Advertisements

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-30

30 – மீண்டும் வருவாயா?

 

அவ்வழி வந்த வாணி வசந்த் இருவரும் இவர்களை பார்த்துவிட்டு அருகே வந்தனர்.

“என்ன டா இங்க உக்காந்திட்டே?”

“தெரில வசந்த் ..ஏனோ இந்த இடம் பாக்க நல்லா இருக்கு. இங்கிருந்து பாரு பாக்கிற இடமெல்லாம் எவ்ளோ பூ பூத்துக்குலுங்குது.. காத்து அசையறதுக்கு ஏத்த மாதிரி அதுவும் நகர அது எல்லாம் என்கிட்ட பேசுற மாதிரி ஏதோ சொல்லவர மாதிரி இருக்கு..சுத்தி எங்க பாத்தாலும் பசுமையா அழகா இருக்கு.. ஆனா இவளோ அழகான அமைதியான இந்த இடத்தை ரசிக்கவிடாம என் மனசுக்கு ஏதோ ஒரு வலி  ஏன்னு தெரில.. ஆனா இந்த இடத்தை விட்டு போகவே மனசே இல்ல..” என்றவன் பெருமூச்சு விட

அங்கே நடப்பதை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்த வாணியை கவனித்த வசந்த் “ஏய் நீ என்ன இப்டி ஷாக் ஆகிருக்க?” என இதை கவனித்து கொண்டிருந்த நித்து தன்னையும் மீறி கண்ணீர் சிந்திவிட ஏதோ தோன்ற திரும்பிய விஜய் “ஹே நித்து, என்ன மா என்னாச்சு…” என அவன் பதற அவனின் தோளில் சாய்ந்து அவள் தேம்பி அழ வசந்த் “நேத்ரா என்ன மா.. என்னடா.” என அவனும் பதற

வாணி “அவ அழட்டும் விடுங்க.. அண்ணா எனக்கு உங்க இரண்டுபேரையும் நினச்சா என்ன சொல்றதுன்னே தெரில.. அவளுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா உங்களை மிஸ் பண்ணா இங்க தான் வந்து உட்காருவா.. இதே மாதிரி சும்மா வேடிக்கை மட்டும் பாத்திட்டு இருப்பா.. கேட்டா இந்த இடம் பாத்தா கண்டிப்பா என் விஜய்க்கு பிடிக்கும்.. இங்க இருக்கும்போது எல்லாம் அவர் என்கிட்ட பேசுற மாதிரி ஒரு உணர்வு.. என்னை ரொம்ப சந்தோசப்படுத்துற மாதிரி இதோட அசைவுகள். ஆனா அவர்கூட நான் இல்லேங்கிற வலியும் சேர்ந்து எனக்கு ஞாபகப்படுத்துது.. அவரை நான் ரொம்ப மிஸ் பண்ற பீலும் வருதுனு சொல்லிட்டு அவளையே அறியாம சில நேரம் அவ கண்ணுல இருந்து தண்ணி வரும். ஆனா கண்ட்ரோல் பண்ணிடுவா.. அழுதிடுனு சொன்னாலும் கேட்கமாட்டா…

என் அதிகபட்ச வலி அதிகபட்ச சந்தோசம் எல்லாமே என் விஜய்கிட்ட தான் காட்டணும். அவர் தோள் சாஞ்சு மட்டும் தான் நான் ஆறுதல் அடைய முடியும். எனக்கு வேற எங்கேயும் அந்த நிம்மதி கிடைக்காது. அவரில்லாம நான் யார்கிட்டேயும் இல்ல எப்போவும் என் உணர்ச்சிகளை விடமாட்டேன்னு சொல்லுவா..

என்னவோ இந்த இடம் மட்டும் என்னை என் உணர்ச்சியை மீறி அழவெக்கபாக்கிது.. அழுதிட்டா பரவால்லனு தான் தோணுது…ஆனா இங்க என் விஜய் என்கூட ஆறுதல் சொல்ல இல்லைனு தோணுனதும் என் வலியோட சேத்தி அந்த அழுகையும் எனக்குள்ள போயிடுதுனு சொல்லுவா..”

 

வாணி “மனுஷங்களோட உணர்வுகளுக்கு தான் எவ்ளோ பவர்ல.. அவளுக்கு பிடிச்ச நீங்க அவ கூட இல்லாதபோது அவ வலிய உணர்ந்த ஒரு இடம் உங்களை எவ்ளோ கட்டிப்போட்டு இங்க இருக்க வெச்சு உங்க நித்துவோட இத்தனை வருஷ வலியை அழுகையை முழுசா அதுவும் உங்ககிட்டேயே வெளில கொண்டுவர வெச்சிடிச்சு.. நம்ம எண்ணங்களுக்கு இயற்கைகூட உதவி பண்ணும்னு இதத்தான் சொல்லுவாங்க போல..நீங்க அவளை கூட்டிட்டு வாங்க அண்ணா நாங்க போறோம்..” என கூறிவிட்டு வாணி வசந்தை அழைத்துக்கொண்டு இருப்பிடம் சென்றாள்.

 

விஜயின் மார்பில் சாய்ந்து அழுதுகொண்டிருந்தவளை தடுக்காமல் தன்னோடு அணைத்துக்கொண்டான்..இரவு வீட்டிற்கு வந்து உண்டு முடித்து படுக்கும் போதும் அவன் கைவளைவிலையே வைத்துக்கொண்டான். அவளும் அழுதபடியே உறங்கிவிட்டாள்.

 

அவனால் அவளின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிந்தது. தன் மேல் அவள் கொண்ட காதலும் நம்பிக்கையும், தன்னை விட்டு பிரிந்து அவள் தனியே அனுபவித்த வலியும், அந்நேரத்தில் அவள் தன்னிடம் இருந்து எதிர்பார்த்த ஆறுதலும் அனைத்தும் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. அனைத்து பாரத்தையும் தன்னிடமே அவள் இறக்கி வைக்கட்டும் என எண்ணியவன் அவளை தடுக்காமல் அழுது முடிக்க உறங்க வைத்தவன்.

அருகே இப்போது தெளிவுடன் நிம்மதியாக உறங்கியவளை கண்டவன் அவளின் தலை கோதி அவளிடம் பேசினான்..”ஏன் டி நித்து.. இவளோ வலிக்கு நான் உன்னை தேடி வரும்போதே நீ என்கூட வந்திருக்கலாம்ல..”என்றவன் வலியோடு அவளை அணைத்துக்கொண்டே உறங்கினான்.

 

காலை அவளுக்கு முன் எழுந்தவன் அவள் கண் விழித்ததும் அவன் இருவருக்கும் காபி எடுத்து வைத்துக்கொண்டு இருவருக்கும் வெளியே கிளம்ப உடை எடுத்துவைக்க என வேலை செய்து கொண்டிருந்தவனை பார்த்துக்கொண்டிருக்க சட்டென ஏதோ வித்யாசமாக தோன்ற திரும்பியவன் நித்து இன்னும் கண் மூடியிருக்க சந்தேகித்தவன் அவளையே பார்த்துவிட்டு நடிக்கிறியா என நினைத்தவன் அவளருகில் அமர்ந்தவன் வசந்த்க்கு கால் செய்து “நித்து இன்னும் தூங்கறா..நீங்க வெளிய போய்ட்டு வாங்க.. நாங்க வரல..அதெல்லாம் வெயிட் பண்ண வேண்டாம்.. எங்களுக்கு வெளில சுத்திபாக்கறதை விட ரூமலையே நிறையா வேலை இருக்கு.. என்னவா.. தலையெழுத்துடா.. நீ ஹனிமூன்க்கு தான் வந்தியா? நீ என்னமோ பண்ணு.. பட் நான் ஹனிமூன்க்கு தான் வந்தேன்… சோ நாங்க..” என முடிக்கும் முன் நித்து வேகமாக எழுந்து அவனிடம் இருந்து மொபைலை பறிக்க மொபைல் ஆல்ரெடி ஸ்விட்ச்ஆப் ல் இருக்க அவனை ஓரக்கண்ணால் முறைக்க அவனோ நீங்க தூங்கிட்டு இருந்திங்களா மேடம் என கேட்டு அவள் உதட்டை கடித்தவுடன்  அவனோ சிரித்துவிட நித்து தன்னை அவன் கண்டுகொண்டதை எண்ணி வெட்க சிரிப்புடன் சிணுங்க “சொல்லு என்ன டி பண்ணிட்டு இருந்த?”

“ம்ம்..என்னை தூக்குங்க.. ஊஞ்சல்கிட்ட போலாம்…அப்போ சொல்றேன்..” என அவள் சிறுபிள்ளை போல கைகளை விரித்து கேட்க அவனும் அவளை அள்ளிக்கொண்டு ஊஞ்சலுக்கு வந்து அமர்ந்தான்..”இப்போ சொல்லு..”

“சும்மா என் ஆள சைட் அடிச்சிட்டு இருந்தேன்.. ஏன் பசங்க மட்டும் தான் ரசிப்பிங்களா? சைட் அடிப்பீங்களா?” என எதிர் கேள்வி கேட்க

வாய்விட்டு சிரித்தவன் “தாராளமா.. நான் எதுவும் சொல்லல… வேணும்னா நாள் பூரா கூட இப்டியே இரு.. யாரு வேண்டாம்னு சொன்னா?” என

அவளும் “அப்போ இன்னைக்கு வெளில போக வேண்டாம் தானே.. நாம இங்க இருக்கலாமா?உங்களுக்கு ஓகே வா?”

“வாவ்..அப்போ கால்ல சொன்னமாதிரி ஹனிமூன்க்கு ..” என அவளோ “உங்களை.. அதுக்காக எல்லாம் இல்ல..பட் வெளில போகவேண்டாம்..”

விஜய் “ஹே…ஆர் யூ சீரியஸ்.. எங்கேயும் போக வேண்டாமா? எனக்கு ப்ரோப்லேம் இல்ல பா..”

“வேண்டாம்..நானும் நீங்களும் இங்கேயே இருக்கலாம்.. ஐ நீட் டு என்ஜோய் திஸ் மொமெண்ட் வித் யூ (I need to enjoy this moment with you.) எனக்கு இப்போ அது மட்டும் போதும்.. அவ்ளோ மிஸ் பண்ணேன் உங்களை…சோ கூட இருக்கணும் அவ்ளோதான்..” என அவனுக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை.. தன் மேல் இத்தனை பிரியம் கொண்டு தனக்காக ஏங்கியவள் ஏன் அன்று அப்டி விட்டு சென்றாள் என இரவு தன் மனதில் உதித்த கேள்விகளை அவளிடம் மறைக்காமல் கேட்டுவிட்டான்.

விஜய் “நம்மள மீறி சில விஷயம் நடந்தது சரி.. ஆனா அதுக்கப்புறம் நீ ஏன் விட்டுட்டு போன. நமக்குள்ள ஏன் இவளோ பிரிவு.. இதெல்லாம் ஏன்னு கேட்டா விதினு எல்லாரும் சொல்ராங்க..என்றவன் விரக்தி புன்னகையுடன் ஆனா நீ நினைச்சிருந்தா அப்போவே என்கிட்ட வந்து இத்தனை வலியையையும் பிரிவையும் தடுத்திருக்கலாமே.. இல்லை என்னை இதுக்கு மேல தேடி வந்தா கண்காணாத இடத்துக்கு திரும்ப போய்டுவேன்னு நீ சொல்லாம போயிருந்தா கூட நான் உன்னை தேடி வேற இடத்துக்கும் வந்திருப்பேன்.. ஆனா நீ ஏன் நித்துமா அப்டி பண்ண? அப்டி பிரிஞ்சு போயும் ஏன் டி இவளோ கஷ்டப்பட்ட.. என்னால உன்னை மத்தவங்ககிட்ட விட்டுகுடுக்க முடில.. அதே சமயம் நீ நான் உன்னை விட்டுட்டு போவேன்னு நினச்சத்தையும் ஏத்துக்க முடில நித்து..” என அவன் பொலம்ப

 

நித்து அவன் இதயத்தில் கை வைத்து வருடிவிட்டவன் “விஜய்..உண்மையாவே அப்போ விதிதான் விளையாடிச்சு… நான் வீட்டை விட்டு வந்ததும் சென்டர்ல சொல்லி ஹெல்ப் கேட்டு மதுரைக்கு போனேன்… பாப்பா வேற இருந்தாளா..அதோட எப்படியும் வேலையும் வேணும்..ஒன்னு இரண்டு வாரம் ஆச்சு.. எல்லாம் பாத்து செட்டில் ஆக.. அதுக்கப்புறம் வெளில ஆள் வெச்சு விசாரிச்சேன். வெளிப்படையா கவனிச்சா யாராவது கண்டுபுடிச்சுடுவாங்கனு என் மூலமா இல்லாம என்ன பிரச்சனைனு சொல்லாம வெளி ஆளுங்க மூலமா உங்க போட்டோவை குடுத்து நீங்க நம்ம வீட்டுக்கு இல்லை என் அப்பா வீட்டுக்கு வரிங்களானு விசாரிக்க சொல்லிருந்தேன்..இல்ல உங்களை அவங்க யாராவது வெளில விசாரிக்கிறாங்களானும் கேட்க சொன்னேன். ஆனா எந்த பிரயோஜனமும் இல்ல. நீங்க எந்த வீட்டுக்கும் வரல.யாரும் உங்களை விசாரிக்கவும் இல்லை. கிட்டத்தட்ட நீங்க சொன்ன அதே எட்டுமாசம் நான் வீட்டை கவனிச்சிட்டு இருந்தேன்..

ஆனா நீங்க என் பொண்டாட்டி இல்லாத வீட்ல இருக்க மாட்டேன்னு வந்த ஒரு வாரத்துலையே வீட்டை விட்டு வெளிய போயிருக்கிங்க.. அது எனக்கு தெரில..

வேற எப்படி விசாரிக்கலாம்னு யோசிக்கறதுக்குள்ள என்னை யாரோ தேடுறாங்கனு எனக்கு சொன்னாங்க.. யாரு என்ன,எங்க இருந்து வந்தாங்க பாக்க எப்படி என்ன வயசுல இருந்தாங்கனு எல்லாமே விசாரிச்சேன். பேர் ஞாபகமில்லைனு மத்த டீடெயில்ஸ் எல்லாமே சொன்னாங்க.. முந்தன நாள் வரைக்கும் நீங்க வீட்டுக்கு வரலனு தான் எனக்கு தகவல் வந்தது.. அப்டி இருக்க என்னை தேடி யாரோ வந்தாங்கனு சொல்லி அதுவும் அடையாளம் வயசு எல்லாம் கேட்டதும் வசந்த் அண்ணா, கணேஷ் அண்ணா இவங்கள யாரோ தான்னு நான் நினச்சுட்டேன். என்னால திரும்ப அவங்க யார்கிட்டேயும் சொல்லி புரியவெக்கிறம் நிலைமைல இல்ல. சோ நீங்க வரவரைக்கும் இனி இவங்ககிட்ட இருந்து தள்ளி இருப்போம். கண்டிப்பா நீங்களே இனி வருவீங்கன்னு நம்பிக்கைல தான் அப்டி ஒரு லெட்டர் எழுதி அங்க குடுத்திட்டு அங்கிருந்தும் சொல்லாம போய்ட்டேன்.. என் மேல ப்ரோமிஸ் விஜய் நீங்கதான் அன்னைக்கு வந்திங்கனு நீங்க சொல்றவரைக்கும் எனக்கு தெரியாது..” என கூற அவளின் வருத்தம் வலி அதோடு உண்மையாவே விதி தான் விளையாடியதோ என அவனே எண்ணத்தொடங்கிவிட்டான்.

“திரும்ப உங்களை தேடி விசாரிச்சு அத வெச்சு இவங்க யாராவது வந்து மறுபடியும் வேற கல்யாணம் பண்ணுனு கம்பெல் பண்ணா என்ன பண்றது. சோ இனிமேல் தேடவேண்டாம்.. நீங்களே வருவீங்கன்னு தான் இருந்தேன்..”

அவன் எதுவும் கூறாமல் எழுந்து அமைதியாக உள்ளே சென்றான்.. அவனுக்கு தான் விசாரித்த போது வீட்ல இருந்து வந்திருக்கோம்னு மட்டும் சொல்லாம அவளின் கணவன் என்றே சொல்லிருக்க வேண்டுமோ..அப்போது அது அவனுக்கு தோணவில்லை…அதான் கிட்டத்தட்ட விசாரிச்சு வந்துட்டோம்ல.. கண்டிப்பா மறுநாள் நேர்ல மீட் பண்ணிடலாம்னு நினைச்சது..இப்போ அவனுக்கு நினைத்தால் வருத்தமாக இருக்க அவளிடம் சொல்ல நித்து “விஜய்…விடுங்க..நடந்த முடிஞ்ச எதையுமே மாத்த முடியாதே..அதவே நினச்சு நினச்சு பீல் பண்றதால யாருக்கு என்ன லாபம்..”

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: