தன்னை சமன்படுத்திக் கொண்டு,

 

“சும்மா தான்” என்று கூறும் அவன் கிருஷியின் கைகளைப் பார்க்க, அதில் சிராய்ப்புகள் ஏற்பட்டு இரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது.

 

அதைப் பார்த்தவன் உதட்டைக் குவித்து காயத்திற்கு ஊத, அவனது டீம் மெம்பர்சும் அங்கே வர பர்ஸ்ட் எய்ட் பொக்சை அவனிடம் வழங்கினார்கள். அதை எடுத்து அவளுக்கு அவனே அவளுக்கு டிரசிங் செய்துவிட்டான். அதற்கிடையில் சிறிய முனகல்களும், கண்ணில் நீர் அருவியாய் வழிந்து ஓடியது குட்டிபேபியிற்கு.

 

‘இதைக் கூட தாங்க முடியாத அளவிற்கா இவள் மென்மையாக இருக்கிறாள்’ என்று புன்னகைத்தான்.

 

“என்ன நடந்தது குட்டிபேபி?” என்று ஆதி கேட்க,

 

அவள் நடந்த அனைத்தையுமே ஒன்றுவிடாமல்  கூறினாள்.

 

“லக்ஷன் அவ என் ஸ்டூடன்ட் தான். அவளுக்கு ஏதாவது ஒன்னுன்னா, நான் தான் பதில் சொல்லனும். பயமா இருக்கு அவ கிடைச்சுடுவாளா?” என்று கேட்க,

 

“நிச்சயமா” என்றான்.

 

அதே நேரம் அவனது டீம் மெம்பரஸ் சிலர் தியாவையும் இன்னும் மூன்று ஆண்களையும் அழைத்து வந்திருந்தனர்.

 

“சேர் நாங்க டிரக்ஸ் சப்ளே பன்ற இந்த இரண்டு பையனையும் பிடிச்சிட்டு வரும் போது இந்த பொண்ணும், பையனும் ஓடிட்டு இருந்தாங்க. அதான் அவங்களையும் பிடிச்சோம். அப்போ தான் நீங்க இங்கே வருகிறதா இன்போர்ம் பன்னிங்க” என்றார் அதில் ஒருவர்.

 

டிரக்ஸ் சப்ளே பன்னும் இருவரையும் சிலருடன் அவர்களின் இடத்திற்கு அனுப்பி வைத்தான் ஆதி. மற்றவர்களும் தியாவும் அப்பையனும் அங்கே இருந்தனர்.

 

“யாரிவன்?” என்று அதட்டலாக தியாவிடம் கேட்க,

 

அவள் பயத்தில் “சேர் நாங்க ஒருத்தருக்கு  ஒருத்தர் காதலிக்கிறோம். எனக்கு வீட்டில் மாமாவை கல்யாணம் பேச டிரை பன்னிட்டு இருக்காங்க. அதான் நாளைக்கு கல்யாணத்துக்காக இவன் தாலியை வாங்கி என் கிட்ட கொடுத்துட்டு போக வந்தான்” என்றாள்.

 

“நாளைக்கா?” என்று ஆதி கேட்க,

 

அப் பையன் “ஆமா சேர், இவளை வீட்டை விட்டு எங்கேயுமே அனுப்ப மாட்டாங்க. இங்க செமினார் அதுவும் பல பொண்ணுங்க, இன்சார்ஜூக்கு இரண்டு பெண் ஆசிரியர்கள் வராங்கன்னு சொன்னதுக்கு அப்பொறமா தான் அனுப்பினாங்க. இதை விட்டால் இவளை வெளியே கூட்டிட்டு வர முடியாது. அதான் நாளைக்கே கல்யாணம் பன்னலாம்னு முடிவு பன்னோம்” என்று கூற,

 

ஆதி அவனை அறைந்தான்.

 

“எத்தனை வயசுடா உனக்கு?” என்று கேட்க,

 

“21” என்றான்.

 

“உனக்கு?” என்று அவள் புறம் திரும்பி கேட்க,

 

“19” என்றாள் நடுங்கிக் கொண்டே.

 

“சரி இவளை கல்யாணம் பன்னி இவளை எப்படி காப்பாற்றுவ?” என்று கேட்க,

 

“கூலி வேலை செஞ்சு சரி காப்பாத்துவேன்” என்றான்.

 

“எத்தனை நாளைக்கு? அந்த கூலியில் தான் நீயும் படிக்கனும், அவளும் படிக்கனும். உங்க சொந்த தேவைகளை நிவர்த்தி செய்யனும். நீங்க தங்க போற வீட்டுக்கூலி இதெல்லாத்துக்கும் சேர்த்து உன்னால் சம்பாதிக்க முடியுமா? எந்த கூலிக்கு வேலை செய்கிறவன் இவளோ சம்பாதிப்பான்?” என்று கேட்க இருவருமே அமைதியாய் இருந்தனர்.

 

“சரி நீங்க கல்யாணம் பன்னிட்டு நல்லா வாழுறிங்க, அப்போ உங்களுக்கு பெண் குழந்தை பிறக்குறா. அவ வளர்ந்து சின்ன வயசுலேயே ஒருத்தன் கூட உங்களை மாதிரியே  ஓடி போயிட்டா என்ன பன்னுவிங்க?” என்றான். அதிலும் உங்களை மாதிரியே என்பதை அழுத்தமாகக் கூறினான்.

 

“சேர்” என்று இருவரும் அதிர்ச்சி, கோபம் என்று ஒருசேரக் கூற

 

“அதென்ன உங்களுக்கு இருக்கிறது மானம்,மரியாதை. ஆனால் உங்க அப்பா, அம்மாவிற்கு அந்த மானம், மரியாதை, கௌரவம் இல்லையா? உங்களை அடிச்சி வந்தால் அது இரத்தம், மற்றவர்களுக்கு தக்காளி சோசா?” என்றான் கோபமாக.

 

அதற்கும் இருவரும் பதில் கூறவில்லை.

 

“உங்களை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கனும்னு நினைக்குறவங்களுக்கு நாம துரோகம் பன்னுமனு நினைச்சா, நம்ம பிள்ளை கண்டிப்பா நமக்கு துரோகம் பன்னுவா. ஒன்னு நல்லா ஞாபகம் வச்சிக்கங்க, நாம ஏதாவது ஒரு விஷயத்தை செய்யும் போதோ இல்லை பேசும் போதோ நமக்கு யாராவது அதையே திருப்பி பன்னா நமளுக்கு வருகிற உணர்வு தான் உண்மையானது. நம்மளுக்கு கஷ்டமா இருந்தால் அவங்களுக்கும் கஷ்டமா இருக்கும். நமக்கு சந்தோஷமா இருந்தால் அது அவங்களையும் சந்தோஷபடுத்தும்” என்றான்.

 

“சொரி சேர்” என்று இருவரும் ஒரு சேரக் கூற,

 

“யேமா நீ பொண்ணு தானே கொஞ்சமாவது யோசிச்சு முடிவு எடுக்க மாட்டியா? உன்னையும் இந்த கோலேஜையும் நம்பி தானே இங்க அனுப்பினாங்க? அவங்களுக்கு துரோகம் பன்றோமே, நீ படிச்ச இந்த  கோலேஜிற்கு கெட்ட பெயர் வருமே, அதனால் பல பொண்ணுங்களோட வாழ்க்கை வீணா போகுமேன்னு கூடவா யோசிக்க இல்லை? நீ ஓடி போயிட்டன்னா உன் குடும்பத்துல இனி எந்த பொண்ணையுமே படிக்க விடமாட்டாங்க, எங்க உன்னை மாதிரியே அவங்களும் ஓடி போயிருவாங்களோன்னு பயந்து. அத்தனை பொண்ணுங்களோட கனவையும் நீ ஒருத்தி நாசமாக்கி இருப்பாய். அவங்க கண்ணீர் உங்க இரண்டு பேரையும் நிம்மதியா வாழ விட்டு இருக்குமா?” என்று கேட்க,

 

இருவருமே அமைதியாக நின்றனர்.

 

“உலகத்துல எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பை பொழியிறது நம்மளை பெத்தவங்க மட்டும் தான். அவங்களோட தூய்மையான பாசத்துக்கு துரோகம் பன்னாதிங்க, அவங்களை அவமானபடுத்துகிறது போல எந்த ஒரு விஷயத்தையும் பன்னாதிங்க. நிச்சயமா அது உங்களை பல மடங்கு திருப்பி தாக்கும்” என்றான்.

 

“சரி நீ இந்த பொண்ணு வீட்டுல பேசி பார்த்தாயா?” என்று கேட்க,

 

“இல்லை சேர்” என்றான் தலை குனிந்துக் கொண்டே.

 

“உங்களை எல்லாம் என்ன டா பன்றது” என்றான் கோபத்தில் நெற்றியை விரல்களால் நீவிக் கொண்டே.

 

“எதையும் அவங்க கிட்ட பேசமால் இதை மாதிரி பன்றதால தான் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் பிரச்சனை வந்து பகையா மாறுது. நீ அவங்க கிட்ட தெளிவா எடுத்து சொல்லி இருந்தால் கூட அவங்க யோசிச்சு இருந்திருப்பாங்க”

என்றான் ஆதி.

 

“சேர் நான் படிச்சு முடிச்சுட்டு நல்ல வேலைக்கு போயிட்டு இவங்க வீட்டில் போய் பொண்ணு கேட்குறேன் சேர். அதுவரைக்கும் இவளை அந்த கடவுள் கிட்டையே பொறுப்பா விடுறேன். இவ எனக்காக பிறந்தவளா இருந்தால் நிச்சயமா என் கிட்ட வந்து சேருவா. யாரையும் கஷ்டபடுத்தி நான் வாழ மாட்டேன் சேர்” என்றான்.

 

அவளும் அதற்கு ஒப்புக் கொள்ள இருவரையும் ஆதி பெருமையாகப் பார்த்தான். இருவருமே கண்களால் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறி விட்டு கண்ணீருடன் தத்தமது இருப்பிடங்களுக்குச் சென்றனர்.

 

இருவருமே இணைய வேண்டும் என்று ஆதி மனதால் வேண்டிக் கொண்டான்.

 

இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த கிருஷி ஆதியை இமைக்க மறந்து பார்த்தாள்.

 

“லக்ஷன் நீயா இது?” என்று பிரம்மிப்பாகக் கேட்க,

 

“சாத் சாத் நானே” என்றான் புன்சிரிப்புடன்.

 

“தேங்ஸ்” என்றவள் வேறு எதையும் கூறாமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

 

அவனும் தன் டீமுடன் தன் இடத்திற்கு சென்றுவிட்டான்.

 

ஆதியின் அணைப்பும், அவன் கூறியது அனைத்துமே அவள் காதில் ஒலித்து அவளை தூங்கவிடாமல் இம்சித்தன . ஆதியின் மேல் மரியாதை அதிகரித்ததை உணர்ந்தவள் அவன் அணைப்பு நினைவிற்கு வர அவள் கண்ணங்கள் சிவந்தன. அப்போதே ஆதியின் மேல் தனக்கு ஈர்ப்பிற்கும் மேலாக ஏதோ ஒன்று உள்ளதை அறிந்துக் கொண்டாள்.

 

கிருஷியும் செமினார் முடிந்தவுடன் சென்னையை நோக்கி பயணப்பட்டாள். சில நாட்களில் ஆதியும் இங்கு வந்து சேர்ந்தான். பவியின் மூலமாக கிருஷி அறியாமல் அவளது தந்தையின் மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டான்.  சிவபெருமாளின் அந்த எண் தன் குடும்பத்தினரைத் தவிற வேறு யாரிடமும் இருக்கவில்லை. ஆதியிடம் உள்ள சிவபெருமாளின் எண் அனைவரிடமும் இருப்பதால் இருவரும் ஒரு நபரே என்பதை அறியத்தவறினான்.

 

சில நாட்களுக்குப் பின் ஆதி சிவபெருமாளுக்கு அழைத்தான்.

 

“ஹலோ” என்று அவர் கூற

 

“ஹலோ நீங்க கிருஷியோட அப்பாவா?” என்று கேட்க,

 

“ஆமா, நீங்க யாரு?” என்று கேட்க,

 

“நான் சென்னை சிடியோட DSP ஆதி பேசுறேன் அங்கிள்,உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் ஒன்னு பேசனும் என்றான்.

 

“சொல்லு பா” என்று அவர் கூற

 

“நான் சுற்றி வளைத்து பேச விரும்பல்லை அங்கிள். நான் உங்க பொண்ணை காதலிக்கிறேன், அவளை கல்யாணம் பன்னுமனு ஆசைபடுறேன். அவ என்னை காதலிக்கிறா பட் அவ என் கிட்ட அதை சொல்ல மாட்டா அங்கிள். யேன்னா அவ நீங்க சொல்கிற மாப்பிள்ளையை தான் கல்யாணம் பன்னுவேன்னு உறுதியா இருக்கா. நான் என் காதலை இன்னும் அவ கிட்ட சொல்லவே இல்லை. நான் சொன்னாலும் அவ ஏத்துக்க மாட்டா. அவ அவளோட புருஷனை காதலிக்கனும்னு நினைக்கிறா. நீங்க என்னை மாப்பிள்ளையா ஏத்துகிட்டா மட்டும் தான் அவ கிட்ட என் காதலை சொல்லுவேன். இது சத்தியம் அங்கிள். என்னை பற்றி தெரியனும்னா நீங்க கமிஷனர் கிட்டையே கேளுங்க. உங்களுக்கு என்னை பிடிச்சு இருந்தால் மட்டும் இதே நம்பருக்கு கோல் பன்னுங்க” என்று அழைப்பைத் துண்டித்தான்.

 

‘தன் மகளிடம் தன் காதலை கூறாமல் தன் அனுமதியோடு அவளிடம் காதலை கூற வேண்டும்’ என்ற கண்ணியம், தெளிவாக கூறிய அவனது தைரியம் பிடித்து இருந்தாலும் அவனை பற்றி தெரிந்துக் கொள்வதற்காக உடனே டி.ஐ.ஜி  ஐ அனுகினார்.

 

அவரிடம் விசாரித்த போது நல்ல பையன், நல்ல குடும்பம், கிருஷியிற்கும் அவர்களது குடும்பத்திற்கும் பொருத்தமான சம்மந்தம் என்று கூற தன் நண்பனின் நம்பிக்கையான வார்த்தையால் அவர் வேறு எதைப் பற்றியும் விசாரிக்கவில்லை.

 

இரண்டு நாட்களுக்குப் பின் அவரே ஆதியை தொடர்பு கொண்டார்.

 

“உங்க குடும்பத்து கிட்ட சொல்லி கிருஷியை முறைப்படி பொண்ணு கேட்டு வாங்க மாப்பிள்ளை” என்று அழைப்பைத் துண்டித்தார்.

 

ஆதியோ வானத்தில் இறக்கை கட்டி பறந்துக் கொண்டு இருந்தான்.

 

சிவபெருமாள் கிருஷிக்கு அழைத்து ஆதி கூறியதைக் கூற அவள் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் அதில் நிம்மதி, இன்பம் உள்ளது என்பதை உணர்ந்தவள் தானும் ஆதியைக் காதலிப்பதை உணர்ந்துக் கொண்டாள்.

 

அடுத்த நாள் பவியின் வீட்டிற்குச் செல்வதற்காக, பவி கிருஷி இருவரும் பஸ் நிலையத்தில் நின்றிருக்க, அங்கு ஆதி, விகி இருவரும் வருகை தந்தனர்.

 

விகி, பவி இருவரும் தனியாகப் பேச, ஆதி கிருஷி ஒன்றாக இருந்தனர்.

 

“மிஸ்டர் ஆதிலக்ஷதேவன் நீ என்னை காதலிக்குறன்னு தெரியும். எங்க இரண்டு குடும்பத்து முன்னாடியும் நீ எனக்கு புரொபோஸ் பன்னு நான் உன் காதலை ஏத்துக்குறேன். என் ஊர் என் வீடு எதையும் நான் சொல்ல மாட்டேன், நீயா கண்டுபிடிக்கனும் அதுவும் உன் பொலிஸ் பவரை யூஸ் பன்னாமல்” என்க,

 

“ஒகே நவி மா, பட் இப்போ இங்கே எல்லாரும் முன்னாடியும் ஒரு தடவை..” என்று

 

“ஐ லவ் யூ நவி” என்று கத்தினான்.

 

“நம்ம பெமிலி முன்னாடி பொண்ணு பார்க்க வருகிறப்போ திரும்ப சொல்லு, அப்போ பதிலை சொல்கிறேன்” என்று கூறி அவனிடம் இருந்து விடைப் பெற்றாள்.

 

அவளும் சிரித்து பவியின் ஊரிற்குச் செல்ல இடையில் வைத்து சிவபெருமாள் அழைப்பை ஏற்படுத்தி விடயமொன்றைக் கூற அதிர்ச்சி அடைந்தவள் உடனே ஊரிற்கு வருவதாகக் கூறி தன் ஊரிற்கு சென்றாள். ஆதிக்கு அவர்கள் வீட்டிலிருந்து அழைப்பு வர கூறிய செய்தியைக் கேட்டு அதிர்ந்தவன் உடனடியாக ஊரிற்குச் சென்றான்.

 

இருவருமே தத்தமது ஊரிற்கு தம் காதலை புதைப்பதற்காக செல்கின்றனர் என்பதை அறியாமல் பயணித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 39 (நிறைவுப் பகுதி)யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 39 (நிறைவுப் பகுதி)

பனி 39   “நீங்க இரண்டு பேருமே எதிரிங்க தானே? எப்படி பார்ட்னர்ஸ் ஆனிங்க?” என்று ஆதி உறும அவர்கள் பதில் கூற ஆரம்பித்தனர்.   “நாங்க இந்த நிமஷம் கூட குடும்ப ரீதியா எதிரிகள் தான். இந்த தொழில் ரீதியா

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 7யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 7

பனி 7   டாக்டர் கிருஷி விழித்து விட்டதாக கூறி அவர்களது சண்டைக்கு முற்றிப் புள்ளி வைத்து, அடுத்த டொம் என்ட் ஜெரி சண்டையை ஆரம்பிக்க உதவி செய்தார். மூவரும் கிருஷியைப் பார்க்க உள்ளே சென்றனர்.  கிருஷி மூவரையும் பார்த்தாள்.  

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 6யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 6

பனி 6   அடுத்த நாள் காலையே ஆதி கிருஷியைப் பார்ப்பதற்கு ஆர்வமாகக் கிளம்பினான். அங்கு சென்று பிரின்சியிடம் அனுமதி வாங்கி, கிருஷியின் வகுப்பிற்குச் சென்றான். அங்கே, அவன் எதிர்பார்த்தது போல் கிருஷி இருக்கவில்லை. மாணவ, மாணவிகளிடம் விசாரணைகளை முடித்து உனடியாக